Friday, March 28, 2014

சூரியனைப் போல பிரகாசிக்கும். அட்டமா சித்திகளும் ஏற்படும்

Photo: உடல் உணவு உண்பது போல உயிர் காற்றை உட் கொள்கிறது. அதில் உள்ள பிராணனை உணவாகக் கொண்டுவிட்டு அபானனை வெளியேற்றுகிறது. அனைத்துவித யோக சித்திகளையும் அடைய பிராணசக்தியே ஆதாரமாக இருப்பதால்தான் சித்தர்கள் பிராணாயாமத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வாசியைப் பற்றி பாடாத சித்தர்களே கிடையாது. 72000 நாடிகளும் பத்துநாடிகளில் ஒடுங்கும். இத்த தசநாடிகள் பத்தும் இடகலை, பிங்கலை, சுழுமுனை என்கிற மூன்று நாடிகளில் ஒடுங்கும். இந்த மூன்று நாடிகளும் பிராணசக்தியின் துணைகொண்டு சீராக இயங்கும் போது, மனம் தன்னில் ஒடுங்கும். அதனால்தான் பிராணனின் சலனம் மனதின் சலனம் என்று சொல்வார்கள்.
பிராணாயாமத்தை சூரிய உதயம் முதல் மூன்று நாழிகை வரை, மதியம், அஸ்தமனத்திற்கு முன்னும், பின்னுமாகிய இரு முகூர்த்தம், அர்த்த ராத்திரி என்கிற நான்கு வேளைகளிலும் செய்ய வேண்டும். பத்மாசனத்தில் செய்வதுதான் சிறப்பு. ஒரு வேளைக்கு 80 முறை விகிதம் ஒரு நாளைக்கு 320 முறை செய்ய வேண்டும். பிராணாயாமத்தில் பூரகம், கும்பகம், இரேசகம் என்று மூன்று நிலைகள் உள்ளதை நாம் ஏற்கனவே அறிவோம். எனவே அடுத்த விஷயத்திற்கு வருவோம்.
சூரிய நாடி வழியாக காற்றை மெதுவாக இழுத்து நுரையீரலை நிரப்பி, குறிப்பிட்ட கால அளவு கும்பகம் செய்து, சந்திர நாடி வழியாக இரேசிக்க வேண்டும். பின்னர் சந்திர நாடி வழியாக மெதுவாக இழுத்து நுரையீரலை நிரப்பிக் கொண்டு, கும்பகம் செய்து, சூரியநாடி வழியாக இரேசிக்க வேண்டும். இப்படி சூரியனால் பூரித்து, கும்பித்து, சந்திரனால் இரேசிப்பதும், சந்திரனால் பூரித்து, கும்பித்து, சூரியனால் இரேசிப்பதுமாக தினமும் பயிற்சியைச் செய்து விஸ்தரிக்க வேண்டும். இப்படி இரண்டு நாடிகளிலும் பிராணவாயு சென்று வரும் நேரத்தில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு என்கிற நான்கு தத்துவங்களும் வந்து விலகும். அப்போது பிராணவாயுவானது ஆகாயத் தத்துவத்தில் அமையும். அந்நேரம் சுவாசம் குறைந்து வரும். அந்த நேரத்தில் நாம் சுவாச பந்தனம் செய்திருந்தோமானால் சுவாசத்தின் நீளம் குறையும்.
சுவாசத்தின் நீளம் ஒரு அங்குலம் குறைந்தால் சாதகன் இவ்வுலகில் இருந்து சுவாதினப்படுவான்.இரண்டு அங்குலம் குறைந்தால் ஞானமும், செல்வமும் உண்டாகும். மூன்று அங்குலம் குறைந்தால் தூரதிருஷடி உண்டாகும். நான்கு அங்குலம் குறைந்தால் விவேகியாவான். ஐந்து அங்குலம் குறைந்தால் முதுமையை வெல்வான். ஆறு அங்குலம் குறைந்தால் ஆகாயத்தில் உள்ள சகலத்தையும் கண்டு உணர்வான். ஏழு அங்குலம் குறைந்தால் காயசித்தி உண்டாகும். எட்டு அங்குலம் குறைந்தால் அணிமாதி சித்திகளை அடைவான். ஒன்பது அங்குலமத் குறைந்தால் நவகண்டங்களிலும் சஞ்சரிப்பான். பத்து அங்குலம் குறைந்தால் ஒரு தேகம் விட்டு மற்றொரு தேகத்தில் பிரவேசிப்பான். பதினோரு அங்குலம் குறைந்தால் தனது ஆன்மாவையே கண்டு விசனிப்பான். பன்னிரண்டு அங்குலம் அடங்கும் சுவாசம் உதித்த இடத்திலேயே சுழன்று கொண்டிருப்பதால் அந்தப் பரமயோகி அன்னபானாதிகளை நீக்கி அசைவற்று சமாதியில் இருப்பான் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
சமாதியில் கூடிய சாதகன் இடகலையை பிங்கலையிலும், பிங்கலையை இடகலையிலும் மாற்றக் கற்றுக் கொண்ட பின், பகல் முழுவதும் இடகலையிலும், இரவில் பிங்கலையிலும் நடத்தப்படுவான்.
இந்த யோகத்தின் போது முதல் தீட்சையாக ரோமத் துவாரங்கள் வழியாக கெட்டநீர்கள் வியர்வையாகக் கசியும். இரண்டாவது கட்டத்தில் வாத, பித்த, சிலேத்தும தோஷங்கள் நீங்கும். மூன்றாவது கட்டத்தில் பழைய கெட்ட உதிரங்கள் கசியும். நான்காவது நிலையில் சர்ப்பத்தின் தோல் உரிவது போல் சரீரத்தின் தோல் உரியும். ஐந்தாம் கட்டத்தில் சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாக விளங்கும். பஞ்ச மூர்த்திகள் கேட்டதைத் தருவார்கள். ஆறாவது நிலையில் சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறந்து தூரதிருஷ்டி ஏற்படும். ஏழாம் கட்டத்தில் சட்டை வெறுப்பாய் கழன்று தீபம் போல் பிரகாசிக்கும். உட்டாவது நிலையில் இலாகிரியுமாகும். ஒன்பதாவதில் தேகம் சூரியனைப் போல பிரகாசிக்கும். அட்டமா சித்திகளும் ஏற்படும். தேவர்களும் ஏவல் புரிவர். பத்தாவது நிலையில் தேகம் சுடரொளிபோல் பிரகாசிக்கும்.பதினொன்றாவது நிலையில் கத்தியால் வெட்ட முடியாத படிக்கு தேகம் கல்போல் இருகும். பன்னிரண்டாவது கட்டத்தில் சொரூபசித்தி, அண்டத்தில் மௌனம், நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் ஏற்படாது.
சுடரான சுழுமுனையில் சந்திரன் சேர்ந்தால் பஞ்சபூதமும், அறிவும் ஒடுங்கும். சூரியன் சேர்ந்தால் ஐம்புலன்களும், அறிவும் ஒடுங்கும். சந்திரனும், நூரியனும் சேர்ந்து ஒடுங்கில் அறிவும், தசவாயுவும் ஒடுங்கும். இந்த வாயுவை நடுநிலையிலும், மூலத்திலும், நாபியிலும், கண்டத்திலும், சுழியிடத்திலும் சதா நிற்கப் பெற்றவர்களே மெய்ஞானியர்கள் என்பது சித்தர்கள் கூற்று.
தொடரும்................
உடல் உணவு உண்பது போல உயிர் காற்றை உட் கொள்கிறது. அதில் உள்ள பிராணனை உணவாகக் கொண்டுவிட்டு அபானனை வெளியேற்றுகிறது. அனைத்துவித யோக சித்திகளையும் அடைய பிராணசக்தியே ஆதாரமாக இருப்பதால்தான் சித்தர்கள் பிராணாயாமத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வாசியைப் பற்றி பாடாத சித்தர்களே கிடையாது. 72000 நாடிகளும் பத்துநாடிகளில் ஒடுங்கும். இத்த தசநாடிகள் பத்தும் இடகலை, பிங்கலை, சுழுமுனை என்கிற மூன்று நாடிகளில் ஒடுங்கும். இந்த மூன்று நாடிகளும் பிராணசக்தியின் துணைகொண்டு சீராக இயங்கும் போது, மனம் தன்னில் ஒடுங்கும். அதனால்தான் பிராணனின் சலனம் மனதின் சலனம் என்று சொல்வார்கள்.
பிராணாயாமத்தை சூரிய உதயம் முதல் மூன்று நாழிகை வரை, மதியம், அஸ்தமனத்திற்கு முன்னும், பின்னுமாகிய இரு முகூர்த்தம், அர்த்த ராத்திரி என்கிற நான்கு வேளைகளிலும் செய்ய வேண்டும். பத்மாசனத்தில் செய்வதுதான் சிறப்பு. ஒரு வேளைக்கு 80 முறை விகிதம் ஒரு நாளைக்கு 320 முறை செய்ய வேண்டும். பிராணாயாமத்தில் பூரகம், கும்பகம், இரேசகம் என்று மூன்று நிலைகள் உள்ளதை நாம் ஏற்கனவே அறிவோம். எனவே அடுத்த விஷயத்திற்கு வருவோம்.
சூரிய நாடி வழியாக காற்றை மெதுவாக இழுத்து நுரையீரலை நிரப்பி, குறிப்பிட்ட கால அளவு கும்பகம் செய்து, சந்திர நாடி வழியாக இரேசிக்க வேண்டும். பின்னர் சந்திர நாடி வழியாக மெதுவாக இழுத்து நுரையீரலை நிரப்பிக் கொண்டு, கும்பகம் செய்து, சூரியநாடி வழியாக இரேசிக்க வேண்டும். இப்படி சூரியனால் பூரித்து, கும்பித்து, சந்திரனால் இரேசிப்பதும், சந்திரனால் பூரித்து, கும்பித்து, சூரியனால் இரேசிப்பதுமாக தினமும் பயிற்சியைச் செய்து விஸ்தரிக்க வேண்டும். இப்படி இரண்டு நாடிகளிலும் பிராணவாயு சென்று வரும் நேரத்தில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு என்கிற நான்கு தத்துவங்களும் வந்து விலகும். அப்போது பிராணவாயுவானது ஆகாயத் தத்துவத்தில் அமையும். அந்நேரம் சுவாசம் குறைந்து வரும். அந்த நேரத்தில் நாம் சுவாச பந்தனம் செய்திருந்தோமானால் சுவாசத்தின் நீளம் குறையும்.
சுவாசத்தின் நீளம் ஒரு அங்குலம் குறைந்தால் சாதகன் இவ்வுலகில் இருந்து சுவாதினப்படுவான்.இரண்டு அங்குலம் குறைந்தால் ஞானமும், செல்வமும் உண்டாகும். மூன்று அங்குலம் குறைந்தால் தூரதிருஷடி உண்டாகும். நான்கு அங்குலம் குறைந்தால் விவேகியாவான். ஐந்து அங்குலம் குறைந்தால் முதுமையை வெல்வான். ஆறு அங்குலம் குறைந்தால் ஆகாயத்தில் உள்ள சகலத்தையும் கண்டு உணர்வான். ஏழு அங்குலம் குறைந்தால் காயசித்தி உண்டாகும். எட்டு அங்குலம் குறைந்தால் அணிமாதி சித்திகளை அடைவான். ஒன்பது அங்குலமத் குறைந்தால் நவகண்டங்களிலும் சஞ்சரிப்பான். பத்து அங்குலம் குறைந்தால் ஒரு தேகம் விட்டு மற்றொரு தேகத்தில் பிரவேசிப்பான். பதினோரு அங்குலம் குறைந்தால் தனது ஆன்மாவையே கண்டு விசனிப்பான். பன்னிரண்டு அங்குலம் அடங்கும் சுவாசம் உதித்த இடத்திலேயே சுழன்று கொண்டிருப்பதால் அந்தப் பரமயோகி அன்னபானாதிகளை நீக்கி அசைவற்று சமாதியில் இருப்பான் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
சமாதியில் கூடிய சாதகன் இடகலையை பிங்கலையிலும், பிங்கலையை இடகலையிலும் மாற்றக் கற்றுக் கொண்ட பின், பகல் முழுவதும் இடகலையிலும், இரவில் பிங்கலையிலும் நடத்தப்படுவான்.
இந்த யோகத்தின் போது முதல் தீட்சையாக ரோமத் துவாரங்கள் வழியாக கெட்டநீர்கள் வியர்வையாகக் கசியும். இரண்டாவது கட்டத்தில் வாத, பித்த, சிலேத்தும தோஷங்கள் நீங்கும். மூன்றாவது கட்டத்தில் பழைய கெட்ட உதிரங்கள் கசியும். நான்காவது நிலையில் சர்ப்பத்தின் தோல் உரிவது போல் சரீரத்தின் தோல் உரியும். ஐந்தாம் கட்டத்தில் சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாக விளங்கும். பஞ்ச மூர்த்திகள் கேட்டதைத் தருவார்கள். ஆறாவது நிலையில் சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறந்து தூரதிருஷ்டி ஏற்படும். ஏழாம் கட்டத்தில் சட்டை வெறுப்பாய் கழன்று தீபம் போல் பிரகாசிக்கும். உட்டாவது நிலையில் இலாகிரியுமாகும். ஒன்பதாவதில் தேகம் சூரியனைப் போல பிரகாசிக்கும். அட்டமா சித்திகளும் ஏற்படும். தேவர்களும் ஏவல் புரிவர். பத்தாவது நிலையில் தேகம் சுடரொளிபோல் பிரகாசிக்கும்.பதினொன்றாவது நிலையில் கத்தியால் வெட்ட முடியாத படிக்கு தேகம் கல்போல் இருகும். பன்னிரண்டாவது கட்டத்தில் சொரூபசித்தி, அண்டத்தில் மௌனம், நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் ஏற்படாது.
சுடரான சுழுமுனையில் சந்திரன் சேர்ந்தால் பஞ்சபூதமும், அறிவும் ஒடுங்கும். சூரியன் சேர்ந்தால் ஐம்புலன்களும், அறிவும் ஒடுங்கும். சந்திரனும், நூரியனும் சேர்ந்து ஒடுங்கில் அறிவும், தசவாயுவும் ஒடுங்கும். இந்த வாயுவை நடுநிலையிலும், மூலத்திலும், நாபியிலும், கண்டத்திலும், சுழியிடத்திலும் சதா நிற்கப் பெற்றவர்களே மெய்ஞானியர்கள் என்பது சித்தர்கள் கூற்று.
தொடரும்.....

No comments:

Post a Comment