Friday, March 28, 2014

சொப்பனம் காண்பவனுக்கு தான் காணுவது சொப்பனம் என்ற உணர்வு இருக்காது!

Photo: நீங்கள் கூறுவது போல பஞ்ச கோசங்களையும், அவத்தைகளையும், கரணங்களையும், முக்குணங்களையும் என்றோ நான் கடந்து விட்டேன். அங்கே வெறும் இருள்தான் இருக்கிறது. அந்த இருளை நான் என்றும், பேரொளியான ஆன்மாவென்றும் எப்படிச் சொல்வது ? என்று ஒரு பெரியவர் கேள்வியை முன் வைக்கிறார். முதற்கண் இவர் தான் எல்லாவற்றையும் கடந்து விட்டேன் என்று எந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்துக் கூறுகிறார் என்பது புரியவில்லை. கேட்டால், நான் 35 ஆண்டுகளாக தீவிரமாகத் தியானம் மற்றும் பிராணாயாமம் செய்து வருகிறேன் என்று சொல்கிறார். இதையெல்லாம் வைத்து தியானத்தில் வெற்றியடைந்து விட்டேன் என்று சொல்லிக் கொள்ள முடியாது. மனம் எந்த அளவுக்கு ஒரு புள்ளியில் குவிந்து, ஒருமைப்பாடு அடைந்து கீழ் நிலையிலிருந்து மேல் நோக்கி நகர்கிறதோ, உணர்வுகளைக் கடந்து ஆழ்மனதின் ஆழத்தில் உள்ள தூய ஒளியான ஆன்மாவை உணர்ந்து விவரிக்க முடியாத பேரின்பத்தை அடைகிறதோ அந்த நிலையையே வெற்றியாகும். அதை உணர்ந்திருந்தால் இவர் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார்.

இருளாக இருக்கிறதே, என்கிறார். உண்மையில் ஒளியைத் தருகின்ற கணக்கற்ற சூரியன்களும், சந்திரன்களும், நட்சத்திரங்களும் இல்லை என்றால் இந்த அண்டசராசரங்கள் எப்படி இருந்திருக்கும். இருளாகவேதான் இருந்திருக்கும். அப்படியென்றால் எல்லாவற்றிற்கும் ஆதாரமான பரப்ரம்மம் இருளானதா ? அது இருளல்ல, அது இரவு பகலற்றவிடம். அதை உணருமளவுக்கு நம் மனம் சூக்கும நிலையை அடைய வேண்டும். சூக்கும நிலையை அடைய அடைய ஒவ்வொரு சூக்கும இரகசியங்களும் புரிய வரும். நம் மனதை விட புத்தி சூக்குமமானது, புத்தியை விட சித்தம் சூக்குமமானது, சித்தத்தை விட அஹங்காரம்(நான் என்கிற உணர்வு) சூக்குமமானது, அதை விட நம் ஆன்மா சூக்குமமானது. அதை நாம் உணர்ந்து அதில் மூழ்கித் திளைத்து, நிலைத்து நிற்கும் போது பேரான்மா அதாவது பேரொளி தரிசனம் கிட்டும். மனம் சூக்குமமடைய அடைய ஒவ்வொரு அவஸ்தைகளையும், கரணங்களையும், கோசங்களையும் கடந்து வருவோம். கண்ணை மூடினால் இருளாகத்தான் இருக்கும். அந்த இருளில் மனதைக் குவித்து ஒரு நிலைப்படுத்தினால் ஒளியைக் காணலாம். ஏனென்றால் ஒளிக்கு ஆதாரம் இருளே.

மேலும் நான் அவஸ்தையைக் கடந்தேன், நான் கரணங்களைக் கடந்தேன், நான் கோசங்களைக் கடந்தேன் என்கிறாரே அது உண்மையா ? இப்போது நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்று கேட்டால் ஜாக்கிரதை என்ற விழிப்பு நிலையில் இருக்கிறோம் என்று சொல்வோம். அதாவது எல்லாவற்றையும் அறிந்து உணரும் நிலை என்போம். அப்படியானால் உண்மையில் நாம் நம்மை அறிந்து விட்டோமா ? இல்லையே. இங்கு நாம் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் விஷயங்கள் உண்மையில் நாமல்ல. அப்படியென்றால் நாம் எல்லாவற்றையும் அறிந்து உணரும் உணர்வு நிலையில் இருக்கிறோம் என்று எப்படிச் சொல்ல முடியும் ? அப்படியானால் இது என்ன அவஸ்தை அல்லது நிலை. நாம் யார் என்று அறிந்து  உணராமல் இருக்கும் இந்த உணர்வற்ற நிலையை என்ன சொல்வது ? உணர்வு இல்லாத நிலை என்றால் அது கனவற்ற தூக்கம்தான். ஆனால், நாம் படுத்து உறங்கவில்லையே ? நம் கண்களால் எல்லாவற்றையும் காண்கிறோமே ? கனவில் கூடத்தான் காட்சிகள் வருகின்றன. அப்படியானால் இது சொப்பனமா ? சொப்பனமென்றால் நாம் சொப்பனம் காண்கிறோம் என்ற உணர்வு இருக்காதே ? 

சொப்பனம் காண்பவனுக்கு தான் காணுவது சொப்பனம் என்ற உணர்வு இருக்காது. விழித்து எழுந்த பிறகுதான் தான் கண்டது சொப்பனம் என்பத் தெரியவரும். அது போலவே ஆன்மாவை உணராதவரை நாம் தூங்கிக் கொண்டிருப்பவர்களே. நாம் காணும் யாவும் சொப்பனங்களே. இந்தத் தூக்கம் எப்போது தெளிகிறதோ அப்போதுதான், நாம் கண்டது எல்லாம் கனவே. எல்லாம் வெறும் மாயையே என்பது புலப்படும். அதற்கு என்ன செய்ய வேண்டும் ? அதற்கும் தூங்கவே வேண்டும். என்ன , தூங்க வேண்டுமா ? ஆம், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பார்களே அது போல தூங்காமல் தூங்கி தூக்த்தைத் தொலைத்து உண்மையான விழிப்பு நிலையை அடைய வேண்டும். எனவே சரியான தூக்கமான தூங்காமல் தூங்கும் தியானத்தைச் சரியாகச் செய்யாதவரை கண்ணை மூடினால் இருளாகவே இருக்கும். எப்போது தியானத்தின் போது ஒளி தென்படுகிறதோ அப்போதுதான் நீங்கள் சரியான முறையில் தியானத்தைச் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர்கள்.
நீங்கள் கூறுவது போல பஞ்ச கோசங்களையும், அவத்தைகளையும், கரணங்களையும், முக்குணங்களையும் என்றோ நான் கடந்து விட்டேன். அங்கே வெறும் இருள்தான் இருக்கிறது. அந்த இருளை நான் என்றும், பேரொளியான ஆன்மாவென்றும் எப்படிச் சொல்வது ? என்று ஒரு பெரியவர் கேள்வியை முன் வைக்கிறார். முதற்கண் இவர் தான் எல்லாவற்றையும் கடந்து விட்டேன் என்று எந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்துக் கூறுகிறார் என்பது புரியவில்லை. கேட்டால், நான் 35 ஆண்டுகளாக தீவிரமாகத் தியானம் மற்றும் பிராணாயாமம் செய்து வருகிறேன் என்று சொல்கிறார். இதையெல்லாம் வைத்து தியானத்தில் வெற்றியடைந்து விட்டேன் என்று சொல்லிக் கொள்ள முடியாது. மனம் எந்த அளவுக்கு ஒரு புள்ளியில் குவிந்து, ஒருமைப்பாடு அடைந்து கீழ் நிலையிலிருந்து மேல் நோக்கி நகர்கிறதோ, உணர்வுகளைக் கடந்து ஆழ்மனதின் ஆழத்தில் உள்ள தூய ஒளியான ஆன்மாவை உணர்ந்து விவரிக்க முடியாத பேரின்பத்தை அடைகிறதோ அந்த நிலையையே வெற்றியாகும். அதை உணர்ந்திருந்தால் இவர் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார்.

இருளாக இருக்கிறதே, என்கிறார். உண்மையில் ஒளியைத் தருகின்ற கணக்கற்ற சூரியன்களும், சந்திரன்களும், நட்சத்திரங்களும் இல்லை என்றால் இந்த அண்டசராசரங்கள் எப்படி இருந்திருக்கும். இருளாகவேதான் இருந்திருக்கும். அப்படியென்றால் எல்லாவற்றிற்கும் ஆதாரமான பரப்ரம்மம் இருளானதா ? அது இருளல்ல, அது இரவு பகலற்றவிடம். அதை உணருமளவுக்கு நம் மனம் சூக்கும நிலையை அடைய வேண்டும். சூக்கும நிலையை அடைய அடைய ஒவ்வொரு சூக்கும இரகசியங்களும் புரிய வரும். நம் மனதை விட புத்தி சூக்குமமானது, புத்தியை விட சித்தம் சூக்குமமானது, சித்தத்தை விட அஹங்காரம்(நான் என்கிற உணர்வு) சூக்குமமானது, அதை விட நம் ஆன்மா சூக்குமமானது. அதை நாம் உணர்ந்து அதில் மூழ்கித் திளைத்து, நிலைத்து நிற்கும் போது பேரான்மா அதாவது பேரொளி தரிசனம் கிட்டும். மனம் சூக்குமமடைய அடைய ஒவ்வொரு அவஸ்தைகளையும், கரணங்களையும், கோசங்களையும் கடந்து வருவோம். கண்ணை மூடினால் இருளாகத்தான் இருக்கும். அந்த இருளில் மனதைக் குவித்து ஒரு நிலைப்படுத்தினால் ஒளியைக் காணலாம். ஏனென்றால் ஒளிக்கு ஆதாரம் இருளே.

மேலும் நான் அவஸ்தையைக் கடந்தேன், நான் கரணங்களைக் கடந்தேன், நான் கோசங்களைக் கடந்தேன் என்கிறாரே அது உண்மையா ? இப்போது நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்று கேட்டால் ஜாக்கிரதை என்ற விழிப்பு நிலையில் இருக்கிறோம் என்று சொல்வோம். அதாவது எல்லாவற்றையும் அறிந்து உணரும் நிலை என்போம். அப்படியானால் உண்மையில் நாம் நம்மை அறிந்து விட்டோமா ? இல்லையே. இங்கு நாம் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் விஷயங்கள் உண்மையில் நாமல்ல. அப்படியென்றால் நாம் எல்லாவற்றையும் அறிந்து உணரும் உணர்வு நிலையில் இருக்கிறோம் என்று எப்படிச் சொல்ல முடியும் ? அப்படியானால் இது என்ன அவஸ்தை அல்லது நிலை. நாம் யார் என்று அறிந்து உணராமல் இருக்கும் இந்த உணர்வற்ற நிலையை என்ன சொல்வது ? உணர்வு இல்லாத நிலை என்றால் அது கனவற்ற தூக்கம்தான். ஆனால், நாம் படுத்து உறங்கவில்லையே ? நம் கண்களால் எல்லாவற்றையும் காண்கிறோமே ? கனவில் கூடத்தான் காட்சிகள் வருகின்றன. அப்படியானால் இது சொப்பனமா ? சொப்பனமென்றால் நாம் சொப்பனம் காண்கிறோம் என்ற உணர்வு இருக்காதே ?

சொப்பனம் காண்பவனுக்கு தான் காணுவது சொப்பனம் என்ற உணர்வு இருக்காது. விழித்து எழுந்த பிறகுதான் தான் கண்டது சொப்பனம் என்பத் தெரியவரும். அது போலவே ஆன்மாவை உணராதவரை நாம் தூங்கிக் கொண்டிருப்பவர்களே. நாம் காணும் யாவும் சொப்பனங்களே. இந்தத் தூக்கம் எப்போது தெளிகிறதோ அப்போதுதான், நாம் கண்டது எல்லாம் கனவே. எல்லாம் வெறும் மாயையே என்பது புலப்படும். அதற்கு என்ன செய்ய வேண்டும் ? அதற்கும் தூங்கவே வேண்டும். என்ன , தூங்க வேண்டுமா ? ஆம், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பார்களே அது போல தூங்காமல் தூங்கி தூக்த்தைத் தொலைத்து உண்மையான விழிப்பு நிலையை அடைய வேண்டும். எனவே சரியான தூக்கமான தூங்காமல் தூங்கும் தியானத்தைச் சரியாகச் செய்யாதவரை கண்ணை மூடினால் இருளாகவே இருக்கும். எப்போது தியானத்தின் போது ஒளி தென்படுகிறதோ அப்போதுதான் நீங்கள் சரியான முறையில் தியானத்தைச் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர்கள்.

No comments:

Post a Comment