நம்மிடம்
உள்ள மிகப் பெரிய குறைபாடு என்ன தெரியுமா ? நம்மிடம் தள்ளும் தன்மை மிகக்
குறைவாக இருக்கிறது. தள்ளுவது என்றால் நமக்கு முன்னால் உள்ளவர்களைக் கீழே
தள்ளி விட்டு, அவர்கள் முதுகில் ஏறிச் செல்வதல்ல, நான் சொல்வது தவிர்ப்பது
அல்லது விலக்குவது. இந்த பிரபஞ்சத்தில்
ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயங்கும் பரம்பொருளின் இயக்கத்தில் இந்தத்
தள்ளுதலும், ஈர்த்தலும் சமவிகிதத்தில் நடப்பதால்தான் இந்தப் பிரபஞ்சத்தில்
நடைபெறும் அனைத்து இயல்பான செயல்களும் நேர்த்தியாக நூல் பிடித்தது போல
நடக்கிறது. ஆனால், இந்த ப்ரபஞ்ச சக்தியிலிருந்து உருவான நம் மனதிற்கு
ஈர்த்துக் கொள்ளும் அளவுக்குத் தள்ளும் தன்மை இல்லை. அதாவது விலக்கும்
அல்லது விலகும் தன்மை குறைவே. இந்த இரண்டு தன்மைகளும் மாறுபடும் பட்சத்தில்
உடல் மற்றும் உயிர் இயக்கங்களில் பிரச்சனைகள் தோன்றுகின்றன. இதன்
விளைவாகப் பொறும் அனுபவத்தையே துன்பம் என்று கூறுகின்றோம். நம் மனதில்
இந்தக் குறைபாடு உள்ளதால் நம் உடலில் காணும் அனைத்து அணுக்களிலும், அதன்
இயக்கங்களிலும் இந்தக் குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. இதனால் உடல்
நோய்வாய்ப்படுகிறது. மனதில் ஏற்படும் நோயை அஞ்ஞானம் என்று சொல்கிறோம்.
இதைத்தான் நம் முன்னோர்கள் பற்றற்று இரு என்று சொல்கிறார்கள். பற்றற்று அல்லது பற்றறுப்பது என்பது விலக்குவதே, வேறொன்றுமில்லை. யோக சாதனைகளிலும் இந்த நிலை ஏற்படும். மனதை ஒரு பொருள் மீது குவித்துப் பழகுகிறோம். நல்ல பயிற்சி ஏற்பட்டு விட்டது. மனம் ஒரு நிலையில் குவியும் திறனைப் பெற்று விட்டது. சரி, இனி என்ன ? அந்தப் பொருளில் இருந்து மனதை விலக்க வேண்டுமல்லவா ? ஆனால், நம் மனம் விலகுவதில்லை. அதன் மீது பற்று கொண்டு மனதளவில் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு விலக மறுக்கிறது. அதாவது அதைத் தள்ளாமல் பற்றிக் கொண்டேயிருக்கிறது. இது பெருந்தடையாகும். எனவேதான் நம் சித்தர் பெருமக்கள் இத்தகைய விஷயங்களைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். எனவே குவிக்கும் ஆற்றலை வலுப்படுத்தும் போதே தள்ளும் அதாவது விலக்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், இங்கே நடப்பது என்னவென்றால் இளமையிலேயே நிறைய விஷயங்களைக் கிரகித்து வைத்துக் கொள்கிறோம். பிறகு குவிக்கவும் தள்ளவும் முயற்சி செய்தால் அது இயலாமல் போகிறது. ஏனென்றால் இங்கே சேகரித்து வைத்த செல்லரித்துப் போன குப்பைகள் ஏராளம் இருக்கின்றன. எனவே மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்த வண்ணம் உள்ளது. குவிக்கவும் இயலாது, தள்ளவும் இயலாது. நடை பிணம்தான். குப்பை என்று சொல்வதன் காரணமென்னவென்றால் உபயோகப்படாமல் வீணாகிப் போவதோடு நம் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளவும் இடையூறாக அமைந்து விடுகிறதல்லவா ? அதனால்தான்.
கல்வி என்பதே இதற்காகத்தான். அதாவது மனதை தெளியவைத்து அறிவைப் பிரகாசமடையச் செய்வதற்கு. அதனால்தான் இளமையில் கல் என்றார்கள். அந்த முறையெல்லாம் குருகுல வாசத்தோடு முடிந்து விட்டது. இப்போது கல்வி என்பதே கல் போலச் சுமையாக இருக்கின்றது. பிறகு எங்கிருந்து குவிப்பது, தள்ளுவது. எல்லாம் ஒப்புக்கு மாரடிப்பதுதான். என்னடா இவன் அபசகுணமாகப் பேசுகிறானே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். இங்கே அதுதான் நடக்கிறது. பரிட்சைக்கு முதல் நாள் விடிய விடிய சோறு தண்ணி கூட மறந்து, உட்கார்ந்து நெஞ்சில் கையை வைத்து அடித்துக் கொண்டு உருத்தட்டி மண்டையில் ஏற்றி வைத்துக் கொண்டு, அப்படியே போய் பேப்பரில் கொட்டி விடுகிறார்கள். அவ்வளவுதான் முடிந்தது. ஒரு மாசம் கழித்து அதே கேள்வியைக் கேளுங்கள் ஆயிரத்தில் ஒருவன்தான் பதில் சொல்வான். நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் கல்வி என்பதே மனவளர்ச்சிக்காகத்தான். மன வளர்ச்சி என்பது கொள்ளுவதும், தள்ளுவதும்தான். மன ஒருமைப்பாடு உடையவர்களுக்கே இது எளிதில் சாத்தியமாகும். எனவே படிக்கின்ற பாடத்தில் மனமொன்றிப் படிப்பவர்களே பிற்காலத்தில் பெரிய மேதைகளாகவோ, விஞ்ஞானிகளாகவோ, செயல் வீரர்களாகவோ வருகிறார்கள். மற்றவர்களெல்லாம் பணம் காய்க்கும் மரங்களே. அவர்களிடத்தில் மனவளர்ச்சிக்கு இடமேயில்லை. இறுதி வரை ஒரே மாரடிப்புதான்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த மனவளர்ச்சி என்கிற விஷயத்தை குழந்தைப் பருவத்திலேயே தர வேண்டும். மன ஒருமைப்பாடு, மனதைக் குவிப்பது, தேவையற்றதைத் தள்ளுவது, விலக்குவது போன்ற பயிற்சிகளை இளமையிலேயே கொடுத்து விட்டோமேயானால், தேவைப்படும் போது தேவைப்படுவதை எடுத்துக் கொள்ளவும், பிறகு அதை விலக்கவும் கூடிய மனப்பக்குவம் வந்து விடும். அதாவது நாமாக தேவைப்படும் போது ஒரு பொருளின் மீது நம் மனதைச் செல்த்த வேண்டுமேயல்லாது, பொருட்கள் நம் மனதை ஈர்க்கும் அளவிற்கு நம் மனம் வலிமையற்றதாக இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட பலவீனத்திற்குக் காரணம் குவிக்கும் தன்மை உடையவர்களாகவே நாம் வளர்க்கப்படுகிறோம். மனதை அடக்கவும், தேவையற்ற சூழலில் தேவையற்றதிலிருந்து விலக்கவும் நமக்குப் பயிற்சிகள் தரப்படுவதில்லை. எனவே பிடித்த பிடி உடும்புப் பிடிதான் கடைசி வரை பற்றிய கையை விடுவதே இல்லை. பற்றறுக்கும் வரை விடிவு என்பது இல்லவேயில்லை. விலக்குவது என்பது மனதளவில் நடைபெற வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே மனம் வசப்படுதல் என்பது மிக மிக அவசியமாகும். மனம் குவிந்து புத்தி என்ற நிலையில் நிலைத்து, புத்திக்குப் புத்தியாகிய சித்தத்தில் திளைத்து நான் என்ற உணர்வில் அடங்கும் பொழுதுதான் நான் ஆன்மாவென்பது அறிவுக்குப் புலப்படும். அங்கிருக்கும் வரை அதை நாம் நம் அறிவால் அறியத்தான் முடியுமே தவிர உணர முடியாது. எனவே அதை மேலாற்றிக் கொண்டு போக வேண்டும். அப்பொழுதான் அதை உணர முடியும். அந்த உணர்வில் நிலைதது நின்றவர்களே பேரான்மாவை அடைய முடியும். அதுவே இன்பம். அதுவே ஆனந்தம். விலக்க வேண்டியவற்றை விலக்கினால் நாமே ஆனந்தமாக ஆகி விடுவோம்.

No comments:
Post a Comment