Friday, March 28, 2014

எனக்கு நானே கேட்டுக் கொண்ட கேள்வி இதுதான்!

Photo: சிலர் என்னோடு முரண்பட்டு என்னை வாக்கு வாதத்திற்கு இழுக்க நினைக்கிறார்கள். அதற்கான நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால் நீங்கள் தவறான கருத்துக்களைச் சொல்லி, பிறரை தவறான வழியில் நடத்திச் செல்கிறீர்கள் என்பதுதான். எனக்கு இந்தக் குற்றச்சாட்டை கண்ணுற்றதும் சிரிப்புதான் வருகிறது. கோபம் வரவில்லை. இன்றைக்கு நேற்றைக்கல்ல பல்லாயிரம் ஆண்டுகளாக எத்தனையோ மகான்களும், ஞானிகளும், சித்தர்களும், ரிஷிகளும் சொல்லியே கேட்காதவர்கள், அவ்வளவு ஏன் அதைப்பற்றி அறியாமலே கூட இருப்பவர்கள் நான் சொல்வதைக் கேட்டு என் பின்னால் தவறான வழியில் வருகிறார்கள் என்றால் இது மிகப் பெரிய சாதனைதான். 

யாருமே யார் சொல்வதையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. அதைப் பற்றி ஆராய்ந்து அது உண்மையா, சரியா, நல்லதா, கெட்டதா, நமக்கு ஏற்புடையதா என்றெல்லாம் தெரிந்து கொள்ளவே விரும்புவார்கள். இது பொதுவான மனித குணமாகவே இருக்கிறது. எனவே நான் சொல்வது சரியோ, தவறோ அது ஒருபுறம் இருக்கட்டும், இதைப் படிக்கிறவர்களின் உண்மையைத் தேடும் உணர்வை நான் தீவிரப்படுத்தவே விரும்புகிறேன். உதாரணமாக நான் சொல்வது தவறு என்று சொல்கிறவர் அதை மறுப்பதற்கான ஆதாரத்தை அதாவது உண்மையைத் தேடி அதை எடுத்துதானே என் முன் வைப்பார். அப்போது அவர் உண்மையை அறிந்து கொள்கிறார்தானே. இதுவே என்னுடைய நோக்கமே அன்றி வேறொன்றுமில்லை. நானும் இத்தகைய தேடலில் கிடைக்கும் அரிய விஷயங்களையே இங்கே பதிவு செய்கிறேன். அது உங்களுக்குத் தவறாகத் தோன்றினால், அது என் குற்றமல்ல. உங்கள் தற்போதைய வாழ்க்கை முறைகளுக்கும், மன ஓட்டங்களுக்கும் அது பொருந்தவில்லை அவ்வளவுதான். 

இதே நீங்கள் நாளை உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளக் கூடும். இதை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம். உதாரணத்திற்கு நம் கவிஞர் கண்ணதாசன் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள் கடவளே இல்லை என்று சொன்னவர், அர்த்தமுள்ள இந்து மதம் என்ற காலத்தால் அழியாத பொக்கிஷத்தை நமக்கு அருளினார்தானே. இத்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது ? உண்மையைத் தேடடியதால்தான் அவர் உண்மையை உணர்ந்து நமக்குச் சொன்னார். வால்மீகி எனும் கொள்ளைக்காரர் மகரிஷியானதும் அப்படித்தான். இப்படி பலபேரை உதாரணப்படுத்தலாம். எனக்கு நானே கேட்டுக் கொண்ட கேள்வி இதுதான், நீ உனக்காக எல்லாவற்றையும் தேடுகிறாயே, பிறர்க்காக எதாவது தேடிக் கொடுத்த துண்டா ? மற்றவர்கள் மேன்மையடையும் பொருட்டு ஏதேனும் தொண்டு செய்ததுண்டா ? எனவே என்னால் முடிந்த இந்த வழியின் மூலமாக பிறர்க்கு தொண்டு செய்யவே நான் முயற்சிக்கிறேன். மனிதனின் நிஜசொரூபத்தை அவனுக்கு ஞாபகமூட்டுவதற்கு நிகரான சேவை வேறு என்ன இருக்கிறது ? 

வலைத்தளத்துக்குள் போனால் பகிர்ந்து கொள்ள பல கோடி விஷயங்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாமலில்லை. அதை விரும்புபவர்களே அதிகம் இருக்கிறார்கள் என்பதுவும் எனக்குத் தெரியும். என்றாலும், இதுவெல்லாம் நிஜமல்ல, நாம் பிறந்த நோக்கமும், அடைய வேண்டிய இலக்கும் இதுவல்ல என்பதை உணர்ந்து, அந்த உணர்வை என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான். உடனே அவர்கள் என் கருத்தை ஏற்றுக் கொண்டு என் பின்னால் வரப்போவதுமில்லை, அதை நான் விரும்புவதுமில்லை. ஏனென்றால் நான் குறிப்பிடும் அந்த இலக்கை அடைவது என்பது அவரவர் உள்ளுணர்வுகள் சார்ந்த சுயேச்சையான விஷயம். இதில் யாரும் நுழைய முடியாது. இது அவரவர்களுக்குள் நடக்கும் ஒரு மாற்றம். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு தூண்டுகோளாக வேண்டுமானால் இருக்க முடியுமே தவிர யாரையும் கையைப் பிடித்து அழைத்து கொண்டு போய் சேர்க்க முடியாது. 

எனவே என்னை வாதுக்கு அழைத்தால் நான் வரமாட்டேன். முறையான கேள்விகளுக்குத் தெரிந்த பதிலைக் கூறுவேன். கேள்வியின் நோக்கம் சரியில்லை எனத் தெரிந்தால் ஒதுங்கிக் கொள்வேன். மீண்டும் மீண்டும் தொல்லை செய்தால் கதவைத் தாளிட்டுக் கொள்வேன். ஏனென்றால் இங்கே நான் எவ்வளவு பேசினாலும் உள்ளே எனக்குள் நான் பயணிக்கும் போது அமைதியாகவே இருக்க விரும்புகிறேன். வாதம் மௌனத்தைக் கலைக்கும், சலனத்தை ஏற்படுத்தும், அமைதியை அழித்து விடும். மௌனமே மேன்மை.
சிலர் என்னோடு முரண்பட்டு என்னை வாக்கு வாதத்திற்கு இழுக்க நினைக்கிறார்கள். அதற்கான நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால் நீங்கள் தவறான கருத்துக்களைச் சொல்லி, பிறரை தவறான வழியில் நடத்திச் செல்கிறீர்கள் என்பதுதான். எனக்கு இந்தக் குற்றச்சாட்டை கண்ணுற்றதும் சிரிப்புதான் வருகிறது. கோபம் வரவில்லை. இன்றைக்கு நேற்றைக்கல்ல பல்லாயிரம் ஆண்டுகளாக எத்தனையோ மகான்களும், ஞானிகளும், சித்தர்களும், ரிஷிகளும் சொல்லியே கேட்காதவர்கள், அவ்வளவு ஏன் அதைப்பற்றி அறியாமலே கூட இருப்பவர்கள் நான் சொல்வதைக் கேட்டு என் பின்னால் தவறான வழியில் வருகிறார்கள் என்றால் இது மிகப் பெரிய சாதனைதான்.

யாருமே யார் சொல்வதையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. அதைப் பற்றி ஆராய்ந்து அது உண்மையா, சரியா, நல்லதா, கெட்டதா, நமக்கு ஏற்புடையதா என்றெல்லாம் தெரிந்து கொள்ளவே விரும்புவார்கள். இது பொதுவான மனித குணமாகவே இருக்கிறது. எனவே நான் சொல்வது சரியோ, தவறோ அது ஒருபுறம் இருக்கட்டும், இதைப் படிக்கிறவர்களின் உண்மையைத் தேடும் உணர்வை நான் தீவிரப்படுத்தவே விரும்புகிறேன். உதாரணமாக நான் சொல்வது தவறு என்று சொல்கிறவர் அதை மறுப்பதற்கான ஆதாரத்தை அதாவது உண்மையைத் தேடி அதை எடுத்துதானே என் முன் வைப்பார். அப்போது அவர் உண்மையை அறிந்து கொள்கிறார்தானே. இதுவே என்னுடைய நோக்கமே அன்றி வேறொன்றுமில்லை. நானும் இத்தகைய தேடலில் கிடைக்கும் அரிய விஷயங்களையே இங்கே பதிவு செய்கிறேன். அது உங்களுக்குத் தவறாகத் தோன்றினால், அது என் குற்றமல்ல. உங்கள் தற்போதைய வாழ்க்கை முறைகளுக்கும், மன ஓட்டங்களுக்கும் அது பொருந்தவில்லை அவ்வளவுதான்.

இதே நீங்கள் நாளை உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளக் கூடும். இதை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம். உதாரணத்திற்கு நம் கவிஞர் கண்ணதாசன் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள் கடவளே இல்லை என்று சொன்னவர், அர்த்தமுள்ள இந்து மதம் என்ற காலத்தால் அழியாத பொக்கிஷத்தை நமக்கு அருளினார்தானே. இத்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது ? உண்மையைத் தேடடியதால்தான் அவர் உண்மையை உணர்ந்து நமக்குச் சொன்னார். வால்மீகி எனும் கொள்ளைக்காரர் மகரிஷியானதும் அப்படித்தான். இப்படி பலபேரை உதாரணப்படுத்தலாம். எனக்கு நானே கேட்டுக் கொண்ட கேள்வி இதுதான், நீ உனக்காக எல்லாவற்றையும் தேடுகிறாயே, பிறர்க்காக எதாவது தேடிக் கொடுத்த துண்டா ? மற்றவர்கள் மேன்மையடையும் பொருட்டு ஏதேனும் தொண்டு செய்ததுண்டா ? எனவே என்னால் முடிந்த இந்த வழியின் மூலமாக பிறர்க்கு தொண்டு செய்யவே நான் முயற்சிக்கிறேன். மனிதனின் நிஜசொரூபத்தை அவனுக்கு ஞாபகமூட்டுவதற்கு நிகரான சேவை வேறு என்ன இருக்கிறது ?

வலைத்தளத்துக்குள் போனால் பகிர்ந்து கொள்ள பல கோடி விஷயங்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாமலில்லை. அதை விரும்புபவர்களே அதிகம் இருக்கிறார்கள் என்பதுவும் எனக்குத் தெரியும். என்றாலும், இதுவெல்லாம் நிஜமல்ல, நாம் பிறந்த நோக்கமும், அடைய வேண்டிய இலக்கும் இதுவல்ல என்பதை உணர்ந்து, அந்த உணர்வை என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான். உடனே அவர்கள் என் கருத்தை ஏற்றுக் கொண்டு என் பின்னால் வரப்போவதுமில்லை, அதை நான் விரும்புவதுமில்லை. ஏனென்றால் நான் குறிப்பிடும் அந்த இலக்கை அடைவது என்பது அவரவர் உள்ளுணர்வுகள் சார்ந்த சுயேச்சையான விஷயம். இதில் யாரும் நுழைய முடியாது. இது அவரவர்களுக்குள் நடக்கும் ஒரு மாற்றம். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு தூண்டுகோளாக வேண்டுமானால் இருக்க முடியுமே தவிர யாரையும் கையைப் பிடித்து அழைத்து கொண்டு போய் சேர்க்க முடியாது.

எனவே என்னை வாதுக்கு அழைத்தால் நான் வரமாட்டேன். முறையான கேள்விகளுக்குத் தெரிந்த பதிலைக் கூறுவேன். கேள்வியின் நோக்கம் சரியில்லை எனத் தெரிந்தால் ஒதுங்கிக் கொள்வேன். மீண்டும் மீண்டும் தொல்லை செய்தால் கதவைத் தாளிட்டுக் கொள்வேன். ஏனென்றால் இங்கே நான் எவ்வளவு பேசினாலும் உள்ளே எனக்குள் நான் பயணிக்கும் போது அமைதியாகவே இருக்க விரும்புகிறேன். வாதம் மௌனத்தைக் கலைக்கும், சலனத்தை ஏற்படுத்தும், அமைதியை அழித்து விடும். மௌனமே மேன்மை.

No comments:

Post a Comment