Friday, March 28, 2014

''உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் உடம்பில் உத்தமனைக் காண்''.

Photo: சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை
சத்தி அருள்தரத் தானுள வாகுமே. திருமந்திரம் 670.

பதஞ்சலி முனிவரின் அகத்தவமாம் எட்டு வகை யோகத்தால் எட்டு வகை பேறுகளைப் பெற்று, எட்டு மகா சித்திகளைப் பெறுவதோடு மட்டுமல்ல.பல வகையான அறிவுகளும் புலப்படும். எண்வகை பேறுகள், சித்திகள், செல்வங்கள் என்று விரிந்து அறுபத்து நான்காகும் என்று திருமூலர் சொல்வதைக் கவனியுங்கள். பதஞ்சலி முனிவரின் யோகசூத்திரம் கைவல்ய பாடத்தில் பலவகையான சித்திகள் சொல்லப்பட்டுள்ளது. இவற்றை பிறவி, மருந்து, பக்தி, இசை, தியானம், சமாதி போன்ற பலவற்றால் அடைய முடியும் என்கிறார். ஒரு குறிப்பிட்ட சாதனையில் வெற்றி பெற நம் உடலுக்குப் பயிற்சி அளிப்பது போல, மனதிற்கும் பயிற்சியளிக்கும் மனப்பயிற்சி வகைகளே அஷ்டாவதனம், தசாவதனம், சதாவதானம், சகஸ்வதானம் போன்ற பயிற்சிகள். இதைப் போன்று திரிகாலம் உரைப்பது, நீர் மேல் நடப்பது, வானத்தில் பறப்பது இப்படி இருபத்தொன்பது நுட்பமான சாதனைகளைப் பற்றியும் அவர் கூறியிருக்கிறார். தியானத்தின் மூலம் மனதை ஒருநிலைப்படுத்தி ஏகாக்கிர சித்தம் ஏற்படும் போது மேற்கூறிய சித்திகளை எளிதில் அடையலாம் என்கிறார்.

சித்தர்கள் தியானத்தில் அமர்ந்து இறைநிலையோடு ஒன்றி அணுவின் சக்தியையே உணரமுடிந்தது. விஞ்ஞானிகள் அணுவைக் கண்டுபிடிக்கும் முன்பே சித்தர்கள் அன்றே கண்டனர்.அணு அணுவாக ஆயிரம் கூறிட்டு அதற்குள்ளே இறைவனைக் கண்டனர்.

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே. திருமந்திரம் 2008.

அணுவிலும் அணுவாம் உயிர்களுக்கு உயிராய் விளங்கும் பேராற்றலாகிய பரம் பொருளை, தியானத்தின் வழியே நுணுகி, அணுகி ஆராய முற்படுபவர்களுக்கு அணுவாய் திகழும் பரம ஆணுவான இறையாற்றலை அணுகுவது கைகூடும் என்கிறார் திருமூலர். இதிலிருந்து அணு என்பதை அவர்கள் அப்பொழுதே கண்டு கொண்டார்கள் என்பது புரியும். இதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்றால் அது தியானத்தின், தவத்தின் சக்தியினால்தான். தியானம் புலன்களை கூர்மையாக்குகிறது. இதனால் ஐம்புலன்களால் ஏற்படும் சங்கடங்கள் யாவும் விலகுகின்றன. வியாதிகள் நீங்குகின்றன. மேலும் ஒரு குறிப்பிட்ட எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தங்கு தடையின்றி நினைக்கும் ஆற்றலை , சக்தியை மனம் பெற்றுவிடுகிறது. அலைபாயும் எண்ணங்கள் ஒருநிலைப்பட்டு அமைதியடைகின்றன. இதனால் உலக விவகாரங்களின் உண்மைநிலை தெளிவாகப் புரிகிறது. மூளை வலிமையாகச் செயல்படுவதோடு, இயங்காமல் கிடக்கும் அதன் பகுதிகள் அனைத்தும் இயங்குகின்றன. இதனால் அறிவில் தெளிவு, புத்தி கூர்மை, கற்பனை வளம், வல்லமை யாவும் பெருகுகிறது.

நம் தேசத்தில் சித்தர்கள் மட்டுமல்ல, கிருஷ்ணர், மனு, இஷ்வாகு, தாயுமானவர் உட்பட என்ன்ற்ற ரிஷிகளும், ராஜயோகிகளும் வாழ்ந்துள்ளனர். வியாசர் யோக சூத்திரங்களுக்கு சிறந்த விளக்கம் அளித்துள்ளார். பதஞ்சலி, கிருஷ்ணர், போஜராஜன், கௌடபாதர், கோவிந்தபாதர், ஆதிசங்கரர் போன்ற எண்ணற்ற ஞானிகள் யோகத்தின், தியானத்தின் வலிமையைப் பற்றி பெருமைப்படுத்தி விளக்கியுள்ளனர். தியானத்தின் மூலம் மனோசக்தி ஆத்மசக்தியாகி சித்திகள் விளைகின்றன. தியானம் கைகூடியவர்களுக்கு ஆகாத காரியம் எதுவுமில்லை. எனவே, 
''எண்ணிய பிறவிதனில் மானிடப்பிறவி
தான் யாதினும் அரிதரிது காண். இப்பிறவி
தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ ? எது வருமோ ?
அறிகிலேன்.''
என்று தாயுமானவர் சொல்வதைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிறவியிலேயே பகுத்தறிவின் துணை கொண்டு பேரறிவாம் இறைவனை உணர்ந்து, ஒன்றி மேன்மையடைய வேண்டுமே அல்லாது, உண்பதுவும், உறங்குவதுமாக வீணே காலத்தை கழித்தோமானால், மானிடப் பிறவியை பாழாக்கியவர்களாக ஆவோம்.
''உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் உடம்பில் உத்தமனைக் காண்''.
சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்

No comments:

Post a Comment