Friday, March 28, 2014

கடனை உடனை வாங்கி தேங்காய் உடைத்து ஒரு பிரயோஜனமும் இல்லை.

Photo: ஆலயங்களுக்குப் போய் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வேண்டினால் காரியம் நடக்கும் என்பது காலகாலமாய் தொடர்ந்து வரும் நம்பிக்கை. ஆனால், எல்லோருக்கும் வேண்டிய காரியங்கள் நடந்து விடுகின்றனவா என்ன ? முதற்கண் வேண்டுதல் என்றால் என்ன? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். வேண்டுதல் என்பது சங்கல்பமாகும். நான் இன்ன காரியத்தில் ஈடுபடப் போகிறேன். பரமாத்மாவாகிய இறையாற்றலே அந்த காரியத்தைச் செய்யக் கூடிய வலிமையையும், புத்தி கூர்மையையும், அதில் வெற்றியையும் தா, என்று வேண்டிக் கொள்வதன் மூலம் அந்தக் காரியத்தை முனைப்புடன் செய்ய நாம் நம் மனதளவில் சங்கல்பம் செய்து கொள்கிறோம். அப்படி சங்கல்பம் செய்து கொண்டாலும் எல்லோருடைய காரியங்களும் வெற்றியடைகின்றனவா ? என்றால், கிடையாது. காரணம், கடவுளிடம் சொல்லியாயிற்று அவர் பார்த்துக் கொள்வார் என்கிற எண்ணம். அது தவறு. கடவுளே கூட உன் கடமையை நீ சரியாகச் செய் பலனைக் குறித்து கவலைப்படாதே என்று சொன்னதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. கடவுள் மேல் நீங்கள் வைத்த அதே அளவு நம்பிக்கையை உங்கள் மீதும், உங்கள் செயலின் மீதும் வைத்திருந்தீர்களானால் வெற்றி நிச்சயம்.

இந்த தேங்காய் என்பதே நம் ஆன்ம தத்துவத்தை உணர்த்தும் ஒரு பொருளாகும். மேலே காணப்படும் மினு மினுப்பான பச்சை நிறப் பட்டையானது நம் தேகத்தைக் குறிப்பதாகும். உள்ளே ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு காணப்படும் நார்களானது நம் ஆசா பாசங்கள் மற்றும் ஆன்ம தத்துவங்களால் ஆன எண்ண அல்லது மனமெனும் சிக்கல்களாகும். அதையும் தாண்டி உள்ளே கடினமாகக் காணப்படும் ஓடானது நம் ஆழ்மனதில் உள்ள வினைகளாகும். இதையெல்லாம் தகர்த்தெறிந்து கடந்து உள்ளே போனால் காணப்படுவது தூய வெள்ளை நிறத்தில் காணப்பட்டும் பரிசுத்தமான ஆன்மாவாகும். 

இப்படி இவை எல்லாவற்றையும் களைந்து என் பரிசுத்தமான ஆன்மாவை உன் முன் சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டி, இந்த கற்பூரம் எறிந்து நீராய் கரைந்து எப்படி வெளியோடு கலந்து விடுகிறதோ, அது போல எங்கள் ஆசாபாசங்கள்,  மலங்களையெல்லாம் கரைந்து போகச் செய்து எங்களை உன்னோடு சேர்த்துக் கொள், எங்களுக்கு ஆத்ம தரிசனம் தா என்று வேண்டி கீழும் மேலும் தீபத்தைக் காட்டி நன்றாகத் தெரியும் படிச் செய்வார்கள். இரு கைகளையும் சேர்த்து வணங்குவதன் தாத்பர்யமே இந்த இரு கைகளும் இணைவது போல ஜீவாத்மாவான என்னை பரமாத்மாவான உன்னோடு சேர்த்துக் கொள் என்பதேயாகும். மேலும் வினைகளெல்லாம் கரையும் போது ஆன்மா ஒளி வீசிப் பிரகாசிக்கும். அப்போது பரமாத்மாவின் தரிசனம் கிட்டும் என்றும் உணர்த்தப்படுகிறது. 

அந்த காலத்தில் விளக்கு ஒளியில் சரிவரத் தெரியாத மூர்த்தங்கள் கற்பூர ஒளியின் பிரகாசத்தில் நன்கு தெரியும். அப்படித் தெரரியும் போது அந்த மூர்த்தங்கள் குறிப்பிடும் தத்துவங்களையும் மனதில் உள் வாங்கிக் கொள்வார்கள். அதனால்தான் கற்பூர ஆரத்தியை கீழே, மேலே, இடமும், வலமும் என்று சுற்றி, சுற்றி காட்டுவார்கள். விக்ரகம் காட்டும் அபய முத்திரை என்பது அபயத்தை குறிப்பதல்ல, சும்மா இரு என்பதாகும். மற்றொரு கையால் பாதத்தைக் காட்டி, என்னைச் சரணடைந்து அதாவது ஆன்ம தாகம் கொண்டு, சும்மா இரு என்பதாகும். சும்மா இரு என்றால் வேலைகளைச் செய்யாமல் இரு என்பதல்ல. எண்ணமற்று இரு என்பதே. மீண்டும் சொல்கிறேன் வேண்டுதல் என்பதே சங்கல்பம்தான். மன ஒருமைப்பாடு கொண்டு நீங்கள் செய்யும் சங்கல்பம் உங்களை சரியான வழியில் செலுத்தி, திறம்பட செயலாற்ற வைத்து வெற்றியைத் தேடித் தரும். அதனால்தான் கோவிலுக்கே போகாதவர்கள் கூட தன்னம்பிக்கையுடன் செயலாற்றி வெற்றியடைந்து விடுகிறார்கள். மனதில் நம்பிக்கையையும், செயல் திறனையும் உருவாக்க நம் முன்னோர்கள் கண்டு பிடித்த உபாயமே வேண்டுதல். இதை உணராமல் கடனை உடனை வாங்கி தேங்காய் உடைத்து ஒரு பிரயோஜனமும் இல்லை.
ஆலயங்களுக்குப் போய் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வேண்டினால் காரியம் நடக்கும் என்பது காலகாலமாய் தொடர்ந்து வரும் நம்பிக்கை. ஆனால், எல்லோருக்கும் வேண்டிய காரியங்கள் நடந்து விடுகின்றனவா என்ன ? முதற்கண் வேண்டுதல் என்றால் என்ன? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். வேண்டுதல் என்பது சங்கல்பமாகும். நான் இன்ன காரியத்தில் ஈடுபடப் போகிறேன். பரமாத்மாவாகிய இறையாற்றலே அந்த காரியத்தைச் செய்யக் கூடிய வலிமையையும், புத்தி கூர்மையையும், அதில் வெற்றியையும் தா, என்று வேண்டிக் கொள்வதன் மூலம் அந்தக் காரியத்தை முனைப்புடன் செய்ய நாம் நம் மனதளவில் சங்கல்பம் செய்து கொள்கிறோம். அப்படி சங்கல்பம் செய்து கொண்டாலும் எல்லோருடைய காரியங்களும் வெற்றியடைகின்றனவா ? என்றால், கிடையாது. காரணம், கடவுளிடம் சொல்லியாயிற்று அவர் பார்த்துக் கொள்வார் என்கிற எண்ணம். அது தவறு. கடவுளே கூட உன் கடமையை நீ சரியாகச் செய் பலனைக் குறித்து கவலைப்படாதே என்று சொன்னதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. கடவுள் மேல் நீங்கள் வைத்த அதே அளவு நம்பிக்கையை உங்கள் மீதும், உங்கள் செயலின் மீதும் வைத்திருந்தீர்களானால் வெற்றி நிச்சயம்.

இந்த தேங்காய் என்பதே நம் ஆன்ம தத்துவத்தை உணர்த்தும் ஒரு பொருளாகும். மேலே காணப்படும் மினு மினுப்பான பச்சை நிறப் பட்டையானது நம் தேகத்தைக் குறிப்பதாகும். உள்ளே ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு காணப்படும் நார்களானது நம் ஆசா பாசங்கள் மற்றும் ஆன்ம தத்துவங்களால் ஆன எண்ண அல்லது மனமெனும் சிக்கல்களாகும். அதையும் தாண்டி உள்ளே கடினமாகக் காணப்படும் ஓடானது நம் ஆழ்மனதில் உள்ள வினைகளாகும். இதையெல்லாம் தகர்த்தெறிந்து கடந்து உள்ளே போனால் காணப்படுவது தூய வெள்ளை நிறத்தில் காணப்பட்டும் பரிசுத்தமான ஆன்மாவாகும்.

இப்படி இவை எல்லாவற்றையும் களைந்து என் பரிசுத்தமான ஆன்மாவை உன் முன் சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டி, இந்த கற்பூரம் எறிந்து நீராய் கரைந்து எப்படி வெளியோடு கலந்து விடுகிறதோ, அது போல எங்கள் ஆசாபாசங்கள், மலங்களையெல்லாம் கரைந்து போகச் செய்து எங்களை உன்னோடு சேர்த்துக் கொள், எங்களுக்கு ஆத்ம தரிசனம் தா என்று வேண்டி கீழும் மேலும் தீபத்தைக் காட்டி நன்றாகத் தெரியும் படிச் செய்வார்கள். இரு கைகளையும் சேர்த்து வணங்குவதன் தாத்பர்யமே இந்த இரு கைகளும் இணைவது போல ஜீவாத்மாவான என்னை பரமாத்மாவான உன்னோடு சேர்த்துக் கொள் என்பதேயாகும். மேலும் வினைகளெல்லாம் கரையும் போது ஆன்மா ஒளி வீசிப் பிரகாசிக்கும். அப்போது பரமாத்மாவின் தரிசனம் கிட்டும் என்றும் உணர்த்தப்படுகிறது.

அந்த காலத்தில் விளக்கு ஒளியில் சரிவரத் தெரியாத மூர்த்தங்கள் கற்பூர ஒளியின் பிரகாசத்தில் நன்கு தெரியும். அப்படித் தெரரியும் போது அந்த மூர்த்தங்கள் குறிப்பிடும் தத்துவங்களையும் மனதில் உள் வாங்கிக் கொள்வார்கள். அதனால்தான் கற்பூர ஆரத்தியை கீழே, மேலே, இடமும், வலமும் என்று சுற்றி, சுற்றி காட்டுவார்கள். விக்ரகம் காட்டும் அபய முத்திரை என்பது அபயத்தை குறிப்பதல்ல, சும்மா இரு என்பதாகும். மற்றொரு கையால் பாதத்தைக் காட்டி, என்னைச் சரணடைந்து அதாவது ஆன்ம தாகம் கொண்டு, சும்மா இரு என்பதாகும். சும்மா இரு என்றால் வேலைகளைச் செய்யாமல் இரு என்பதல்ல. எண்ணமற்று இரு என்பதே. மீண்டும் சொல்கிறேன் வேண்டுதல் என்பதே சங்கல்பம்தான். மன ஒருமைப்பாடு கொண்டு நீங்கள் செய்யும் சங்கல்பம் உங்களை சரியான வழியில் செலுத்தி, திறம்பட செயலாற்ற வைத்து வெற்றியைத் தேடித் தரும். அதனால்தான் கோவிலுக்கே போகாதவர்கள் கூட தன்னம்பிக்கையுடன் செயலாற்றி வெற்றியடைந்து விடுகிறார்கள். மனதில் நம்பிக்கையையும், செயல் திறனையும் உருவாக்க நம் முன்னோர்கள் கண்டு பிடித்த உபாயமே வேண்டுதல். இதை உணராமல் கடனை உடனை வாங்கி தேங்காய் உடைத்து ஒரு பிரயோஜனமும் இல்லை.

No comments:

Post a Comment