Friday, March 28, 2014

மரணம் இல்லா பெரு வாழ்வை அடைய முடியும்

Photo: தனிமங்களைப் பயன்படுத்தி உடலைக் கல்லாக அல்லது நீண்ட காலம் வாழக்கூடியதாக மாற்றிய சித்தர்கள் ஏன் தியானம் செய்யச் சொல்கிறார்கள் ? அஷ்டாங்க யோகம் ஏன் ? என்றெல்லாம் கேட்டால், அதற்கு விடையை விஞ்ஞானம் இப்போது ஆராய்ந்து தருகிறது. சித்தர்கள் மறை பொருளாக வைத்திருந்த இரகியங்களை விஞ்ஞானம் வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. அதனால் சில நல்ல விஷயங்களை சாமான்யரும் அறிந்து கொள்ள முடியும் என்றாலும், பல மறைபொருளாக இருக்க வேண்டிய இரகசியங்கள் தீயவர்கள் அல்லது தொலை நோக்குப் பார்வை இல்லாதவர்கள் கையில் கிடைத்து உலகுக்கே ஆபத்தாக விடிந்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் மூளை,மனம்,சக்கரங்கள்,சூக்கும சரீரங்கள் போன்ற விஷயங்களை விஞ்ஞானம் எட்டிப் பிடிக்க இன்னும் பல்லாயிரம் வருஷங்கள் ஆகும் எனத் தோன்றுகிறது. சித்தர்கள் உடலில் ஏற்படும் பெரும்பாலான வியாதிகளுக்கு அடிப்படையாக மனமே இருப்பதை அன்றே அறிந்து கொண்ட காரணத்தினால் தான், காயகல்பம் சாப்பிட்டு வைரம் போல் ஆக்கிய உடம்பாக இருந்தாலும் மனதின் இயக்கம் சீராக இல்லையென்றால் புலன்கள் வாயிலாக சரீரம் மீண்டும் கீழ்நிலைக்கு வந்துவிடும் என்பதை புரிந்து கொண்டு மனதைச் செம்மையாக வைத்திருக்க உதவும் பயிற்சிகளைத் தந்தார்கள். மனதும், உடலும் சீராக இருந்தால் யோக சாதனையின் மூலமாக பலவிதமான சித்திகளை அடைந்து, அவற்றின் வாயிலாக மரணம் இல்லா பெரு வாழ்வை அடைய முடியும். மனதின் இயக்கம் சீராக இல்லாஈமல் உணர்வுகளால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன, அது எதன் மூலம் நடை பெறுகிறது என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம். சென்ற பதிவில் சுரப்பிகளைப் பற்றிப் பார்த்தோம். உடலில் ஆங்காங்கே உள்ள வேதிப் பொருள்கள் தங்களுக்கென அலைகளை உண்டு பண்ண இந்த சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சுரப்பு நீர்களைப் பயன்படுத்துகின்றன. இரத்த ஓட்ட மண்டலம் இந்தச் சுரப்பு நீர்களை உடலில் உள்ள எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்று உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இரத்த ஓட்ட மண்டலத்தில் நேரடியாகச் சுரக்கும் சுரப்பிகள் உட்சுரப்பிகள், நாம் காணும் விதமாக சுரக்கும் சுரப்பிகள் புறச்சுரப்பிகள். உதாரணமாக வியர்வைச் சுரப்பிகள் மற்றும் உமிழ் நீர் சுரப்பிகளைச் சொல்லலாம். உடலில் ஏற்படும் ஒவ்வொரு உணர்வுகளும் நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கின்றன. அவைகளுக்கு உணர்வுகளே கிரியா ஊக்கிகளாகச் செயல்படுகின்றன. எனவேதான் சித்தர்களும், இன்றைய மருத்துவர்களும் கூட யோகா, தியானம் குறித்து வலியுறுத்துகின்றனர். மேலை நாடுகளில் பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன. நம் நாட்டில் கட்சிகளுக்குள் சண்டை போடவே நேரம் சரியாக இருப்பதாலும், அரசியல் வியாபாரமாகி விட்ட காரணத்தினாலும், ஊழல் மட்டுமே சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்ற காரணத்தினாலும், மக்கள் உடல் மற்றும் மனநலம் குறித்த கவலை அரசுக்கு இல்லாமல் போய்விடுகிறது. நல்ல சமூக நோக்குள்ள அரசியல் தலைவர்கள் வந்தால் தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளை பாடத்திட்டத்தில் சேர்ப்பார்கள் என்பது நிச்சயம். அவ்வாறு சேர்த்தால் நல்ல உடல் மற்றும் மனநலமுள்ள மாணவர்கள் உருவாகி வளர்ந்து இந்த தேசத்தையும் வல்லரசாக ஆக்குவார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் அது வெறும் ஜம்பம் மட்டுமே. ஓட்டுக்காக சொல்லப்படும் அலங்காரப் பேச்சு அவ்வளவுதான்.
நரம்பு மண்டலத்தின் தலமைப்பீடமான மூளையில் ஏற்படும் உணர்வுகள் நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டும் போது அதிலிருந்து சுரக்கும் சுரப்புநீர்கள் இரத்த நாளங்களுக்குள் சென்று இரத்தத்தில் நேரடியாகக் கலக்கின்றன. கோபம் ஏற்படும் போது அதிகமான சுரப்புநீர் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரந்து இரத்த ஓட்டத்தை அதிகமாக்குகிறது. இதனால் இரத்த நாளங்கள், நுரையீரல், இதயம், இரைப்பை, சிறுநீரகம் போன்ற உறுப்பகளின் செயல்களில் பாதிப்பு ஏற்படுகின்றது. அதனால்தான் கோபகம் வரும்போது இரத்தநாளங்களின் அபரிதமான துடிப்பாலும், முறுக்கேற்றத்தாலும் கண்கள் சிவக்கின்றன, உதடுகள் துடிக்கின்றன, இதயத் துடிப்பு அதிகமாகிறது, சுவாச உறுப்புகள் சீராக இயங்காத நிலை ஏற்படுகின்றது. இதே நிலைதான் கவலை ஏற்படும் போதும். அதனால்தான் உணவு உண்ண முடியாமலும், தூக்கமில்லாமலும் மனிதன் உழல்கிறான். ஆக மூளையின் அறிவு சார்ந்த திறமைகளுக்கும்,  உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு தன்மைக்கும் சுரப்புநீர்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்பது புரிய வருகிறது. எனவே முறையான உணவுப் பழக்கம், தியானம், பிராணாயாமம், யோகப் பயிற்சிகளை மேற்கொண்டு உணர்வுகளை கட்டுப் படுத்தும் வல்லமை பெற்று, உடலுறுப்புகளின் சீரான இயக்கம், புத்துணர்வு, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பெற்று நூறாண்டுகாலம் வாழ்வீர்களாக.
வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்கவளமுடன்.
தனிமங்களைப் பயன்படுத்தி உடலைக் கல்லாக அல்லது நீண்ட காலம் வாழக்கூடியதாக மாற்றிய சித்தர்கள் ஏன் தியானம் செய்யச் சொல்கிறார்கள் ? அஷ்டாங்க யோகம் ஏன் ? என்றெல்லாம் கேட்டால், அதற்கு விடையை விஞ்ஞானம் இப்போது ஆராய்ந்து தருகிறது. சித்தர்கள் மறை பொருளாக வைத்திருந்த இரகியங்களை விஞ்ஞானம் வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. அதனால் சில நல்ல விஷயங்களை சாமான்யரும் அறிந்து கொள்ள முடியும் என்றாலும், பல மறைபொருளாக இருக்க வேண்டிய இரகசியங்கள் தீயவர்கள் அல்லது தொலை நோக்குப் பார்வை இல்லாதவர்கள் கையில் கிடைத்து உலகுக்கே ஆபத்தாக விடிந்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் மூளை,மனம்,சக்கரங்கள்,சூக்கும சரீரங்கள் போன்ற விஷயங்களை விஞ்ஞானம் எட்டிப் பிடிக்க இன்னும் பல்லாயிரம் வருஷங்கள் ஆகும் எனத் தோன்றுகிறது. சித்தர்கள் உடலில் ஏற்படும் பெரும்பாலான வியாதிகளுக்கு அடிப்படையாக மனமே இருப்பதை அன்றே அறிந்து கொண்ட காரணத்தினால் தான், காயகல்பம் சாப்பிட்டு வைரம் போல் ஆக்கிய உடம்பாக இருந்தாலும் மனதின் இயக்கம் சீராக இல்லையென்றால் புலன்கள் வாயிலாக சரீரம் மீண்டும் கீழ்நிலைக்கு வந்துவிடும் என்பதை புரிந்து கொண்டு மனதைச் செம்மையாக வைத்திருக்க உதவும் பயிற்சிகளைத் தந்தார்கள். மனதும், உடலும் சீராக இருந்தால் யோக சாதனையின் மூலமாக பலவிதமான சித்திகளை அடைந்து, அவற்றின் வாயிலாக மரணம் இல்லா பெரு வாழ்வை அடைய முடியும். மனதின் இயக்கம் சீராக இல்லாஈமல் உணர்வுகளால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன, அது எதன் மூலம் நடை பெறுகிறது என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம். சென்ற பதிவில் சுரப்பிகளைப் பற்றிப் பார்த்தோம். உடலில் ஆங்காங்கே உள்ள வேதிப் பொருள்கள் தங்களுக்கென அலைகளை உண்டு பண்ண இந்த சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சுரப்பு நீர்களைப் பயன்படுத்துகின்றன. இரத்த ஓட்ட மண்டலம் இந்தச் சுரப்பு நீர்களை உடலில் உள்ள எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்று உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இரத்த ஓட்ட மண்டலத்தில் நேரடியாகச் சுரக்கும் சுரப்பிகள் உட்சுரப்பிகள், நாம் காணும் விதமாக சுரக்கும் சுரப்பிகள் புறச்சுரப்பிகள். உதாரணமாக வியர்வைச் சுரப்பிகள் மற்றும் உமிழ் நீர் சுரப்பிகளைச் சொல்லலாம். உடலில் ஏற்படும் ஒவ்வொரு உணர்வுகளும் நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கின்றன. அவைகளுக்கு உணர்வுகளே கிரியா ஊக்கிகளாகச் செயல்படுகின்றன. எனவேதான் சித்தர்களும், இன்றைய மருத்துவர்களும் கூட யோகா, தியானம் குறித்து வலியுறுத்துகின்றனர். மேலை நாடுகளில் பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன. நம் நாட்டில் கட்சிகளுக்குள் சண்டை போடவே நேரம் சரியாக இருப்பதாலும், அரசியல் வியாபாரமாகி விட்ட காரணத்தினாலும், ஊழல் மட்டுமே சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்ற காரணத்தினாலும், மக்கள் உடல் மற்றும் மனநலம் குறித்த கவலை அரசுக்கு இல்லாமல் போய்விடுகிறது. நல்ல சமூக நோக்குள்ள அரசியல் தலைவர்கள் வந்தால் தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளை பாடத்திட்டத்தில் சேர்ப்பார்கள் என்பது நிச்சயம். அவ்வாறு சேர்த்தால் நல்ல உடல் மற்றும் மனநலமுள்ள மாணவர்கள் உருவாகி வளர்ந்து இந்த தேசத்தையும் வல்லரசாக ஆக்குவார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் அது வெறும் ஜம்பம் மட்டுமே. ஓட்டுக்காக சொல்லப்படும் அலங்காரப் பேச்சு அவ்வளவுதான்.
நரம்பு மண்டலத்தின் தலமைப்பீடமான மூளையில் ஏற்படும் உணர்வுகள் நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டும் போது அதிலிருந்து சுரக்கும் சுரப்புநீர்கள் இரத்த நாளங்களுக்குள் சென்று இரத்தத்தில் நேரடியாகக் கலக்கின்றன. கோபம் ஏற்படும் போது அதிகமான சுரப்புநீர் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரந்து இரத்த ஓட்டத்தை அதிகமாக்குகிறது. இதனால் இரத்த நாளங்கள், நுரையீரல், இதயம், இரைப்பை, சிறுநீரகம் போன்ற உறுப்பகளின் செயல்களில் பாதிப்பு ஏற்படுகின்றது. அதனால்தான் கோபகம் வரும்போது இரத்தநாளங்களின் அபரிதமான துடிப்பாலும், முறுக்கேற்றத்தாலும் கண்கள் சிவக்கின்றன, உதடுகள் துடிக்கின்றன, இதயத் துடிப்பு அதிகமாகிறது, சுவாச உறுப்புகள் சீராக இயங்காத நிலை ஏற்படுகின்றது. இதே நிலைதான் கவலை ஏற்படும் போதும். அதனால்தான் உணவு உண்ண முடியாமலும், தூக்கமில்லாமலும் மனிதன் உழல்கிறான். ஆக மூளையின் அறிவு சார்ந்த திறமைகளுக்கும், உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு தன்மைக்கும் சுரப்புநீர்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்பது புரிய வருகிறது. எனவே முறையான உணவுப் பழக்கம், தியானம், பிராணாயாமம், யோகப் பயிற்சிகளை மேற்கொண்டு உணர்வுகளை கட்டுப் படுத்தும் வல்லமை பெற்று, உடலுறுப்புகளின் சீரான இயக்கம், புத்துணர்வு, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பெற்று நூறாண்டுகாலம் வாழ்வீர்களாக.
வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்கவளமுடன்.

No comments:

Post a Comment