Friday, March 28, 2014

நான், நீ, அது, இது

Photo: வழிபடுதல் என்றால் என்ன ? வழி என்றால் பாதை. பாதையில் நடத்தல். ஒரே பாதையில் மனதை நடத்துத்தல். அவ்வாறு  மனதை ஒரே பாதையில் செல்லுத்திப் பயணப்படுபவர்களுக்கு மனம் விசாலமடைகிறது. எல்லாம் இறை சொரூபமே. நான், நீ, அது, இது எல்லாம் ஒன்றே என்கிற பக்குவம் வந்துவிடுகிறது. அந்த ஒன்றான பிரம்மத்தில் மனம் லயித்துவிட்டால், அது தன்னை இழந்துவிடும். மனம் என்கிற ஒன்று இல்லாமல் போகவே புலன்கள் அடங்கிவிடும். புலன்கள் அடங்கிவிட்டால், உடல் பிரக்ஞையே இருக்காது. நான் என்று தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் எண்ணம் உள்ளவனுக்குத்தான் வலி, வேதனை எல்லாம். மனம் அழிந்து தேகம் என்ற பாவமே அற்றவனுக்கு ஒரு வலியும் இல்லை. அவனுக்கு இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை. தன்னை உடலாக பாவித்த எண்ணம் அங்கே அழிந்து போய்விட்டது. அந்த நிலைதான் கண்ணப்ப நாயனாருக்கும். எனவே தான் தன் கண்ணைப் பிடுங்கி வைக்க முடிந்தது. குடந்தையில் பள்ளியில் தீ எரிகிற போது ஒரு கூலித் தொழிலாளியாகிய வாலிபன், தீயில் பாய்கிறான். தன்னால் எத்தனை குழந்தைகளைக் காப்பாற்ற முடியுமோ அத்தனைக் குழந்தைகளைக் காப்பாற்றி விட்டு, தீயில் கருகி இறந்து விட்டான். இறந்த நிலையில் கூட ஒரு குழந்தையை அனைத்தபடி கருகிக் கிடந்தான். கடைசி வரை முயற்சி செய்திருக்கிறான். அந்த முயற்சியின் போது ஒரு நொடி கூட அவன் தன்னைப்பற்றி சிந்திக்கவே இல்லை. அப்படி சிந்தித்திருந்தால் அவன் ஒரு குழந்தையைக் கூட காப்பாற்றியிருக்க முடியாது. லேசாக சுடும் போதே ஓடி வந்திருப்பான். அங்கே அவன் மனம் ஒரே விஷயத்தைப் பற்றிக் கொண்டது. தன் உடலில் தீ பற்றிக் கொள்வது அவனுக்குத் தெரியவே இல்லை. கர்ம வீரனாக இறந்தான். நான், எனது, நான் தான் இந்த தேகம்  என்ற எண்ணம் இருந்திருந்தால் ஒரு கண்ணை பிடுங்கி வைத்த்தும் இரத்தம் நிற்கவில்லை என்ற போது அடுத்த கண்ணையும் பிடுங்கி வைக்க முயற்சிக்க முடியாது. முதல் கண்ணைப் பிடுங்கிய இடத்தில் வலி ஏற்பட்டிருக்கும். ஆனால் அவருக்கு வலிக்கவே இல்லை. 

இதே போல மகாவிஷணுவும் தன் கண்ணை பிடுங்கி வைத்துள்ளார். அதைப்  பற்றி பார்ப்போமா ? திருமாலானவர் சுதர்ஸனத்தைப் பெறுவதற்காக இறைவனை வணங்கி ஆயிரம் மலர்கள் கொண்டு அர்ச்ச்சிக்கும் போது ஒரு மலர் குறையவே, தன் கண் மலரையே எடுத்து இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தி இறைவனின் அருளைப் பெற்றதாகப் புராணம். எனவே இறைவன் மனம் உருகி சக்கரப்படையான சுதர்ஸனத்தையும், கௌஸ்துபமணியையும், பீதாம்பரத்தையும் மகாவிஷ்ணுவுக்கு வழங்கினார். இந்த நிலை சிவபெருமானின் சக்ரதானர் என்ற ரூபத்தில் தத்துவமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதன் தத்துவம் என்னவென்றால், உடலின் கண் உள்ள புலன்களாகிய கண், காது, மூக்கு, செவி, வாய் என்கிற ஐந்து புலன்களை செயல்படாமல் செய்து சகஸ்ரதளமாகிய இறைவனின் பதத்தை அடைந்து அருளைப் பெறலாம் என்பதே ஆகும். புலன்களை கட்டுப்படுத்தாவிடில் சக்கரப்படையாகிய ஆயிரம் வட்டாக்களை உடைய சுதர்ஸனமாம் சகஸ்ரதளத்தை அடைவது கடினம். இதை உணர்த்துவதே விஷ்ணு அனுக்கிரஹ மூர்த்தியாம் சக்ரதானர் என்ற சிவபெருமானின் ரூபத்தின் தத்துவம். இது யோகநிலையை உணர்த்தும் தத்துவமாகும்.
வழிபடுதல் என்றால் என்ன ? வழி என்றால் பாதை. பாதையில் நடத்தல். ஒரே பாதையில் மனதை நடத்துத்தல். அவ்வாறு மனதை ஒரே பாதையில் செல்லுத்திப் பயணப்படுபவர்களுக்கு மனம் விசாலமடைகிறது. எல்லாம் இறை சொரூபமே. நான், நீ, அது, இது எல்லாம் ஒன்றே என்கிற பக்குவம் வந்துவிடுகிறது. அந்த ஒன்றான பிரம்மத்தில் மனம் லயித்துவிட்டால், அது தன்னை இழந்துவிடும். மனம் என்கிற ஒன்று இல்லாமல் போகவே புலன்கள் அடங்கிவிடும். புலன்கள் அடங்கிவிட்டால், உடல் பிரக்ஞையே இருக்காது. நான் என்று தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் எண்ணம் உள்ளவனுக்குத்தான் வலி, வேதனை எல்லாம். மனம் அழிந்து தேகம் என்ற பாவமே அற்றவனுக்கு ஒரு வலியும் இல்லை. அவனுக்கு இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை. தன்னை உடலாக பாவித்த எண்ணம் அங்கே அழிந்து போய்விட்டது. அந்த நிலைதான் கண்ணப்ப நாயனாருக்கும். எனவே தான் தன் கண்ணைப் பிடுங்கி வைக்க முடிந்தது. குடந்தையில் பள்ளியில் தீ எரிகிற போது ஒரு கூலித் தொழிலாளியாகிய வாலிபன், தீயில் பாய்கிறான். தன்னால் எத்தனை குழந்தைகளைக் காப்பாற்ற முடியுமோ அத்தனைக் குழந்தைகளைக் காப்பாற்றி விட்டு, தீயில் கருகி இறந்து விட்டான். இறந்த நிலையில் கூட ஒரு குழந்தையை அனைத்தபடி கருகிக் கிடந்தான். கடைசி வரை முயற்சி செய்திருக்கிறான். அந்த முயற்சியின் போது ஒரு நொடி கூட அவன் தன்னைப்பற்றி சிந்திக்கவே இல்லை. அப்படி சிந்தித்திருந்தால் அவன் ஒரு குழந்தையைக் கூட காப்பாற்றியிருக்க முடியாது. லேசாக சுடும் போதே ஓடி வந்திருப்பான். அங்கே அவன் மனம் ஒரே விஷயத்தைப் பற்றிக் கொண்டது. தன் உடலில் தீ பற்றிக் கொள்வது அவனுக்குத் தெரியவே இல்லை. கர்ம வீரனாக இறந்தான். நான், எனது, நான் தான் இந்த தேகம் என்ற எண்ணம் இருந்திருந்தால் ஒரு கண்ணை பிடுங்கி வைத்த்தும் இரத்தம் நிற்கவில்லை என்ற போது அடுத்த கண்ணையும் பிடுங்கி வைக்க முயற்சிக்க முடியாது. முதல் கண்ணைப் பிடுங்கிய இடத்தில் வலி ஏற்பட்டிருக்கும். ஆனால் அவருக்கு வலிக்கவே இல்லை.

இதே போல மகாவிஷணுவும் தன் கண்ணை பிடுங்கி வைத்துள்ளார். அதைப் பற்றி பார்ப்போமா ? திருமாலானவர் சுதர்ஸனத்தைப் பெறுவதற்காக இறைவனை வணங்கி ஆயிரம் மலர்கள் கொண்டு அர்ச்ச்சிக்கும் போது ஒரு மலர் குறையவே, தன் கண் மலரையே எடுத்து இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தி இறைவனின் அருளைப் பெற்றதாகப் புராணம். எனவே இறைவன் மனம் உருகி சக்கரப்படையான சுதர்ஸனத்தையும், கௌஸ்துபமணியையும், பீதாம்பரத்தையும் மகாவிஷ்ணுவுக்கு வழங்கினார். இந்த நிலை சிவபெருமானின் சக்ரதானர் என்ற ரூபத்தில் தத்துவமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதன் தத்துவம் என்னவென்றால், உடலின் கண் உள்ள புலன்களாகிய கண், காது, மூக்கு, செவி, வாய் என்கிற ஐந்து புலன்களை செயல்படாமல் செய்து சகஸ்ரதளமாகிய இறைவனின் பதத்தை அடைந்து அருளைப் பெறலாம் என்பதே ஆகும். புலன்களை கட்டுப்படுத்தாவிடில் சக்கரப்படையாகிய ஆயிரம் வட்டாக்களை உடைய சுதர்ஸனமாம் சகஸ்ரதளத்தை அடைவது கடினம். இதை உணர்த்துவதே விஷ்ணு அனுக்கிரஹ மூர்த்தியாம் சக்ரதானர் என்ற சிவபெருமானின் ரூபத்தின் தத்துவம். இது யோகநிலையை உணர்த்தும் தத்துவமாகும்.

No comments:

Post a Comment