நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுள தோ ? - பட்டினத்தார்.
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய்கச்சி ஏகம்பனே !
இதுவும் பட்டினத்தடிகளே. இங்கு சிலருக்கு சந்தேகம் எழுந்துவிடுகிறது. கோவிலாவதேது ? குளங்களாவதேது ? சிலைகளாவதேது ? என்றெல்லாம் சித்தர்கள் சொல்கிறார்களே ? ஆனாலும் பல சித்தர்கள் பக்தியோகம் கடை பிடிக்கச் சொல்கிறார்களே ? பட்டினத்தடிகளே கூட ஒரு நிலையைக் கடந்த பின் அவ்வாறு பாடியிருக்கிறார். அதன் காரணம் பக்தி என்பது ஒரு நிலை. அதாவது யோக சாதகர்களின் முதல் படி. அதில் தேறி அடுத்த நிலைக்கு போகாமல் அங்கேயே உழன்று கொண்டிருப்பவர்களுக்கு சுட்டிக் காட்டவே அப்படி பாடுகிறார்களே அன்றி. பக்தியையும், தொண்டினையும் இழிவு படுத்துவதற்காக அல்ல. பக்தியினால் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அயராத மெய்த் தொண்டினால் எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் பக்குவ நிலையை அடைந்து, பிறகு வைராக்யம், விடா முயற்சியுடன் தியானப் பயிற்சியில் ஈடுபட்டு, ஞானம் அடைவதே சிறப்பு. ஆக எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது பக்தியே. நமக்கு தியானத்தை கூட்டி ஜோதியைக் காட்டுவிப்பதும் இந்த பக்தியே. எனவே தவம், சமாதி போன்ற பேரின்ப நிலைகளைப் பெற்று நிலைத்து நீடித்திருக்க அஸ்திவாரமாக இருப்பத் மெய்பக்தியே ஆகும்.
\பக்தி பல நிலைகளில் கடைபிடிக்கப்படும். பக்தியால்தான் நாம் பேராற்றலாகிய பரமாத்மாவோடு பிணைக்கப்படுகிறோம். சரியையில் அது வைராக்ய பக்தியாகவும், கிரியா நெறியில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு கூடிய பக்தியாகவும், யோக நிலையில் குருபக்தியாகவும், ஞான நெறியில் மெய் பக்தியாகவும் வளர்ந்து, இறுதியில் இறவா நிலையும், இறை நிலையும் அடையவும் பக்தியே காரணமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் இதனை உணர்ந்து மேல்நணிலை அடைய வேண்டும். மற்றவர்களுக்காக செய்து காட்டுவதல்ல பக்தி. நம்காக நம் பிறவி ஈடேற கொள்வதுவே பக்தி. இதனை உலகுக்கு உணர்த்தவே, நால்வர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், ஞானிகளும், சித்தர்களும் அத்தகைய வாழ்வினை வாழ்ந்து காட்டி விட்டு சென்றிருக்கின்றனர். ஞானம் அடைந்துவிட்டால் போதாது. நாம் ஞானம் அடைந்து மெய்யறிவு விளக்கங்கள் அனைத்தும் பெற்றுவிட்டோம் என்கிற கர்வம் சிறிதும் இல்லாமல் களங்கமில்லாத குழந்தை போல் இருப்பதுவே உண்மையான பக்தி.
பக்தியெனும் மேனி நாட்டித் தொந்த பந்தமற்றவரிடம் பார்த்ததை நீட்டி
சத்தியமென்றதை யீட்டி நாளும் தன் வசமாக்கிக்கொள் சமயங்களோட்டி
எவ்வகையாக நன்னீதி அவை எல்லாம் அறிந்தே எடுத்து நீ போதி
ஒவ்வாவென்ற பலசாதி யாவும் ஒன்றென்று அறிந்தே உணர்ந்துற ஓதி ! - கடுவெளி சித்தர்.
இது குறித்து என் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன சொல்கிறார் என்று பா,ர்ப்போமா ?
உயர்வும், சிறப்பும் உடைய இறையாற்றலை உணர்வதும், அதனால் உருவாகும் அறநெறியும் ஞானமாகும். இதை அடைய சிந்திக்கும் ஆற்றலும், முயற்சியும் அவசியமாகிறது. அப்படியானால் சிந்திக்கும் ஆற்றல் பெறாதவர்களுக்கும், குழந்தைப் பருவத்திலுள்ளவர்களுக்கும் வழி என்ன ? அதற்கான வழியே பக்தி நெறியாகும். அனுபவம் பெற்றவர்களின் கண்காணிப்பில் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்கள் காட்டும் வழியில் நடந்து வாழ்விலும், அறிவிலும் உயர வேண்டும். இதுவே பக்தி நெறி. தன்னைத் தானே உணர்ந்து நல்வழி நடந்து இறையாற்றலை உணர்வது ஞானநெறி. பிறர் வழிகாட்ட, அதை நம்பிக்கையோடு ஏற்று அவர்களுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வது பக்திநெறி.
சீரான வாழ்வுக்கு இறை வழிபாடும் அறநெறியும் அவசியம். இறைநிலையை உணர குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு முடியாது. எனினும் அவர்களுக்கு இறையாற்றலை நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். புலன் உணர்வோடுத் திகழும் குழந்தை வயதினருக்கு எப்படி இறைநிலை உணர்வைத்தருவது ?
இதற்காக நம் ஞானிகளான முன்னோர்களால் தரப்பட்டதே சிலை வணக்கமும், பக்திநெறியும்.
உருவத்தாலும், நிறத்தாலும், அழகாலும், குணத்தாலும் உயர்ந்த கற்பனையான 'கடவுள்' என்ற உருவத்தை உருவாக்கி அதை வணங்க வைக்கிறார்கள்.
உளவியல் ரீதியாகப் பார்க்கும் போது எந்தப் பொருளைப் பார்த்தாலும் அல்லது நினைத்தாலும் அதன் தன்மையே மனிதனுக்கு அறிவாட்சித் தரமாக அமைவது ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மை. இப்போது சிலையைப் பார்க்கிற போது அதன் வடிவத்தைப் போல அவன் மனம் உருவெடுக்கிறது. அறிவு அதைப் பதிவு செய்கிறது. அப்படிப் பதிவாகிற போது அந்தச் சிலையினுடைய உயர்ந்த விஷயங்களும் பதிவாகிவிடுவதால் அந்த மனிதனுக்கு மனமகிழ்ச்சி, மனோர்மை, குணநலம் அனைத்தும் கிடைக்கிறது. மனிதன் தன்மனதை விரித்து சிலை மீது வைக்கிறனான். சிலையை ஒரு அச்சாக்கிக் கொண்டு (Mould) தன்னை அதன் வடிவமாக்கிக் கொள்கிறான். அதே குணமாக தன்னை ஆக்கிக் கொள்கிறான். இவ்வளவும் அவனுக்கு அறிவாட்சித் தரமாக அமைகிறது. அதன் விளைவுகள் அனைத்தும் அவனுக்கச் சொந்தம். ஒவ்வொரு சிலையின் வடிவத்திலும் சிற்பக் கலையின் உண்மை அடங்கி இருக்கிறது. ஒரு வீடு கட்ட அகலம், நீளம், உயரம் தீர்மானிக்கிறோம். அது பிரபஞ்ச ஆற்றலின் எல்லைக்குள் கட்டப்படுவதாகும். அதற்கு ஏற்ப அந்த இல்லத்தில் வாழும் நபர்களுக்கு நன்மை, தீமைகள் உண்டாவதை அறிகிறோம். மனிதனுக்கு உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல் வலிவு, நலம், செல்வம் ஆகிய ஏழு சம்பத்துக்களும் வாழ்வின் நிறைவுக்குத் தேவையாக உள்ளன. எந்த சம்பத்தை அடைய வேண்டுமோ அதை அடைவதற்கு மனதை வளப்படுத்தி, அதன் ஆற்றலை முறைப்படுத்தி, இயக்கி வேண்டியதைப் பெறலாம் என்ற வாழ்க்க்கை உண்மையைக் கண்டவர்கள், மனிதனுக்கு வேண்டியவற்றைப் பெற , ஏற்ற பல வடிவங்களாகச் சிலைகளை உருவாக்கினார்கள்.
இதனோடு மனவளம் ஏற்பட ஏற்ற ஒலி அலைகளை இணைத்து 'மந்திர''த்தை உருவாக்கினார்கள். ஒவ்வொரு எழுத்தின் ஒலியும் உயிராற்றலின் அலையில் ஒரு தன்மையை விளைவிக்கக் கூடியது. ஒரு எழுத்தை உச்சரிக்கும் போது எத்தனை நரம்புகளுக்குள் அதன் அலை பரவுகிறது, அதனால் உடலிலும், உள்ளத்திலும், சூழ்நிலையிலும் என்னென்ன நன்மைகள் விளைகின்றன என்று ஞானத்தால் கண்டறிந்த நம் முன்னோர்கள் மந்திர உச்சரிப்புகளை உருவாக்கினார்கள். இத்தகைய முறையில் மனதை வளப்படுத்திக் கொண்டபின் அதன் பயனைப் பெறுவதற்கு நான் இன்ன இன்ன நலன்களைப் பெறுவேன் என்ற சங்கல்பமோ அல்லது இறையாற்றலை நோக்கி நீ எனக்கு இன்ன இன்ன பேறுகளைக் கொடு என்ற வேண்டுகோளோ வைத்து, இதையே தந்திரம் என்று கூறியுள்ளார்கள்.
ஆக சிலை வணக்கத்தில் உருவங்களை யந்திரமாகவும், சொல் ஓசைகளை மந்திரமாகவும், வேண்டல்களை தந்திரமாகவும் இணைத்து வைத்துள்ளார்கள். இந்த முறை சிறு வயதினருக்கும், இறையாற்றலைப் பற்றி சிந்திக்கும் ஆற்றலைப் பெறாதவர்களுக்கும் நன்மை பயக்கும். மேலும் அவர்களை ஞானத்தை நோக்கியப் பயணத்திற்கு உயர்த்தும். இல்வாழ்வில் இல்லாமல் ஞானநெறியில் விளங்க முற்படுபவர்களுக்கு அஷ்டாங்க யோகத்தைப் போல, இல்லறத்தில்ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு பக்திநெறி அவசியம். எனவே பக்திநெறியும், ஞானவழியும் மனித குலத்திற்கு நன்மை விளைவிக்கக் கூடியவையே. பக்தி முதல் படி, ஞான வழிதான் முடிவான வாழ்க்கை நெறி. மனிதப் பிறவியின் பயனும் அதுவே.
அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

No comments:
Post a Comment