ஆன்மா வேறு பேரான்மா வேறு அல்ல. பிறகு எவ்விதம் வேறுபடுகிறது. மனித
உடலில் உயிராக நுழைந்து விட்ட ஆன்மாவிற்கு பேரான்மாவோடு இணையும் இச்சை
இயல்பாகவே வந்து விடுகிறது. பேரான்மாவிற்கு இச்சை கிடையாது. ஆன்மாவிற்கு
முதன் முதலாக பேரான்மாவோடு கலக்கும் இச்சை
ஏற்பட்டு விடுகிறது. மனித உடல் தத்துவங்களின் படி இச்சை எண்ணமாக
மலர்கின்றது. இந்த இச்சை ஏற்படாத ஆன்மா பிறந்தவுடன் ஏதாவது ஒரு துவாரத்தின்
வழியாக பேரான்மாவோடு கலந்திருக்கும். ஆனால் இச்சை உருவானதால் முதல்
எண்ணமாக பரமான்மாவிலிருந்து தனித்து விடப்பட்ட நான் என்ற எண்ணம்
உருவாகிறது. அதுவே மூலமலம் என்று சொல்லப்படுகிறது. இந்த நான் என்ற எண்ணம்
சித்தமாகி, புத்தியாகி மனமாக பரிணமித்து நின்று விடுகிறது. இங்கிருந்துதான்
ஆரம்பிக்கிறது ஆன்மாவின் பயணம். வளர வளர அது இந்த நான் என்ற எண்ணத்தைப்
பற்றிக் கொண்டு பல கோடி நானாக வளர்ந்து பல எண்ணங்களாக பரிணமித்து வினை
புரிந்து விளைவுகள் எனும் சாஹரத்தில் தத்தளிக்கிறது. இதற்கிடையில் என்ன
நடந்து விட்டது என்றால், எந்த ஆன்மாவிலிருந்து இந்த நான் முதலில் வந்ததோ
அதை பலகோடி நான்களாக இருக்கும் மனம் மறந்து விட்டது. இதுதான் ஒவ்வொரு
ஜீவனின் நிலையாகும். எல்லாவற்றிற்கும் வித்தாக, மூலமாக ஆதி நான் உள்ளே
தவித்துக் கொண்டிருக்கிறது.
புறவுலகில் நம் செயல்பாடுகள் அனைத்திற்கும் காரணம் நான் என்கிற எண்ணமேயாகும். அது எல்லாத் திசைகளிலும் கிளம்பி வளர்ந்து தன் கிளைகளால் எல்லாச் சடப் பொருள்களையும் பற்றி வைத்துக் கொள்கிறது. இந்தப் பற்றுதல் என்ற பாசம் பசுவாகிய ஜீவனை பதியாகிய இறைவனை அடைய விடாமல் கட்டிப் போட்டு விடுகிறது. பாசம் என்றால் கயிறு. ஆகப் பேரான்மாவை ஜீவான்மா அடையாமல் மறைத்துத் தடுப்பது பற்றுகள் எனும் இந்த நான்களே. இதையே ஆணவம் என்றும், அஹங்காரமென்றும் கூறுகிறார்கள். இனி என்னதான் செய்வது ? இந்தப் பற்றுகளை அறுத்து, ஒவ்வொரு நானாக அழித்து மனதை ஒருமைப் படுத்தி, வெறுமைப்படுத்தி ஆதி நானில் கொண்டு போய்ச் சேர்த்து நிலைத்திருக்க வேண்டும். அவ்வாறெனில் அது மீண்டும் ஆன்மாவில் கலந்து விடும். அது வரை இரண்டென்ற நிலை நீடித்திருக்கும். அதனால்தான் முக்தியை இரண்டறக் கலந்து விடுதல் என்பார்கள். அதாவது இரண்டு என்ற உணர்வு அறுந்து போய் ஒன்றாக ஆகி விடுதல். இதற்கான முயற்சி கடும் போராட்டமாகும்.
''தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்.''
என்கிறார் திருமூலர். அதாவது நான் இந்த உடல், நான் இந்த மனம் என்று புறத்தே காணும் விஷயங்களை நான் என்று நினைத்துக் கொண்டு, உண்மையில் தான் யார் என்பதை உணராமல் கெடுகின்றான் என்கிறார்.
ஒவ்வொரு உயிரும் நான் என்கிற உணர்வின் மூலம் தன்னைத் தானே விளக்க முயல்கிறது. நான் என்று சொல்லத் தகுந்த பொருள் எது என்று பார்த்தால், எதுவுமே இல்லை. சுழல் காற்று ஒன்று மண்ணுலகில் தோன்றி விண்ணுலகையே எட்டிப்பிடிக்கிறது. பூமியிலுள்ள குப்பை, தூசியை எல்லாம் தன்னிடத்தே எடுத்துக் கொண்டு போகிறது. சுழன்று கொண்டே இடம் மாறி மாறி நெடுந்தூரம் போகிறது. நான் என்ற சொல்லுக்கு இலக்கானவனும் அதுபோலத்தான். ஆணவத்தில் இருந்து விருப்பு, வெறுப்பு என்கின்ற ஒன்றை ஒன்று மோதுகின்ற இரண்டு வேகங்கள் அவனுக்குள் உண்டாகிறது. பஞ்ச பூதங்களிலிருந்து அந்த வேகத்துக்கேற்ப உடல் ஒன்றை அவன் உண்டு பண்ணிக் கொள்கிறான். அந்த உடலையே அவன் நான் என்கிறான். நான் பெரியவன், நான் சிறியவன், நான் மதிப்பு வாய்ந்தவன் இது எல்லாமே உடலையும் அதன் செயலையும் குறிப்பனவே. அலை ஓய்ந்த விடத்து கடல் மிச்சமிருக்கிறது. அதுபோல ஆணவம் ஒழிந்த இடத்து கடவுளைப் பற்றிய பேருணர்வு மிச்சம் இருக்கிறது. ஆனால் நான் என்கிற ஆணவம் உள்ளவிடத்து அந்தப் பேருணர்வு மறைந்து பட்டுப் போகிறது. சுழல்காற்றில் வெட்டவெளி எங்ஙனம் மறைந்து பட்டுப் போவதில்லையோ,அதுபோல ஆணவத்தில் ஆத்ம சொரூபம் அழிந்து பட்டுப் போவதில்லை. அதன் உணர்வு இருந்தும் இல்லாதது போல் ஆகிவிடுகின்றது. மனிதர்கள் எல்லோருமே இத்தகைய அக்ஞான நிலையில் உழன்று வருகின்றார்கள்.
நமது மன உடல் செயல்கள் அனைத்துமே இந்த நான் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான். ஆன்மா தனிமைப்படுத்தப்பட்டு அறியப்படாததாய் ஒதுங்கி நிற்க, உணர்வின் நுண்ணிய தன்மையாகிய நான் அறியாமையாக வெளிப்பட்டுக் கிளம்பி மனமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது. மீண்டும் மனதை ஒடுக்கி அந்த நுண்ணிய நானுக்குள் செலுத்தி நான் என்ற எண்ணத்தைக் களைந்து விட்டால் ஆன்மா துலங்கும். இதை காடு, மேடு, தீர்த்தம் என்று சுற்றியெல்லாம் அடைய முடியாது. அது உனக்குள் தேட வேண்டிய விஷயம். ஓடி, ஓடித் தேடித் தேடி எங்கெல்லாம் அலைந்தாலும் அடைய முடியாது. தானே தனக்குள் தேடி அடைய வேண்டிய விஷயமாகும்.
''என்னகத்துள் என்னைநான் எங்குநாடி ஓடினேன்
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னையன்றி யாதுமொன்றும் இல்லையே. - சிவ வாக்கியர்.
அதற்குப் பிறகு அங்கே நானுமில்லை, நீயுமில்லை.
எந்த யோகத்தைக் கொள்வாராயினும் ''நான்'' அழியாமல் நாயகனை சேராரே

No comments:
Post a Comment