Monday, March 31, 2014

ஒரே எண்ணத்தில் போய் நிலைப்பதுதான் தியானம்

Photo: தியானத்தைப் பற்றிச் சொல்கிற பொழுது சில நுட்பங்களை நாம் உணர்ந்து கொள்வேமேயானால், நம்முடைய நிலைப்பாட்டை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும். தியான வழியில் நம் நிலை என்ன என்பதை அறியாத வரை கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலத்தான் இருக்கும். பொதுவாக நம் மனதில் எண்ணங்கள் உதயமாகிக் கொண்டே இருக்கின்றன. அது எப்படி இருக்கிறது என்றால், கடலில் ஓயாது வந்து கொண்டேயிருக்கும் அலையைப் போல எண்ணங்கள் அலைஅலையாக வந்து கொண்டேயிருக்கின்றன. இன்னும் தெளிவாகச் சொன்னால் கல்லைத் தூக்கி ஒரு தடாகத்தில் போட்டால் கரையை நோக்கி அலைகள் வட்டமாக தொடர்ந்து போய்க் கொண்டேயிருப்பது போல எண்ண அலைகள் இடைவிடாது நம் மனதில் இருந்து கிளம்பி, பரந்து, விரிந்து பிரபஞ்ச வெளியில் கலந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு எண்ண அலைக்கும் அதன் தொடர் அலைக்கும் உள்ள இடைவெளியை நம் மனம் உணர்வதில்லை. ஏனென்றால் அது மிகக் குறைவான காலமாக இருப்பதால் நம்மால் உணர முடிவதில்லை.

பிரத்தியாகாரம் மற்றும் தாரணையின் மூலம் எண்ணங்களைக் குறைத்து, ஒரு புள்ளியில் குவித்து அவற்றிற்கிடையேயான இடைவெளியை அதிகப்படுத்தி உணர்ந்து கொள்கிறோம். அவ்வாறு இடைவெளியை உணர்ந்து கொள்ளும் திறன் நமக்கு வாய்த்து விடுவதால், இடைவெளிக்கான நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் வல்லமையும் நமக்கு வாய்த்து விடுகிறது. இப்படி இடைவெளிக்கான நேரத்தை அதிகப்படுத்தி அதிகப்படுத்தி முற்றிலும் ஒரே எண்ணத்தில் போய் நிலைப்பதுதான் தியானம். இப்படி ஒரே எண்ணத்தை ஏற்படுத்தும் முறையை யோக சாஸ்திரம் பிரத்யயம் என்கிறது. எப்படி பல வார்த்தைகள் சேர்ந்து ஒரு வாக்கியமாக ஆகின்றதோ, அது போல எண்ண அலைகள் அனைத்தும் சேர்ந்து ஒரே எண்ணமாகப் பிரத்யயமாக ஆகின்றது. தியானத்தின் இந்தப் பிரத்யயத்திற்கு மூன்று உட்கூறுகள் உள்ளன. அவை, பொருள், பெயர், அறிவு என்பனவாம். அதாவது, அர்த்தம், சப்தம், ஞானம் என்பார்கள். ஒரு நபரைப் பார்க்கிறோம். முதலில் மனம் அந்த அர்த்தத்தை(பொருளை) ஏற்றுப் பதிவு செய்கிறது. பிறகு நாமோ, அல்லது வேறொருவரோ அது ராம் மனோகர் என்று (சப்தம்) பெயரைச் சொல்லும் பொழுது, எனக்கு அவரைத் தெரியும் என்ற அறிவு(ஞானம்) பிறக்கிறது. அதாவது சப்தம் போய் பொருளைப் பற்றிய அறிவை ஆன்மாவிற்கு உணர்த்துகிறது. வார்த்தைகளின்றி சிந்திக்கவே முடியாது என்பதால்தான் சப்தம் ப்ரம்மம் என்பார்கள்.

பொருள், சப்தம் அல்லது வார்த்தை, அறிவு இந்த மூன்றுமே மூன்று வேறு வேறு , காரணங்களால் எழும் எண்ண அலைகளால் உருவாகி இணைந்து ஒரு பிரத்யயமாக உருவெடுக்கிறது. சாதாரணமாக வெளியில் நம் சிந்தனையில் இந்த மூன்றும் சேர்ந்து ஒரு பிரத்யயமாகி விடுகின்றது. இது போலப் பல பிரத்யயங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. தியானம் என்கிற பொழுது அங்கு ஒரே ஒரு பிரத்யயம் மட்டுமே இருக்கும். இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது தியானம். இதற்காகவே ஆரம்பத்தில் ஒரு மந்திரத்தையும், இஷ்ட தெய்வத்தின் உருவத்தையும் தியானிக்கச் சொல்கிறார்கள். மனதில் ஒரே பிரத்யயத்தை நிலை பெறச் செய்ய ஒரே வார்த்தையைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் வேறு ஒரு எண்ணம் பிறந்து விடும். மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுது இஷ்ட தெய்வத்தின் வடிவம் மட்டுமே அறிவில் தோன்றும். ஆரம்பத்தில் இதைத் தெளிவாக உணர முடியும். மந்திரத்தை நிறுத்தினால் இஷ்ட தெய்வத்தின் உருவமும் மறைந்து விடுவதோடு வேறு எண்ணங்கள் தோன்றுவதை உணரலாம். ஆனால், தியானத்தில் முன்னேற்றம் அடைந்தவர்களுக்கு மந்திர ஜபத்தை நிறுத்தினாலும் வடிவம் சிறிது நேரம் மனத்திரையில் நிலைத்திருக்கும். மந்திரமானது எங்கும் போய் விடவில்லை அந்த உருவத்திலேயே கலந்து விடுகிறது. மந்திரம் எழுப்பிய எண்ண அலை இஷ்ட தெய்வம் எனும் பிரத்யயத்தில் கலந்து விடுகிறது. எனவே ஒரே ஒரு பிரத்யயம் மட்டும் நிலைத்து நின்று விடுகிறது. இதுவே தியானம்.

இந்த நிலை இன்னும் நீடிக்கும் பொழுது சமாதியாகிறது. தியானத்தில் சிறிதளவேனும் சுய முயற்சி தேவைப்பட்டது. சமாதியில் சுய முயற்சி எதுவுமின்றி தியானிக்கப்படும் பொருள் ஒளிரும். இதையே சப்ரஜ்ஞாத சமாதி என்பார்கள். இன்னும் உயரும் பொழுது, இஷ்ட தெய்வமும் மறைந்து, மனம் தான் இருப்பதையே மறைந்த நிலையில் மூடப்பட்டு விடுகிறது. அப்பொழுது ஆன்மா மட்டுமே தன்னிலையில் தானாக இருக்கிறது. இதை அசம்ப்ரஜ்ஞாத சமாதி என்பார்கள். நமது தனி மனம் என்பது பிரபஞ்ச மனதின் பகுதியே ஆதலால் அதில் மாற்றமற்ற இயக்கமற்ற நிலை என்பது இல்லவே இல்லை. ஆனால் அது என்றும் மாறாத ஆன்மாவைச் சார்ந்திருப்பதால் கட்டுப்பட்டு நிற்கிறது
தியானத்தைப் பற்றிச் சொல்கிற பொழுது சில நுட்பங்களை நாம் உணர்ந்து கொள்வேமேயானால், நம்முடைய நிலைப்பாட்டை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும். தியான வழியில் நம் நிலை என்ன என்பதை அறியாத வரை கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலத்தான் இருக்கும். பொதுவாக நம் மனதில் எண்ணங்கள் உதயமாகிக் கொண்டே இருக்கின்றன. அது எப்படி இருக்கிறது என்றால், கடலில் ஓயாது வந்து கொண்டேயிருக்கும் அலையைப் போல எண்ணங்கள் அலைஅலையாக வந்து கொண்டேயிருக்கின்றன. இன்னும் தெளிவாகச் சொன்னால் கல்லைத் தூக்கி ஒரு தடாகத்தில் போட்டால் கரையை நோக்கி அலைகள் வட்டமாக தொடர்ந்து போய்க் கொண்டேயிருப்பது போல எண்ண அலைகள் இடைவிடாது நம் மனதில் இருந்து கிளம்பி, பரந்து, விரிந்து பிரபஞ்ச வெளியில் கலந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு எண்ண அலைக்கும் அதன் தொடர் அலைக்கும் உள்ள இடைவெளியை நம் மனம் உணர்வதில்லை. ஏனென்றால் அது மிகக் குறைவான காலமாக இருப்பதால் நம்மால் உணர முடிவதில்லை.

பிரத்தியாகாரம் மற்றும் தாரணையின் மூலம் எண்ணங்களைக் குறைத்து, ஒரு புள்ளியில் குவித்து அவற்றிற்கிடையேயான இடைவெளியை அதிகப்படுத்தி உணர்ந்து கொள்கிறோம். அவ்வாறு இடைவெளியை உணர்ந்து கொள்ளும் திறன் நமக்கு வாய்த்து விடுவதால், இடைவெளிக்கான நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் வல்லமையும் நமக்கு வாய்த்து விடுகிறது. இப்படி இடைவெளிக்கான நேரத்தை அதிகப்படுத்தி அதிகப்படுத்தி முற்றிலும் ஒரே எண்ணத்தில் போய் நிலைப்பதுதான் தியானம். இப்படி ஒரே எண்ணத்தை ஏற்படுத்தும் முறையை யோக சாஸ்திரம் பிரத்யயம் என்கிறது. எப்படி பல வார்த்தைகள் சேர்ந்து ஒரு வாக்கியமாக ஆகின்றதோ, அது போல எண்ண அலைகள் அனைத்தும் சேர்ந்து ஒரே எண்ணமாகப் பிரத்யயமாக ஆகின்றது. தியானத்தின் இந்தப் பிரத்யயத்திற்கு மூன்று உட்கூறுகள் உள்ளன. அவை, பொருள், பெயர், அறிவு என்பனவாம். அதாவது, அர்த்தம், சப்தம், ஞானம் என்பார்கள். ஒரு நபரைப் பார்க்கிறோம். முதலில் மனம் அந்த அர்த்தத்தை(பொருளை) ஏற்றுப் பதிவு செய்கிறது. பிறகு நாமோ, அல்லது வேறொருவரோ அது ராம் மனோகர் என்று (சப்தம்) பெயரைச் சொல்லும் பொழுது, எனக்கு அவரைத் தெரியும் என்ற அறிவு(ஞானம்) பிறக்கிறது. அதாவது சப்தம் போய் பொருளைப் பற்றிய அறிவை ஆன்மாவிற்கு உணர்த்துகிறது. வார்த்தைகளின்றி சிந்திக்கவே முடியாது என்பதால்தான் சப்தம் ப்ரம்மம் என்பார்கள்.

பொருள், சப்தம் அல்லது வார்த்தை, அறிவு இந்த மூன்றுமே மூன்று வேறு வேறு , காரணங்களால் எழும் எண்ண அலைகளால் உருவாகி இணைந்து ஒரு பிரத்யயமாக உருவெடுக்கிறது. சாதாரணமாக வெளியில் நம் சிந்தனையில் இந்த மூன்றும் சேர்ந்து ஒரு பிரத்யயமாகி விடுகின்றது. இது போலப் பல பிரத்யயங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. தியானம் என்கிற பொழுது அங்கு ஒரே ஒரு பிரத்யயம் மட்டுமே இருக்கும். இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது தியானம். இதற்காகவே ஆரம்பத்தில் ஒரு மந்திரத்தையும், இஷ்ட தெய்வத்தின் உருவத்தையும் தியானிக்கச் சொல்கிறார்கள். மனதில் ஒரே பிரத்யயத்தை நிலை பெறச் செய்ய ஒரே வார்த்தையைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் வேறு ஒரு எண்ணம் பிறந்து விடும். மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுது இஷ்ட தெய்வத்தின் வடிவம் மட்டுமே அறிவில் தோன்றும். ஆரம்பத்தில் இதைத் தெளிவாக உணர முடியும். மந்திரத்தை நிறுத்தினால் இஷ்ட தெய்வத்தின் உருவமும் மறைந்து விடுவதோடு வேறு எண்ணங்கள் தோன்றுவதை உணரலாம். ஆனால், தியானத்தில் முன்னேற்றம் அடைந்தவர்களுக்கு மந்திர ஜபத்தை நிறுத்தினாலும் வடிவம் சிறிது நேரம் மனத்திரையில் நிலைத்திருக்கும். மந்திரமானது எங்கும் போய் விடவில்லை அந்த உருவத்திலேயே கலந்து விடுகிறது. மந்திரம் எழுப்பிய எண்ண அலை இஷ்ட தெய்வம் எனும் பிரத்யயத்தில் கலந்து விடுகிறது. எனவே ஒரே ஒரு பிரத்யயம் மட்டும் நிலைத்து நின்று விடுகிறது. இதுவே தியானம்.

இந்த நிலை இன்னும் நீடிக்கும் பொழுது சமாதியாகிறது. தியானத்தில் சிறிதளவேனும் சுய முயற்சி தேவைப்பட்டது. சமாதியில் சுய முயற்சி எதுவுமின்றி தியானிக்கப்படும் பொருள் ஒளிரும். இதையே சப்ரஜ்ஞாத சமாதி என்பார்கள். இன்னும் உயரும் பொழுது, இஷ்ட தெய்வமும் மறைந்து, மனம் தான் இருப்பதையே மறைந்த நிலையில் மூடப்பட்டு விடுகிறது. அப்பொழுது ஆன்மா மட்டுமே தன்னிலையில் தானாக இருக்கிறது. இதை அசம்ப்ரஜ்ஞாத சமாதி என்பார்கள். நமது தனி மனம் என்பது பிரபஞ்ச மனதின் பகுதியே ஆதலால் அதில் மாற்றமற்ற இயக்கமற்ற நிலை என்பது இல்லவே இல்லை. ஆனால் அது என்றும் மாறாத ஆன்மாவைச் சார்ந்திருப்பதால் கட்டுப்பட்டு நிற்கிறது

No comments:

Post a Comment