Friday, March 28, 2014

மனம், புத்தி, அகஹ்காரம், சித்தம்

Photo: பிராணாயாமம், தியானம் இதைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்த நீங்கள், இப்போது தத்துவங்கள் பற்றிய தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது போலத் தோன்றுகிறது. இது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை என்று நேற்று ஒரு நண்பர் வருத்தப்பட்டுக் கொண்டார். அவர் சொல்வது முற்றிலும் உண்மைதான். இந்தப் பகுதி அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது. ஏனெனில் புரிந்து கொள்வதற்கு சற்று மெனக்கெட வேண்டும். ஆனால், இவை மிகவும் அவசியமான தகவல்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

வெகு தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு காடுகள், மலைகளைக் கடந்து ஒருவர் ஒரு வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு வாகனத்தைப் பற்றிய முழு விபரமும் தெரிந்திருப்பது அவசியம். அவ்வாறு இல்லையெனில் வழியில் ஏதேனும் பழுது ஏற்படுமேயானால் நிலைமை மோசமாகிவிடும். வாகனத்தைப் பற்றிய நுட்பங்கள் அறிந்தவரென்றால் கவலையில்லை. அவரே அதை சரி செய்து பயணத்தை தொடர முடியும். ஆன்மிகப் பயணமும் இதை ஒத்ததே. இங்கு மனமே வாகனம். இதையே மனமே முருகனின் மயில் வாகனம் என்பார்கள். 

எனவே இந்த மனதின் செயல்பாடுகள்,அதை இயக்கும் பொறிகள், கருவி கரணங்கள், அது மேன்மையடையத் தடையாக இருக்கும் விஷயங்கள், தத்துவங்கள் எல்லாவற்றையும் பற்றிய தெளிவு இருந்தால்தான் பயணம் தங்கு தடையின்றி விரைவில் நிறைவடையும். இல்லையென்றால் தடைகளும், தவிப்புகளும், பிறவிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். கலக்கமும், குழப்பமும் நிறைந்த தெளிவற்ற மனம் நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லாது. எனவே இது போன்ற தகவல்களை ஆழ்ந்து கவனித்து உள்வாங்கி உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை படிக்கும் போது கருத்துக்கள் மனதில் பதிந்து நமக்கு புரிதலைத் தரும். அதோடு பயணத்தில் ஏற்படும் அனுபவங்கள் சேரும் போது விரைவில் மனத் தெளிவை ஏற்படுத்தி விடும்.

தத் என்றால் அது. துவம் என்றால் தன்மை. அதாவது படைப்புக் காலம் தொட்டு ஊழிக்காலம் வரை தன் தன்மை மாறாது நிலைத்து நிற்கும் பொருள்களே தத்துவங்கள் என்று வழங்கப்படுகின்றன. ஆன்ம தத்துவங்கள் 24ஐ எல்லா வைதிக சமயங்களும் ஏற்றுக் கொண்டாலும், சைவ சமயம் மேலும் நுணுக்கமான 12 தத்துவங்களைத் தருகிறது. அவை வித்தியா தத்துவங்கள் 7, சிவ தத்துவங்கள் 5 ம் ஆகும். 

இந்த மூன்று வகைத் தத்துவங்களுமே உயிரை உலக போகங்களில் அழுந்தும்படி செய்வனவாகும். உலக அனுபவங்களை, இயல்பை அறியாத ஒருவனுக்கு அவன் தோழர்கள் உடனிருந்து உலகியல் பிரவிருத்தியைர உண்டு பண்ணுவது போல , மூலமலமாகிய அறியாமையில் அழுந்தியுள்ள உயிர்களுக்கு உடனிருந்து அறிவு இச்சை முயற்சிகளை எழுப்பும் கருவிகள் வித்தியா தத்துவங்கள் எனப்பட்டன. அந்நிலையில் உலக நுகர்ச்சியை அனுபவிக்க சித்தமாக உள்ள நிலையில் உயிரானது புருடன் என்றழைக்கப்படும். அவ்வாறான உயிருக்கு உலக நுகர்ச்சியைத் தருத் தத்துவங்களே ஆன்ம தத்துவங்களாகும். அதற்கு முதற் காரணமாக அமைவது மூலப் பிரகிருதி ஆகும். இந்த மூலப் பிரகிருதியே உயிர்களை உலக போகங்களில் மயங்கிடத் தூண்டும். புருடன் என்ற நிலையில் உள்ள உயிர் மூலப்பிரகிருதியை அறிந்து, அழுந்தி, மயங்கி அதனால் விளையும் இன்பம், துன்பம், மயக்கம் என்கிற மூவகை வேதனைகளை மாறி மாறி அனுபவிக்கும். மூலப்பிரகிருதியே ஆன்ம தத்துவங்கள் வடிவில் உயிர்களைச் சார்ந்து செயலாற்றும். ப்ரம்மத்தின் திருவருளால் இவ்விருவகைத் தத்துவங்களையும் பற்றி இயக்குவதற்கு கருவிகளாக இடை நிற்பனவே சிவ தத்துவங்களாகும். 

நம் உடலில் நிகழும் நிகழ்வுகளை அறிவு என்றும், தொழில் என்றும் இரு பிரிவாகப் பிரிக்கலாம். இதில் அறிவானது கேட்பது, பார்ப்பது, சுவைப்பது, முகர்வது, ஸ்பரிசத்தால் உணர்வது என்ற ஐந்து வகைகளில் செயல் புரிகிறது. இந்த செயல்கள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற ஐந்து உறுப்புகளின் மூலம் நிகழ்வதால் இவற்றை ஐம்பொறிகள், அறிவுப் பொறிகள், ஞானேந்திரியங்கள் என்றெல்லாம் அழைக்கிறோம். இது போல நம் உடலில் உள்ள தசை, நரம்பு, மூச்சுப்பை போன்றவற்றின் சுருங்குதல், விரிதல் பற்றி தோன்றும் நிகழ்வுகளை நம் முன்னோர்கள் ஐந்து வகைகளாகக் கூறியுள்ளனர். அவை, பேசுதல், போவது வருவது, கொடுப்பது பெறுவது, மல மூத்திர வியர்வையை வெளியேற்றுவது, கருவுறுவது அல்லது கோடல் என்பனவாம். இந்த தொழில்களுக்கு கருவிகளாக விளங்கும் உள்நாக்கு, கை, கால், பாயு, உபத்தம் என்கிற ஐந்தும் தொழிற் பொறிகள், கன்மேந்திரியங்கள் என்றும் வழங்கப்படுகின்றன. 

இந்த அறிவுப்பொறிகளுக்கு எதிர் புலன்களாக உள்ள குணங்கள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என ஐந்து வகைகளில் நிகழ்கின்றன. இந்த குணங்களுக்கு பற்று கோடாக உள்ள பொருள்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற இயற்கையின் ஐந்து பிரிவுகளாக உள்ளதால் இவற்றை ஐம்பெரும் பூதங்கள் என்றழைப்பார்கள். இந்த பூதங்களின் சூக்கும நிலையையே தன்மாத்திரைகள் என்பார்கள். தன்மாத்திரை என்றால் சூக்கும பூதம் என்பதாம். ஆக நாலைந்து இருபது தத்துவங்களைப் புரிந்து கொண்டோம். இவற்றிற்கும் மேலாக இவற்றை உணர்ந்து கொள்ளக் கூடிய அகக்கருவிகளையே அந்தக்கரணங்கள் என்பார்கள். பொதுவாக மனம், உள்ளம், நெஞ்சு என்றெல்லாம் சொல்வார்கள். மனம் என்று பொதுவாகச் சொன்னாலும் நம் முன்னோர்கள் தொழில் வேறுபாடு கருதி அந்தக்கரணங்களை நான்காகப் பிரித்துச் சொல்லியிருக்கிறார்கள். அவை மனம், புத்தி, அகஹ்காரம், சித்தம் என்பனவாகும். இவற்றின் சிறப்பியல்பென்ன வென்றால், புறக்கரணங்களாகிய அறிவுப் பொறிகள் நமக்கு நிகழ்கால உணர்வை மட்டுமே உணர்த்தும். ஆனால் அகக்கருவிகளாகிய அந்தக்கரணங்களே நமக்கு முக்கால உணர்வையும் உணர்த்தும். 

ஆக ஆத்ம தத்துவங்கள் இருபத்தி நான்கையும் பற்றி பார்த்தோம். இந்தத் தத்துவங்களே முக்குணங்களாக (சத்துவம், ராட்சதம், தாமசம்) ஏற்ற தாழ்வாகக் கலந்து விளங்கும் விளக்கங்களாகும். இந்த முக்குணங்கள் பிரிந்து நின்று விளங்கித் தோன்றாமல் நின்ற நிலைக்குப் பெயரே மூலப்பிரகிருதி. உயிரானது மூலப்பிரகிருதியைச் சார்வதால்தான் அது காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்கற்றங்களுக்கும் ஆட்படுகிறது. 

இதன் தொடராக இந்தத் தத்துவங்களுக்கும் சூக்கும சரீரங்களுக்கும் உள்ள தொடர்பை நாளைய பகுதியில் காண்போம்.
பிராணாயாமம், தியானம் இதைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்த நீங்கள், இப்போது தத்துவங்கள் பற்றிய தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது போலத் தோன்றுகிறது. இது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை என்று நேற்று ஒரு நண்பர் வருத்தப்பட்டுக் கொண்டார். அவர் சொல்வது முற்றிலும் உண்மைதான். இந்தப் பகுதி அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது. ஏனெனில் புரிந்து கொள்வதற்கு சற்று மெனக்கெட வேண்டும். ஆனால், இவை மிகவும் அவசியமான தகவல்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment