Thursday, March 27, 2014

நம் எல்லோரிடமும் உள்ள மிகப் பெரிய பலவீனம் என்ன தெரியுமா ? நாம் குறைகளை நிறைவு செய்து கொள்வதற்கு முயற்சி செய்வதை விடுத்து அதை மறைக்க முயற்சி செய்கிறோம். அதை மூடி மறைத்து விட்டு நிறைவுள்ளவனைப் போன்ற ஒரு முகமூடி வாழ்க்கையை வாழ முற்படுகிறோம். இதனால் அந்தக் குறைகள் உள்ளுக்குள்ளேயே கிடந்து புரையோடிப் போன புண்களைப் போல நாற்றமடித்துக் கொண்டு புழுத்துப் போய் கிடக்கிறது. குறைகளைக் களைந்து விடுவதை விட சிறந்த பணி உலகில் எதுவுமில்லை. குறையே இல்லாத இடத்தில் என்ன நடக்கும் அந்த இடம் பூரணத்தால் நிரப்பப்படும். காற்றின் அழுத்தம் குறைவு படும் இடத்தை நோக்கி காற்று ஓடி வருவதைப் போல, பூரணம் ஓடி வந்து நிரம்பிக் கொள்ளும். உணர்வைக் கடந்த உணர்வறு நிலையான பூரணம் உள்ளே நிரம்பி விட்ட பிறகு அங்கே இன்பமோ, துன்பமோ எதுவும் இல்லை. இதையே ஆனந்தம் என்கிறோம். ஆனந்தம் என்பது ஆன = + அந்தம் அதாவது எல்லாவற்றிற்கும் எல்லை அதுதான். ஆனால், எங்கும் பரிபூரணமாய் விளங்கும் அதற்கு எல்லை வரையறுப்பது முடியாதே ? என்று கேட்பீர்களானால். அந்தம் என்பது ஆதி நிலையான அதி சூக்கும நிலையை, பரம்பொருளைக் குறிப்பதாகும். அதற்குப் பிறகு எதுவுமில்லை. அதுவே இங்கு எல்லாமாக பரிணமித்து விரிந்து நிற்கின்றது. அதி சூக்குமம் சூக்குமமாகி, சூக்குமம் தன்மாத்திரைகளாகி, தன்மாத்திரைகள் பஞ்ச பூதங்களாகி, பஞ்சபூதங்கள் பிரபஞ்சமாகி விரிந்து நிற்கின்றது. 

இதையே சிருஷ்டி அல்லது தோற்றம் என்கிறோம். அண்டத்தில் எப்படி இடைவிடாது சிருஷ்டி அல்லது தோற்றம் நடக்கின்றதோ அது போல ஒடுக்கமும் நிகழ்கின்றது. மீண்டும் வந்த வழியே ஒடுங்கி எல்லாம் அதி சூக்குமத்தை அடைகின்றன. இதே நிலை நம் பிண்டத்திலும் இடைவிடாது நடந்து கொண்டே இருக்கிறது. சத் சித்தாகி, சித் நானாகி, நான் புத்தியாகி, புத்தி மனமாகி, மனம் எண்ணங்களாகி, எண்ணங்கள் வினைகளாகி, வினைகள் விளைவுகளாகி, விளைவுகள் நுகர்ச்சியாகி, அந்த நுகர்ச்சி உணர்வாகி, உணர்வு எண்ணமாகி, எண்ணம் மீண்டும் மனமாகி, மனம் புத்தியாகி, புத்தி நானாகி, நான் சித்தாகி, அந்த சித்தில் நம் வினைகள் கர்ம பீஜங்களாகி நிரம்பிக் கிடக்கின்றன. வினையற்ற சத்தை அடைவதற்கு வினைகளால் நிரம்பிக் கிடக்கும் சித்தால் இயலுவதில்லை. இந்த கர்ம பீஜங்களே குணங்களாக வடிவெடுத்து மேலும் மேலும் நுகரக் கூடிய தன்மையை உருவாக்கி இன்பமென்றும், துன்பமென்றும் பிரித்து நுகரக் கூடிய பேத நிலையை உருவாக்கி ஆதியை அடைய ஒட்டாமல் தடுத்து நிற்கின்றன. இன்பமென்றும் துன்பமென்றும் பிரித்து நுரக் கூடிய தன்மை அதாவது பேதமுற்ற நிலையே நம் இயல்பாக ஆகி விடுகிறது. ஆனால், நம் உண்மை இயல்பு இதையெல்லாம் கடந்தது. குணம் கடந்தது, உணர்வைக் கடந்தது, இத்தனை வகையான இயக்கங்களுக்குக் கருவிகளாக அமையும் கருவி கரணங்கள் எனும் தத்துவங்களைக் கடந்தது ஆகும். 

இதற்கான முடிவுதான் என்ன ? என்கிற போது நாம் நம் இன்ப, துன்ப நுகர்வுகளை கைவிட வேண்டும். இன்பமென்றும் துன்பமென்றும் எதுவுமில்லை. எல்லாம் நம் வினைகளின் விளைவுகளே. நான் என்றும், நீ என்றும் எதுவுமில்லை. எல்லாம் ஒன்றுதான். என்கிற பேதமற்ற மனநிலையை உருவாக்க வேண்டும். இந்த பேத உணர்வே மேலும் மேலும் வினை புரியத் தூண்டுதலாக அமைகிறது. துன்பம் வேண்டாம் இன்ம் வேண்டும் என்று எண்ணம் மேலும் மேலும் வினை புரிந்து துன்பத்தையே அடையச் செய்வதோடு மட்டுமல்ல, நம்மை சத்தாகிய பரம்பொருளை நேராக அடைய ஒட்டாமல் இந்த வினைச் சக்கரத்தில், வினைச் சுழலில் சுற்றிக் கொண்டே இருக்குப்படிக்குச் செய்து விடுகிறது. இல்லாத இன்பத்தை இருப்பதாக எண்ணி விளக்கில் வீழும் விட்டில் பூச்சிகளைப் போல வினைச் சுழலில் சிக்கிச் சீரழியாமல், வினைகளைக் கடந்து ஆனந்தத்தை அதாவது நம் உண்மையான இயல்பை அடைய முயற்சி செய்ய வேண்டும். இதுவே பிறவிப் பயனாகும். இதுவே நம் இலக்காகும். பேதமுற்ற  வினைகளோடு பந்தப்படுத்திக் கொண்டிருக்கும் வரை நம் வாழ்வில் வெறுமையும் துன்பமும் மட்டுமே மிஞ்சும். நடப்பதெல்லாம் நம் வினைகளின் விளைவுகளே என்று எண்ணி வினைகளைக் கடந்து பேதமற்று நிற்கின்றவர்களுக்கே ஆனந்தம் வாய்க்கும். வாழ்க்கை எனும் வெண்ணையைக் கையில் வைத்துக் கொண்டு ஆனந்தம் எனும் நெய்யைத் தேடி எங்கெங்கோ அலைந்து வினையாற்றிக் கொண்டிப்பதே இப்போதைய நம் நிலையாகும்.

No comments:

Post a Comment