Friday, March 28, 2014

மனதைத் தூய்மைப்படுத்துவது என்றால்?

Photo: நாம் பொதுவாக புற உலக நோக்கிலிருந்து மனதை உள்முகமாக திருப்ப வேண்டும் என்று சொல்லி விடுவோம். ஆனால், அது உடனடியாக நிகழக் கூடிய ஒரு சாதாரணமான செயல் அல்ல. அது மிகப் பெரிய யுக்தி. புற உலக வாழ்வைச் செம்மையாக வாழ்ந்துதான் மனதை சீர்படுத்தி உள்முகமாகத் திருப்ப முடியும். புற உலக வாழ்வில் ஒழுங்கும், கட்டுப்பாடும், நேர்த்தியும் இல்லாத ஒருவனுக்கு உளமுகமான பயணத்தில் ஒழுங்கும் ஒருமையும் சித்திக்காது. இது நம் அனுபவத்தில் கண்ணெதிரே காணும் நிகழ்வாகும். எந்தவித முறையான பயிற்சியும் இல்லாமல் தியானம் செய்கிறேன் பேர்வழி என்று போய் கொஞ்ச நாள் உட்கார்ந்து விட்டு பிறகு விட்டு விடுவார்கள். காரணம் இயம, நியம பயிற்சிகளை அவர்கள் கடைபிடிக்காதது தான்.

அதற்காக நீங்கள் கோயில்களுக்குத்தான் போக வேண்டும், அங்கிருக்கும் பக்த கோடிகளை கண்டு அவர்களோடு கூடி பணி செய்ய வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் கிடையாது. நம் அன்றாட வாழ்வில் நம் செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து, அதில் உள்ள குற்றங்களைச் சரி செய்து ஒழுங்கான, கட்டுப்பாடுகள் கொண்ட நேர்த்தியான வாழ்வாக மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும். அது இயலாத பட்சத்தில்தான் ஆலயங்களுக்குப் போய் அங்குள்ள பணிகளில் மனதைச் செலுத்தி, தொண்டு செய்து பக்குவத்தைப் பெற முயல வேண்டும் என்கிறார்கள். மற்ற எல்லாவற்றையும் விட ஆசைகளைத் தூய்மைப்படுத்துவதே மிகப் பெரிய சவாலாகும். அது என்ன எதெற்கெடுத்தாலும், ஆசைகளைத் தூயதாக்கு, மனதைத் தூயதாக்கு என்று சொல்கிறீர்கள் ? அது எப்படி முடியும் ?

ஒரு செயலை நாம் செய்யும் போது அனுபவமும், அந்த அனுபவம் சம்ஸ்காரத்தையும் ஏற்படுத்துகிறது. அந்த சம்ஸ்காரமே வாசனை எனப்படும். வாடிப் போன மலரை கூந்தலில் இருந்து எடுத்து விட்டாலும் அதன் நறுமணம் கூந்தலில் இருந்து கொண்டே இருப்பது போல, இன்ப துன்ப அனுபவங்கள் மனதில் வாசனையை விட்டுச் செல்கின்றன. வாசனை எப்பொழுதெல்லாம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் அந்த அனுபவத்தைப் பற்றிய நினைவும் எழுகிறது. செயலையும் அனுபவத்தையும் பிரிக்க முடியாது. எனவே கர்மாசயமும் வாசனையும் இணைந்தேதான் செயல்படும். ஒன்று தூண்டப்பட்டால் மற்றதும் தூண்டப்படும். வாசனை தூண்டப்படும் போது அது நினைவை எழுப்பும். நினைவு கர்மாசயத்தைத் தூண்டும். கர்மாசயம் ஆசைகளைத் தூண்டும். நாம் செயல்படுகிறோம், அனுபவங்களை அடைகிறோம், அனுபவங்கள் வாசனையை உண்டாக்குகின்றன. இப்படி செயலும், அனுபவமும், கர்மாசயமும், வாசனையும் முடிவின்றி சுழலும் ஒரு சுழற்சி இயக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த சுழற்சி வட்டத்தை, ஆசை வியூகத்தை உடைத்தெறிவதே ஆன்மிக வாழ்வில் தலையாய கடமையாகும்.

எனவே மனதைத் தூய்மைப்படுத்துவது என்றால், சம்ஸ்காரங்களைத் தூய்மைப்படுத்துவதேயாகும். அதாவது கர்மாசயத்திற்கும் வாசனைக்கும் இடையே உள்ள பிணைப்பை அழித்தல். இதை எப்படிச் செய்வது என்றால், அதற்கு இரண்டு உபாயங்கள் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளன. ஒன்று தவம். நம்மைத் தூண்டும் உந்துவேகங்களுக்கு அடிமைப்படாமல், அது தூண்டும் செயல்களைச் செய்யாமல் இருப்பது. இதையே சும்மா இருப்பது என்பார்கள். ''சும்மா இருக்கும் சுகம்'' என்கிறார்களல்லவா ? அது. அந்தச் செயலைச் செய்யாமல் தவிர்த்து, அந்த சூழலில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வரும் போது அந்த வேகங்கள் பலவீனமடைந்து விடும். இரண்டாவது, நற்கர்மங்களைச் செய்தல். இதன் மூலம் மனதில் நல்ல சம்ஸ்காரங்கள் உருவாகி விடுகின்றன. அவை அதிகரிக்கும் அளவுக்கு தீய சம்ஸ்காரங்களை அமுக்கி விடுகின்றன.காலப் போக்கில் தீய சம்ஸ்காரங்கள் வலுவிழந்து மறைந்து விடுகின்றன. இதனால் ஆசைகள் தூய்மையடைந்து மனமும் தூய்மையடைகின்றது. தியான வாழ்வின் ஆரம்ப கட்டம் இதுவே.

இந்த சம்ஸ்காரங்களால் ஏற்படும் உந்து வேகம் என்கிறத் தடையானது மூன்று விதமாக வெளிப்படுகிறது. அதாவது ஒரு பொருளை நோக்கி(ராகம்), எதிராக(த்வேஷம்), விலகுதல்(அச்சம்) என்கிற மூன்று விதமாக எழுகிறது. இவைகளால் தூண்டப்பட்டு செய்யப்படும் செயல்களையே நன்மைகள், தீமைகள் என்று சொல்லிக் கொள்கிறோம். பொதுவாக நம் மனதில் எழும் பல்வேறு நினைவுகள் நடுநிலையானவை. அவை இந்த உந்து வேகங்களுக்கு ஆட்படும் போதுதான் நன்மை என்றும், தீமை என்றும் தன்மை பெறுகின்றன. எனவே இந்த உந்து வேகங்களைத் தவிர்த்து விட்டோமானால் மனம் தூய்மையடைந்து விடுகின்றது. எனவே கெட்ட எண்ணங்கள் மனதில் எழுகிற போது அவற்றை உந்து வேகங்களில் இருந்து பிரிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு பொருளின் மீது ஆசைப்படுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். உடனே அதைக் குறித்த பரிசீலனையை நம் மனதில் செய்து பார்க்க வேண்டும். நம் நிலை என்ன ? நாம் இந்தப் பொருளின் மீது ஆசைப்படலாமா ? இது தவறல்லவா ? மற்றவர்கள் இந்தப் பொருளின் மீது நாம் ஆசைப்படுவதைப் பார்த்தால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் ? சீச்சீ இது தவறு என்று நம்மை நாமே சரிசெய்து கொண்டு நம் பார்வையையும், எண்ணத்தையும் அந்த நிலையில் இருந்து மாற்றிக் கொள்ளப் பழக வேண்டும். நாளடைவில் அந்தப் பழக்கமே நம் இயல்பாகி விடும். அதன் பிறகு அந்தப் பொருளை நாம் பார்க்கும் பொழுது நமக்கு ஆசை தோன்றாது. இது ஒரு உதாரணம். இது போலப் பல்லாயிரக்கணக்கான ஆசைகள் உள்ளன. இப்படி ஒவ்வொன்றாக சரிசெய்து ஆசைகளைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் மனதைத் தூய்மையாக்கிக் கொள்ள முடியும். இப்போது தியானமும் எளிதில் கூடும்.
நாம் பொதுவாக புற உலக நோக்கிலிருந்து மனதை உள்முகமாக திருப்ப வேண்டும் என்று சொல்லி விடுவோம். ஆனால், அது உடனடியாக நிகழக் கூடிய ஒரு சாதாரணமான செயல் அல்ல. அது மிகப் பெரிய யுக்தி. புற உலக வாழ்வைச் செம்மையாக வாழ்ந்துதான் மனதை சீர்படுத்தி உள்முகமாகத் திருப்ப முடியும். புற உலக வாழ்வில் ஒழுங்கும், கட்டுப்பாடும், நேர்த்தியும் இல்லாத ஒருவனுக்கு உளமுகமான பயணத்தில் ஒழுங்கும் ஒருமையும் சித்திக்காது. இது நம் அனுபவத்தில் கண்ணெதிரே காணும் நிகழ்வாகும். எந்தவித முறையான பயிற்சியும் இல்லாமல் தியானம் செய்கிறேன் பேர்வழி என்று போய் கொஞ்ச நாள் உட்கார்ந்து விட்டு பிறகு விட்டு விடுவார்கள். காரணம் இயம, நியம பயிற்சிகளை அவர்கள் கடைபிடிக்காதது தான்.

அதற்காக நீங்கள் கோயில்களுக்குத்தான் போக வேண்டும், அங்கிருக்கும் பக்த கோடிகளை கண்டு அவர்களோடு கூடி பணி செய்ய வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் கிடையாது. நம் அன்றாட வாழ்வில் நம் செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து, அதில் உள்ள குற்றங்களைச் சரி செய்து ஒழுங்கான, கட்டுப்பாடுகள் கொண்ட நேர்த்தியான வாழ்வாக மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும். அது இயலாத பட்சத்தில்தான் ஆலயங்களுக்குப் போய் அங்குள்ள பணிகளில் மனதைச் செலுத்தி, தொண்டு செய்து பக்குவத்தைப் பெற முயல வேண்டும் என்கிறார்கள். மற்ற எல்லாவற்றையும் விட ஆசைகளைத் தூய்மைப்படுத்துவதே மிகப் பெரிய சவாலாகும். அது என்ன எதெற்கெடுத்தாலும், ஆசைகளைத் தூயதாக்கு, மனதைத் தூயதாக்கு என்று சொல்கிறீர்கள் ? அது எப்படி முடியும் ?

ஒரு செயலை நாம் செய்யும் போது அனுபவமும், அந்த அனுபவம் சம்ஸ்காரத்தையும் ஏற்படுத்துகிறது. அந்த சம்ஸ்காரமே வாசனை எனப்படும். வாடிப் போன மலரை கூந்தலில் இருந்து எடுத்து விட்டாலும் அதன் நறுமணம் கூந்தலில் இருந்து கொண்டே இருப்பது போல, இன்ப துன்ப அனுபவங்கள் மனதில் வாசனையை விட்டுச் செல்கின்றன. வாசனை எப்பொழுதெல்லாம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் அந்த அனுபவத்தைப் பற்றிய நினைவும் எழுகிறது. செயலையும் அனுபவத்தையும் பிரிக்க முடியாது. எனவே கர்மாசயமும் வாசனையும் இணைந்தேதான் செயல்படும். ஒன்று தூண்டப்பட்டால் மற்றதும் தூண்டப்படும். வாசனை தூண்டப்படும் போது அது நினைவை எழுப்பும். நினைவு கர்மாசயத்தைத் தூண்டும். கர்மாசயம் ஆசைகளைத் தூண்டும். நாம் செயல்படுகிறோம், அனுபவங்களை அடைகிறோம், அனுபவங்கள் வாசனையை உண்டாக்குகின்றன. இப்படி செயலும், அனுபவமும், கர்மாசயமும், வாசனையும் முடிவின்றி சுழலும் ஒரு சுழற்சி இயக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த சுழற்சி வட்டத்தை, ஆசை வியூகத்தை உடைத்தெறிவதே ஆன்மிக வாழ்வில் தலையாய கடமையாகும்.

எனவே மனதைத் தூய்மைப்படுத்துவது என்றால், சம்ஸ்காரங்களைத் தூய்மைப்படுத்துவதேயாகும். அதாவது கர்மாசயத்திற்கும் வாசனைக்கும் இடையே உள்ள பிணைப்பை அழித்தல். இதை எப்படிச் செய்வது என்றால், அதற்கு இரண்டு உபாயங்கள் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளன. ஒன்று தவம். நம்மைத் தூண்டும் உந்துவேகங்களுக்கு அடிமைப்படாமல், அது தூண்டும் செயல்களைச் செய்யாமல் இருப்பது. இதையே சும்மா இருப்பது என்பார்கள். ''சும்மா இருக்கும் சுகம்'' என்கிறார்களல்லவா ? அது. அந்தச் செயலைச் செய்யாமல் தவிர்த்து, அந்த சூழலில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வரும் போது அந்த வேகங்கள் பலவீனமடைந்து விடும். இரண்டாவது, நற்கர்மங்களைச் செய்தல். இதன் மூலம் மனதில் நல்ல சம்ஸ்காரங்கள் உருவாகி விடுகின்றன. அவை அதிகரிக்கும் அளவுக்கு தீய சம்ஸ்காரங்களை அமுக்கி விடுகின்றன.காலப் போக்கில் தீய சம்ஸ்காரங்கள் வலுவிழந்து மறைந்து விடுகின்றன. இதனால் ஆசைகள் தூய்மையடைந்து மனமும் தூய்மையடைகின்றது. தியான வாழ்வின் ஆரம்ப கட்டம் இதுவே.

இந்த சம்ஸ்காரங்களால் ஏற்படும் உந்து வேகம் என்கிறத் தடையானது மூன்று விதமாக வெளிப்படுகிறது. அதாவது ஒரு பொருளை நோக்கி(ராகம்), எதிராக(த்வேஷம்), விலகுதல்(அச்சம்) என்கிற மூன்று விதமாக எழுகிறது. இவைகளால் தூண்டப்பட்டு செய்யப்படும் செயல்களையே நன்மைகள், தீமைகள் என்று சொல்லிக் கொள்கிறோம். பொதுவாக நம் மனதில் எழும் பல்வேறு நினைவுகள் நடுநிலையானவை. அவை இந்த உந்து வேகங்களுக்கு ஆட்படும் போதுதான் நன்மை என்றும், தீமை என்றும் தன்மை பெறுகின்றன. எனவே இந்த உந்து வேகங்களைத் தவிர்த்து விட்டோமானால் மனம் தூய்மையடைந்து விடுகின்றது. எனவே கெட்ட எண்ணங்கள் மனதில் எழுகிற போது அவற்றை உந்து வேகங்களில் இருந்து பிரிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு பொருளின் மீது ஆசைப்படுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். உடனே அதைக் குறித்த பரிசீலனையை நம் மனதில் செய்து பார்க்க வேண்டும். நம் நிலை என்ன ? நாம் இந்தப் பொருளின் மீது ஆசைப்படலாமா ? இது தவறல்லவா ? மற்றவர்கள் இந்தப் பொருளின் மீது நாம் ஆசைப்படுவதைப் பார்த்தால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் ? சீச்சீ இது தவறு என்று நம்மை நாமே சரிசெய்து கொண்டு நம் பார்வையையும், எண்ணத்தையும் அந்த நிலையில் இருந்து மாற்றிக் கொள்ளப் பழக வேண்டும். நாளடைவில் அந்தப் பழக்கமே நம் இயல்பாகி விடும். அதன் பிறகு அந்தப் பொருளை நாம் பார்க்கும் பொழுது நமக்கு ஆசை தோன்றாது. இது ஒரு உதாரணம். இது போலப் பல்லாயிரக்கணக்கான ஆசைகள் உள்ளன. இப்படி ஒவ்வொன்றாக சரிசெய்து ஆசைகளைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் மனதைத் தூய்மையாக்கிக் கொள்ள முடியும். இப்போது தியானமும் எளிதில் கூடும்.

No comments:

Post a Comment