
ஆசனங்களைப் பொருத்த வரை சிரசாசனம் தந்தை என்றும், சர்வாங்காசனம் தாய் என்றும் சொல்வார்கள். எல்லா ஆசனங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையே. உலகில் காணும் ஒவ்வொரு வடிவமும் ஒரு ஆசனமே. என்றாலும், யோக சாதனையைப் பொருத்த வரை, சிரசாசனம், சர்வாங்காசனம், சக்கராசனம், பத்மாசனம், வீராசனம், பரியங்காசனம்,பத்த கோணாசனம், பத்த பத்மாசனம், அர்த்த மத்சயேய்திராசனம், யோக முத்ராசனம், உபாவிஸ்த கோணாசனம், பச்சிமோத்தானாசனம், மயூராசனம், சித்தாசனம் போன்ற பல ஆசனங்கள் சிறந்த பலனைத் தரும் என்று சொல்லப்பட்டடுள்ளது. அந்த வகையில் வஜ்ரொளி முத்ராஸனம் என்ற ஆசனத்தைப் பற்றி நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். முறையாக பிராணாயாமமும், தியானமும், செய்து வருபவர்கள் ஒரு கால கட்டத்தில் மேற்குறிப்பிட்ட சில ஆசனங்கள் செய்யும் போது குண்டலினி சுழுமுனை வழியாக பாய்வதை உணரமுடியும் என்பது முன்னோர் வாக்கு. எனவே ஆசனம் செய்யும் போது அது வெறும் உடற்பயிற்சி என்று எண்ணி விடாமல், குண்டலினியை மேலேற்றும் உபாயம் என்ற எண்ணமும், பாவமும் கொண்டு ஏதேனும் ஒரு ஆதாரத்தில் மனதை நிறுத்தி செய்து வருவது விரைவில் வெற்றியைத் தேடித் தரும்.
அட்டாங்க யோகத்தின் மூன்றாவது படி ஆசனமாகும். குண்டலினியை மேலேற்றுவதை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு ஆசனம் உடலளவில் உதவுகிறது. மனதை நெறிப்படுத்த உடல் நலமும் மிக்கிய அம்சமாகத் திகழ்கிறது. வஜ்ரம் என்றால் இறுக்கமான, கட்டியான என்று பல பொருள் கூறப்படுகிறது. இந்த வஜ்ரொளி முத்ராசனம் செய்வதால் பாலுணர்வு சார்ந்த உறுப்புகள் அனைத்தும் இருபாலினருக்கும் வலிமை பெறுகிறது. இந்த ஆசனம் செய்பவர்களுக்கு மலட்டுத் தன்மை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. ஆண்மைக் குறைபாடுகள் அனைத்தும் நீங்கி விடுகின்றன. இல்லற சுகத்தில் நீடித்த இன்பமும், களைப்பின்மையும் கிடைக்கச் செய்கிறது. விந்து கெட்டிப்பட்டு உயிர் சக்தி சேமிக்கப்படுவதால் தேஹம் ஒளியுடன் தேஜஸுடன் மிளிரும். குண்டலினி சக்தியை தூண்டி ஒளிரச் செய்கிறது. பெண்களுக்கு கர்பப் பை பலப்படுகிறது. எனவே கருத்தரிப்பது நிச்சயமாவதோடு குழந்தைப் பேறும் எளிதாகிறது. ஆண்களுக்கு விரை சம்மந்தபட்ட பிரச்சனைகள் தோன்றுவதில்லை. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என இதன் பலன்களை அளவிட முடியாது. எனவே இருபாலினரும் கற்றுச் செய்ய வேண்டிய மேன்மையான ஆசனம் இதுவாகும்.
செய்முறை ; (a)முதலில் உடலைத் தளர்த்தி நிமிர்ந்து நேராக சிறிது நேரம் நிற்க வேண்டும்.
(b) விரைப்பாக முதுகுப் பகுதி தரையில் படும்படிக்கு படுத்துக் கொள்ள வேண்டும்.
(c) தலையில் இருந்து ஆசனப் பகுதி வரை மேலெழும்பாத வண்ணம் கால்களை மேலே தூக்க வேண்டும்.
(d) பின்பு இருகால்களையும் கைகளைக் கொண்டு வளைத்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். படம் c, d ஐப் பார்த்து அதைப் போல செய்யவும்.
(e) அப்படியே படுத்த நிலையில் இருந்து மெல்ல எழுந்து அமர வேண்டும். ஆசனப் பகுதி தரையில் இருக்க வேண்டும். கைகளால் கால்களை வளைத்துப் பிடித்திருக்க வேண்டும். கால்கள் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். இந்நிலையில் நெற்றியை கால்களுக்கு அருகில் கொண்டு வர வேண்டும்.
(f) அப்படியே மெதுவாகப் பின்புறம் சாய்ந்து முதுகு தரையில் படும்படியும், தலையை தரையில் படும்படியும் படுத்துக் கொள்ள வேண்டும். கால்களும், கைகளும் அதே நிலையில்தான் இருக்க வேண்டும். அப்படியே கால்களை வளைத்து தலையின் பின்புறம் வருமாறு செய்து கால் விரல்கள் தரையில் படும்படி செய்ய வேண்டும்.
(g) பிறகு மெதுவாக முன்புறமாக உருள வேண்டும். இப்போது பாதங்களின் பின்பகுதி தரையில் படும்படி முன்புறமாக கால்கள் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும். e, f, g, மூன்று நிலைகளிலும் கால்களை கைகளால் வளைத்துப் பிடித்தபடியேதான் இருக்க வேண்டும். நெற்றியும் முட்டுப் பகுதிக்கருகில் ஒட்டியபடிதான் இருக்க வேண்டும். எடுக்கவே கூடாது. f, g என்ற இரு நிலைகளையும் உருளுதல் முறையில்(முன்னும், பின்னும்) மீண்டும் மீண்டும் முடிந்த அளவு செய்ய வேண்டும். படங்களைப் பார்த்தால் தெளிவாகப் புரியும்.
(h) தேவையான அளவு செய்த பிறகு பழைய படியும் "e" நிலைக்கு வர வேண்டும்.
(i) பிறகு மெதுவாக கைகளை விடுவித்து, கால்களை நீட்டி படம் ''b '' ல் காட்டிய படி தளர்வாகப் படுத்துக் கொண்டு, உடலுக்குள் ஏற்படும் மாற்றங்களை மனதால் கூர்ந்து கவனிக்க வேண்டும்.(relaxation)
இந்த ஆசனம் இல்வாழ்விற்கும் சரி, தவ வாழ்வுக்கும் சரி மிகுந்த பயனளிக்கும் ஆசனமாகும். முறைப்படி குரு மூலமாகக் கற்று மேன்மையடையும் படிக்கு வாழ்த்துகிறேன். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
குரு வாழ்க. குரு நன்றாய் வாழ்க. குருவே துணை.
No comments:
Post a Comment