Friday, March 28, 2014

இந்நிலையையே ''தாமரை இலை தண்ணீர் துளி'' போல்

Photo: நிறைய பேருக்கு மனதில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அதாவது, உயர்வான தவ வாழ்விற்கு ஏன் இவ்வளவு இடையூறுகளும், தடைகளும் ஏற்படுகின்றன என்று. இங்கே சில குருமார்கள் 60 நாட்களில் ஞானம், ஆறு மாதத்தில் துரியம் என்றெல்லாம் சொல்லி, மூளைச் சலவை செய்து ஏதேதோ சொல்லி குழப்பத்தை விளைவித்து விடுகிறார்கள். ஐயா ஆறு மாதம் தாண்டி ஒரு வருடம் ஆகி விட்டதே, இது வரையில் எந்தப் பலனையும் காணோமே ? என்று கேட்டால், உங்களுக்கு கர்ம வினைகள் அதிகமாக இருக்கிறது, நீங்கள் போன ஜென்மத்தில் பெரிய பாவியாக இருந்திருக்கிறீர்கள். எனவேதான் உங்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. அதற்கு தியானம் செய்வது மட்டும் போதாது சிலபல ஹோமங்களைச் செய்தால்தான் பரிகாரம் ஏற்படும் என்று சொல்லி முடிந்த அளவு பணம் கறந்து விடுகிறார்கள். நமது அறியாமை அவர்களை பஞ்சனைகளிலும், இரத்தின சிம்மாசனங்களிலும் புரள வைக்கிறது. 

ஒரு விஷயத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, நமது வினைகளின் விளைவுகளை மற்றவர்களால் போக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ அல்லது நமது வினைகளின் விளைவுகளை மற்றவர்கள் அனுபவிப்பதோ இயலாது. நம் வினைகள் என்பது நம் ஆழ்மனதில் பதிவாகி சம்ஸ்காரங்கள் எனும் விதைகளாகி புதைந்து கிடக்கும் விஷயங்களாகும். நம்மால் கூட அவற்றை அறிந்து கொள்ள முடியாத போது மற்றவர்கள் எப்படி அவற்றை தெரிந்து கொள்ள முடியும். அப்படியானால் நம் வினைகளைப் போக்குவது எப்படி என்ற கேள்வி எழுவது இயற்கையே.  நம் வினைகளை ஏற்று அவற்றை அழிந்து போகச் செய்யும் ஆற்றல் இறையாற்றலுக்கு மட்டுமே உண்டு. எனவே தவத்தின் மூலம் இறையாற்றலை நம் ஆன்மாவானது உணரும் பொழுதுதான் நம் வினைகள் குறைந்து கொண்டே வரும். ஆனால், இறையாற்றலோடு கலந்து விடுவது என்பது ஒரே நாளில் நிகழ்ந்து விடுவதல்ல. அது ஆரம்பத்தில் நம் மன ஒருமைப்பாட்டையும், தவத்தின் தீவிரத்தையும் பொருத்து அவ்வப்போது இணைவதும், நழுவுவதுமாக இருக்கும். 

அப்படி அவ்வப்போது நிகழும் அந்த அற்புத இணைப்பின் போது நம் வினைகள் பேராற்றலில் சிறுகச் சிறுகக் கரைத்து கொண்டே இருக்கும். இப்போது பாருங்கள், நம் வினை வித்துக்கள் குறைந்து வரவர நமக்கு எண்ணங்கள் குறைந்து கொண்டே வரும். அப்படி எண்ணங்கள் குறைந்து வரவர மன அமைதி பெருகும். எனவே மன ஒருமைப்பாடு எளிதாகும். மனம் அந்நிலையில் அதிக நேரம் நிலைத்திருக்கும். அப்போது இணைப்பின் நேரமும் கூடும். முழுவதுமாக அதில் நிலைத்து, திளைத்திருப்பதே பேரானந்த நிலை. அந்நிலை வாய்த்தவர்கள் தங்கள் வினைகள்  முழுவதுமாக்க் கரையும் வரை ஜீவன் முக்தர் என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பர். அவர்கள் மனம் முற்றிலும் செயலிழந்து விட்ட நிலையில் அவர்களது புதிய வினைகள் எதுவும் அவர்கள் ஆன்மாவை நெருங்குவதில்லை. இந்நிலையையே ''தாமரை இலை தண்ணீர் துளி'' போல் என்பார்கள்.

எனவே இது ஒரு கடின முயற்சியைக் கொண்ட நீண்ட ஆன்மிகப் பயணமாகும். இதில் அவரவர் சுயேச்சையும், சுய முயற்சியும் மட்டுமே உள்ளடங்கி உள்ளது. குருவைத் தவிர மற்றவர்களின் எந்த முயற்சியும் இதில் பங்கு பெற முடியாது. குரு உணர்த்துவார், நாம் அந்த உணர்வில் நிலைத்து, நீடித்து முன்னேற வேண்டும். இந்த நீண்ட பயணத்தில் நமக்கு தடையாகவும், தடைகளைத் தகர்க்கும் ஆற்றலாகவும் விளங்குவது நம் வினைகளே. மேலும், இதுகாறும் நம்மிடம் விளங்கி வந்த குணங்களும், நம்மை இயக்கும் கருவிகளாக அமைந்த தத்துவங்களும், அவற்றால் விளைந்த உணர்வுகளும் பெரிய மலைகளைப் போல நம் முன்னே நின்று கொண்டிருக்கும். விடா முயற்சியும், வைராக்யமும், ஆன்ம நாட்டமும் கொண்டு அவற்றையெல்லாம் கடந்து சென்றவர்களுக்கே வெற்றி. இதைத்தான் குணங்களை, தத்துவங்களை, உணர்வுகளைக் கடந்தவனே வெற்றி பெறுவான் என்று சொல்கிறார்கள். 

உலகாய கர்மங்களின் மூலம் இன்ப நுகர்ச்சிக்கு அலையும் மனிதனின் போராட்டம் கடுமையானது. ஆசை மேல் ஆசை என்று ஒரு ஆசையிலிருந்து மற்றொரு ஆசைக்கு துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறான். உண்மையான இன்பம் எது, நாம் அடைய வேண்டிய இலக்கு என்ன என்ற கேள்வியும் உந்துதலும் அவனுள் இயல்பாகவே இருந்தாலும், அதை அடையும் வழிகள் முரண்பாடான உணர்வுகளாலும், குணங்களாலும் மறைக்கப்பட்டு விடுவதால், உண்மையை அடையும் வழியறியாமலும் மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கங்கள் உள்ளே குமுறிக் கொண்டிருக்கும் எரிமலையை ஒத்த மனதை உடையவனாகவும் வாழ்ந்து, முடிவில் ஒரு நாள் தன் உடற் கூட்டை விட்டு பறந்து விடுகிறான். ஆனால், இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும், ஏக்கங்களுக்கு மத்தியிலும், கொந்தளித்துக் குமுறிக்கொண்டிருக்கும் உணர்வுகளுக்கு மத்தியிலும் ஒரு ஆனந்தமான அமைதியான துன்பமற்ற ஒளிமிகுந்த மௌனம் ஒன்று தன்னுள்ளே மறைந்திருப்பதை அறியாமலேயே போய் விடுகிறான். 

வாழும் போதே இந்த நிதர்சனமான உண்மைகளை உணர்ந்த ஒரு சிலரே புற உலக வாழ்விலிருந்து தம் மனதை விலக்க முயற்சிக்கின்றனர். மேலும் உள் முகமாக நோக்கம் கொண்டு அங்கு நடைபெறும் மனநிலை மாறுதல்களை உற்றுக் கவனிக்க விழைகின்றனர். வாழ்க்கையின் நிதர்சனம் என்ன ? நாம் எதற்காகப் பிறந்தோம் ? எங்கிருந்து வந்தோம் ? எங்கே போகிறோம் ? நம் குறிக்கோள் தான் என்ன ? இடைவிடாத போராட்டம் நிறைந்த இந்த நிலையாமைதான் வாழ்க்கையா ? என்று தனக்குத் தானே கேள்விகளைக் கேட்டு, அதற்கான விடைகளைத் தேட முனைகின்றனர். அந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டுமானால் குரோதம் என்ற கொடுமையான அடர்ந்த இருண்ட வனங்களைக் கடந்து செல்ல வேண்டும். அஹங்காரமென்னும் பேய் போல ஓடிக் கொண்டிருக்கும் காட்டாற்றைக் கடந்துதானாக வேண்டும். அறியாமை எனும் நீண்ட இருண்ட குகையைக் கடின முயற்சியால் கடந்து போயாக வேண்டும். சுயநலம், பேராசை, காமம் போன்ற மிருகங்களை போராடி அழிக்க வேண்டும். ஆனால், இவை எல்லாம் ஆரம்ப கட்டமே இவற்றை மன உறுதியோடு ஒருவன் கடந்து விட்டால் அங்கே திரும்பும் திசையெல்லாம் சுகந்த மலர்கள் மலர்ந்து மணம் வீசும் தோட்டங்கள், வற்றாத அமிர்த உற்றுகள், இருளே இல்லாத ஒளிமயமான ஒரு உலகம் கண் முன்னே விரியும். அதற்கு முடிவில்லை ஆரம்பமுமில்லை, அங்கே இரவில்லை பகலில்லை, அங்கே இன்பமேயன்றி துன்மில்லை. ஆனந்தம்... ஆனந்தம்.. பரமானந்தம்... ஈடில்லாப் பேரானந்தம்.... நித்தமும் ஆனந்தம்.. அதுவே நித்தியானந்தம்.
நிறைய பேருக்கு மனதில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அதாவது, உயர்வான தவ வாழ்விற்கு ஏன் இவ்வளவு இடையூறுகளும், தடைகளும் ஏற்படுகின்றன என்று. இங்கே சில குருமார்கள் 60 நாட்களில் ஞானம், ஆறு மாதத்தில் துரியம் என்றெல்லாம் சொல்லி, மூளைச் சலவை செய்து ஏதேதோ சொல்லி குழப்பத்தை விளைவித்து விடுகிறார்கள். ஐயா ஆறு மாதம் தாண்டி ஒரு வருடம் ஆகி விட்டதே, இது வரையில் எந்தப் பலனையும் காணோமே ? என்று கேட்டால், உங்களுக்கு கர்ம வினைகள் அதிகமாக இருக்கிறது, நீங்கள் போன ஜென்மத்தில் பெரிய பாவியாக இருந்திருக்கிறீர்கள். எனவேதான் உங்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. அதற்கு தியானம் செய்வது மட்டும் போதாது சிலபல ஹோமங்களைச் செய்தால்தான் பரிகாரம் ஏற்படும் என்று சொல்லி முடிந்த அளவு பணம் கறந்து விடுகிறார்கள். நமது அறியாமை அவர்களை பஞ்சனைகளிலும், இரத்தின சிம்மாசனங்களிலும் புரள வைக்கிறது.

ஒரு விஷயத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, நமது வினைகளின் விளைவுகளை மற்றவர்களால் போக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ அல்லது நமது வினைகளின் விளைவுகளை மற்றவர்கள் அனுபவிப்பதோ இயலாது. நம் வினைகள் என்பது நம் ஆழ்மனதில் பதிவாகி சம்ஸ்காரங்கள் எனும் விதைகளாகி புதைந்து கிடக்கும் விஷயங்களாகும். நம்மால் கூட அவற்றை அறிந்து கொள்ள முடியாத போது மற்றவர்கள் எப்படி அவற்றை தெரிந்து கொள்ள முடியும். அப்படியானால் நம் வினைகளைப் போக்குவது எப்படி என்ற கேள்வி எழுவது இயற்கையே. நம் வினைகளை ஏற்று அவற்றை அழிந்து போகச் செய்யும் ஆற்றல் இறையாற்றலுக்கு மட்டுமே உண்டு. எனவே தவத்தின் மூலம் இறையாற்றலை நம் ஆன்மாவானது உணரும் பொழுதுதான் நம் வினைகள் குறைந்து கொண்டே வரும். ஆனால், இறையாற்றலோடு கலந்து விடுவது என்பது ஒரே நாளில் நிகழ்ந்து விடுவதல்ல. அது ஆரம்பத்தில் நம் மன ஒருமைப்பாட்டையும், தவத்தின் தீவிரத்தையும் பொருத்து அவ்வப்போது இணைவதும், நழுவுவதுமாக இருக்கும்.

அப்படி அவ்வப்போது நிகழும் அந்த அற்புத இணைப்பின் போது நம் வினைகள் பேராற்றலில் சிறுகச் சிறுகக் கரைத்து கொண்டே இருக்கும். இப்போது பாருங்கள், நம் வினை வித்துக்கள் குறைந்து வரவர நமக்கு எண்ணங்கள் குறைந்து கொண்டே வரும். அப்படி எண்ணங்கள் குறைந்து வரவர மன அமைதி பெருகும். எனவே மன ஒருமைப்பாடு எளிதாகும். மனம் அந்நிலையில் அதிக நேரம் நிலைத்திருக்கும். அப்போது இணைப்பின் நேரமும் கூடும். முழுவதுமாக அதில் நிலைத்து, திளைத்திருப்பதே பேரானந்த நிலை. அந்நிலை வாய்த்தவர்கள் தங்கள் வினைகள் முழுவதுமாக்க் கரையும் வரை ஜீவன் முக்தர் என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பர். அவர்கள் மனம் முற்றிலும் செயலிழந்து விட்ட நிலையில் அவர்களது புதிய வினைகள் எதுவும் அவர்கள் ஆன்மாவை நெருங்குவதில்லை. இந்நிலையையே ''தாமரை இலை தண்ணீர் துளி'' போல் என்பார்கள்.

எனவே இது ஒரு கடின முயற்சியைக் கொண்ட நீண்ட ஆன்மிகப் பயணமாகும். இதில் அவரவர் சுயேச்சையும், சுய முயற்சியும் மட்டுமே உள்ளடங்கி உள்ளது. குருவைத் தவிர மற்றவர்களின் எந்த முயற்சியும் இதில் பங்கு பெற முடியாது. குரு உணர்த்துவார், நாம் அந்த உணர்வில் நிலைத்து, நீடித்து முன்னேற வேண்டும். இந்த நீண்ட பயணத்தில் நமக்கு தடையாகவும், தடைகளைத் தகர்க்கும் ஆற்றலாகவும் விளங்குவது நம் வினைகளே. மேலும், இதுகாறும் நம்மிடம் விளங்கி வந்த குணங்களும், நம்மை இயக்கும் கருவிகளாக அமைந்த தத்துவங்களும், அவற்றால் விளைந்த உணர்வுகளும் பெரிய மலைகளைப் போல நம் முன்னே நின்று கொண்டிருக்கும். விடா முயற்சியும், வைராக்யமும், ஆன்ம நாட்டமும் கொண்டு அவற்றையெல்லாம் கடந்து சென்றவர்களுக்கே வெற்றி. இதைத்தான் குணங்களை, தத்துவங்களை, உணர்வுகளைக் கடந்தவனே வெற்றி பெறுவான் என்று சொல்கிறார்கள்.

உலகாய கர்மங்களின் மூலம் இன்ப நுகர்ச்சிக்கு அலையும் மனிதனின் போராட்டம் கடுமையானது. ஆசை மேல் ஆசை என்று ஒரு ஆசையிலிருந்து மற்றொரு ஆசைக்கு துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறான். உண்மையான இன்பம் எது, நாம் அடைய வேண்டிய இலக்கு என்ன என்ற கேள்வியும் உந்துதலும் அவனுள் இயல்பாகவே இருந்தாலும், அதை அடையும் வழிகள் முரண்பாடான உணர்வுகளாலும், குணங்களாலும் மறைக்கப்பட்டு விடுவதால், உண்மையை அடையும் வழியறியாமலும் மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கங்கள் உள்ளே குமுறிக் கொண்டிருக்கும் எரிமலையை ஒத்த மனதை உடையவனாகவும் வாழ்ந்து, முடிவில் ஒரு நாள் தன் உடற் கூட்டை விட்டு பறந்து விடுகிறான். ஆனால், இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும், ஏக்கங்களுக்கு மத்தியிலும், கொந்தளித்துக் குமுறிக்கொண்டிருக்கும் உணர்வுகளுக்கு மத்தியிலும் ஒரு ஆனந்தமான அமைதியான துன்பமற்ற ஒளிமிகுந்த மௌனம் ஒன்று தன்னுள்ளே மறைந்திருப்பதை அறியாமலேயே போய் விடுகிறான்.

வாழும் போதே இந்த நிதர்சனமான உண்மைகளை உணர்ந்த ஒரு சிலரே புற உலக வாழ்விலிருந்து தம் மனதை விலக்க முயற்சிக்கின்றனர். மேலும் உள் முகமாக நோக்கம் கொண்டு அங்கு நடைபெறும் மனநிலை மாறுதல்களை உற்றுக் கவனிக்க விழைகின்றனர். வாழ்க்கையின் நிதர்சனம் என்ன ? நாம் எதற்காகப் பிறந்தோம் ? எங்கிருந்து வந்தோம் ? எங்கே போகிறோம் ? நம் குறிக்கோள் தான் என்ன ? இடைவிடாத போராட்டம் நிறைந்த இந்த நிலையாமைதான் வாழ்க்கையா ? என்று தனக்குத் தானே கேள்விகளைக் கேட்டு, அதற்கான விடைகளைத் தேட முனைகின்றனர். அந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டுமானால் குரோதம் என்ற கொடுமையான அடர்ந்த இருண்ட வனங்களைக் கடந்து செல்ல வேண்டும். அஹங்காரமென்னும் பேய் போல ஓடிக் கொண்டிருக்கும் காட்டாற்றைக் கடந்துதானாக வேண்டும். அறியாமை எனும் நீண்ட இருண்ட குகையைக் கடின முயற்சியால் கடந்து போயாக வேண்டும். சுயநலம், பேராசை, காமம் போன்ற மிருகங்களை போராடி அழிக்க வேண்டும். ஆனால், இவை எல்லாம் ஆரம்ப கட்டமே இவற்றை மன உறுதியோடு ஒருவன் கடந்து விட்டால் அங்கே திரும்பும் திசையெல்லாம் சுகந்த மலர்கள் மலர்ந்து மணம் வீசும் தோட்டங்கள், வற்றாத அமிர்த உற்றுகள், இருளே இல்லாத ஒளிமயமான ஒரு உலகம் கண் முன்னே விரியும். அதற்கு முடிவில்லை ஆரம்பமுமில்லை, அங்கே இரவில்லை பகலில்லை, அங்கே இன்பமேயன்றி துன்மில்லை. ஆனந்தம்... ஆனந்தம்.. பரமானந்தம்... ஈடில்லாப் பேரானந்தம்.... நித்தமும் ஆனந்தம்.. அதுவே நித்தியானந்தம்.

No comments:

Post a Comment