Friday, March 28, 2014

கடவுள் ஒளி வடிவில் இருக்கிறார்!

Photo: எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் மனநிலை மனிதனுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. உலகில் முதன் முதலில் தோன்றிய மனிதனுக்கும் அந்த இயல்பு இருந்திருக்கும். அப்படி வழி வழியாக வந்த அந்த இயல்பின் பலனே இன்றைய அனைத்து விஞ்ஞான முன்னேற்றங்களும். தனிமங்களைக் கண்டு பிடித்தான், அவற்றைப் பிரித்து அணுக்களைக் கண்டு பிடித்தான், அதையும் பிளந்து எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான்களைக் கண்டு பிடித்தான் இவ்வளவு ஏன், கடவுள் துகளையே கண்டு பிடித்து விட்டான் என்கிறார்கள். எனினும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அது போலவே கடவுளின் விஷயத்திலும் ஆராய்ச்சிகளுக்கு குறைவில்லை. இல்லை என்பவர்களைப் பொருத்த வரை ஒரே முடிவுதான். ஆனால், இருக்கிறது என்பவர்களுக்கிடையில்தான் பல் வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது ஒன்றுதான் என்பதை பெருவாரியானவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த ஒன்றை பரமாத்மா என்றோ, பரம பிதா என்றோ, அல்லா என்றோ, சதாசிவம் என்றோ பல பெயரிட்டு அழைக்கிறோம்.

பரமாத்மா என்கிற ப்ரம்மமானது இரு நிலைகளைக் கொண்டிருக்கிறது. அதாவது சகுணம், நிர்குணம் என்பார்கள். நிர்குண ப்ரம்மத்தை இருப்பு நிலை, பேராற்றல், வற்றா இருப்பு என்றெல்லாம் சொல்வார்கள். அதற்கு குணம், குறி ஒன்றுமில்லை. கிருத்தியம் ஏதும் அங்கு நிகழ்வதில்லை. சகுணப்ரம்மமோ விபூதிகள் பலவற்றை உடையதாக இருக்கிறது. இந்த உலகில் காணும் அனைத்தும் சகுணப்ரம்மத்திடமிருந்து உருவாகி வந்தவைகளே. சகுணப்ரம்மத்தையே ஈஸ்வரன் என்கிறோம். பரப்ரம்மமாகிய ஒரே வஸ்துவே இரு வேறு நிலைகளில் இருக்கிறது. இதை உதாரணப்படுத்துவதற்கு சூரிய ஒளியை எடுத்துக் கொள்ளலாம். சூரிய ஒளி என்பது நம் கண்ணுக்குத் தெரியாது. வெளிச்சமாகத் தோன்றுமே அல்லாது வேறு எந்த உருவமோ, அடையாளமோ இல்லை. ஒரு திரையிலோ, நீரிலோ, கல்லின் மீதோ படும் போது அதைக் காணமுடிகிறது. அதையே ஒரு முப்பட்டை கண்ணாடியில் செலுத்துகிற போது, அந்த ஒளியானது ஏழு நிறங்களாகப் பிரிகிறது. இதை ஒத்ததே சகுணப் ப்ரம்மம். ஏழுநிறங்களாக உள்ள போது அவை தனித்தனியான இயல்புகளையும், செயல்களையும் கொண்டிருக்கின்றன. அதுவே ஒன்றாகிருக்கும் போது அவற்றின் தனித்தனியான செயல்கள் ஏதுமில்லை. ஒடுங்கி விட்டன. அந்த பல்வேறு சக்திகளும், செயல்களும் ஒடுங்கிய நிலையையே பரப்ப்ரம்மம் என்கிறோம்.

இப்படியாக எல்லா உயிர்களுக்கும் ஜீவனாக விளங்கும் ஆத்மாவை அறிவது எப்படி ?என்ற ஏக்கத்தையே தேடல் என்றும், ஆத்ம தாகம் என்றும் சொல்லிக் கொள்கிறோம். இப்படி பல காலமாக ஆராய்ந்து தெளிந்த நம் முன்னோர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். கடவுள் ஒளி வடிவில் இருக்கிறார் என்று. நீண்ட நெடுங்காலமாக ஒளியை கடவுளாக வணங்கும் முறையே ஐதீகமாக இருந்து வருகிறது. அசையாது எரிந்து கொண்டிருக்கும் தீபத்தையே தியானிப்பவர்கள் உண்டு. அதனால் ஓரளவு மனது குவிகிறது என்பது உண்மையே. அதற்கேற்ற மனத் தெளிவும் கிடைக்கிறது. எனினும், வேகமாக காற்றடித்து விட்டால் அந்த தீபம் அனைந்து விடுகிறது. அழிந்துபட்டுப் போகாத பரம்பொருளோடு இதை எப்படி ஒப்பிடுவது, என்ற ஐயம் வந்து விடுகிறது. சூரிய, சந்திர, நட்சத்திரங்களைச் சொல்லலாம் என்றால், சந்திரனோ தேய்கிறது. சூரியனும் கூட பிரளய காலத்தில் ஒடுங்கி விடுகிறது. எனவே சூரியனையோ, சந்திரனையோ, நட்சத்திரங்களையோ, மின்னலையோ, அக்கினியையோ அவற்றின் ஒளியையோ பரப்ரம்மத்தோடு ஒப்பிட முடியாது. ஏனென்றால், அது தன் சுயப்பிரகாசத்தால் யாண்டும் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது. இனி என்னதான் செய்ய முடியும் ? பரமாத்மாவை எப்படித்தான் அறிந்து கொள்வது. 

அந்த பரமாத்மாவின் பிரிதி பிம்பமாகவே ஜீவாத்மா இருக்கிறது. எனவே அந்த பரமாத்மாவின் இயல்பு ஜீவாத்மாவிடத்தும் இருக்கவே செய்கிறது. எனவே ஜீவன் தன் ஆத்மாவை உணருங்கால் பரமாத்மாவை உணர முடியும் என்ற முடிவு வந்து விடுகிறது. ஜீவாத்மன் ஒருவன் இருட்டறையில் அமர்ந்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு தன் உடல் கட்புலனாவது இல்லை. ஆனால், இருக்கிறேன் என்ற உணர்வு மட்டும் தன்னைத் தானே விளக்கிக் கொண்டிருக்கிறது. இருக்கிறேன் என்ற உணர்வை விளக்குப் பிடித்துப் பார்க்க வேண்டியதில்லை. சூரிய வெளிச்சமோ, சந்திர வெளிச்சமோ அதற்குத் தேவையில்லை. தான் இருப்பதை அது தானே விளக்குகிறது. ஆக, இந்த நான் இருக்கிறேன் என்கின்ற உணர்வை உபாசிப்பதே கடவுள் வழிபாடு எனக் கூறப்படிருக்கிறது. இந்த உணர்வே ஆத்மா. இந்த உணர்வை அடையவே தியானங்களும்,ஜப,தபங்களும் செய்யப்படுகின்றன. இருக்கிறேன் என்ற உணர்வே ஆத்மாவின் ஒளியாகும்.
எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் மனநிலை மனிதனுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. உலகில் முதன் முதலில் தோன்றிய மனிதனுக்கும் அந்த இயல்பு இருந்திருக்கும். அப்படி வழி வழியாக வந்த அந்த இயல்பின் பலனே இன்றைய அனைத்து விஞ்ஞான முன்னேற்றங்களும். தனிமங்களைக் கண்டு பிடித்தான், அவற்றைப் பிரித்து அணுக்களைக் கண்டு பிடித்தான், அதையும் பிளந்து எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான்களைக் கண்டு பிடித்தான் இவ்வளவு ஏன், கடவுள் துகளையே கண்டு பிடித்து விட்டான் என்கிறார்கள். எனினும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அது போலவே கடவுளின் விஷயத்திலும் ஆராய்ச்சிகளுக்கு குறைவில்லை. இல்லை என்பவர்களைப் பொருத்த வரை ஒரே முடிவுதான். ஆனால், இருக்கிறது என்பவர்களுக்கிடையில்தான் பல் வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது ஒன்றுதான் என்பதை பெருவாரியானவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த ஒன்றை பரமாத்மா என்றோ, பரம பிதா என்றோ, அல்லா என்றோ, சதாசிவம் என்றோ பல பெயரிட்டு அழைக்கிறோம்.

பரமாத்மா என்கிற ப்ரம்மமானது இரு நிலைகளைக் கொண்டிருக்கிறது. அதாவது சகுணம், நிர்குணம் என்பார்கள். நிர்குண ப்ரம்மத்தை இருப்பு நிலை, பேராற்றல், வற்றா இருப்பு என்றெல்லாம் சொல்வார்கள். அதற்கு குணம், குறி ஒன்றுமில்லை. கிருத்தியம் ஏதும் அங்கு நிகழ்வதில்லை. சகுணப்ரம்மமோ விபூதிகள் பலவற்றை உடையதாக இருக்கிறது. இந்த உலகில் காணும் அனைத்தும் சகுணப்ரம்மத்திடமிருந்து உருவாகி வந்தவைகளே. சகுணப்ரம்மத்தையே ஈஸ்வரன் என்கிறோம். பரப்ரம்மமாகிய ஒரே வஸ்துவே இரு வேறு நிலைகளில் இருக்கிறது. இதை உதாரணப்படுத்துவதற்கு சூரிய ஒளியை எடுத்துக் கொள்ளலாம். சூரிய ஒளி என்பது நம் கண்ணுக்குத் தெரியாது. வெளிச்சமாகத் தோன்றுமே அல்லாது வேறு எந்த உருவமோ, அடையாளமோ இல்லை. ஒரு திரையிலோ, நீரிலோ, கல்லின் மீதோ படும் போது அதைக் காணமுடிகிறது. அதையே ஒரு முப்பட்டை கண்ணாடியில் செலுத்துகிற போது, அந்த ஒளியானது ஏழு நிறங்களாகப் பிரிகிறது. இதை ஒத்ததே சகுணப் ப்ரம்மம். ஏழுநிறங்களாக உள்ள போது அவை தனித்தனியான இயல்புகளையும், செயல்களையும் கொண்டிருக்கின்றன. அதுவே ஒன்றாகிருக்கும் போது அவற்றின் தனித்தனியான செயல்கள் ஏதுமில்லை. ஒடுங்கி விட்டன. அந்த பல்வேறு சக்திகளும், செயல்களும் ஒடுங்கிய நிலையையே பரப்ப்ரம்மம் என்கிறோம்.

இப்படியாக எல்லா உயிர்களுக்கும் ஜீவனாக விளங்கும் ஆத்மாவை அறிவது எப்படி ?என்ற ஏக்கத்தையே தேடல் என்றும், ஆத்ம தாகம் என்றும் சொல்லிக் கொள்கிறோம். இப்படி பல காலமாக ஆராய்ந்து தெளிந்த நம் முன்னோர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். கடவுள் ஒளி வடிவில் இருக்கிறார் என்று. நீண்ட நெடுங்காலமாக ஒளியை கடவுளாக வணங்கும் முறையே ஐதீகமாக இருந்து வருகிறது. அசையாது எரிந்து கொண்டிருக்கும் தீபத்தையே தியானிப்பவர்கள் உண்டு. அதனால் ஓரளவு மனது குவிகிறது என்பது உண்மையே. அதற்கேற்ற மனத் தெளிவும் கிடைக்கிறது. எனினும், வேகமாக காற்றடித்து விட்டால் அந்த தீபம் அனைந்து விடுகிறது. அழிந்துபட்டுப் போகாத பரம்பொருளோடு இதை எப்படி ஒப்பிடுவது, என்ற ஐயம் வந்து விடுகிறது. சூரிய, சந்திர, நட்சத்திரங்களைச் சொல்லலாம் என்றால், சந்திரனோ தேய்கிறது. சூரியனும் கூட பிரளய காலத்தில் ஒடுங்கி விடுகிறது. எனவே சூரியனையோ, சந்திரனையோ, நட்சத்திரங்களையோ, மின்னலையோ, அக்கினியையோ அவற்றின் ஒளியையோ பரப்ரம்மத்தோடு ஒப்பிட முடியாது. ஏனென்றால், அது தன் சுயப்பிரகாசத்தால் யாண்டும் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது. இனி என்னதான் செய்ய முடியும் ? பரமாத்மாவை எப்படித்தான் அறிந்து கொள்வது.

அந்த பரமாத்மாவின் பிரிதி பிம்பமாகவே ஜீவாத்மா இருக்கிறது. எனவே அந்த பரமாத்மாவின் இயல்பு ஜீவாத்மாவிடத்தும் இருக்கவே செய்கிறது. எனவே ஜீவன் தன் ஆத்மாவை உணருங்கால் பரமாத்மாவை உணர முடியும் என்ற முடிவு வந்து விடுகிறது. ஜீவாத்மன் ஒருவன் இருட்டறையில் அமர்ந்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு தன் உடல் கட்புலனாவது இல்லை. ஆனால், இருக்கிறேன் என்ற உணர்வு மட்டும் தன்னைத் தானே விளக்கிக் கொண்டிருக்கிறது. இருக்கிறேன் என்ற உணர்வை விளக்குப் பிடித்துப் பார்க்க வேண்டியதில்லை. சூரிய வெளிச்சமோ, சந்திர வெளிச்சமோ அதற்குத் தேவையில்லை. தான் இருப்பதை அது தானே விளக்குகிறது. ஆக, இந்த நான் இருக்கிறேன் என்கின்ற உணர்வை உபாசிப்பதே கடவுள் வழிபாடு எனக் கூறப்படிருக்கிறது. இந்த உணர்வே ஆத்மா. இந்த உணர்வை அடையவே தியானங்களும்,ஜப,தபங்களும் செய்யப்படுகின்றன. இருக்கிறேன் என்ற உணர்வே ஆத்மாவின் ஒளியாகும்.!

No comments:

Post a Comment