Friday, March 28, 2014

நானே ப்ரம்மம். ப்ரம்மமே நான்

Photo: முதலும், இடையும், கடையும் இல்லாதவன். அவயங்களில்லாதவன். பெயர், கோத்திரம், சூத்திரம், ஜாதி, வர்ணங்கள் இல்லாதவன். ஆண், பெண், அலி என்ற விகாரங்கள் இல்லாதவன். பிறப்பு, இறப்பு இல்லாதவன். பாவ, புண்ணியங்கள் இல்லாதவன். தத்துவங்களுக்கு அப்பாற்ப்பட்டவன். எங்கும், எல்லாவற்றிலும் சமரசமாய் நீக்கமற நிறைந்திருப்பவன். இத்தனை வல்லமைகளையும் பெற்ற பரமாத்மாவை, இறையாற்றலை அறிவது எவ்வாறு ? இவ்வுருவமுடையவன் என்று வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உனக்கு இனி என்ன விதமான பூஜைகளை நான் செய்வேன் ? உலகுக்கே ஆதரமாய் இருக்கும் உனக்கு என்ன விதமான ஆஸனத்தை நான் போடுவேன் ? பஞ்ச பூதங்களாய், சகஜ சுபாவங்களோடு திகழும் உனக்கு இரண்டு கைகளால் நீர் எடுத்து(அர்க்ய பாத்தியங்கள்) எப்படி விடுவேன் ?

எல்லாவற்றையும் பரிசுத்தம் செய்யும் உனக்கு ஆசமனம் எவ்விதமாய்ச் செய்வேன் ? மலினமில்லாமல் பரிசுத்தனாய் பிரகாசித்துக் கொண்டிருக்கும் உனக்கு இந்த பூமியில் உள்ள நீரால் எப்படி அபிஷேகம் செய்வேன் ? பிரஞ்பஞ்சத்தையெல்லாம் கடந்த உனக்குத் தகுந்த வஸ்திரத்தை எங்கிருந்து கொண்டு வந்து அணிவிப்பேன் ? விசாரித்து தெரிந்து கொள்ளும் அளவுக்கு குலம், கோத்திரம் இல்லாத உனக்கு யஞ்ஞோபவீதம் என்னும் பூனூலை எப்படி அணிவிப்பது ? அவயங்களே இல்லாத உனக்கு எப்படி அலங்காரம் செய்வது ? நிரஞ்சனனான உனக்கு எப்படி தூபம் காட்டுவது ? சூரிய, சந்திரர்களையே பிரகாசிக்கச் செய்யும் உனக்கு என்ன தீபத்தைக் கொண்டு வந்து காட்டுவது ? 

ஆதியும், அந்தமும் இல்லாத உனக்கு என்ன மந்திரங்களைச் சொல்லி, என்ன புஷ்பத்தை எடுத்து சாற்றுவது ? பரிபூரணனாய், நித்ய திருப்தி உடையவனாய்த் திகழும் உனக்கு எவ்வளவு நைவேத்தியத்தை நான் படைக்க முடியும் ? எப்போதும் ஆனந்தமுடையவனாய், பேரானந்தமாய் விளங்கும் உனக்குத் தாம்பூலம் எவ்விதமாய் நான் கொடுப்பது ? சுயம்பிரகாசனான உனக்கு நீராஞ்சனம்(கற்பூரம் எற்றி நீர் விடுவது) எவ்விதமாய்ச் செய்வேன் ? பிரபஞ்சத்தையே சரீரமாய்க் கொண்ட உனக்கும் பிரதக்ஷணம் எவ்விதமாய்ச் செய்வேன் ? நீ, நான் என்ற பேதமில்லாமல் திகழும் அத்வைத வஸ்துவான உன்னை எப்படி நமஸ்கரிப்பது ? வார்த்தைகளுக்கு அடங்காத உன்னை எப்படி துதி செய்வது ?

இதெல்லம் என்ன கேள்விகள் ? யார் கேட்பது ? 

இதெல்லாமே இயம, நியமங்களைக் கடந்த ஆத்ம தாகமும், ஆன்ம விசாரமும் உள்ள சாதகன் மனதில் எழும் கேள்விகளே ? இத்தகைய கேள்விகளை சித்தர்கள் பாடலில் பரவலாகக் காணலாம். ஒரு சிறு குழந்தையானது பொம்மையை கையில் வைத்துக் கொண்டு அதனோடு, பேசுவதும், கொஞ்சுவதுமாக விளையாடிக் கொண்டிருக்கும். அதுவே கொஞ்சம் வளர்ந்து விட்டாலோ, பொம்மையை விட்டு விட்டு வேறு அறிவுப் பூர்வமான, உடல் வலிமையைத் தரக் கூடிய விளையாட்டுகளை விளையாடச் சென்று விடும். முதலில் பேசி, கொஞ்சி மகிழ்ந்த பொம்மை வளர்ந்த பிறகு வெறும் பொம்மையாகவே தெரியும். அது போலவே இங்கும். மன ஒருமைப்பாட்டிற்கு உதவும் ஆரம்ப நிலை வழிபாடுகளைக் கடந்த சாதகன் ஆன்மதாகம் கொண்டு, ஏக்கத்தோடு மனதிற்குள் கேட்கும் கேள்விகளே இவைகளெல்லாம். அடுத்த படியில் கால் வைக்கும் போது ஏற்படும் ஆர்வம், முனைப்பு இத்தகைய கேள்விகளை சாதகன் மனதில் தோற்றுவிக்கிறது. இந்த இரு வகைப் புறப் பயிற்சிகளால் ஓரளவு மனம் பக்குவப்பட்டுள்ளது. இனி உடலைப் பக்குப்படுத்த வேண்டும். அதற்கு ஆஸனம் உதவி செய்யும். அப்படியே ஒவ்வொரு படியாகக் கடக்க வேண்டும். இந்த கேள்விகளே சாதகன் மனதில் தீவிர தேடலை உண்டாக்கி பயிற்சியில் மேன்மையடையச் செய்கிறது. சரி, இனி இதற்கான பதில்களைப் பார்ப்போம். 

ப்ரம்மத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் நீ உன்னைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது எப்படி ? சர்வ கர்மங்களையும் விட்டு விடுவதே உன்னைத் தெரிந்து கொள்வது. எங்கும் பரிபூரணமாய் நிறைந்திருக்கும் ப்ரம்மமே நித்தியம். பிரபஞ்சமோ அநித்யம். இந்த நிஸ்ச்சய ஞானமே ஆஸனம். மனதில் எந்த மலங்களும் இல்லாமல் பரிசுத்தனாய் இருப்பதே ஸ்னானம். நிஸ்சிந்தையாய் இருப்பதே அர்க்ய பாத்தியங்கள் விடுவது. மனம் சங்கல்ப, விகல்பங்கள் (நினைப்பு, மறப்பு) இல்லாமல் இருப்பதே ஆசமனம். ஜாதி, மத பேதங்களில்லாமல் இருப்பதே ஞானம். இந்திரியங்களை அடக்கி வசப்படுத்துவதே சௌசம். சர்வமும் ப்ரம்மம் என்றிருப்பதே கந்தம். நோக்கத்தை சிதற விடாமல் சதா ப்ரம்மத்தில் நிறுத்துவதே அக்ஷதைகள். ஆத்மதரிசனம் பெற வேண்டும் என்ற சங்கல்பமே ஞானாப்தி. இந்த ஞானாப்தியே புஷ்பம். எந்த பந்தங்களுமில்லாமல் ஆத்மா தானென்னும் நிச்சத்தை அடைவதே எதார்த்த தியானம். அந்தக்கரணங்களால் ஏற்படும் சேஷ்டைகள் இல்லாமல் இருப்பதே பூஜை. புத்தியை அங்கும் இங்கும் ஓடவிடாமல் ஆத்ம ஞானத்தில் ஸ்திரமாய் நிறுத்துவதே ஞானாக்கினி. இந்த ஞானாக்கினியே தூபம். நான் தேகமல்ல, மனதல்ல, ஜீவனுமல்ல, இந்த பிரபஞ்சமும் சர்வமும் நானல்ல என்கிற தத்துவ விவேகமே ஞான சூரியன். இந்த ஞானசூரியனே தீபம். 

நானே ப்ரம்மம். ப்ரம்மமே நான் என்று பரிபூரணமாகிய ப்ரம்மத்தில் ஐக்கியமாவதே நைவேத்தியம். அதே நிலையில் சலிக்காமல்(அசையாமல்) இருப்பதே பிரதக்ஷிணம். மனதை சுவாசத்துடன் சேர்த்து ஸோஹம் என்ற மந்திரம் ஜெபம் செய்து வருவதே மந்திரம். மனம் ஆத்ம ஞானத்தில் கலந்து அசையாமல் ஒரே நிஷ்டையில் இருந்து ஆனந்தத்தை அடைவதே துதி செய்வது(நாம சங்கீரர்த்தனம்). உள்ளும் வெளியும் எங்கும் நிறைந்து பரிபூரணமாயிருப்பதே ஜபம். நினைப்பு மறப்புகள் இல்லாமல் மௌனமாய் இருப்பதே ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியம். இந்த ஐக்கியமே நமஸ்காரம். முடிவு? 

உள்ளும் வெளியும் காணப்படும் பதார்த்தங்கள் (பதம் + அர்த்தம்)இரண்டும் அதாவது, உள்ளே காணப்படும் பதார்த்தம் சங்கல்பம் (நினைப்பு), வெளியே காணப்படும் பதார்த்தம் சகல வஸ்த்துகளின் தோற்றம். இவ்விரண்டு பதார்த்தங்களின் நாம ரூபங்களை அறவே விட்டு, சங்கல்ப, விகல்பங்களில்லாமல் அகண்ட பாவத்தை அடைந்திருக்கும் மோட்சம்.
முதலும், இடையும், கடையும் இல்லாதவன். அவயங்களில்லாதவன். பெயர், கோத்திரம், சூத்திரம், ஜாதி, வர்ணங்கள் இல்லாதவன். ஆண், பெண், அலி என்ற விகாரங்கள் இல்லாதவன். பிறப்பு, இறப்பு இல்லாதவன். பாவ, புண்ணியங்கள் இல்லாதவன். தத்துவங்களுக்கு அப்பாற்ப்பட்டவன். எங்கும், எல்லாவற்றிலும் சமரசமாய் நீக்கமற நிறைந்திருப்பவன். இத்தனை வல்லமைகளையும் பெற்ற பரமாத்மாவை, இறையாற்றலை அறிவது எவ்வாறு ? இவ்வுருவமுடையவன் என்று வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உனக்கு இனி என்ன விதமான பூஜைகளை நான் செய்வேன் ? உலகுக்கே ஆதரமாய் இருக்கும் உனக்கு என்ன விதமான ஆஸனத்தை நான் போடுவேன் ? பஞ்ச பூதங்களாய், சகஜ சுபாவங்களோடு திகழும் உனக்கு இரண்டு கைகளால் நீர் எடுத்து(அர்க்ய பாத்தியங்கள்) எப்படி விடுவேன் ?

எல்லாவற்றையும் பரிசுத்தம் செய்யும் உனக்கு ஆசமனம் எவ்விதமாய்ச் செய்வேன் ? மலினமில்லாமல் பரிசுத்தனாய் பிரகாசித்துக் கொண்டிருக்கும் உனக்கு இந்த பூமியில் உள்ள நீரால் எப்படி அபிஷேகம் செய்வேன் ? பிரஞ்பஞ்சத்தையெல்லாம் கடந்த உனக்குத் தகுந்த வஸ்திரத்தை எங்கிருந்து கொண்டு வந்து அணிவிப்பேன் ? விசாரித்து தெரிந்து கொள்ளும் அளவுக்கு குலம், கோத்திரம் இல்லாத உனக்கு யஞ்ஞோபவீதம் என்னும் பூனூலை எப்படி அணிவிப்பது ? அவயங்களே இல்லாத உனக்கு எப்படி அலங்காரம் செய்வது ? நிரஞ்சனனான உனக்கு எப்படி தூபம் காட்டுவது ? சூரிய, சந்திரர்களையே பிரகாசிக்கச் செய்யும் உனக்கு என்ன தீபத்தைக் கொண்டு வந்து காட்டுவது ?

ஆதியும், அந்தமும் இல்லாத உனக்கு என்ன மந்திரங்களைச் சொல்லி, என்ன புஷ்பத்தை எடுத்து சாற்றுவது ? பரிபூரணனாய், நித்ய திருப்தி உடையவனாய்த் திகழும் உனக்கு எவ்வளவு நைவேத்தியத்தை நான் படைக்க முடியும் ? எப்போதும் ஆனந்தமுடையவனாய், பேரானந்தமாய் விளங்கும் உனக்குத் தாம்பூலம் எவ்விதமாய் நான் கொடுப்பது ? சுயம்பிரகாசனான உனக்கு நீராஞ்சனம்(கற்பூரம் எற்றி நீர் விடுவது) எவ்விதமாய்ச் செய்வேன் ? பிரபஞ்சத்தையே சரீரமாய்க் கொண்ட உனக்கும் பிரதக்ஷணம் எவ்விதமாய்ச் செய்வேன் ? நீ, நான் என்ற பேதமில்லாமல் திகழும் அத்வைத வஸ்துவான உன்னை எப்படி நமஸ்கரிப்பது ? வார்த்தைகளுக்கு அடங்காத உன்னை எப்படி துதி செய்வது ?

இதெல்லம் என்ன கேள்விகள் ? யார் கேட்பது ?

இதெல்லாமே இயம, நியமங்களைக் கடந்த ஆத்ம தாகமும், ஆன்ம விசாரமும் உள்ள சாதகன் மனதில் எழும் கேள்விகளே ? இத்தகைய கேள்விகளை சித்தர்கள் பாடலில் பரவலாகக் காணலாம். ஒரு சிறு குழந்தையானது பொம்மையை கையில் வைத்துக் கொண்டு அதனோடு, பேசுவதும், கொஞ்சுவதுமாக விளையாடிக் கொண்டிருக்கும். அதுவே கொஞ்சம் வளர்ந்து விட்டாலோ, பொம்மையை விட்டு விட்டு வேறு அறிவுப் பூர்வமான, உடல் வலிமையைத் தரக் கூடிய விளையாட்டுகளை விளையாடச் சென்று விடும். முதலில் பேசி, கொஞ்சி மகிழ்ந்த பொம்மை வளர்ந்த பிறகு வெறும் பொம்மையாகவே தெரியும். அது போலவே இங்கும். மன ஒருமைப்பாட்டிற்கு உதவும் ஆரம்ப நிலை வழிபாடுகளைக் கடந்த சாதகன் ஆன்மதாகம் கொண்டு, ஏக்கத்தோடு மனதிற்குள் கேட்கும் கேள்விகளே இவைகளெல்லாம். அடுத்த படியில் கால் வைக்கும் போது ஏற்படும் ஆர்வம், முனைப்பு இத்தகைய கேள்விகளை சாதகன் மனதில் தோற்றுவிக்கிறது. இந்த இரு வகைப் புறப் பயிற்சிகளால் ஓரளவு மனம் பக்குவப்பட்டுள்ளது. இனி உடலைப் பக்குப்படுத்த வேண்டும். அதற்கு ஆஸனம் உதவி செய்யும். அப்படியே ஒவ்வொரு படியாகக் கடக்க வேண்டும். இந்த கேள்விகளே சாதகன் மனதில் தீவிர தேடலை உண்டாக்கி பயிற்சியில் மேன்மையடையச் செய்கிறது. சரி, இனி இதற்கான பதில்களைப் பார்ப்போம்.

ப்ரம்மத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் நீ உன்னைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது எப்படி ? சர்வ கர்மங்களையும் விட்டு விடுவதே உன்னைத் தெரிந்து கொள்வது. எங்கும் பரிபூரணமாய் நிறைந்திருக்கும் ப்ரம்மமே நித்தியம். பிரபஞ்சமோ அநித்யம். இந்த நிஸ்ச்சய ஞானமே ஆஸனம். மனதில் எந்த மலங்களும் இல்லாமல் பரிசுத்தனாய் இருப்பதே ஸ்னானம். நிஸ்சிந்தையாய் இருப்பதே அர்க்ய பாத்தியங்கள் விடுவது. மனம் சங்கல்ப, விகல்பங்கள் (நினைப்பு, மறப்பு) இல்லாமல் இருப்பதே ஆசமனம். ஜாதி, மத பேதங்களில்லாமல் இருப்பதே ஞானம். இந்திரியங்களை அடக்கி வசப்படுத்துவதே சௌசம். சர்வமும் ப்ரம்மம் என்றிருப்பதே கந்தம். நோக்கத்தை சிதற விடாமல் சதா ப்ரம்மத்தில் நிறுத்துவதே அக்ஷதைகள். ஆத்மதரிசனம் பெற வேண்டும் என்ற சங்கல்பமே ஞானாப்தி. இந்த ஞானாப்தியே புஷ்பம். எந்த பந்தங்களுமில்லாமல் ஆத்மா தானென்னும் நிச்சத்தை அடைவதே எதார்த்த தியானம். அந்தக்கரணங்களால் ஏற்படும் சேஷ்டைகள் இல்லாமல் இருப்பதே பூஜை. புத்தியை அங்கும் இங்கும் ஓடவிடாமல் ஆத்ம ஞானத்தில் ஸ்திரமாய் நிறுத்துவதே ஞானாக்கினி. இந்த ஞானாக்கினியே தூபம். நான் தேகமல்ல, மனதல்ல, ஜீவனுமல்ல, இந்த பிரபஞ்சமும் சர்வமும் நானல்ல என்கிற தத்துவ விவேகமே ஞான சூரியன். இந்த ஞானசூரியனே தீபம்.

நானே ப்ரம்மம். ப்ரம்மமே நான் என்று பரிபூரணமாகிய ப்ரம்மத்தில் ஐக்கியமாவதே நைவேத்தியம். அதே நிலையில் சலிக்காமல்(அசையாமல்) இருப்பதே பிரதக்ஷிணம். மனதை சுவாசத்துடன் சேர்த்து ஸோஹம் என்ற மந்திரம் ஜெபம் செய்து வருவதே மந்திரம். மனம் ஆத்ம ஞானத்தில் கலந்து அசையாமல் ஒரே நிஷ்டையில் இருந்து ஆனந்தத்தை அடைவதே துதி செய்வது(நாம சங்கீரர்த்தனம்). உள்ளும் வெளியும் எங்கும் நிறைந்து பரிபூரணமாயிருப்பதே ஜபம். நினைப்பு மறப்புகள் இல்லாமல் மௌனமாய் இருப்பதே ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியம். இந்த ஐக்கியமே நமஸ்காரம். முடிவு?

உள்ளும் வெளியும் காணப்படும் பதார்த்தங்கள் (பதம் + அர்த்தம்)இரண்டும் அதாவது, உள்ளே காணப்படும் பதார்த்தம் சங்கல்பம் (நினைப்பு), வெளியே காணப்படும் பதார்த்தம் சகல வஸ்த்துகளின் தோற்றம். இவ்விரண்டு பதார்த்தங்களின் நாம ரூபங்களை அறவே விட்டு, சங்கல்ப, விகல்பங்களில்லாமல் அகண்ட பாவத்தை அடைந்திருக்கும் மோட்சம்.

No comments:

Post a Comment