Friday, March 28, 2014

இதுவே விடுதலை. இதுவே வீடுபேறு. இதுவே முக்தி.

Photo: தவம், தானம்,யக்ஞம் எல்லாம் தன்னுடைய தேவைகளுக்காகச் செய்யப்படுமானால் அது காமிய கர்மம் எனப்படும். பட்டம், புகழ், புத்திர பாக்கியம், செல்வம், ஆயுள், ஆரோக்யம் போன்றவைகளை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படும் தவம் நிச்சியமாக பலனைத்தரும். ஆனால், அவை மீண்டும் மீண்டும் பிறவிகளையும், துன்பங்களையும் தருபவையே. இத்தகைய ஆசைகளைத் துறந்து விடுவதே சந்நியாசம் எனப்படுகிறது. காமிய கர்மங்களை புதிய விதைகள் என்று கூறலாம். ஏற்கனவே முளைத்து வளர்ந்திருக்கும் விருக்ஷத்தை வெட்ட நினைப்பவர்கள் புதிய விதைகளை விதைக்கலாகாது. இதையே ''மரத்தை வெட்டு பரமதை நாடு'' என்பார்கள்.

இந்த சம்சாரமாகிய பிரபஞ்சத்தையே நம் முன்னோர்கள் ஒரு பெரிய அரச மரத்தோடு ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். இதில் மேல்புறமாக அமைந்துள்ள கிளைகள் படைப்பைக் குறிப்பதாகும். கீழான கிளைகள் பூமியும் அதைச் சார்ந்த சகலத்தையும் குறிப்பவைகளாகும். ஞானத்திற்கு ஏற்ப மேலான பிறவியும், கர்மத்துக்கு ஏற்ப கீழான பிறவியும், இரண்டும் கலந்த நடுத்தரமான மானுடப் பிறவிகளும் இதில் அடங்கும். கிளைகளுள் சாரமிருந்தால்தான் அவை தளிர் விடும். அதாவது இந்திரியங்கள் வாயிலாக புறச் செயல்களில் உழல்வதே இந்த சம்சாரத்திற்கு தளிர்களாகின்றன. இந்த செயல் இருக்கும் வரை கிளைகள் தளிர் விட்டுக் கொண்டே இருக்கும். வேர் என்று எடுத்துக் கொண்டால், மாயாஸகிதனாகிய ஈஸ்வரனிடத்திலிருந்து இந்த பிரபஞ்சம் வந்திருப்பதால் ஈஸ்வரனே இந்த அசுவத்துக்கு மேலே உள்ள ஆணிவேர். மற்ற விதவிதமான கர்மங்களே சல்லி வேர். சல்லி வேர்களை இடையிடையே கலைவதால் மரம் பண்படுகிறது. இது போலவே நாம் நம் கர்மங்களை ஒழுங்கு படுத்தித் திருத்திக் கொள்கிறோம். நல்ல அல்லது கெட்ட இயல்புகளில் மனிதனைப் பந்தப்படுத்தி பிறவித் துன்பத்தில் அழுத்தி ஜீவர்களை பிடித்து வைத்த்திருப்பது கர்மம் என்கிற வேர்களே. எனவேதான் கண்ணன் கீதையில் மரத்தை வெட்டி மோட்சத்தை நாடு என்கிறார்.

மரத்தையே வெட்டி விடு என்கிறார். வேர்களை என்னதான் ஒழுங்கு படுத்தினாலும் அது மீண்டும் மீண்டும் முளைக்கும். இதற்கான ஆஸ்ரமமே சந்நியாசம். இந்த நான்காவது ஆஸ்ரமமே தியாகம் என்று முன்னோர்களால் குறிப்பிடப்படுகிறது. எல்லா கர்மங்களையும், அதன் பயன்களையும் துறந்து விடுவதால் அது தியாகம் என்று சொல்லப்படுகிறது. இதனால் மட்டுமே புதிய விதைகளை விதைக்காமலும், பழைய விருக்ஷத்தை அடியோடு வேரறுக்கவும் முடியும். அதாவது அறவே கர்மங்களை ஒழித்து விடுதல் என்பது முடிவு. இந்த கர்மம் விஷத்தை ஒத்தது. அதனால் உயிரை கொல்லவும் முடியும், அதே விஷத்தை ஔஷதமாக மாற்றி அமைத்து உயிரைக் காக்கவும் முடியும். இதை ஏன் சொல்கிறேன் என்றால்,காமிய கர்மங்களே ஜீவனை பந்தப்படுத்தி பிறப்பிறப்பு என்கிற துன்பத்தில் தள்ளுகின்றன. அதே தவம், தானம், யக்ஞம் என்கிற கர்மங்களை பற்றறுந்த நிலையில் செய்யும் போது அது சாதகனுக்கு முக்தியைத் தந்துவிடுகிறது.

இந்த தியாகம் என்கிற துறவு ஒரு கூட்டுப்புழுவின் செயலை ஒத்தது. அது தனக்குத்தானே கூடு கட்டி தன்னையே கூட்டுக்குள் சிறை வைத்துக் கொள்கிறது. நீண்டநாள் சிறை வாசத்துக்குப் பிறகு பட்டுப் பூச்சியாக மாறி கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்து வெட்ட வெளியில் சிறகடித்துப் பறக்கிறது. சந்நியாசியாக மாறிய துறவியின் தியாக நிலையும் இது தான். புறத்தே உழன்று கொண்டிருந்த மனதை கட்டுப்படுத்தி உள்ளே சிறை வைத்து, பக்குவப்படுத்தி, காலம் வரும் போது ஞானம் என்ற சிறகு முளைத்தவுடன், வைராக்யம் கொண்டு கூட்டை உடைத்து வெட்ட வெளியில் கலந்து ஐக்கியமாகி விடுகிறார். இதுவே விடுதலை. இதுவே வீடுபேறு. இதுவே முக்தி.
தவம், தானம்,யக்ஞம் எல்லாம் தன்னுடைய தேவைகளுக்காகச் செய்யப்படுமானால் அது காமிய கர்மம் எனப்படும். பட்டம், புகழ், புத்திர பாக்கியம், செல்வம், ஆயுள், ஆரோக்யம் போன்றவைகளை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படும் தவம் நிச்சியமாக பலனைத்தரும். ஆனால், அவை மீண்டும் மீண்டும் பிறவிகளையும், துன்பங்களையும் தருபவையே. இத்தகைய ஆசைகளைத் துறந்து விடுவதே சந்நியாசம் எனப்படுகிறது. காமிய கர்மங்களை புதிய விதைகள் என்று கூறலாம். ஏற்கனவே முளைத்து வளர்ந்திருக்கும் விருக்ஷத்தை வெட்ட நினைப்பவர்கள் புதிய விதைகளை விதைக்கலாகாது. இதையே ''மரத்தை வெட்டு பரமதை நாடு'' என்பார்கள்.

இந்த சம்சாரமாகிய பிரபஞ்சத்தையே நம் முன்னோர்கள் ஒரு பெரிய அரச மரத்தோடு ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். இதில் மேல்புறமாக அமைந்துள்ள கிளைகள் படைப்பைக் குறிப்பதாகும். கீழான கிளைகள் பூமியும் அதைச் சார்ந்த சகலத்தையும் குறிப்பவைகளாகும். ஞானத்திற்கு ஏற்ப மேலான பிறவியும், கர்மத்துக்கு ஏற்ப கீழான பிறவியும், இரண்டும் கலந்த நடுத்தரமான மானுடப் பிறவிகளும் இதில் அடங்கும். கிளைகளுள் சாரமிருந்தால்தான் அவை தளிர் விடும். அதாவது இந்திரியங்கள் வாயிலாக புறச் செயல்களில் உழல்வதே இந்த சம்சாரத்திற்கு தளிர்களாகின்றன. இந்த செயல் இருக்கும் வரை கிளைகள் தளிர் விட்டுக் கொண்டே இருக்கும். வேர் என்று எடுத்துக் கொண்டால், மாயாஸகிதனாகிய ஈஸ்வரனிடத்திலிருந்து இந்த பிரபஞ்சம் வந்திருப்பதால் ஈஸ்வரனே இந்த அசுவத்துக்கு மேலே உள்ள ஆணிவேர். மற்ற விதவிதமான கர்மங்களே சல்லி வேர். சல்லி வேர்களை இடையிடையே கலைவதால் மரம் பண்படுகிறது. இது போலவே நாம் நம் கர்மங்களை ஒழுங்கு படுத்தித் திருத்திக் கொள்கிறோம். நல்ல அல்லது கெட்ட இயல்புகளில் மனிதனைப் பந்தப்படுத்தி பிறவித் துன்பத்தில் அழுத்தி ஜீவர்களை பிடித்து வைத்த்திருப்பது கர்மம் என்கிற வேர்களே. எனவேதான் கண்ணன் கீதையில் மரத்தை வெட்டி மோட்சத்தை நாடு என்கிறார்.

மரத்தையே வெட்டி விடு என்கிறார். வேர்களை என்னதான் ஒழுங்கு படுத்தினாலும் அது மீண்டும் மீண்டும் முளைக்கும். இதற்கான ஆஸ்ரமமே சந்நியாசம். இந்த நான்காவது ஆஸ்ரமமே தியாகம் என்று முன்னோர்களால் குறிப்பிடப்படுகிறது. எல்லா கர்மங்களையும், அதன் பயன்களையும் துறந்து விடுவதால் அது தியாகம் என்று சொல்லப்படுகிறது. இதனால் மட்டுமே புதிய விதைகளை விதைக்காமலும், பழைய விருக்ஷத்தை அடியோடு வேரறுக்கவும் முடியும். அதாவது அறவே கர்மங்களை ஒழித்து விடுதல் என்பது முடிவு. இந்த கர்மம் விஷத்தை ஒத்தது. அதனால் உயிரை கொல்லவும் முடியும், அதே விஷத்தை ஔஷதமாக மாற்றி அமைத்து உயிரைக் காக்கவும் முடியும். இதை ஏன் சொல்கிறேன் என்றால்,காமிய கர்மங்களே ஜீவனை பந்தப்படுத்தி பிறப்பிறப்பு என்கிற துன்பத்தில் தள்ளுகின்றன. அதே தவம், தானம், யக்ஞம் என்கிற கர்மங்களை பற்றறுந்த நிலையில் செய்யும் போது அது சாதகனுக்கு முக்தியைத் தந்துவிடுகிறது.

இந்த தியாகம் என்கிற துறவு ஒரு கூட்டுப்புழுவின் செயலை ஒத்தது. அது தனக்குத்தானே கூடு கட்டி தன்னையே கூட்டுக்குள் சிறை வைத்துக் கொள்கிறது. நீண்டநாள் சிறை வாசத்துக்குப் பிறகு பட்டுப் பூச்சியாக மாறி கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்து வெட்ட வெளியில் சிறகடித்துப் பறக்கிறது. சந்நியாசியாக மாறிய துறவியின் தியாக நிலையும் இது தான். புறத்தே உழன்று கொண்டிருந்த மனதை கட்டுப்படுத்தி உள்ளே சிறை வைத்து, பக்குவப்படுத்தி, காலம் வரும் போது ஞானம் என்ற சிறகு முளைத்தவுடன், வைராக்யம் கொண்டு கூட்டை உடைத்து வெட்ட வெளியில் கலந்து ஐக்கியமாகி விடுகிறார். இதுவே விடுதலை. இதுவே வீடுபேறு. இதுவே முக்தி.

No comments:

Post a Comment