Friday, March 28, 2014

களவாடிச் செல்லப்பட்ட நம் சித்தர்களின் சொத்தாகும்

Photo: சித்தர்கள் நரம்பு மண்டலங்கள், வர்ம்ப் புள்ளிகள், பஞ்சபூதங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு மூலிகைகளில் உள்ள தனிமங்கள் மூலமாகவும், சில சக்தி புள்ளிகளுக்கு(வர்ம்ப் புள்ளிகள்) அழுத்தம் கொடுப்பது மூலமாகவும் அனேக நோய்களுக்கு தீர்வு கண்டனர். தங்களது எந்தக் கலையும் விலை போவதை விரும்பாத ஒரே காரணத்தினால்தான் இரகசிய பரிபாஷைகளைக் கையாண்டு மருத்துவக் குறிப்புகளை எழுதி வைத்தனர். ஆனால் காலப் போக்கில் அவர்கள் நினைத்தது போலவே அவர்களின் கலைகள் யாவும் பொருள் ஆசை கொண்டவர்கள் கையில் சிக்கிக் கொண்டது. அவர்கள் பெரும்பாடுபட்டு மனித குலத்தின் துன்பம் துடைக்க கண்டுபிடித்த விஷயங்களை வைத்து இன்று யார் யாரோ பொருள் ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்று நாம் ஆன்மீக ரீதியாகக் கையாளக் கூடிய ஒவ்வொரு பழக்கங்களும், முத்திரைகளும், ஆசனங்களும் ஆரோக்யத்தின் அடிப்படையில் சித்தர்கள் நமக்குத் தந்ததே. 
இறைவனையோ, பெரியவர்களையோ வழிபடும் போது இரு கைகளையும் ஒன்றோடு ஒன்று அழுத்தமாக சேர்த்து நெஞ்சுக்கு நேராக வைத்து வணங்குவது எதனால் என்றால், உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் நம் உடலுறுப்புகளோடு தொடர்புடைய அனைத்து நரம்புகளும் முடிவடைகின்றன. அந்த நரம்பு நுனிகளும், அதோடு தொடர்புடைய இரத்த நாளங்களும் சக்தியூட்டும் புள்ளிகளாக செயல் படுகின்றன. இதனைத் தெரிந்து கொண்டு உள்ளங்கைகளைச் சேர்த்து வணங்கும் முறையைக் கொண்டு வந்தனர். அவ்வாறு அழுத்தமாக சேர்த்து வணங்குவதால், சக்தி புள்ளிகள் அழுத்தம் பெற்று உடலுக்கு புத்துணர்ச்சியையும், சீரான இரத்த ஓட்டத்தையும் தருகிறது. சிவன் கோவிலில் கைகளைத் தொங்க விட்டுக் கொண்டு நடப்பது பாவம் என்று ஒரு சட்டமே இருக்கிறது. கைகளை தலைக்கு மேல் தூக்கி கூப்பியபடி நடந்துதான் வணங்க வேண்டும். இது கூட நம் உடல் நலம் சார்ந்த விஷயம்தான். அவ்வாறு கைகளைத் தூக்கியபடி, கூப்பியவாறு நடப்பதால் நரம்புகள் வலிமை அடைகின்றன. நரம்புகளுக்கு ஊக்கம் கிடைக்கிறது. நரம்புகள் முறுக்கடைகின்றன. வாதம் என்ற நோயே அருகில் நெருங்காது. அங்கப் பிரதட்சணம் செய்யும் போதும் இந்த நரம்புகள் வலிமை அடைவதோடு நம் உடலில் உள்ள அனைத்து சக்திப் புள்ளிகளும் அழுத்தம் பெறுவதால் நோய் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பஜனை பாடி கைகளை அடிப்பது கூட கைகளில் உள்ள சக்தி புள்ளிகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் ஒரு பயிற்சியே. ஆணி செருப்பு அணிவதும் அவ்வாறான பலன்களையே தரும். பஜனை பாடும் போதோ வழிபாட்டின் போதோ கால்களை மடக்கி குதிகால்கள் மூலத்தை அழுத்தும் படி உட்கார்வதால், மூலத்தில் உள்ள சக்தி புள்ளிகளுக்கு அழுத்தம் உண்டாகி, சக்தி நாளங்கள் எழுச்சியுற்று மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். தோப்புக் கரணம் போடுவதால் கண்கள், காதுகள், கால்கள், தொடைகள், அடிவயிறு, போன்ற அனைத்து பகுதியில் உள்ள சக்தி புள்ளிகளும் அழுத்தம் பெற்று சகல விதமான நோய்களும் விலகி ஓடிவிடும். தற்போது தோப்புக்கரணம் என்பது ஒரு பாவனையாகி விட்டது. சும்மா காதுகளில் கைகளை வைத்துக் கொண்டு முன்புறமாக சாய்ந்து உடலை இரண்டு ஆட்டு ஆட்டி விட்டு, கன்னத்தில் போட்டுக் கொண்டு போய்விடுகிறார்கள். தலையின் இருபுறங்களிலும் கைமாற்றிக் கொட்டிக் கொள்வதால் பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்படுகிறது. இன்றைக்கு அக்குப் பஞ்சர் என்றும் சீனாவில் இருந்து வந்தது என்றும் சொல்லப்படும் வைத்திய முறை சீனாவில் இருந்து வியாபாரத்துக்கும், வேறு பல காரணங்களுக்காக வந்தவர்களாலும் களவாடிச் செல்லப்பட்ட நம் சித்தர்களின் சொத்தாகும். யோகத்தைப் பொருத்தவரை ப்ராணாயாமம் சுவாச மண்டலத்தை சீராக்கி பிராணனை வலிமைப்படுத்துகிறது. ஆசனங்கள் சக்தி புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்து உடலுக்கு நீண்ட நேரம் அமரக்கூடிய வலிமையைத் தருகிறது. தியானம் மன ஒருமைப்பாட்டை உண்டாக்கி சாதகனின் வெற்றியை நிர்ணயிக்கிறது. யோகாசனம் செய்யும் போது சக்தி புள்ளிகள் அழுத்தம் பெறுவதோடு, தசைகள் வலிமை அடைகின்றன. மேலும் காற்று குறிப்பிட்ட கால அளவு உள்ளடக்கி வைப்பதால் பிராண சக்தியும் அதிகரிக்கிறது. இவ்வாறு ஒன்றுக் கொன்று தொடர்பு கொண்டே இப்பயிற்சிகள் அமைக்கப்பட்டிருப்பதை உணரலாம். நம் சித்தர்கள் குமரி முனைக்குத் தென் பகுதியில்தான் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மறைத்து வைத்த ஏடுகள் பெரும்பாலானவை கடலுக்குள் மூழ்கி மறைந்து விட்டன. மிதந்து வந்த சில வற்றை அகத்திய பெருமான் சேகரித்து தொகுத்து வெளியிட்டதாக இப்பாடல் சொல்கிறது.
தைத்ததொரு நூலெல்லாம் பிரளயத்தில்
தாரணியில் மிதந்துவிடக் கண்டோர் தாமும்
நைத்ததொரு பெருநூல்கள் கருவியெல்லாம்
நலமாக மிதந்துவிடக் கண்டிட்டோமே
துண்டிதமாய்ச் சிலநூல்கள் சாகரத்தில்
சுருதி பொருளானதுவும் மறைந்து போச்சு
அண்டியே கடலோரம் மிதந்த நூல்கள்
அகப்பட்ட மட்டுமல்லோ அறிந்தோம் யாமே. -அகத்தியர்.
பெரும்பாலானவை பிரளயத்தில் மறைந்து விட்டன. கிடைத்தது சொற்பமே. அதன் வல்லமையே இவ்வளவு என்றால், முழுவதும் கிடைத்திருந்தால். ............. ? மலைகள் தோறும் தேடுபவர்கள் இனி கடலுக்குள்ளும் தேடினாலும் தேடுவார்கள்.
சித்தர்கள் நரம்பு மண்டலங்கள், வர்ம்ப் புள்ளிகள், பஞ்சபூதங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு மூலிகைகளில் உள்ள தனிமங்கள் மூலமாகவும், சில சக்தி புள்ளிகளுக்கு(வர்ம்ப் புள்ளிகள்) அழுத்தம் கொடுப்பது மூலமாகவும் அனேக நோய்களுக்கு தீர்வு கண்டனர். தங்களது எந்தக் கலையும் விலை போவதை விரும்பாத ஒரே காரணத்தினால்தான் இரகசிய பரிபாஷைகளைக் கையாண்டு மருத்துவக் குறிப்புகளை எழுதி வைத்தனர். ஆனால் காலப் போக்கில் அவர்கள் நினைத்தது போலவே அவர்களின் கலைகள் யாவும் பொருள் ஆசை கொண்டவர்கள் கையில் சிக்கிக் கொண்டது. அவர்கள் பெரும்பாடுபட்டு மனித குலத்தின் துன்பம் துடைக்க கண்டுபிடித்த விஷயங்களை வைத்து இன்று யார் யாரோ பொருள் ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்று நாம் ஆன்மீக ரீதியாகக் கையாளக் கூடிய ஒவ்வொரு பழக்கங்களும், முத்திரைகளும், ஆசனங்களும் ஆரோக்யத்தின் அடிப்படையில் சித்தர்கள் நமக்குத் தந்ததே.
இறைவனையோ, பெரியவர்களையோ வழிபடும் போது இரு கைகளையும் ஒன்றோடு ஒன்று அழுத்தமாக சேர்த்து நெஞ்சுக்கு நேராக வைத்து வணங்குவது எதனால் என்றால், உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் நம் உடலுறுப்புகளோடு தொடர்புடைய அனைத்து நரம்புகளும் முடிவடைகின்றன. அந்த நரம்பு நுனிகளும், அதோடு தொடர்புடைய இரத்த நாளங்களும் சக்தியூட்டும் புள்ளிகளாக செயல் படுகின்றன. இதனைத் தெரிந்து கொண்டு உள்ளங்கைகளைச் சேர்த்து வணங்கும் முறையைக் கொண்டு வந்தனர். அவ்வாறு அழுத்தமாக சேர்த்து வணங்குவதால், சக்தி புள்ளிகள் அழுத்தம் பெற்று உடலுக்கு புத்துணர்ச்சியையும், சீரான இரத்த ஓட்டத்தையும் தருகிறது. சிவன் கோவிலில் கைகளைத் தொங்க விட்டுக் கொண்டு நடப்பது பாவம் என்று ஒரு சட்டமே இருக்கிறது. கைகளை தலைக்கு மேல் தூக்கி கூப்பியபடி நடந்துதான் வணங்க வேண்டும். இது கூட நம் உடல் நலம் சார்ந்த விஷயம்தான். அவ்வாறு கைகளைத் தூக்கியபடி, கூப்பியவாறு நடப்பதால் நரம்புகள் வலிமை அடைகின்றன. நரம்புகளுக்கு ஊக்கம் கிடைக்கிறது. நரம்புகள் முறுக்கடைகின்றன. வாதம் என்ற நோயே அருகில் நெருங்காது. அங்கப் பிரதட்சணம் செய்யும் போதும் இந்த நரம்புகள் வலிமை அடைவதோடு நம் உடலில் உள்ள அனைத்து சக்திப் புள்ளிகளும் அழுத்தம் பெறுவதால் நோய் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பஜனை பாடி கைகளை அடிப்பது கூட கைகளில் உள்ள சக்தி புள்ளிகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் ஒரு பயிற்சியே. ஆணி செருப்பு அணிவதும் அவ்வாறான பலன்களையே தரும். பஜனை பாடும் போதோ வழிபாட்டின் போதோ கால்களை மடக்கி குதிகால்கள் மூலத்தை அழுத்தும் படி உட்கார்வதால், மூலத்தில் உள்ள சக்தி புள்ளிகளுக்கு அழுத்தம் உண்டாகி, சக்தி நாளங்கள் எழுச்சியுற்று மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். தோப்புக் கரணம் போடுவதால் கண்கள், காதுகள், கால்கள், தொடைகள், அடிவயிறு, போன்ற அனைத்து பகுதியில் உள்ள சக்தி புள்ளிகளும் அழுத்தம் பெற்று சகல விதமான நோய்களும் விலகி ஓடிவிடும். தற்போது தோப்புக்கரணம் என்பது ஒரு பாவனையாகி விட்டது. சும்மா காதுகளில் கைகளை வைத்துக் கொண்டு முன்புறமாக சாய்ந்து உடலை இரண்டு ஆட்டு ஆட்டி விட்டு, கன்னத்தில் போட்டுக் கொண்டு போய்விடுகிறார்கள். தலையின் இருபுறங்களிலும் கைமாற்றிக் கொட்டிக் கொள்வதால் பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்படுகிறது. இன்றைக்கு அக்குப் பஞ்சர் என்றும் சீனாவில் இருந்து வந்தது என்றும் சொல்லப்படும் வைத்திய முறை சீனாவில் இருந்து வியாபாரத்துக்கும், வேறு பல காரணங்களுக்காக வந்தவர்களாலும் களவாடிச் செல்லப்பட்ட நம் சித்தர்களின் சொத்தாகும். யோகத்தைப் பொருத்தவரை ப்ராணாயாமம் சுவாச மண்டலத்தை சீராக்கி பிராணனை வலிமைப்படுத்துகிறது. ஆசனங்கள் சக்தி புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்து உடலுக்கு நீண்ட நேரம் அமரக்கூடிய வலிமையைத் தருகிறது. தியானம் மன ஒருமைப்பாட்டை உண்டாக்கி சாதகனின் வெற்றியை நிர்ணயிக்கிறது. யோகாசனம் செய்யும் போது சக்தி புள்ளிகள் அழுத்தம் பெறுவதோடு, தசைகள் வலிமை அடைகின்றன. மேலும் காற்று குறிப்பிட்ட கால அளவு உள்ளடக்கி வைப்பதால் பிராண சக்தியும் அதிகரிக்கிறது. இவ்வாறு ஒன்றுக் கொன்று தொடர்பு கொண்டே இப்பயிற்சிகள் அமைக்கப்பட்டிருப்பதை உணரலாம். நம் சித்தர்கள் குமரி முனைக்குத் தென் பகுதியில்தான் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மறைத்து வைத்த ஏடுகள் பெரும்பாலானவை கடலுக்குள் மூழ்கி மறைந்து விட்டன. மிதந்து வந்த சில வற்றை அகத்திய பெருமான் சேகரித்து தொகுத்து வெளியிட்டதாக இப்பாடல் சொல்கிறது.
தைத்ததொரு நூலெல்லாம் பிரளயத்தில்
தாரணியில் மிதந்துவிடக் கண்டோர் தாமும்
நைத்ததொரு பெருநூல்கள் கருவியெல்லாம்
நலமாக மிதந்துவிடக் கண்டிட்டோமே
துண்டிதமாய்ச் சிலநூல்கள் சாகரத்தில்
சுருதி பொருளானதுவும் மறைந்து போச்சு
அண்டியே கடலோரம் மிதந்த நூல்கள்
அகப்பட்ட மட்டுமல்லோ அறிந்தோம் யாமே. -அகத்தியர்.
பெரும்பாலானவை பிரளயத்தில் மறைந்து விட்டன. கிடைத்தது சொற்பமே. அதன் வல்லமையே இவ்வளவு என்றால், முழுவதும் கிடைத்திருந்தால். ............. ? மலைகள் தோறும் தேடுபவர்கள் இனி கடலுக்குள்ளும் தேடினாலும் தேடுவார்கள்.

No comments:

Post a Comment