Friday, March 28, 2014

நாதமும் விந்தும் இணைந்த இவ்வுடல்

Photo: யோகம் என்கிற போது உடல் எனும் தத்துவ ரீதியாகச் சித்தர்கள் புருவ மத்திக்கு மேலமைந்த பகுதியை ஆகாய மண்டலம் என்றும், புருவ மத்திக்கு கீழே இதயம் வரை உள்ள பகுதியை வாயு மண்டலம் என்றும், இதயத்துக்குக் கீழே உந்திச் சுழி வரை நெருப்பு மண்டலம் என்றும், உந்திச் சுழியிலிருந்து முழங்கால் வரை நீர் மண்டலம் என்றும், முழங்கால்களில் இருந்து பாதம் வரை பிருதிவி மண்டலம் என்றும் குறிப்பிடுவார்கள். மற்றொரு தத்துவத்தில் மூலாதாரம் தொடங்கி உச்சி வரை பரந்து ஒளி தருவது சந்திர மண்டலம் என்றும், மார்பினிடத்தில் அறுகோண வடிவில் தகித்துக் கொண்டிருக்கும் சூரிய மண்டலம் என்றும், காற்றும், நீரும் சேர்ந்த இடத்தில் நாற்சதுர வடிவில் நிற்கும் அக்னி மண்டலம் என்றும் மும் மண்டலங்களைச் சொல்வார்கள். 
மூன்றையும் மூன்று தீயாகச் சொல்லி, மூன்றும் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் என்றும் மூன்றும் சேர்வதே முத்தீ என்றும் சொல்வதுண்டு. அதாவது மூன்று நாடிகளின் ஒளிகளும், பஞ்சபூதங்களும் சேர்ந்து உருவானதே நாதமும் விந்தும் இணைந்த இவ்வுடல் என்பதாம். சித்த மருத்துவம் என்கிற அடிப்படையில் எந்தவித விஞ்ஞான வளர்ச்சியும், உபகரணங்களும் இல்லாத காலங்களில் தங்கள் மெய்யறிவின் துணை கொண்டு ஞானத்தால் நம் உள்ளுடல் இயக்கங்களைக் கண்டு கொண்டார்கள் சித்தர்கள். அதையும் மண்டலங்கள் என்றே சொன்னார்கள். 
நம் உயிர் சக்திக்கும், நம் உடல் வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் செயல்படும் ஒவ்வொரு தொகுப்புகளையும் மண்டலங்கள் என்று பிரித்து, அதன் இயக்கங்களை உணர்த்தும் நாடிகள் வழியாக நோய்களைக் கண்டறிந்து மருத்துவம் செய்தார்கள். அவை எலும்பு மண்டலம், தசை மண்டலம், சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், சிறுநீரக மண்டலம், இனவிருத்தி மண்டலம், நரம்பு மண்டலம் என்பவைகளாகும். இவற்றில் இரத்த ஓட்ட மண்டலமும், நரம்பு மண்டலமும் பெரும் பங்கு வகிக்கின்றன என்று சொன்னால் மிகையல்ல. அதிலும் நரம்புகள் வழியாகவே அனைத்து பரிமாற்றங்களும் நடக்கின்றன.
ஏற்கனவே சுவாச மண்டலத்தைக் குறித்து பார்த்தோம். இன்று ஜீரண மண்டலத்தைக் குறித்து பார்க்கப் போகிறோம். நாம் உண்ணும் உணவு ஜீரணமாகி சக்தியாக மாற்றப்பட்டு கல்லீரலுக்குச் சென்று அங்கிருந்து மற்ற இடங்களுக்குப் போகிறது என்பதைக் குறித்து பார்க்கப் போகிறோம். பொதுவாகச் சித்தர்கள் எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருள்களையே உண்ண வேண்டும் என்கிறார்கள். அதுவும் தட்ப வெப்ப நிலை, பகல், இரவு போன்ற கால சூழலுக்கு ஏற்ற உணவுகளைக் கடைபிடிக்க சிபாரிசு செய்கிறார்கள். அப்போதுதான் ஜீரண கருவிகள் பழுதடையாமல் நல்ல நிலையில் இயங்கி உணவில் இருந்து பூரணமாக சத்துக்களை நமக்கு கிடைத்திட உதவும். சரியாக ஜீரணமாகாத உணவுப் பொருள்கள் நம் குடலில் தங்கி நமக்கு பலவிதமான வியாதிகளை உருவாக்கி மற்ற மண்டலங்களின் செயல்பாடுகளையும் சீர்குலையச் செய்துவிடும்.
நாம் உண்ணும் உணவை பற்கள் அரைக்க, நாக்கு அதை நன்றாக சுவைத்து தொண்டைக்கு அனுப்புகிறது. அப்படி சுவைக்கும் போது தேவையில்லாத அல்லது எளிதில் ஜீரணமாகாத மற்றும் குடலுக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் பொருள்களை வெளியேற்றி விடுகிறது. தொண்டைக்குச் சென்ற உணவு உணவுக் குழாய் வழியாக இரைப்பைக்கு அனுப்பப்படுகிறது. இரைப்பையில் இரத்தக் குழாய்களும், சீலியாக் பிளக்ஸஸிலுள்ள நரம்புகளும் நிறைய உள்ளன. இரைப்பையின் உட்புறம் மென்சவ்வு உள்ளது. இந்த சவ்விலிருந்து மியூக்கஸ் என்னும் ஒருவகையான நீர் சுரக்கிறது. இதில் பெரும்பகுதி இரைப்பை நீரும், 0.04% ஹைட்ரோகுளோரிக் அமிலமும் உள்ளது. இரைப்பை நீரில் ரெனின், லைபேஸ், பெப்சின் போன்ற நொதிகள் உள்ளன. ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவில் கலந்து அமிலத்தன்மையுடையதாக மாற்றி அதில் உள்ள கண்ணுக்குத் தெரியாத புழு, பூச்சிகளைக் கொல்கிறது. 
பெப்சின் நொதியானது புரோட்டினைக் கரைத்து பெப்டோன்களாக்குகிறது. ரெனின் பாலுணவு புரோட்டினைக் கரைக்கிறது. லைபேஸ் கொழுப்பைக் கரைக்கிறது. இரைப்பையில் பதம் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் C வடிவிலுள்ள முன்குடலுக்குள் செல்கின்றன. இங்கு பித்த நீரும், கணய நீரும் கணய ஈரல் குழாய் வழியாக வந்து சேர்கின்றன. கணய நீரிலுள்ள அமிலேஸ் என்கிற நொதியானது மாவுப் பொருள்கைச் சிதைக்கிறது. லைபோஸ் நொதியானது கொழுப்பை கிளிசரினாகவும், அமிலக் கொழுப்பாகவும் மாற்றுகிறது. மற்றொரு டிரிப்சின் என்கிற நொதியானது புரோட்டினை மீண்டும் சிதைவடையச் செய்கிறது. இரைப்பையிலும், முன் சிறு குடலிலும் பதப்படுத்தப் பட்ட உணவுப் பொருள்கள் சிறுகுடல் வந்து ஜீரணமாகின்றன.
சிறுகுடலின் உட்புறம் அமைந்துள்ள தசை, திசுக்களில் உள்ள குடலுறிஞ்சிகள் உணவில் உள்ள சத்துப் பொருள்களை உறிஞ்சுகின்றன. இந்தக் குடல் உறிஞ்சிகள் அமைந்திருக்கும் பரப்பு நம் தோலின் பரப்பைவிட பத்து மடங்கு அதிகமாகும். குடலுறிஞ்சிகளின் மேல்பாகம் திசுக்களும், அடுத்து நுண்ணிய இரத்தக் குழாய்களும், அடியில் நிணநீர்க் குழாய்களும் உள்ளன. உறிஞ்சப்பட்ட சத்துக்கள் குடலுறிஞ்சிகளிலுள்ள நுண்ணிய இரத்தக் குழாய்கள் மூலம் கல்லீரல் சிரைகளுக்கும், பின் கல்லீரலுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. அங்குதான் சத்துப் பொருள்கள் சேமித்து வைக்கப்படுகின்றன. திசுக்களுக்கு சத்து தேவைப்படும் பொழுதெல்லாம் கல்லீரலில் இருந்துதான் அனுப்பி வைக்கப் படுகின்றன. குடலில் இருந்து கல்லீரலுக்கு வந்த சத்துப் பொருள்களில் உள்ள சில நச்சுப் பொருள்கள் சிறு நீரகத்துக்கு அனுப்பப்பட்டு சிறுநீரின் மூலம் வெளியேற்றப்படுகின்றன. சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு வந்த உணவுப் பொருள்களில் உள்ள நீர், மாவுப் பொருள்கள், உப்புச்சத்து போன்றவை பெருங்குடலில் உள்ள உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு பின் மிஞ்சி நிற்கும் கழிவுகள் மலக்குடல் வந்து குதம் வழியாக வெளியேறுகின்றன.
இந்த ஜீரண மண்டலத்தின் வேலையை மிகச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். விவரித்துச் சொல்லப் போனால் பல பதிவுகள் இட வேண்டிய அவசியம் ஏற்படும். உணவைச் சாப்படுவதோடு நம் வேலை முடிந்துவிடுகிறது. மறுநாள் கழிவுகளையும் வெளியேற்றி விடுகிறோம். இடைப்பட்ட நேரத்தில் நடைபெறும் வேலை மிகவும் கடினமானது. கண்ட கண்ட உணவுப் பொருள்களை உண்டால் மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை ஜீரண மண்டல உறுப்புகளும் கெடுவதுடன், எல்லா மண்டலங்களும் பாதிப்படைந்து உடலும் கெடும். உயிரும் கெடும். வனாந்திரங்களில் உணவாக சித்தர்கள் கஞ்சிகளையே  பயன் படுத்தியுள்ளனர். அவ்வப்போது காய், கனி, சில கிழங்கு வகைகளை உட்கொண்டாலும், கஞ்சி அவர்களின் விருப்பமுள்ள, நல்ல எளிதில் ஜீரணமாகும் உணவாகத் திகழ்ந்திருக்கிறது. இந்த கஞ்சி குறித்து நாளை விரிவாகச் சொல்கிறேன். எனவே உணவு விஷயத்தில் கவனமாக நடந்து கொள்வது நல்லது.
யோகம் என்கிற போது உடல் எனும் தத்துவ ரீதியாகச் சித்தர்கள் புருவ மத்திக்கு மேலமைந்த பகுதியை ஆகாய மண்டலம் என்றும், புருவ மத்திக்கு கீழே இதயம் வரை உள்ள பகுதியை வாயு மண்டலம் என்றும், இதயத்துக்குக் கீழே உந்திச் சுழி வரை நெருப்பு மண்டலம் என்றும், உந்திச் சுழியிலிருந்து முழங்கால் வரை நீர் மண்டலம் என்றும், முழங்கால்களில் இருந்து பாதம் வரை பிருதிவி மண்டலம் என்றும் குறிப்பிடுவார்கள். மற்றொரு தத்துவத்தில் மூலாதாரம் தொடங்கி உச்சி வரை பரந்து ஒளி தருவது சந்திர மண்டலம் என்றும், மார்பினிடத்தில் அறுகோண வடிவில் தகித்துக் கொண்டிருக்கும் சூரிய மண்டலம் என்றும், காற்றும், நீரும் சேர்ந்த இடத்தில் நாற்சதுர வடிவில் நிற்கும் அக்னி மண்டலம் என்றும் மும் மண்டலங்களைச் சொல்வார்கள்.
மூன்றையும் மூன்று தீயாகச் சொல்லி, மூன்றும் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் என்றும் மூன்றும் சேர்வதே முத்தீ என்றும் சொல்வதுண்டு. அதாவது மூன்று நாடிகளின் ஒளிகளும், பஞ்சபூதங்களும் சேர்ந்து உருவானதே நாதமும் விந்தும் இணைந்த இவ்வுடல் என்பதாம். சித்த மருத்துவம் என்கிற அடிப்படையில் எந்தவித விஞ்ஞான வளர்ச்சியும், உபகரணங்களும் இல்லாத காலங்களில் தங்கள் மெய்யறிவின் துணை கொண்டு ஞானத்தால் நம் உள்ளுடல் இயக்கங்களைக் கண்டு கொண்டார்கள் சித்தர்கள். அதையும் மண்டலங்கள் என்றே சொன்னார்கள்.
நம் உயிர் சக்திக்கும், நம் உடல் வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் செயல்படும் ஒவ்வொரு தொகுப்புகளையும் மண்டலங்கள் என்று பிரித்து, அதன் இயக்கங்களை உணர்த்தும் நாடிகள் வழியாக நோய்களைக் கண்டறிந்து மருத்துவம் செய்தார்கள். அவை எலும்பு மண்டலம், தசை மண்டலம், சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், சிறுநீரக மண்டலம், இனவிருத்தி மண்டலம், நரம்பு மண்டலம் என்பவைகளாகும். இவற்றில் இரத்த ஓட்ட மண்டலமும், நரம்பு மண்டலமும் பெரும் பங்கு வகிக்கின்றன என்று சொன்னால் மிகையல்ல. அதிலும் நரம்புகள் வழியாகவே அனைத்து பரிமாற்றங்களும் நடக்கின்றன.
ஏற்கனவே சுவாச மண்டலத்தைக் குறித்து பார்த்தோம். இன்று ஜீரண மண்டலத்தைக் குறித்து பார்க்கப் போகிறோம். நாம் உண்ணும் உணவு ஜீரணமாகி சக்தியாக மாற்றப்பட்டு கல்லீரலுக்குச் சென்று அங்கிருந்து மற்ற இடங்களுக்குப் போகிறது என்பதைக் குறித்து பார்க்கப் போகிறோம். பொதுவாகச் சித்தர்கள் எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருள்களையே உண்ண வேண்டும் என்கிறார்கள். அதுவும் தட்ப வெப்ப நிலை, பகல், இரவு போன்ற கால சூழலுக்கு ஏற்ற உணவுகளைக் கடைபிடிக்க சிபாரிசு செய்கிறார்கள். அப்போதுதான் ஜீரண கருவிகள் பழுதடையாமல் நல்ல நிலையில் இயங்கி உணவில் இருந்து பூரணமாக சத்துக்களை நமக்கு கிடைத்திட உதவும். சரியாக ஜீரணமாகாத உணவுப் பொருள்கள் நம் குடலில் தங்கி நமக்கு பலவிதமான வியாதிகளை உருவாக்கி மற்ற மண்டலங்களின் செயல்பாடுகளையும் சீர்குலையச் செய்துவிடும்.
நாம் உண்ணும் உணவை பற்கள் அரைக்க, நாக்கு அதை நன்றாக சுவைத்து தொண்டைக்கு அனுப்புகிறது. அப்படி சுவைக்கும் போது தேவையில்லாத அல்லது எளிதில் ஜீரணமாகாத மற்றும் குடலுக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் பொருள்களை வெளியேற்றி விடுகிறது. தொண்டைக்குச் சென்ற உணவு உணவுக் குழாய் வழியாக இரைப்பைக்கு அனுப்பப்படுகிறது. இரைப்பையில் இரத்தக் குழாய்களும், சீலியாக் பிளக்ஸஸிலுள்ள நரம்புகளும் நிறைய உள்ளன. இரைப்பையின் உட்புறம் மென்சவ்வு உள்ளது. இந்த சவ்விலிருந்து மியூக்கஸ் என்னும் ஒருவகையான நீர் சுரக்கிறது. இதில் பெரும்பகுதி இரைப்பை நீரும், 0.04% ஹைட்ரோகுளோரிக் அமிலமும் உள்ளது. இரைப்பை நீரில் ரெனின், லைபேஸ், பெப்சின் போன்ற நொதிகள் உள்ளன. ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவில் கலந்து அமிலத்தன்மையுடையதாக மாற்றி அதில் உள்ள கண்ணுக்குத் தெரியாத புழு, பூச்சிகளைக் கொல்கிறது.
பெப்சின் நொதியானது புரோட்டினைக் கரைத்து பெப்டோன்களாக்குகிறது. ரெனின் பாலுணவு புரோட்டினைக் கரைக்கிறது. லைபேஸ் கொழுப்பைக் கரைக்கிறது. இரைப்பையில் பதம் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் C வடிவிலுள்ள முன்குடலுக்குள் செல்கின்றன. இங்கு பித்த நீரும், கணய நீரும் கணய ஈரல் குழாய் வழியாக வந்து சேர்கின்றன. கணய நீரிலுள்ள அமிலேஸ் என்கிற நொதியானது மாவுப் பொருள்கைச் சிதைக்கிறது. லைபோஸ் நொதியானது கொழுப்பை கிளிசரினாகவும், அமிலக் கொழுப்பாகவும் மாற்றுகிறது. மற்றொரு டிரிப்சின் என்கிற நொதியானது புரோட்டினை மீண்டும் சிதைவடையச் செய்கிறது. இரைப்பையிலும், முன் சிறு குடலிலும் பதப்படுத்தப் பட்ட உணவுப் பொருள்கள் சிறுகுடல் வந்து ஜீரணமாகின்றன.
சிறுகுடலின் உட்புறம் அமைந்துள்ள தசை, திசுக்களில் உள்ள குடலுறிஞ்சிகள் உணவில் உள்ள சத்துப் பொருள்களை உறிஞ்சுகின்றன. இந்தக் குடல் உறிஞ்சிகள் அமைந்திருக்கும் பரப்பு நம் தோலின் பரப்பைவிட பத்து மடங்கு அதிகமாகும். குடலுறிஞ்சிகளின் மேல்பாகம் திசுக்களும், அடுத்து நுண்ணிய இரத்தக் குழாய்களும், அடியில் நிணநீர்க் குழாய்களும் உள்ளன. உறிஞ்சப்பட்ட சத்துக்கள் குடலுறிஞ்சிகளிலுள்ள நுண்ணிய இரத்தக் குழாய்கள் மூலம் கல்லீரல் சிரைகளுக்கும், பின் கல்லீரலுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. அங்குதான் சத்துப் பொருள்கள் சேமித்து வைக்கப்படுகின்றன. திசுக்களுக்கு சத்து தேவைப்படும் பொழுதெல்லாம் கல்லீரலில் இருந்துதான் அனுப்பி வைக்கப் படுகின்றன. குடலில் இருந்து கல்லீரலுக்கு வந்த சத்துப் பொருள்களில் உள்ள சில நச்சுப் பொருள்கள் சிறு நீரகத்துக்கு அனுப்பப்பட்டு சிறுநீரின் மூலம் வெளியேற்றப்படுகின்றன. சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு வந்த உணவுப் பொருள்களில் உள்ள நீர், மாவுப் பொருள்கள், உப்புச்சத்து போன்றவை பெருங்குடலில் உள்ள உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு பின் மிஞ்சி நிற்கும் கழிவுகள் மலக்குடல் வந்து குதம் வழியாக வெளியேறுகின்றன.
இந்த ஜீரண மண்டலத்தின் வேலையை மிகச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். விவரித்துச் சொல்லப் போனால் பல பதிவுகள் இட வேண்டிய அவசியம் ஏற்படும். உணவைச் சாப்படுவதோடு நம் வேலை முடிந்துவிடுகிறது. மறுநாள் கழிவுகளையும் வெளியேற்றி விடுகிறோம். இடைப்பட்ட நேரத்தில் நடைபெறும் வேலை மிகவும் கடினமானது. கண்ட கண்ட உணவுப் பொருள்களை உண்டால் மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை ஜீரண மண்டல உறுப்புகளும் கெடுவதுடன், எல்லா மண்டலங்களும் பாதிப்படைந்து உடலும் கெடும். உயிரும் கெடும். வனாந்திரங்களில் உணவாக சித்தர்கள் கஞ்சிகளையே பயன் படுத்தியுள்ளனர். அவ்வப்போது காய், கனி, சில கிழங்கு வகைகளை உட்கொண்டாலும், கஞ்சி அவர்களின் விருப்பமுள்ள, நல்ல எளிதில் ஜீரணமாகும் உணவாகத் திகழ்ந்திருக்கிறது. இந்த கஞ்சி குறித்து நாளை விரிவாகச் சொல்கிறேன். எனவே உணவு விஷயத்தில் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

No comments:

Post a Comment