Saturday, March 29, 2014

ஐயா, ஆஸ்திகம், நாஸதிகம் பற்றித் தெளிவு படுத்த முடியுமா ?

Photo: Raja Rajan _ ஐயா, ஆஸ்திகம், நாஸதிகம் பற்றித் தெளிவு படுத்த முடியுமா ?

Ram Manoharநம் நிலையான சொத்து எது ? நமக்கு என்றென்றும் உரிமையான சொத்து எது ? அது நிச்சயமாக இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. இங்கு நாம் பெற்றுள்ள ஆஸ்திகளை இருக்கும் வரை அனுபவிக்கலாம். சில வேளைகளில் இருக்கும் பொழுதே கூட அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது. எனவே இது நிலையானதல்ல. என்றும் நிலையான, அழியாத சொத்து எது என்று மனதால் தேடுவது ஆஸ்திகம். அந்த சொத்து அல்லது செல்வம்  நமக்கு உள்ளே இருக்கிறது என்றும் பொருள் கூறலாம். பொதுவாக அழிவற்ற ஆன்மாவை மனதால் அடைய முயற்சிப்பது ஆஸ்திகம். இது ஒரு வகையான முயற்சி. நாஸ்தி என்றால் அழிவு என்று பொருள். இது எந்த மொழி என்று எனக்குத் தெரியாது. ஆனால், சென்னையிலிருக்கும் பொழுது அடிக்கடி கேட்டிருக்கிறேன். எல்லாம் நாஸ்தியாப் போச்சுப்பா என்று அழிந்து போன அல்லது வீணாய்ப்போனதைக் குறித்து அவ்வாறு சொல்வார்கள். கூர்ந்து கவனித்தால் இதில் இரண்டு கருத்துகள் தோன்றுகின்றன. அதாவது என்றும் அழியாத கடவுளை விடுத்து அல்லது மறந்து அல்லது மறுத்து அழியக் கூடிய இந்தப் பிரபஞ்ச பொருட்களைப் பெரிதாகக் கருதிக் கொண்டு செயல்படுவது அல்லது வாழ்வது நாஸ்திகம் எனலாம். இன்னும் ஒரு கருத்து என்னவென்றால் அகம் என்றால் உள்ளே அதாவது உள்ளம் அல்லது மனம் என்று பொருள். மனதை நாஸ்தி செய்து அதாவது மனதை அழித்து என்றும் அழியாத பரம்பொருளை அடைவது நாஸ்திகம். சித்தர்கள் மனதற்ற நிலையைப் பற்றி பேசுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். அதாவது எல்லாமே கடவுள்தான். எனவே இங்கு காணும் எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு மனதால் தெளிந்து என்றும் அழியாத ஆஸ்தியாகிய பரம்பொருளை அடைவது ஆஸ்திகம். பரம்பொருளை நாம் அடைவதற்குத் தடையாக இருப்பதே இந்தப் பொருள்களும், அவற்றின் மீது கொள்ளும் பற்றுகளே ஆகும். எனவே இந்தஅழியக் கூடிய பொருள் மீது பற்று கொள்ளும் மனதை அழித்து விட்டால் நாம் பரம்பொருளை அடைந்து விடலாம் என்பது நாஸ்திகம். அதாவது அகத்தை அழித்து விடுவது. முன்னது பக்தி, பின்னது யோகம். இரண்டுமே ஞானத்தைத் தந்து முக்தியை அடையச் செய்யும். 

இது பற்றி காஞ்சி மகா பெரியவர் சொல்வது என்னவென்றால், அஸதி என்றால் இருப்பது. ஒரு காலத்திலோ, தேசத்திலோ, ஒரு பொருளிலோ மாத்திரமல்லாமல் எல்லாவற்றிலும் இருக்கிற வஸ்து எதுவோ அதுவே அஸ்தி. அதுவே பரம்பொருள். எனவே ஆஸ்திகன் என்றால் பரம்பொருள் ஞானம் உடையவன் அல்லது பரம்பொருளை நம்புபவன். இதில் நம்பிக்கையற்றவர்கள் நாஸ்திகன். அதாவது பரம்பொருளை மனதால் நம்புபவன் ஆஸ்திகன். பரம்பொருள் மீது நம்பிக்கையற்றவன் நாஸ்திகன். அவர் சொல்வது படிப் பார்த்தால் எந்தப் பொருளுமே இந்த உலகில் அழிவதில்லை. தன் வியக்தியை, தன் குணத்தை, தன் வடிவத்தை இழந்து புதிய நிலையை அடைகிறது. பழைய வியக்தியை அழிந்து போக புதிய வியக்தியை எடுத்துக் கொண்டேயிருக்கிறது. இப்படி பிரபஞ்சச் சக்கரத்தில் உழன்று கொண்டேயிருக்கக் காரணம் மனதில் பரம்பொருள் பற்றிய நம்பிக்கையோ, ஆன்மத் தெளிவோ அற்றிருப்பதுதான். அவனே நாஸ்திகன்.மனதால் பரம்பொருளைப் பற்றி, ஆன்மத் தெளிவாகிய பரஞானம் அடையும் முயற்சியை உடையவன் ஆஸ்திகன். அவனே என்றும் அழியாத சொத்தாகிய நம் சொந்த வீடாகிய வீடு பேற்றை அடைவான் என்பது கருத்து.
நம் நிலையான சொத்து எது ? நமக்கு என்றென்றும் உரிமையான சொத்து எது ? அது நிச்சயமாக இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. இங்கு நாம் பெற்றுள்ள ஆஸ்திகளை இருக்கும் வரை அனுபவிக்கலாம். சில வேளைகளில் இருக்கும் பொழுதே கூட அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது. எனவே இது நிலையானதல்ல. என்றும் நிலையான, அழியாத சொத்து எது என்று மனதால் தேடுவது ஆஸ்திகம். அந்த சொத்து அல்லது செல்வம் நமக்கு உள்ளே இருக்கிறது என்றும் பொருள் கூறலாம். பொதுவாக அழிவற்ற ஆன்மாவை மனதால் அடைய முயற்சிப்பது ஆஸ்திகம். இது ஒரு வகையான முயற்சி. நாஸ்தி என்றால் அழிவு என்று பொருள். இது எந்த மொழி என்று எனக்குத் தெரியாது. ஆனால், சென்னையிலிருக்கும் பொழுது அடிக்கடி கேட்டிருக்கிறேன். எல்லாம் நாஸ்தியாப் போச்சுப்பா என்று அழிந்து போன அல்லது வீணாய்ப்போனதைக் குறித்து அவ்வாறு சொல்வார்கள். கூர்ந்து கவனித்தால் இதில் இரண்டு கருத்துகள் தோன்றுகின்றன. அதாவது என்றும் அழியாத கடவுளை விடுத்து அல்லது மறந்து அல்லது மறுத்து அழியக் கூடிய இந்தப் பிரபஞ்ச பொருட்களைப் பெரிதாகக் கருதிக் கொண்டு செயல்படுவது அல்லது வாழ்வது நாஸ்திகம் எனலாம். இன்னும் ஒரு கருத்து என்னவென்றால் அகம் என்றால் உள்ளே அதாவது உள்ளம் அல்லது மனம் என்று பொருள். மனதை நாஸ்தி செய்து அதாவது மனதை அழித்து என்றும் அழியாத பரம்பொருளை அடைவது நாஸ்திகம். சித்தர்கள் மனதற்ற நிலையைப் பற்றி பேசுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். அதாவது எல்லாமே கடவுள்தான். எனவே இங்கு காணும் எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு மனதால் தெளிந்து என்றும் அழியாத ஆஸ்தியாகிய பரம்பொருளை அடைவது ஆஸ்திகம். பரம்பொருளை நாம் அடைவதற்குத் தடையாக இருப்பதே இந்தப் பொருள்களும், அவற்றின் மீது கொள்ளும் பற்றுகளே ஆகும். எனவே இந்தஅழியக் கூடிய பொருள் மீது பற்று கொள்ளும் மனதை அழித்து விட்டால் நாம் பரம்பொருளை அடைந்து விடலாம் என்பது நாஸ்திகம். அதாவது அகத்தை அழித்து விடுவது. முன்னது பக்தி, பின்னது யோகம். இரண்டுமே ஞானத்தைத் தந்து முக்தியை அடையச் செய்யும்.

இது பற்றி காஞ்சி மகா பெரியவர் சொல்வது என்னவென்றால், அஸதி என்றால் இருப்பது. ஒரு காலத்திலோ, தேசத்திலோ, ஒரு பொருளிலோ மாத்திரமல்லாமல் எல்லாவற்றிலும் இருக்கிற வஸ்து எதுவோ அதுவே அஸ்தி. அதுவே பரம்பொருள். எனவே ஆஸ்திகன் என்றால் பரம்பொருள் ஞானம் உடையவன் அல்லது பரம்பொருளை நம்புபவன். இதில் நம்பிக்கையற்றவர்கள் நாஸ்திகன். அதாவது பரம்பொருளை மனதால் நம்புபவன் ஆஸ்திகன். பரம்பொருள் மீது நம்பிக்கையற்றவன் நாஸ்திகன். அவர் சொல்வது படிப் பார்த்தால் எந்தப் பொருளுமே இந்த உலகில் அழிவதில்லை. தன் வியக்தியை, தன் குணத்தை, தன் வடிவத்தை இழந்து புதிய நிலையை அடைகிறது. பழைய வியக்தியை அழிந்து போக புதிய வியக்தியை எடுத்துக் கொண்டேயிருக்கிறது. இப்படி பிரபஞ்சச் சக்கரத்தில் உழன்று கொண்டேயிருக்கக் காரணம் மனதில் பரம்பொருள் பற்றிய நம்பிக்கையோ, ஆன்மத் தெளிவோ அற்றிருப்பதுதான். அவனே நாஸ்திகன்.மனதால் பரம்பொருளைப் பற்றி, ஆன்மத் தெளிவாகிய பரஞானம் அடையும் முயற்சியை உடையவன் ஆஸ்திகன். அவனே என்றும் அழியாத சொத்தாகிய நம் சொந்த வீடாகிய வீடு பேற்றை அடைவான் என்பது கருத்து.

No comments:

Post a Comment