Friday, March 28, 2014

நூறாண்டு காலம் வாழ்வீர்களாக.

Photo: வாழ்க்கை எந்த அளவிற்கு சுகமானதும், சுவாரஸ்யமானதுமாகத் தோன்றுகிறதோ, அதே அளவிற்கு சிக்கலானதாகவும் இருக்கிறது. அது ஒரு கலை. நம்மில் பெரும்பாலானோர் மகிழ்வும், மேன்மையும், சீரும், சிறப்பும் மிக்க வாழ்க்கையை வாழ்வதில்லை. ஏதோ வாழ்ந்தாக வேண்டுமே என்பதற்காக வாழ்வது போலத் தோன்றுகிறது.  கற்பனை உலகில் பகட்டான வாழ்க்கையை உயர்வாக எண்ணி ஏங்கும் நிலையை காண முடிகிறது. எனவே வாழ்வைப் பற்றிய பொய்யான கொள்கைகள், கடமையை மறத்தல் அல்லது மறுத்தல், எப்போதும் இயற்கையை மீறி நடத்தல், குறிக்கோளற்ற தன்மை போன்ற குணாதிசயங்கள் பரவலாகக் காணப்படுகிறது. விளைவு துன்பம் மட்டுமல்ல நோய்களும் தான். முடிவில் வேறு வழி வகையின்றி விதி விட்ட வழி என்று ஓய்ந்து முடிந்து போகிறது. முழுமையான வாழ்க்கை என்பது உடல்நலம், மன அமைதி, ஆன்மத் தூய்மை, இலட்சியம், உயர்ந்த நோக்கம், இயற்கையோடு இசைந்த உறவு இவைகளெல்லாம் உடையதாக இருக்க வேண்டும்.
ஒரு மனிதனின் உடல் நலத்தை அவன் வாழ்க்கை முறையும், உணவுப் பழக்க வழக்கங்களுமே நிர்ணயிக்கின்றன. நெறியான வாழ்வு, உடல் பயிற்சி, தேவைக்கேற்ற ஓய்வு, யோகம், நல்ல உணவு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரவேண்டும். காபி, புகையிலை, மது, மருந்துகள் போன்றவற்றை தவிர்த்து விடுவது நலம். பெரும்பாலும் விபத்து, பரம்பரையினால் வருவதல்லாமல் இப்போது, வருகின்ற நோய்கள் அனைத்துமே நோய்களல்ல. அவை அறிகுறிகள்தான். காய்ச்சல், தலைவலி, சளி, நீரழிவு, இரத்த அழுத்தம் இவையெல்லாம் நோய்களல்ல, இதயம், நுரையீரல், கணையம், சிறுநீரகம் போன்றவற்றிலோ, இரத்த ஓட்டத்திலோ ஏற்பட்டுள்ள தவறுகள், ஒழுங்கின்மை, மாற்றங்கள் போன்றவற்றை சுட்டிக் காட்டும் அறிகுறிகள். 
நம் உடலை ஒரு இயந்திரம் என்று சொல்வது பொருந்தும். ஆனால் இது உயிருள்ள இயந்திரம். மனிதன் நாகரிகம் என்ற பெயரில் தடம் புரளும் போதெல்லாம் தன் இருப்பை, தன் திறனை மனிதனுக்கு இந்த உடலானது, சில அறிகுறிகள் மூலம் எச்சரிக்கிறது. ஆனால் அதையும் மீறி குற்றங்களை செய்து கொண்டே இருக்கிறான். அறிகுறியின் தாக்கம் அதிகமாகும் போது, உடனடியாக அதன் துன்பத்திலிருந்து விடுபட எண்ணி சில பல மருந்துகளை வாங்கி விழுங்குகிறான்.  விளைவு உள்ளே உள்ள பிரச்சனை தீர்வதில்லை. அறிகுறிகள் தற்காலிகமாக அடக்கி வைக்கப்படுகின்றன. இது மிகப் பெரிய ஆபத்து என்பதை அவன் கடைசி வரை உணராமலேயே பயணப்பட்டு விடுகிறான். நம் உடலில் ஏதேனும் தவறு நேர்ந்தால் அதை நம் உடலே சரி செய்து விடும் அதற்கான கால அவகாசம் அதற்குத் தரப்பட வேண்டும். ஆனால் நாம் மருந்து உட்கொள்வதால் அதன் அந்த தன்மை தேவையில்லாமல் போக முடிவில் அந்தத் தனமையையே உடல் இழந்து விடுகிறது. நம்மில் பெரும்பாலனவர்கள் உடலில் இந்த நோய் எதிர்ப்புத் திறன் இல்லாதவர்களாக இருக்கிறோம். காரணம் செயற்கை இயற்கையை முடக்கி விட்டது. எந்த வியாதியாக இருந்தாலும், உணவுக் கட்டுப்பாடு, உபவாசம், உடற்பயிற்சிகள், பிராணாயாமம், தியானம் போன்ற வற்றால் குணப்படுத்த முடியும். உபவாசம், உண்ணா நோன்பு, என்பதுவும் பட்டினி கிடப்பதுவும் ஒன்றல்ல. உணவு இல்லாமல் மனிதன் கிடப்பது பட்டினி. அதன் விளைவாக அவன் உடல் வளம் குன்றி இறந்து போகவும் கூடும். ஆனால் உணவு இருக்கும் போது உடல் நோயுற்றாலோ அல்லது தளர்ச்சியாக இருக்கும் உடலுக்கு ஓய்வு தர வேண்டியோ இருப்பது உண்ணா நோன்பு அல்லது உபவாசம். இப்படி உணவை மறுத்திருக்கும் போது தேவைக்கு அதிகமான தசைகள் கரையும். உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருள்கள் வெளியேறும். இரு மனிதன் உடலில் 40% எடை குறையும் வரை அவன் உண்ணாவிரதம் இருக்கலாம். அப்படி இருந்தால் தேவைக்கதிகமான உடல் சுமை குறையும், குறைகள் நீங்கும். நச்சுப் பொருள்கள் வெளியேறி விடுவதால் இரத்தம் சுத்தமாகும். இதயம் போன்ற உயிர் உறுப்புகள் வலிமை அடையும். நோயாளிகளின் உடல் நிலையைப் பொறுத்து 3 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை கூட உண்ணா விரதம் இருந்து நோய்களை குணப்படுத்துவார்கள் இயற்கை மருத்துவத்திலே. அதையும் தாண்டி கூட உண்ணவிரதம் நீடிப்பதுண்டு. அப்போது திரவ  உணவுகளைத் தந்து சரி செய்து கொள்வார்கள். அதாவது தூய நீர், எலுமிச்சை சாறு கலந்த தேன், பார்லி கஞ்சி, இளநீர், பழச்சாறு போன்றவற்றை தருவார்கள். திட உணவை தவிர்த்து விடுவார்கள். அதிகமாக உண்டால் உடல் பலம் பெறாது. அது நன்கு செரிக்கப்பட்டு தன்மயமாக்கப்படும் போதுதான் சக்தி கிடைக்கும். எனவே வாழ்வதற்காக உண்ண வேண்டும். உண்பதற்காக வாழக் கூடாது. எனவே முறையான உணவு, உடல் பயிற்சி, தியானம் போன்றவற்றால் ஆரோக்யத்தைப் பேணி நூறாண்டு காலம் வாழ்வீர்களாக.
வாழ்க்கை எந்த அளவிற்கு சுகமானதும், சுவாரஸ்யமானதுமாகத் தோன்றுகிறதோ, அதே அளவிற்கு சிக்கலானதாகவும் இருக்கிறது. அது ஒரு கலை. நம்மில் பெரும்பாலானோர் மகிழ்வும், மேன்மையும், சீரும், சிறப்பும் மிக்க வாழ்க்கையை வாழ்வதில்லை. ஏதோ வாழ்ந்தாக வேண்டுமே என்பதற்காக வாழ்வது போலத் தோன்றுகிறது. கற்பனை உலகில் பகட்டான வாழ்க்கையை உயர்வாக எண்ணி ஏங்கும் நிலையை காண முடிகிறது. எனவே வாழ்வைப் பற்றிய பொய்யான கொள்கைகள், கடமையை மறத்தல் அல்லது மறுத்தல், எப்போதும் இயற்கையை மீறி நடத்தல், குறிக்கோளற்ற தன்மை போன்ற குணாதிசயங்கள் பரவலாகக் காணப்படுகிறது. விளைவு துன்பம் மட்டுமல்ல நோய்களும் தான். முடிவில் வேறு வழி வகையின்றி விதி விட்ட வழி என்று ஓய்ந்து முடிந்து போகிறது. முழுமையான வாழ்க்கை என்பது உடல்நலம், மன அமைதி, ஆன்மத் தூய்மை, இலட்சியம், உயர்ந்த நோக்கம், இயற்கையோடு இசைந்த உறவு இவைகளெல்லாம் உடையதாக இருக்க வேண்டும்.
ஒரு மனிதனின் உடல் நலத்தை அவன் வாழ்க்கை முறையும், உணவுப் பழக்க வழக்கங்களுமே நிர்ணயிக்கின்றன. நெறியான வாழ்வு, உடல் பயிற்சி, தேவைக்கேற்ற ஓய்வு, யோகம், நல்ல உணவு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரவேண்டும். காபி, புகையிலை, மது, மருந்துகள் போன்றவற்றை தவிர்த்து விடுவது நலம். பெரும்பாலும் விபத்து, பரம்பரையினால் வருவதல்லாமல் இப்போது, வருகின்ற நோய்கள் அனைத்துமே நோய்களல்ல. அவை அறிகுறிகள்தான். காய்ச்சல், தலைவலி, சளி, நீரழிவு, இரத்த அழுத்தம் இவையெல்லாம் நோய்களல்ல, இதயம், நுரையீரல், கணையம், சிறுநீரகம் போன்றவற்றிலோ, இரத்த ஓட்டத்திலோ ஏற்பட்டுள்ள தவறுகள், ஒழுங்கின்மை, மாற்றங்கள் போன்றவற்றை சுட்டிக் காட்டும் அறிகுறிகள்.
நம் உடலை ஒரு இயந்திரம் என்று சொல்வது பொருந்தும். ஆனால் இது உயிருள்ள இயந்திரம். மனிதன் நாகரிகம் என்ற பெயரில் தடம் புரளும் போதெல்லாம் தன் இருப்பை, தன் திறனை மனிதனுக்கு இந்த உடலானது, சில அறிகுறிகள் மூலம் எச்சரிக்கிறது. ஆனால் அதையும் மீறி குற்றங்களை செய்து கொண்டே இருக்கிறான். அறிகுறியின் தாக்கம் அதிகமாகும் போது, உடனடியாக அதன் துன்பத்திலிருந்து விடுபட எண்ணி சில பல மருந்துகளை வாங்கி விழுங்குகிறான். விளைவு உள்ளே உள்ள பிரச்சனை தீர்வதில்லை. அறிகுறிகள் தற்காலிகமாக அடக்கி வைக்கப்படுகின்றன. இது மிகப் பெரிய ஆபத்து என்பதை அவன் கடைசி வரை உணராமலேயே பயணப்பட்டு விடுகிறான். நம் உடலில் ஏதேனும் தவறு நேர்ந்தால் அதை நம் உடலே சரி செய்து விடும் அதற்கான கால அவகாசம் அதற்குத் தரப்பட வேண்டும். ஆனால் நாம் மருந்து உட்கொள்வதால் அதன் அந்த தன்மை தேவையில்லாமல் போக முடிவில் அந்தத் தனமையையே உடல் இழந்து விடுகிறது. நம்மில் பெரும்பாலனவர்கள் உடலில் இந்த நோய் எதிர்ப்புத் திறன் இல்லாதவர்களாக இருக்கிறோம். காரணம் செயற்கை இயற்கையை முடக்கி விட்டது. எந்த வியாதியாக இருந்தாலும், உணவுக் கட்டுப்பாடு, உபவாசம், உடற்பயிற்சிகள், பிராணாயாமம், தியானம் போன்ற வற்றால் குணப்படுத்த முடியும். உபவாசம், உண்ணா நோன்பு, என்பதுவும் பட்டினி கிடப்பதுவும் ஒன்றல்ல. உணவு இல்லாமல் மனிதன் கிடப்பது பட்டினி. அதன் விளைவாக அவன் உடல் வளம் குன்றி இறந்து போகவும் கூடும். ஆனால் உணவு இருக்கும் போது உடல் நோயுற்றாலோ அல்லது தளர்ச்சியாக இருக்கும் உடலுக்கு ஓய்வு தர வேண்டியோ இருப்பது உண்ணா நோன்பு அல்லது உபவாசம். இப்படி உணவை மறுத்திருக்கும் போது தேவைக்கு அதிகமான தசைகள் கரையும். உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருள்கள் வெளியேறும். இரு மனிதன் உடலில் 40% எடை குறையும் வரை அவன் உண்ணாவிரதம் இருக்கலாம். அப்படி இருந்தால் தேவைக்கதிகமான உடல் சுமை குறையும், குறைகள் நீங்கும். நச்சுப் பொருள்கள் வெளியேறி விடுவதால் இரத்தம் சுத்தமாகும். இதயம் போன்ற உயிர் உறுப்புகள் வலிமை அடையும். நோயாளிகளின் உடல் நிலையைப் பொறுத்து 3 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை கூட உண்ணா விரதம் இருந்து நோய்களை குணப்படுத்துவார்கள் இயற்கை மருத்துவத்திலே. அதையும் தாண்டி கூட உண்ணவிரதம் நீடிப்பதுண்டு. அப்போது திரவ உணவுகளைத் தந்து சரி செய்து கொள்வார்கள். அதாவது தூய நீர், எலுமிச்சை சாறு கலந்த தேன், பார்லி கஞ்சி, இளநீர், பழச்சாறு போன்றவற்றை தருவார்கள். திட உணவை தவிர்த்து விடுவார்கள். அதிகமாக உண்டால் உடல் பலம் பெறாது. அது நன்கு செரிக்கப்பட்டு தன்மயமாக்கப்படும் போதுதான் சக்தி கிடைக்கும். எனவே வாழ்வதற்காக உண்ண வேண்டும். உண்பதற்காக வாழக் கூடாது. எனவே முறையான உணவு, உடல் பயிற்சி, தியானம் போன்றவற்றால் ஆரோக்யத்தைப் பேணி நூறாண்டு காலம் வாழ்வீர்களாக

No comments:

Post a Comment