ஒரு முதலாளி வியாபாரத்தில் கிடைக்கும்
லாபத்திலிருந்து அதாவது தன்னுடைய இருப்புத் தொகையிலிருந்து ஒரு பகுதியை
எடுத்துத் தன்னுடைய பணியாளர்களுக்கு தினமும் ஊதியமாகத் தலா நூறு ரூபாய்
தருகிறார். அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவுடன் ஒருவன் நேராக மது அருந்தப்
போகிறான். மற்றொருவன் சிகரெட்டாக வாங்கி ஊதித் தள்ளுகிறான். இனியொருவன்
ஹோட்டலுக்குச் சென்று தின்றே அழிக்கிறான். பிரிதொருவனோ அப்படியே அதைக்
கொண்டு போய் தன் வீட்டில் கொடுத்து விடுகிறான். இப்படி ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமானச் செயல்களைச் செய்து அதன் பலன்களை அனுபவிக்கிறார்கள்.
குடிப்பவன் குடல் வெந்து சாகிறான். புகைப்பவன் நுரையீரல் கெட்டுத்
தவிக்கிறான். கண்டதையும் தின்றழிப்பவன் வயிறு கெட்டு வலியில் துடிக்கிறான்.
அதைப் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் கொடுப்பவனுக்கு அது தேவைக்குச்
செலவழிந்தது போகச் சேமிப்பாக மாறுவதோடு மட்டுமல்ல, தக்க சமயத்தில் உதவவும்
செய்கிறது. இதே நிலைதான் பரம்பொருளுக்கும் ஜீவன்களுக்கும் இடையிலானது.
முதலாளியும் அவரிடமிருந்து பெறப்படும் பணமும் ஒன்றுதான். ஆனால்,
வினைகளுக்குத் தகுந்த விளைவுகள் அனுபவமாகிறது. அதைப் போல எல்லையற்றப்
பரம்பொருளிடமிருந்து பெறப்பட்டது இந்த உடலும் உயிரும் என்று உணர்க.
பொதுவாக நம் உடலில் கழுத்துக்கு மேலே உள்ள பகுதி எட்டாம் எண்ணின் மேல் வட்டமாகும். கழுத்துக்குக் கீழே உள்ள பகுதி கீழ் வட்டமாகும். இணைகின்ற பகுதி தொண்டம் என்று சொல்லப்படுகிறது. இதையே மேல் வட்டம் அகண்டாகாரமென்றும், கீழ் வட்டம் இந்த பிரபஞ்சமென்றும் சொல்வார்கள். மேலே உள்ள வட்டம் மஹத், கீழே உள்ள வட்டம் ஜகத். இந்த உலகின் அணு முதல் அனைத்தினுள்ளும் இயங்குவது நாத பிந்து தத்துவம். பிந்து என்பது சிவகலை, நாதம் என்பது சக்திகலை இந்த இரண்டின் மோதலிலேயே இந்த் பிரபஞ்சத்தில் தோற்றமும், ஒடுக்கமுமாக இயக்கம் நிகழ்ந்து வருகின்றது. இப்பொழுது கவனியுங்கள் இந்த எட்டாம் எண்ணாகிய வட்டங்களின் மையப்பகுதியாகிய தொண்டத்தை நோக்கி வலப்பிறமிருந்து பிந்துவும், இடப்புறமிருந்து நாதமும் வருகிறது. இரண்டும் கூடி இயக்க சக்தியாகி தொண்டத்திற்குக் கீழ் முகமாக ஓடினால் அது ஜீவனை உலகாயத்தில் அழுத்தும். தொண்டத்திற்கு மேல்முகமாக ஓடினால் அது ஜீவனை பரம்பொருளை நோக்கி உயர்த்தும். இதுவே பரம இரகசியம் வேறொன்றுமில்லை. எனவே சக்தியை மேல்முகமாக ஏற்றவே யோகிகளால் அத்தனை யோகங்களும், சாதனங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. எனவேதான் கடவுள் எங்கேயிருக்கிறார் என்று கேட்டால் இயல்பாகவே நாம் மேலே பார்க்கிறோம். கடவுள் எங்கும் இருக்கிறார் என்றாலும், வழி மேலே இருக்கிறது.
எனவே பெறப்படுகின்ற சக்தியை நாம் எவ்விதம், எந்தெந்த தத்துவங்களின் மூலம் செயல்படுத்தி இயங்குகிறோமோ அதற்குத் தகுந்த பலன்களை நாம் அடைவோம். புலன்களை இயக்கி வைக்கும் மூல சக்தி உயிராகிய பரமாத்மாதான். உயிர் இல்லை என்றால் உடல் செயலற்றுப் போய் விடும். ஆனால், உடலும், அதன் புலன்களும் இயங்காமல் வெறும் உயிர் மட்டும் இயங்க முடியாது. இதற்கு ஆதாரமாக எத்தனையோ மனிதர்களைப் பார்க்கிறோம். உயிர் இருந்தாலும் உடல் இயங்காமல் போகப் படுக்கையில் கிடப்பதைப் பார்க்கிறோம். ஆக இந்த உயிராகிய சக்தியானது தத்துவங்களுக்கு உட்படும் பொழுதுதான் இயங்கும் தன்மையைப் பெறுகிறது. எனவேதான் இந்தத் தத்துவங்களைக் கடந்தவன் பரம்பொருளை அடைவான் என்று சொல்வார்கள். உடல் தத்துவங்கள் செயலற்றுப் போக உயிர் பிரிவது மரணம். உடல் தத்துவங்கள் அனைத்தும் சீராக இயங்க வைத்து அவற்றின் மூலமாகவே, அவற்றைக் கடந்து பரமாத்மாவோடு ஜீவனை இணைப்பது மரணமில்லாப் பெருவாழ்வு அல்லது முக்தி எனப்படுகிறது. உடலும், உயிருமாகத் திகழ்வது பரம்பொருளே என்றாலும், தத்துவங்களுக்கு உட்பட்டு மனமாகப் பரிணமித்த போது நான் என்ற பேத உணர்வு தோன்றி விடுகிறது. அப்பொழுது பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு என்ற நிலையில் ஜீவன் வினை புரிந்து பேதமுற்று உலகாயத்தில் உழல்கிறது. எனவே பேதமற்ற நிலைக்கு வந்து மனதை அழித்து, நான் அழிந்து போக ஜீவன் பரம்பொருளில் ஐக்கியமாகி விடுகின்றது. எனவேதான் கடவுள் எங்கேயிருக்கிறார் என்று கேட்டால் இயல்பாகவே நாம் மேலே பார்க்கிறோம்.

No comments:
Post a Comment