Friday, March 28, 2014

பக்தி, தியானம் , யோகா

Photo: உலகம் தோன்றிய காலத்திலிருந்து கோடானு கோடி பேர் சொன்ன விஷயங்களையே மீண்டும் மீண்டும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். புதிதாக எதுவுமில்லை. ஏனென்றால் யுகங்களைக் கடந்த பூமியில் நாம் கலியுகத்தில் வந்து பிறந்திருக்கிறோம். நம முன்னோர்கள் எல்லோரும் எல்லாவற்றையும் அணு அணுவாக அக்கு வேறாக ஆணி வேறாக அலசி ஆராய்ந்து விளக்கித் தள்ளி விட்டார்கள். அவற்றில் காலத்தால் ஸ்வாஹா செய்யப்பட்டது போக நமக்குக் கிடைத்த விஷயங்களைப் பற்றி நாம் ஒருவர் மாற்றி ஒருவர் அவரவர் கோணங்களில் பேசிக் கொண்டிருக் கிறோம். நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயமாக இருந்தால் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. தெரியாத விஷயமென்றால் அதை அதிசயம், அமானுஷயம், விசித்திரம் என்றெல்லாம் சொல்லி விவாதிக்கிறோம். நம் கண்ணுக்கு புலப்படாத பிரபஞ்ச இயக்கங்கள் நமக்கு விசித்திரமாகப்படுகிறது. அவ்வாறு நம்மால் காணமுடியாத, விஞ்ஞானத்தால் இன்னும் தொடமுடியாத விஷயங்கள் அதாவது இயக்கங்கள், சக்திகள் ஏராளம் இருக்கின்றன. அதையே சூட்சும உலகம் என்கிறோம். இதில் நம் உடல் பற்றி இன்று பார்க்கப் போகிறோம். நமக்குத் தெரிந்து இந்த உடல் என்பது நாம் காணுகிற இந்த நம் சரீரம். ஆனால் நம் முன்னோர்களான ரிஷிகளும், சித்தர்களும் நமக்கு இந்த உடல் அல்லாது இன்னும் வேறு சக்தி உடல்கள் இருக்கின்றன என்கிறார்கள். ஆனால் விஞ்ஞானத்தால் அதை இதுவரை ஒப்புக்கொள்ள முடியவில்லை. நிரூபனம் ஆகாதவரை விஞ்ஞானம் எதையும் ஏற்றுக் கொள்ளாது. நாமும் அப்படித்தான் ஏனென்றால் நாம் விஞ்ஞான யுகத்தின் பிள்ளைகள். என்றாலும் படிப்பதற்கும் கேட்பதற்கும் சுவாரஸ்யமாக இருப்பதால் இதையெல்லாம் ஆர்வமாகக் கேட்டுக் கொள்கிறோம். நம் முன்னோர்கள் நம் சக்தி உடல்களைக் கோசங்கள் என்று குறிப்பிடுகின்றனர். அவை, 1. அன்னமய கோசம், 
2. வாயுமய கோசம், 3. மனோமய கோசம், 4. விஞ்ஞான மய கோசம், 5. ஆனந்தமய கோசம் என்பவைகளாம். நம் ஸ்தூல சரீரத்திற்குள் இயக்கும் சக்தியாக இருப்பது அன்னமய கோசம். நாம் உண்ணும் உணவில்(அன்னம்)  உருவாகும் சக்தியே இந்த அன்னமய கோசத்தின் இயக்கங்களுக்கு உதவியாக இருக்கிறது. எனவே சரிவிகித உணவுப் பழக்கம், யோகா, உடல் பயிற்சி போன்னவற்றால் இந்த கோசத்தை வலுவாக வைத்துக் கொள்ளலாம். 
அன்னமய கோசத்தோடு சேர்ந்து நம் உடலை இயக்கும் மற்றொரு கோசம் வாயுமய கோசம். நாம் சுவாசிக்கும் காற்றில் இருந்தும், உணவின் மூலமாகவும் நமக்குக் கிடைக்கும் பிராண வாயுவின் சக்தியே இந்த வாயுமய கோசம். நமது சீரான சுவாசம் மற்றும் ஆக்சிஜன் தனிமம் உள்ள பொருள்களை சேர்த்துக் கொள்வதால் இந்த கோசத்தை வலுவாக வைத்துக் கொள்ள முடியும். பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி போன்ற வற்றால் இந்ந கோசத்தை நல்ல வலிமையாக இயங்க வைத்துக் கொள்ளலாம்.
மனோமய கோசம் என்பது நம் எண்ணங்களே. எண்ணங்களின் தூய்மையால் மட்டுமே இது முறையாக இயங்கும். இதையோ மனம் போல் வாழ்வு என்பார்கள். இதன் இயக்கம் சீராக இல்லையென்றால் மன நோய்களுக்கும், மன அழுத்தத்திற்கும் ஏதுவாகும். இதை சீராக வைப்பதற்கு நம் முன்னோர்கள் பக்தி மார்க்கத்தைப் போதித்தார்கள். புராணங்கள், இதிகாசங்கள், நீதிக் கதைகள் எல்லாம் இதனை வலிமைப்படுத்தும்.
விஞ்ஞானமய கோசம் என்பது உணர்வுகளால் ஆனது. இரக்கம், கருணை, பாசம், அன்பு, சந்தோஷம் போன்ற நல்ல உணர்வுகள் இதற்கு வலு சேர்க்கும். கோபம், பயம், துக்கம் போன்ற உணர்வுகள் இதனை வலுவிழக்கச் செய்யும். இதனால் பல நோய்கள் உருவாகும். நவீன விஞ்ஞான ஆய்வுகள் இதை உறுதி செய்கின்றன. இது போன்ற தீய உணர்வுகளால் புற்று நோய் ஏற்படும் என்று நவீன விஞ்ஞானம் கூறுகிறது. அதைப்போல டென்சனால் இரத்தக் கொதிப்பு ஏற்படுகின்றது என்பது நமக்குத் தெரிந்த விஷயம். பக்தியும், தியானமும் மட்டுமே இதற்கு வலிமை சேர்க்கும்.
மற்ற நான்கு கோசங்களும் வலிமை அடைந்தால் மட்டுமே ஆனந்த மய கோசம் சிறப்பாக இயங்கும். இதையே முக்தி நிலை, ஆனந்தப் பரவச நிலை என்பர். ஆனந்த மய கோசத்தின் வலிமை அடைந்தநிலையே பிறவியின் நோக்கம். அதாவது, உணவுக்கட்டுபாபாடு மூலம் அன்னமய கோசத்தை வலிமைப்படுத்தி, பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி மூலம் வாயுமயக் கோசத்தை வலிமையாக்கி, தூய்மைப் படுத்தி, பக்தி வாயிலாக மனோமய கோசத்தை வலிமைப்படுத்தி, பக்தி, தியானம் , யோகா மூலம் விஞ்ஞான மயக் கோசத்தை தூய்மைப்படுத்தி வலுவாக இயங்கச் செய்வதன் மூலம் ஆனந்த மய கோசத்தின் வலிமையான நிலையான முக்திநிலை வாய்க்கும். மேற்க்கத்திய நாடுகளிலும் பண்டைய காலங்களில் இதைக்குறித்த நம்பிக்கை இருந்தது. அவர்கள் ஏழு கோசங்களாகச் சொல்லியிருக்கிறார்கள். ஒன்பது சக்கரங்கள் இருப்பதாகவும் சொல்லப் பட்டுள்ளது. வனாந்திரங்களில் வாழ்ந்த சித்தர்கள் மூலிகைகளில் உள்ள தனிமங்களின் சக்தி கொண்டு இந்த கோசங்களை வலிமைப் படுத்திக் கொண்டனர்.
உலகம் தோன்றிய காலத்திலிருந்து கோடானு கோடி பேர் சொன்ன விஷயங்களையே மீண்டும் மீண்டும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். புதிதாக எதுவுமில்லை. ஏனென்றால் யுகங்களைக் கடந்த பூமியில் நாம் கலியுகத்தில் வந்து பிறந்திருக்கிறோம். நம முன்னோர்கள் எல்லோரும் எல்லாவற்றையும் அணு அணுவாக அக்கு வேறாக ஆணி வேறாக அலசி ஆராய்ந்து விளக்கித் தள்ளி விட்டார்கள். அவற்றில் காலத்தால் ஸ்வாஹா செய்யப்பட்டது போக நமக்குக் கிடைத்த விஷயங்களைப் பற்றி நாம் ஒருவர் மாற்றி ஒருவர் அவரவர் கோணங்களில் பேசிக் கொண்டிருக் கிறோம். நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயமாக இருந்தால் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. தெரியாத விஷயமென்றால் அதை அதிசயம், அமானுஷயம், விசித்திரம் என்றெல்லாம் சொல்லி விவாதிக்கிறோம். நம் கண்ணுக்கு புலப்படாத பிரபஞ்ச இயக்கங்கள் நமக்கு விசித்திரமாகப்படுகிறது. அவ்வாறு நம்மால் காணமுடியாத, விஞ்ஞானத்தால் இன்னும் தொடமுடியாத விஷயங்கள் அதாவது இயக்கங்கள், சக்திகள் ஏராளம் இருக்கின்றன. அதையே சூட்சும உலகம் என்கிறோம். இதில் நம் உடல் பற்றி இன்று பார்க்கப் போகிறோம். நமக்குத் தெரிந்து இந்த உடல் என்பது நாம் காணுகிற இந்த நம் சரீரம். ஆனால் நம் முன்னோர்களான ரிஷிகளும், சித்தர்களும் நமக்கு இந்த உடல் அல்லாது இன்னும் வேறு சக்தி உடல்கள் இருக்கின்றன என்கிறார்கள். ஆனால் விஞ்ஞானத்தால் அதை இதுவரை ஒப்புக்கொள்ள முடியவில்லை. நிரூபனம் ஆகாதவரை விஞ்ஞானம் எதையும் ஏற்றுக் கொள்ளாது. நாமும் அப்படித்தான் ஏனென்றால் நாம் விஞ்ஞான யுகத்தின் பிள்ளைகள். என்றாலும் படிப்பதற்கும் கேட்பதற்கும் சுவாரஸ்யமாக இருப்பதால் இதையெல்லாம் ஆர்வமாகக் கேட்டுக் கொள்கிறோம். நம் முன்னோர்கள் நம் சக்தி உடல்களைக் கோசங்கள் என்று குறிப்பிடுகின்றனர். அவை, 1. அன்னமய கோசம்,
2. வாயுமய கோசம், 3. மனோமய கோசம், 4. விஞ்ஞான மய கோசம், 5. ஆனந்தமய கோசம் என்பவைகளாம். நம் ஸ்தூல சரீரத்திற்குள் இயக்கும் சக்தியாக இருப்பது அன்னமய கோசம். நாம் உண்ணும் உணவில்(அன்னம்) உருவாகும் சக்தியே இந்த அன்னமய கோசத்தின் இயக்கங்களுக்கு உதவியாக இருக்கிறது. எனவே சரிவிகித உணவுப் பழக்கம், யோகா, உடல் பயிற்சி போன்னவற்றால் இந்த கோசத்தை வலுவாக வைத்துக் கொள்ளலாம்.
அன்னமய கோசத்தோடு சேர்ந்து நம் உடலை இயக்கும் மற்றொரு கோசம் வாயுமய கோசம். நாம் சுவாசிக்கும் காற்றில் இருந்தும், உணவின் மூலமாகவும் நமக்குக் கிடைக்கும் பிராண வாயுவின் சக்தியே இந்த வாயுமய கோசம். நமது சீரான சுவாசம் மற்றும் ஆக்சிஜன் தனிமம் உள்ள பொருள்களை சேர்த்துக் கொள்வதால் இந்த கோசத்தை வலுவாக வைத்துக் கொள்ள முடியும். பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி போன்ற வற்றால் இந்ந கோசத்தை நல்ல வலிமையாக இயங்க வைத்துக் கொள்ளலாம்.
மனோமய கோசம் என்பது நம் எண்ணங்களே. எண்ணங்களின் தூய்மையால் மட்டுமே இது முறையாக இயங்கும். இதையோ மனம் போல் வாழ்வு என்பார்கள். இதன் இயக்கம் சீராக இல்லையென்றால் மன நோய்களுக்கும், மன அழுத்தத்திற்கும் ஏதுவாகும். இதை சீராக வைப்பதற்கு நம் முன்னோர்கள் பக்தி மார்க்கத்தைப் போதித்தார்கள். புராணங்கள், இதிகாசங்கள், நீதிக் கதைகள் எல்லாம் இதனை வலிமைப்படுத்தும்.
விஞ்ஞானமய கோசம் என்பது உணர்வுகளால் ஆனது. இரக்கம், கருணை, பாசம், அன்பு, சந்தோஷம் போன்ற நல்ல உணர்வுகள் இதற்கு வலு சேர்க்கும். கோபம், பயம், துக்கம் போன்ற உணர்வுகள் இதனை வலுவிழக்கச் செய்யும். இதனால் பல நோய்கள் உருவாகும். நவீன விஞ்ஞான ஆய்வுகள் இதை உறுதி செய்கின்றன. இது போன்ற தீய உணர்வுகளால் புற்று நோய் ஏற்படும் என்று நவீன விஞ்ஞானம் கூறுகிறது. அதைப்போல டென்சனால் இரத்தக் கொதிப்பு ஏற்படுகின்றது என்பது நமக்குத் தெரிந்த விஷயம். பக்தியும், தியானமும் மட்டுமே இதற்கு வலிமை சேர்க்கும்.
மற்ற நான்கு கோசங்களும் வலிமை அடைந்தால் மட்டுமே ஆனந்த மய கோசம் சிறப்பாக இயங்கும். இதையே முக்தி நிலை, ஆனந்தப் பரவச நிலை என்பர். ஆனந்த மய கோசத்தின் வலிமை அடைந்தநிலையே பிறவியின் நோக்கம். அதாவது, உணவுக்கட்டுபாபாடு மூலம் அன்னமய கோசத்தை வலிமைப்படுத்தி, பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி மூலம் வாயுமயக் கோசத்தை வலிமையாக்கி, தூய்மைப் படுத்தி, பக்தி வாயிலாக மனோமய கோசத்தை வலிமைப்படுத்தி, பக்தி, தியானம் , யோகா மூலம் விஞ்ஞான மயக் கோசத்தை தூய்மைப்படுத்தி வலுவாக இயங்கச் செய்வதன் மூலம் ஆனந்த மய கோசத்தின் வலிமையான நிலையான முக்திநிலை வாய்க்கும். மேற்க்கத்திய நாடுகளிலும் பண்டைய காலங்களில் இதைக்குறித்த நம்பிக்கை இருந்தது. அவர்கள் ஏழு கோசங்களாகச் சொல்லியிருக்கிறார்கள். ஒன்பது சக்கரங்கள் இருப்பதாகவும் சொல்லப் பட்டுள்ளது. வனாந்திரங்களில் வாழ்ந்த சித்தர்கள் மூலிகைகளில் உள்ள தனிமங்களின் சக்தி கொண்டு இந்த கோசங்களை வலிமைப் படுத்திக் கொண்டனர்.

No comments:

Post a Comment