Friday, March 28, 2014

கேவல கும்பகம்

Photo: மனது சஞ்சலமடையக் காரணங்களான ரேசக, பூரகங்கள் பிராணனுக்கு எந்த இடத்தில் ஏற்படாதோ அந்த கும்பக நிலையை கேவல கும்பகம் என்பார்கள். கும்பகத்தில் முதன்மையானதும் அதிக பலன் தரக்கூடியதும் கேவல கும்பகமாகும். இதைப் பயின்றவர்கள் வாழ்நாளை நீட்டிக்கலாம். கேவல கும்பகப் பயிற்சியால் பிராணன் கட்டுப்படுகிறது. இதோடு சேர்த்து மூன்று வகை பந்தங்களையும் கையாளும் போது வேறு எங்கும் போக முடியாமல் அடைக்கப்பட்ட பிராணன் ஒருமுகப்படுகிறது. இதனால் கிளம்பும் குண்டலினியானது பிராணனை இழுத்துக் கொண்டு சுழுமுனை நாடி வழியாக ஓடி ஆறு ஆதாரங்களையும் கடந்து சகஸ்ராரப் பெருவெளியை அடைகிறது.
யோக சாதனைகள் முழுமை பெற பந்தங்கள் மிக முக்கியமானவையாகும். கழுத்தின் கீழ் ஜாலாந்திர பந்தம், வயிற்றின் கீழ் உட்டியாணம், மூலாதாரத்தில் மூலாதார பந்தம் இந்த மூன்று பந்தங்களும் கூடிய கேவல கும்பகத்தை எவர் ஒருவர் முறையாக பயிற்சி செய்கிறாரோ, அவரைக் கண்டு காலன் அஞ்சுவான். கும்பகத்தில் மூச்சை இழுத்து நிறுத்திய பின் தொண்டைக்குக் கீழே தடுத்து நிறுத்துவது ஜாலாந்திர பந்தம். இரண்டு கால்களையும் ஒரு அடி அகட்டி நின்று, இரண்டு கைகளையும் தொடையின் மீது வைத்து, நாபிக்கு கீழ் உள்ள வயிற்றுப் பகுதியைத் தளர்த்தி, உள்ளிழுத்து, முதுகுத்தண்டுவடம் நோக்கி கும்பகம் செய்வது உட்யாண பந்தம் எனப்படும். சித்தாசனத்தில் அமர்ந்து குதத்தை உள் நோக்கி இழுத்து, மூச்சை மேலே இழுத்து, இடக்கால் வைத்திருக்கும் மத்திய பாகத்தை உள்ளிழுத்து சுருக்க வேண்டும். இதுவே மூலபந்தமாகும். இந்த மூவகை பந்தங்களையும் கேவல கும்பகத்தோடு செய்யும் போது கழுத்து, வயிறு, மூலாதாரம் ஆகிய இடங்களில் பிராணன் கட்டப்படுவதால் குண்டலினி மேல் எழுகிறது. அது ஒவ்வொரு ஆதாரமாகக் கடக்கும் போது சாதகனுக்கு சகல சித்திகளும் உண்டாகி, முக்தி நிலை அடைவான். இதை மனோலயம் என்பார்கள். இந்த மூவகை பந்தங்களை செய்வதற்கு தேகபலம் அவசியமாகும். அதற்காகவே அஷ்டாங்க யோகத்தில் நான்காம் நிலையான பிராணாயாமத்திற்கு முன்பு மூன்றாம் நிலையாக ஆசனம் சொல்லப்பட்டுள்ளது. 
மூலத்துவாரத்தை முக்காரமிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே. திருமந்திரம்-583.
இந்த கேவல கும்பக முயற்சியால் மும்மலங்களும் நீங்கும். அதே நிலையில் மூக்கின் நுனியைப் பார்த்தவாறு கண்களை பாதி அளவு மூடி சாதனை செய்யும் போது மகா முத்திரை எற்படுகிறது. மூலாதாரத்தை இப்பயிற்சியில் அடைத்து மூலபந்தம் செய்வது அவசியம். இதை அமதஸ்கம், ஆகுஞ்சனம் என்று சொல்வார்கள். இந்த கேவல கும்பகப் பயிற்சியின் மேன்மையைப் பற்றி திருமூலர், பதஞ்சலி முனிவர், சிவவாக்கிய சித்தர் போன்ற பல சித்தர்களும் ஆதிசங்கரரும் வெகுவாக புழ்ந்து பாடுகிறார்கள்.
தொடரும்.....................
மனது சஞ்சலமடையக் காரணங்களான ரேசக, பூரகங்கள் பிராணனுக்கு எந்த இடத்தில் ஏற்படாதோ அந்த கும்பக நிலையை கேவல கும்பகம் என்பார்கள். கும்பகத்தில் முதன்மையானதும் அதிக பலன் தரக்கூடியதும் கேவல கும்பகமாகும். இதைப் பயின்றவர்கள் வாழ்நாளை நீட்டிக்கலாம். கேவல கும்பகப் பயிற்சியால் பிராணன் கட்டுப்படுகிறது. இதோடு சேர்த்து மூன்று வகை பந்தங்களையும் கையாளும் போது வேறு எங்கும் போக முடியாமல் அடைக்கப்பட்ட பிராணன் ஒருமுகப்படுகிறது. இதனால் கிளம்பும் குண்டலினியானது பிராணனை இழுத்துக் கொண்டு சுழுமுனை நாடி வழியாக ஓடி ஆறு ஆதாரங்களையும் கடந்து சகஸ்ராரப் பெருவெளியை அடைகிறது.
யோக சாதனைகள் முழுமை பெற பந்தங்கள் மிக முக்கியமானவையாகும். கழுத்தின் கீழ் ஜாலாந்திர பந்தம், வயிற்றின் கீழ் உட்டியாணம், மூலாதாரத்தில் மூலாதார பந்தம் இந்த மூன்று பந்தங்களும் கூடிய கேவல கும்பகத்தை எவர் ஒருவர் முறையாக பயிற்சி செய்கிறாரோ, அவரைக் கண்டு காலன் அஞ்சுவான். கும்பகத்தில் மூச்சை இழுத்து நிறுத்திய பின் தொண்டைக்குக் கீழே தடுத்து நிறுத்துவது ஜாலாந்திர பந்தம். இரண்டு கால்களையும் ஒரு அடி அகட்டி நின்று, இரண்டு கைகளையும் தொடையின் மீது வைத்து, நாபிக்கு கீழ் உள்ள வயிற்றுப் பகுதியைத் தளர்த்தி, உள்ளிழுத்து, முதுகுத்தண்டுவடம் நோக்கி கும்பகம் செய்வது உட்யாண பந்தம் எனப்படும். சித்தாசனத்தில் அமர்ந்து குதத்தை உள் நோக்கி இழுத்து, மூச்சை மேலே இழுத்து, இடக்கால் வைத்திருக்கும் மத்திய பாகத்தை உள்ளிழுத்து சுருக்க வேண்டும். இதுவே மூலபந்தமாகும். இந்த மூவகை பந்தங்களையும் கேவல கும்பகத்தோடு செய்யும் போது கழுத்து, வயிறு, மூலாதாரம் ஆகிய இடங்களில் பிராணன் கட்டப்படுவதால் குண்டலினி மேல் எழுகிறது. அது ஒவ்வொரு ஆதாரமாகக் கடக்கும் போது சாதகனுக்கு சகல சித்திகளும் உண்டாகி, முக்தி நிலை அடைவான். இதை மனோலயம் என்பார்கள். இந்த மூவகை பந்தங்களை செய்வதற்கு தேகபலம் அவசியமாகும். அதற்காகவே அஷ்டாங்க யோகத்தில் நான்காம் நிலையான பிராணாயாமத்திற்கு முன்பு மூன்றாம் நிலையாக ஆசனம் சொல்லப்பட்டுள்ளது.
மூலத்துவாரத்தை முக்காரமிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே. திருமந்திரம்-583.
இந்த கேவல கும்பக முயற்சியால் மும்மலங்களும் நீங்கும். அதே நிலையில் மூக்கின் நுனியைப் பார்த்தவாறு கண்களை பாதி அளவு மூடி சாதனை செய்யும் போது மகா முத்திரை எற்படுகிறது. மூலாதாரத்தை இப்பயிற்சியில் அடைத்து மூலபந்தம் செய்வது அவசியம். இதை அமதஸ்கம், ஆகுஞ்சனம் என்று சொல்வார்கள். இந்த கேவல கும்பகப் பயிற்சியின் மேன்மையைப் பற்றி திருமூலர், பதஞ்சலி முனிவர், சிவவாக்கிய சித்தர் போன்ற பல சித்தர்களும் ஆதிசங்கரரும் வெகுவாக புழ்ந்து பாடுகிறார்கள்.
தொடரும்.....................

No comments:

Post a Comment