Friday, March 28, 2014

சூரிய நமஸ்காரம்

Photo: சமயங்கள், மதங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன் மனிதன் இயற்கையைக் கடவுளாக வணங்கினான் என்றும். அதிலும் சூரியனே முக்கியத்துவம் பெற்றிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த காலத்தில் வாழ்ந்த மகான்கள் கடைபிடித்ததே சூரிய நமஸ்காரம் என்றும், அதுவே யோகாசனத்தின் அடிப்படை என்றும் சொல்வதுண்டு. ஆனால் சிவ பெருமானே 84 இலட்சம் ஆசனங்களைத் தந்தருளினார் என்ற கருத்தும் உண்டு. எது எப்படியோ, சிவபெருமான் தந்ததாக இருந்தாலும், ஆதிகால மகான்கள் தந்ததாக இருந்தாலும் அல்லது ஆதிகால மகான்களுக்கு சிவபெருமான் தந்ததாக இருந்தாலும் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சூரிய நமஸ்காரம் என்பது மிகவும் பழமையான ஓர் ஆசனம் என்பது. 
ஒரு மாபெரும் விஞ்ஞானி சொன்னாராம், நாம் கடற்கரை ஓரத்தில் கிடக்கும் கூழாங்கற்களையும், சிப்பிகளையும் கண்டெடுத்துவிட்டுப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்கெதிரே உண்மை என்னும் மாபெரும் சமுத்திரம் பல இரகசியங்களைக் கொண்டிருக்கிறது என்று. எவ்வளவு சத்தியமான வார்த்தை. எனக்கு மறந்துவிட்டது. அனேகமாக ஐசக் நியூட்டன் அவர்கள் சொன்னதாக இருக்கும் என நினைக்கிறேன். சூக்குமங்களையும் இரகசியங்களையும் அறிவின் உச்சிக்குச் சென்றால்தான் காணமுடியும். நம் மூளையின் எல்லா அறைகளையும் திறந்து பிராணனை நிரப்பினால்மட்டுமே, அதி சூட்சுமமான இரகசியங்களைக் காணமுடியும். அதுவரை, அவர் சொன்னார், இவர் சொன்னார், அதுதான் சரி, இதுதான் சரி என்று படித்தும், கேட்டும், யூகித்தும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான். நேற்று ஒரு விஞ்ஞானி சொன்னதை எல்லோரும் சரி என்பார்கள். இன்று அதற்கு வேறொருவர் மாற்றுக் கருத்தையும் ஆதாரத்தையும் முன் வைப்பார். பல இலட்சம் ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத விஷயங்களையெல்லாம் கடந்த நூற்றாண்டில் கண்டு பிடித்து விட்டார்களாம். அண்டத்திலிருந்து அணு வரை எதையும் விட்டு வைக்காமல் விளக்கிவிட்டுச் சென்றனர் எம் முன்னோர்கள். அவர்கள் கண்டுபிடித்ததனாலோ, அதை விளக்கிச் சென்றதாலோ இந்த உலகுக்கு எந்த பங்கமும் ஏற்படவில்லை. ஆனால் நீங்கள் கடுகைக் கண்டுபிடிப்பதற்குள்ளேயே உலகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றீர்கள் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
இயற்கையோடு இயற்கையாக, இறைவனோடு இறனைவனாக, மனிதன் மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத்தந்தது தமிழினத்தின் முன்னோடிகள் தான். இன்றைக்கு விஞ்ஞான முன்னேற்றம் என்ற போதையில் நீங்கள் செய்திருக்கும் இயற்கை விரோதப் போக்கால் உங்களையும், இந்த உலகத்தையும் அந்தக் கடவுளே வந்தால் கூட இனி காப்பாற்ற முடியாது என்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
நம் முன்னோர்கள் அதிகாலையிலேயே குளித்துவிட்டு மந்திரங்களுடன் சூரியநமஸ்காரம் செய்துவிட்டுத்தான் மற்ற காரியங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள். அதனால்தான் அவர்கள் நீண்ட ஆயுளோடும், உடல் நலத்தோடும் வாழ்ந்திருக்கிறார்கள். கடந்த ஆயிரம் வருடங்களாக இந்தப் பழக்கம் படிப்படியாகக் குறைந்து ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் மட்டுமே செய்யும் விஷயமாக மாறிப் போனது. தற்போது இதன் மகத்துவமும், இதன் வரலாறும் தோண்டி எடுக்கப்பட்டு, இப்போது இதை மேல்நாட்டவர்கள்கூட நேர்த்தியாகக் கடைபிடிக்கிற அளவுக்கு வளர்ந்து விட்டது. சூரிய நமஸ்காரத்தை நேர்த்தியாகச் செய்து வந்தால் நம் உடலின் நாடிகள் சரிவர இயங்கி, இரத்த ஓட்டம் சீராக நடந்து, நோய், நொடி இல்லாமல் ஆரோக்யமாக வாழலாம். மாணவப் பருவத்திலிருந்தே இதைக் கடைபிடித்து வந்தால் அவர்கள் இந்த உலகுக்கு ஒளியாக விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த சூரிய நமஸ்காரத்தை செய்யும் முறை,
நேராக, பாதங்களும், முழங்கால்களும் ஒன்று சேர சூரியனைப் பார்த்து நிமிர்ந்து நிற்க வேண்டும். இது ஆரம்ப நிலை.
1. சூரியனைப் பார்த்தபடி உள்ளங்கைகளைக் கூப்பி மார்புக்கு நேரே பெருவிரல்கள் மார்பைத் தொடும் விதமாக வைத்துக்கொண்டு, நிமிர்ந்து நின்று கொண்டு ஆழ்ந்த மூச்சொன்றை உள்ளே இழுக்கவும்.
2. மூச்சை விடாமல் உள்ளங்கைகளை கூப்பியபடியே தலைக்கு மேல் தூக்கியபடி நிற்க வேண்டும். கைகள் இரண்டும் காதை ஒட்டியபடி இருக்க வேண்டும். மூச்சை அப்படியே சிறிது நேரம் அடக்கியபடி நிற்க வேண்டும். 
3. மெதுவாக மூச்சை மூக்கினால் வெளியே விட்டுக் கொண்டே, முழங்கால்களை மடக்காமல், இடுப்பை முன் புறமாக வளைத்து உள்ளங்கைகளால் தரையைத் தொட வேண்டும். ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். முடிந்த வரை முயற்சிக்கலாம். பழகப் பழகச் சரியாகும். நெற்றியினாலாவது, மூக்கு நுனியினாலாவது முழங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும். மூச்சை முழுவதுமாக வெளியே விட வேண்டும். 
4. மூச்சை மெதுவாக உள்ளே இழுத்தபடி, வலது கையை எடுக்காமல் பின்னால் தள்ளி, இடது காலை மடக்கி, தலையை கூடிய மட்டும் நிமிர்த்தி, மூச்சை அடக்கி சிறிது நேரம் இருக்கவும்.
5. மூச்சை விடாமல், முழங்கைகளை மடக்காது, இடது காலையும் பின்தள்ளி, உடலின் பாரம் முழுவதும் கால் விரல்களிலும், உள்ளங்கைகளிலும், மார்பிலும், நெற்றியிலும் பரவியிருக்குமாறு, இந்த பகுதிகள் அனைத்தும் தரையில் தொட்டபடி இருக்க, இப்போது மூச்சை மெதுவாக முழுவதும் வெளியே விட வேண்டும்.
6. சென்ற நிலையில் இருந்து மார்பை சற்று மேலே உயர்த்தி மூச்சை நன்றாக உள்ளிழுக்கவும்.
7. இப்போது உடல் முழுவதும் குனிந்த நிலையில் மாற்றிக் கொண்டு மூச்சை அடக்கிய நிலையில் இருக்கவும். உள்ளங்கைகள் தரையில் தொட்டபடியநே இருக்கட்டும்.
8. இரு கால்களையும் நீட்டி, கைகள் இரண்டையும் பூமியில் பதியும் படி செய்து, இடது காலை மடிக்கவும். இப்போதும், மூச்சை வெளியே விடாமல் கொஞ்சம் உள் இழுக்கவும்.
9. வலது கால் மற்றும், இடது கால்களை ஒன்றாக வைத்து, குனிந்து பூமியைத் தொட்டபடி மூச்சை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்.
10. முதல் நிலையைப் போல கும்பிடும் நிலையில் நின்று கொண்டு, மெதுவாக மூச்சை இழுத்து கொஞ்சம் வைத்திருந்து மெதுவாக வெளியே விடவும். இப்போது சூரிய நமஸ்காரம் பூரணமடையும். 
இந்தப் பயிற்சியினை அதிகாலையில் சூரிய உதய காலத்தில் செய்ய வேண்டும். குரு மூலமாக கற்றுக் கொண்டால்தான் தவறில்லாமல் செய்ய முடியும். மந்திர உச்சரிப்புடன் செய்வது மிகச் சிறப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியினால் சிறப்புப் பிராணவாயு என்றழைக்கப்படும் ஓசோன் காற்று அதிகம் கிடைக்கும். நுரையீரலின் செயல்பாடு சிறப்படையும். நரம்பு மண்டலங்கள் நன்றாக இயங்கும். தசைகள் வலிமை அடையும். உடல் உருண்டு, திரண்டு, கட்டாகி அழகு தரும். இதை இடைவிடாது செய்து வருபவர் வயது 120 என்பது உறுதி. இதை 11 தடவை முதல் 108 முறை செய்கிறவர்கள் கூட உண்டு. இந்த உலகுக்கே ஒளியாக விளங்கும் சூரிய பகவான் உங்கள் ஆன்ம ஒளி பிரகாசிக்க அருள் புரிவாராக.
வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்கவளமுடன்.
சமயங்கள், மதங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன் மனிதன் இயற்கையைக் கடவுளாக வணங்கினான் என்றும். அதிலும் சூரியனே முக்கியத்துவம் பெற்றிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த காலத்தில் வாழ்ந்த மகான்கள் கடைபிடித்ததே சூரிய நமஸ்காரம் என்றும், அதுவே யோகாசனத்தின் அடிப்படை என்றும் சொல்வதுண்டு. ஆனால் சிவ பெருமானே 84 இலட்சம் ஆசனங்களைத் தந்தருளினார் என்ற கருத்தும் உண்டு. எது எப்படியோ, சிவபெருமான் தந்ததாக இருந்தாலும், ஆதிகால மகான்கள் தந்ததாக இருந்தாலும் அல்லது ஆதிகால மகான்களுக்கு சிவபெருமான் தந்ததாக இருந்தாலும் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சூரிய நமஸ்காரம் என்பது மிகவும் பழமையான ஓர் ஆசனம் என்பது.
ஒரு மாபெரும் விஞ்ஞானி சொன்னாராம், நாம் கடற்கரை ஓரத்தில் கிடக்கும் கூழாங்கற்களையும், சிப்பிகளையும் கண்டெடுத்துவிட்டுப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்கெதிரே உண்மை என்னும் மாபெரும் சமுத்திரம் பல இரகசியங்களைக் கொண்டிருக்கிறது என்று. எவ்வளவு சத்தியமான வார்த்தை. எனக்கு மறந்துவிட்டது. அனேகமாக ஐசக் நியூட்டன் அவர்கள் சொன்னதாக இருக்கும் என நினைக்கிறேன். சூக்குமங்களையும் இரகசியங்களையும் அறிவின் உச்சிக்குச் சென்றால்தான் காணமுடியும். நம் மூளையின் எல்லா அறைகளையும் திறந்து பிராணனை நிரப்பினால்மட்டுமே, அதி சூட்சுமமான இரகசியங்களைக் காணமுடியும். அதுவரை, அவர் சொன்னார், இவர் சொன்னார், அதுதான் சரி, இதுதான் சரி என்று படித்தும், கேட்டும், யூகித்தும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான். நேற்று ஒரு விஞ்ஞானி சொன்னதை எல்லோரும் சரி என்பார்கள். இன்று அதற்கு வேறொருவர் மாற்றுக் கருத்தையும் ஆதாரத்தையும் முன் வைப்பார். பல இலட்சம் ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத விஷயங்களையெல்லாம் கடந்த நூற்றாண்டில் கண்டு பிடித்து விட்டார்களாம். அண்டத்திலிருந்து அணு வரை எதையும் விட்டு வைக்காமல் விளக்கிவிட்டுச் சென்றனர் எம் முன்னோர்கள். அவர்கள் கண்டுபிடித்ததனாலோ, அதை விளக்கிச் சென்றதாலோ இந்த உலகுக்கு எந்த பங்கமும் ஏற்படவில்லை. ஆனால் நீங்கள் கடுகைக் கண்டுபிடிப்பதற்குள்ளேயே உலகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றீர்கள் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
இயற்கையோடு இயற்கையாக, இறைவனோடு இறனைவனாக, மனிதன் மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத்தந்தது தமிழினத்தின் முன்னோடிகள் தான். இன்றைக்கு விஞ்ஞான முன்னேற்றம் என்ற போதையில் நீங்கள் செய்திருக்கும் இயற்கை விரோதப் போக்கால் உங்களையும், இந்த உலகத்தையும் அந்தக் கடவுளே வந்தால் கூட இனி காப்பாற்ற முடியாது என்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
நம் முன்னோர்கள் அதிகாலையிலேயே குளித்துவிட்டு மந்திரங்களுடன் சூரியநமஸ்காரம் செய்துவிட்டுத்தான் மற்ற காரியங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள். அதனால்தான் அவர்கள் நீண்ட ஆயுளோடும், உடல் நலத்தோடும் வாழ்ந்திருக்கிறார்கள். கடந்த ஆயிரம் வருடங்களாக இந்தப் பழக்கம் படிப்படியாகக் குறைந்து ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் மட்டுமே செய்யும் விஷயமாக மாறிப் போனது. தற்போது இதன் மகத்துவமும், இதன் வரலாறும் தோண்டி எடுக்கப்பட்டு, இப்போது இதை மேல்நாட்டவர்கள்கூட நேர்த்தியாகக் கடைபிடிக்கிற அளவுக்கு வளர்ந்து விட்டது. சூரிய நமஸ்காரத்தை நேர்த்தியாகச் செய்து வந்தால் நம் உடலின் நாடிகள் சரிவர இயங்கி, இரத்த ஓட்டம் சீராக நடந்து, நோய், நொடி இல்லாமல் ஆரோக்யமாக வாழலாம். மாணவப் பருவத்திலிருந்தே இதைக் கடைபிடித்து வந்தால் அவர்கள் இந்த உலகுக்கு ஒளியாக விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த சூரிய நமஸ்காரத்தை செய்யும் முறை,
நேராக, பாதங்களும், முழங்கால்களும் ஒன்று சேர சூரியனைப் பார்த்து நிமிர்ந்து நிற்க வேண்டும். இது ஆரம்ப நிலை.
1. சூரியனைப் பார்த்தபடி உள்ளங்கைகளைக் கூப்பி மார்புக்கு நேரே பெருவிரல்கள் மார்பைத் தொடும் விதமாக வைத்துக்கொண்டு, நிமிர்ந்து நின்று கொண்டு ஆழ்ந்த மூச்சொன்றை உள்ளே இழுக்கவும்.
2. மூச்சை விடாமல் உள்ளங்கைகளை கூப்பியபடியே தலைக்கு மேல் தூக்கியபடி நிற்க வேண்டும். கைகள் இரண்டும் காதை ஒட்டியபடி இருக்க வேண்டும். மூச்சை அப்படியே சிறிது நேரம் அடக்கியபடி நிற்க வேண்டும்.
3. மெதுவாக மூச்சை மூக்கினால் வெளியே விட்டுக் கொண்டே, முழங்கால்களை மடக்காமல், இடுப்பை முன் புறமாக வளைத்து உள்ளங்கைகளால் தரையைத் தொட வேண்டும். ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். முடிந்த வரை முயற்சிக்கலாம். பழகப் பழகச் சரியாகும். நெற்றியினாலாவது, மூக்கு நுனியினாலாவது முழங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும். மூச்சை முழுவதுமாக வெளியே விட வேண்டும்.
4. மூச்சை மெதுவாக உள்ளே இழுத்தபடி, வலது கையை எடுக்காமல் பின்னால் தள்ளி, இடது காலை மடக்கி, தலையை கூடிய மட்டும் நிமிர்த்தி, மூச்சை அடக்கி சிறிது நேரம் இருக்கவும்.
5. மூச்சை விடாமல், முழங்கைகளை மடக்காது, இடது காலையும் பின்தள்ளி, உடலின் பாரம் முழுவதும் கால் விரல்களிலும், உள்ளங்கைகளிலும், மார்பிலும், நெற்றியிலும் பரவியிருக்குமாறு, இந்த பகுதிகள் அனைத்தும் தரையில் தொட்டபடி இருக்க, இப்போது மூச்சை மெதுவாக முழுவதும் வெளியே விட வேண்டும்.
6. சென்ற நிலையில் இருந்து மார்பை சற்று மேலே உயர்த்தி மூச்சை நன்றாக உள்ளிழுக்கவும்.
7. இப்போது உடல் முழுவதும் குனிந்த நிலையில் மாற்றிக் கொண்டு மூச்சை அடக்கிய நிலையில் இருக்கவும். உள்ளங்கைகள் தரையில் தொட்டபடியநே இருக்கட்டும்.
8. இரு கால்களையும் நீட்டி, கைகள் இரண்டையும் பூமியில் பதியும் படி செய்து, இடது காலை மடிக்கவும். இப்போதும், மூச்சை வெளியே விடாமல் கொஞ்சம் உள் இழுக்கவும்.
9. வலது கால் மற்றும், இடது கால்களை ஒன்றாக வைத்து, குனிந்து பூமியைத் தொட்டபடி மூச்சை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்.
10. முதல் நிலையைப் போல கும்பிடும் நிலையில் நின்று கொண்டு, மெதுவாக மூச்சை இழுத்து கொஞ்சம் வைத்திருந்து மெதுவாக வெளியே விடவும். இப்போது சூரிய நமஸ்காரம் பூரணமடையும்.
இந்தப் பயிற்சியினை அதிகாலையில் சூரிய உதய காலத்தில் செய்ய வேண்டும். குரு மூலமாக கற்றுக் கொண்டால்தான் தவறில்லாமல் செய்ய முடியும். மந்திர உச்சரிப்புடன் செய்வது மிகச் சிறப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியினால் சிறப்புப் பிராணவாயு என்றழைக்கப்படும் ஓசோன் காற்று அதிகம் கிடைக்கும். நுரையீரலின் செயல்பாடு சிறப்படையும். நரம்பு மண்டலங்கள் நன்றாக இயங்கும். தசைகள் வலிமை அடையும். உடல் உருண்டு, திரண்டு, கட்டாகி அழகு தரும். இதை இடைவிடாது செய்து வருபவர் வயது 120 என்பது உறுதி. இதை 11 தடவை முதல் 108 முறை செய்கிறவர்கள் கூட உண்டு. இந்த உலகுக்கே ஒளியாக விளங்கும் சூரிய பகவான் உங்கள் ஆன்ம ஒளி பிரகாசிக்க அருள் புரிவாராக.
வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்கவளமுடன்

No comments:

Post a Comment