Friday, March 28, 2014

பூணூல் மனிதனாகப் பிறந்த யாரும் அணியத்தக்கதேயாகும்

Photo: உலகத்தில் உள்ள ஜனங்களில் சிலர், பிராமண க்ஷத்திரிய வைசிய இம்மூன்று வருணத்தவர்கள் மட்டுமே பூணூல் போடலாமென்றும், சூத்திரர்கள் போடக்கூடாதென்றும் சொல்வார்கள். ஆனால் இந்தப் பூணூல் மனிதனாகப் பிறந்த யாரும் அணியத்தக்கதேயாகும். மன்னர்கள் காலங்களில் சூத்திர வருணத்தினர் கடுமையான உழைப்பின் காரணத்தாலும், அதற்கேற்ற அவர்கள் வாழ்க்கை சூழலின் காரணமாகவும் சரியான ஆசாரத்துடன் இருக்க முடியாத காரணத்தினால் விவாக காலத்திலும், பிதுர் தர்ப்பணங்கள் செய்யும் போதும், உத்திர கிரியைகள் செய்யும் போதும் பூணூல் அணிந்திருக்கிறார்கள். இதன் காரணமானது என்னவென்றால் பூணூல் என்பது கர்மத்திற்கே அன்றி ஞானத்துக்கல்ல என்பதாம். ஆனால் இந்தப் பூணூல் அணிபவர்கள் உபதேஷம் பெற்று செய்யும் சந்தியா வந்தனம் என்பது ஞானத்திற்கேயாகும். சந்தியா வந்தனம் என்பது பிராணாயாமமே ஒழிய மூக்கின் மேல் விரலை வைத்துக் கொண்டு மூச்சை இழுப்பதும், வெளியே விடுவதுமாய் மனத்திற்குள் காயத்ரீ மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பதல்ல. அப்படி செய்பவர்களை கர்ம பிராமணர்கள் என்பார்கள். 

அதற்கான காலமும், இடமும், முறையும் தப்பாமல் சரியாகச் செய்பவர்களே ஒழுக்கமுடையவர்கள். தவத்தில் சிறந்த பெரியோர்களும், தபோதனர்களும், முனிவர்களும், தேவர்களும், ஒழுக்கமுடைய அந்தணர்களும் அல்லாமல் மற்ற எந்த தாழ்ந்த ஜாதியினராக இருந்தாலும் ஆசாரத்துடன் இருந்து  தெய்வ பக்தியில் சிறந்த சந்தியா வந்தன மந்திரங்களைக் கற்று, கர்ம விதிப்படி சந்தியா வந்தனம் செய்து வந்தார்களேயானால், அவர்களும் முதலில் கர்ம்ப் பிராமணர்களாகி பிறகு ஞானப் பிராமணனாகி விடுவார்கள். சந்தியா வந்தனம் செய்பவர்கள் காயத்ரீ மந்திரம் உச்சரிப்பது முறை. உடலைக் கொண்டு மூன்று வழிகளில் மூச்சை உபயோகித்து உச்சரிக்கும் மந்திரம் காயத்ரீ மந்திரம். அவ்வாறு செய்வதினால் என்ன நன்மை உண்டாகும் ? 

காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கச் செல்லும் வரை மனிதன் கணக்கில்லாத எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருக்கிறான். அவற்றையெல்லாம் எண்ணிச் சொல்ல முடியாது என்ற காரணத்தினால் அவற்றின் தொகுப்பையே மனம் என்று சொன்னார்கள். சிந்தை என்றும் சொல்வார்கள். புத்தி, சித்தம் போன்ற இவற்றிற்கெல்லாம் பலப்பல விளக்கங்கள் இருந்த போதிலும் அடிப்பையாக இருப்பது மனமாகிய எண்ணங்களே. இந்த எண்ணம் எங்கே இருந்து பிறக்கிறது என்றால், மூச்சிலிருந்தேயாகும். யோக பலத்தினால் மூச்சின் வேகத்தையும் கொழுப்பையும் அடக்கி விட்டால் எண்ணங்கள் உதிக்க வழியே இல்லை. எல்லா விஷயங்களுக்கும், ஆசைகளுக்கும் எண்ணங்களே காரணமாகத் திகழ்கிறது. எண்ணங்கள் உதிக்காத போது ஆசைகளும் உண்டாகமாட்டா. எண்ணங்களை நாசம் செய்ய யோகம் ஒன்றிற்கே அதிகாரம் உண்டு. மற்ற பூஜைகளாலும், மந்திர ஜெபங்களாலும் எண்ணங்கள் நாசமடையமாட்டா. 

அவ்வாறு எண்ணங்களாகிய மனம் நாசமாகி விடும் பொழுது அவ்விடம் வெட்டவெளியாகி விடும். சித்தியடைந்த யோகிகள் பேசும் போதும், நடக்கும் போதும், வேலை செய்யும் போதும், தூங்கும் போதும் மற்ற எந்த நேரத்திலும் எந்த எண்ணங்களும் உதிக்காமல் வெட்டவெளியாகவே இருப்பர். இப்படி இருப்பதே மௌனம் என்று சொல்லப்படும். அல்லாது, வாயால் பேசாமல் பலகையில் எழுதிக் காட்டுவதும், கைகளால் சைகை மூலமாகப் பேசுவதும் மௌனமாகாது. அந்தந்த வேலைகளைச் செய்யும் காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் எந்த எண்ணமும் எண்ணாமல் சும்மா இருக்க வேண்டும். அப்படி சும்மா இருப்பதே மௌனம். இதையே சும்மா இருக்கும் சுகம் என்பர் சித்தர் பெருமக்கள். மனதை வெளியே ஓட விட்டுவிட்டு வாயை மூடிக் கொண்டிருப்பற்குப் பெயர் மௌனமல்ல. இப்படி மௌனமாக இருப்பதற்கும், சும்மா இருக்கும் சுகம் அனுபவிப்பதற்கும் ரிஷிகள் கண்ட உபாயமே ''கும்பக பிராணாயாம சந்தியா வந்தனம்.''

இதை குருமுகமாகக் கற்றுக் கொண்டால் முதலில் அரை காயத்ரீ மந்திரத்தோடு கும்பக பிராணாயாம சந்தியாவந்தனம் கற்றுத் தருவார்கள். இடது நாசி, வலது நாசி, இரண்டு நாசிகளிலும் சேர்த்து என்று மூன்று முறைகளில் மூச்சை நிறுத்தி அரை காயத்ரி மந்திரம் ஜெபம் செய்தவன் ஒரு சந்தியா வந்தனம் அல்லது ஒரு ப்ராணாயாமம் செய்தவனாகிறான். இதை ஸ்திரி, புருஷன் இரண்டு பாலினரும் செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இது நாற்பது நாட்கள் விடாமல் செய்து வர வேண்டும் அதற்குப் பிறகு ஒரு காயத்ரி மந்திர ஜப சந்தியா வந்தனம் செய்யக் கற்றுத் தருவார்கள். நாற்பது நாட்கள் செய்த பிறகு ஒன்றரை காயத்ரீ ஜெப சந்தியா வந்தனம் கற்றுத்தரப்படும். இதை அனேக மாதம் பழக்கத்தால் மூச்சை வலது நாசியில் இழுத்து நிறுத்தி ஏழு காயத்ரீ மந்திர ஜெபமும், இடது நாசியில் இழுத்து நிறுத்தி ஏழு காயத்ரீ ஜெபமும், இரண்டு நாசிகளிலும் சேர்த்து இழுத்து நிறுத்தி ஏழு காயத்ரீ மந்திர ஜெபமும் செய்ய வேண்டும். இப்படி மூவேழு இருபத்தி ஒன்று காயத்ரீ மந்திர ஜெபம் செய்வதை ஸப்த வியாஹூருதிகள் என்பர். இதையே இன்னும் பழக்கம் அதிகப்படுத்தி பதினொன்றாகச் செய்யும் போது சிரோ மந்திரம் என்பார்கள். இப்படி செய்து வரவர மூச்சின் வேகம் குறைந்து மூச்சு யோகிக்கு வசப்படும். மூச்சு வசப்பட்ட யோகிக்கு எண்ணங்களை கட்டுப்படுத்தும் வலிமை ஏற்படும். 

இப்படிப்பட்ட யோகிக்கு ஆயுளும் விசேஷமாய் வளர்ந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக இளமையுடனும், ஆரோக்யத்துடனும் வாழ்ந்திருப்பார். இதுவே கும்பக பிராணாயாம சந்தியா வந்தன இரகஸ்யம். இத்தகைய யோகிகள் இந்த ஆவணி பௌர்ணமி அன்று 1008 சமித்துகளைக் கொண்டு 1008 காயத்ரீ மந்திரம் ஜெபம் செய்து ஸோஹம் மந்திர தியானம் செய்து ஹோமங்கள் செய்வார்கள். இந்த ஹோமமானது உலக நன்மைக்காக என்றே சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த தேசமெங்கும் இன்று செய்யப்படும் ஹோமத்தால் நல்ல அதிர்வுகள் உண்டாகி நல்ல மழை பொழிந்து, பயிர்கள் செழித்து வளர்வதோடு மக்கள் வளமும், நலமும் பெற்று வாழ்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாழ்க வளமுடன். 

இந்தப் பகிர்வானது உண்மையைச் சொல்லி உணர்த்தி, நன்மையைச் செய்யும் நோக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதே அல்லாமல், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடோ, குறைவாக மதிப்பிட்டோ போடப்பட்டதல்ல. நன்றி.
உலகத்தில் உள்ள ஜனங்களில் சிலர், பிராமண க்ஷத்திரிய வைசிய இம்மூன்று வருணத்தவர்கள் மட்டுமே பூணூல் போடலாமென்றும், சூத்திரர்கள் போடக்கூடாதென்றும் சொல்வார்கள். ஆனால் இந்தப் பூணூல் மனிதனாகப் பிறந்த யாரும் அணியத்தக்கதேயாகும். மன்னர்கள் காலங்களில் சூத்திர வருணத்தினர் கடுமையான உழைப்பின் காரணத்தாலும், அதற்கேற்ற அவர்கள் வாழ்க்கை சூழலின் காரணமாகவும் சரியான ஆசாரத்துடன் இருக்க முடியாத காரணத்தினால் விவாக காலத்திலும், பிதுர் தர்ப்பணங்கள் செய்யும் போதும், உத்திர கிரியைகள் செய்யும் போதும் பூணூல் அணிந்திருக்கிறார்கள். இதன் காரணமானது என்னவென்றால் பூணூல் என்பது கர்மத்திற்கே அன்றி ஞானத்துக்கல்ல என்பதாம். ஆனால் இந்தப் பூணூல் அணிபவர்கள் உபதேஷம் பெற்று செய்யும் சந்தியா வந்தனம் என்பது ஞானத்திற்கேயாகும். சந்தியா வந்தனம் என்பது பிராணாயாமமே ஒழிய மூக்கின் மேல் விரலை வைத்துக் கொண்டு மூச்சை இழுப்பதும், வெளியே விடுவதுமாய் மனத்திற்குள் காயத்ரீ மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பதல்ல. அப்படி செய்பவர்களை கர்ம பிராமணர்கள் என்பார்கள்.

அதற்கான காலமும், இடமும், முறையும் தப்பாமல் சரியாகச் செய்பவர்களே ஒழுக்கமுடையவர்கள். தவத்தில் சிறந்த பெரியோர்களும், தபோதனர்களும், முனிவர்களும், தேவர்களும், ஒழுக்கமுடைய அந்தணர்களும் அல்லாமல் மற்ற எந்த தாழ்ந்த ஜாதியினராக இருந்தாலும் ஆசாரத்துடன் இருந்து தெய்வ பக்தியில் சிறந்த சந்தியா வந்தன மந்திரங்களைக் கற்று, கர்ம விதிப்படி சந்தியா வந்தனம் செய்து வந்தார்களேயானால், அவர்களும் முதலில் கர்ம்ப் பிராமணர்களாகி பிறகு ஞானப் பிராமணனாகி விடுவார்கள். சந்தியா வந்தனம் செய்பவர்கள் காயத்ரீ மந்திரம் உச்சரிப்பது முறை. உடலைக் கொண்டு மூன்று வழிகளில் மூச்சை உபயோகித்து உச்சரிக்கும் மந்திரம் காயத்ரீ மந்திரம். அவ்வாறு செய்வதினால் என்ன நன்மை உண்டாகும் ?

காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கச் செல்லும் வரை மனிதன் கணக்கில்லாத எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருக்கிறான். அவற்றையெல்லாம் எண்ணிச் சொல்ல முடியாது என்ற காரணத்தினால் அவற்றின் தொகுப்பையே மனம் என்று சொன்னார்கள். சிந்தை என்றும் சொல்வார்கள். புத்தி, சித்தம் போன்ற இவற்றிற்கெல்லாம் பலப்பல விளக்கங்கள் இருந்த போதிலும் அடிப்பையாக இருப்பது மனமாகிய எண்ணங்களே. இந்த எண்ணம் எங்கே இருந்து பிறக்கிறது என்றால், மூச்சிலிருந்தேயாகும். யோக பலத்தினால் மூச்சின் வேகத்தையும் கொழுப்பையும் அடக்கி விட்டால் எண்ணங்கள் உதிக்க வழியே இல்லை. எல்லா விஷயங்களுக்கும், ஆசைகளுக்கும் எண்ணங்களே காரணமாகத் திகழ்கிறது. எண்ணங்கள் உதிக்காத போது ஆசைகளும் உண்டாகமாட்டா. எண்ணங்களை நாசம் செய்ய யோகம் ஒன்றிற்கே அதிகாரம் உண்டு. மற்ற பூஜைகளாலும், மந்திர ஜெபங்களாலும் எண்ணங்கள் நாசமடையமாட்டா.

அவ்வாறு எண்ணங்களாகிய மனம் நாசமாகி விடும் பொழுது அவ்விடம் வெட்டவெளியாகி விடும். சித்தியடைந்த யோகிகள் பேசும் போதும், நடக்கும் போதும், வேலை செய்யும் போதும், தூங்கும் போதும் மற்ற எந்த நேரத்திலும் எந்த எண்ணங்களும் உதிக்காமல் வெட்டவெளியாகவே இருப்பர். இப்படி இருப்பதே மௌனம் என்று சொல்லப்படும். அல்லாது, வாயால் பேசாமல் பலகையில் எழுதிக் காட்டுவதும், கைகளால் சைகை மூலமாகப் பேசுவதும் மௌனமாகாது. அந்தந்த வேலைகளைச் செய்யும் காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் எந்த எண்ணமும் எண்ணாமல் சும்மா இருக்க வேண்டும். அப்படி சும்மா இருப்பதே மௌனம். இதையே சும்மா இருக்கும் சுகம் என்பர் சித்தர் பெருமக்கள். மனதை வெளியே ஓட விட்டுவிட்டு வாயை மூடிக் கொண்டிருப்பற்குப் பெயர் மௌனமல்ல. இப்படி மௌனமாக இருப்பதற்கும், சும்மா இருக்கும் சுகம் அனுபவிப்பதற்கும் ரிஷிகள் கண்ட உபாயமே ''கும்பக பிராணாயாம சந்தியா வந்தனம்.''

இதை குருமுகமாகக் கற்றுக் கொண்டால் முதலில் அரை காயத்ரீ மந்திரத்தோடு கும்பக பிராணாயாம சந்தியாவந்தனம் கற்றுத் தருவார்கள். இடது நாசி, வலது நாசி, இரண்டு நாசிகளிலும் சேர்த்து என்று மூன்று முறைகளில் மூச்சை நிறுத்தி அரை காயத்ரி மந்திரம் ஜெபம் செய்தவன் ஒரு சந்தியா வந்தனம் அல்லது ஒரு ப்ராணாயாமம் செய்தவனாகிறான். இதை ஸ்திரி, புருஷன் இரண்டு பாலினரும் செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இது நாற்பது நாட்கள் விடாமல் செய்து வர வேண்டும் அதற்குப் பிறகு ஒரு காயத்ரி மந்திர ஜப சந்தியா வந்தனம் செய்யக் கற்றுத் தருவார்கள். நாற்பது நாட்கள் செய்த பிறகு ஒன்றரை காயத்ரீ ஜெப சந்தியா வந்தனம் கற்றுத்தரப்படும். இதை அனேக மாதம் பழக்கத்தால் மூச்சை வலது நாசியில் இழுத்து நிறுத்தி ஏழு காயத்ரீ மந்திர ஜெபமும், இடது நாசியில் இழுத்து நிறுத்தி ஏழு காயத்ரீ ஜெபமும், இரண்டு நாசிகளிலும் சேர்த்து இழுத்து நிறுத்தி ஏழு காயத்ரீ மந்திர ஜெபமும் செய்ய வேண்டும். இப்படி மூவேழு இருபத்தி ஒன்று காயத்ரீ மந்திர ஜெபம் செய்வதை ஸப்த வியாஹூருதிகள் என்பர். இதையே இன்னும் பழக்கம் அதிகப்படுத்தி பதினொன்றாகச் செய்யும் போது சிரோ மந்திரம் என்பார்கள். இப்படி செய்து வரவர மூச்சின் வேகம் குறைந்து மூச்சு யோகிக்கு வசப்படும். மூச்சு வசப்பட்ட யோகிக்கு எண்ணங்களை கட்டுப்படுத்தும் வலிமை ஏற்படும்.

இப்படிப்பட்ட யோகிக்கு ஆயுளும் விசேஷமாய் வளர்ந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக இளமையுடனும், ஆரோக்யத்துடனும் வாழ்ந்திருப்பார். இதுவே கும்பக பிராணாயாம சந்தியா வந்தன இரகஸ்யம். இத்தகைய யோகிகள் இந்த ஆவணி பௌர்ணமி அன்று 1008 சமித்துகளைக் கொண்டு 1008 காயத்ரீ மந்திரம் ஜெபம் செய்து ஸோஹம் மந்திர தியானம் செய்து ஹோமங்கள் செய்வார்கள். இந்த ஹோமமானது உலக நன்மைக்காக என்றே சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த தேசமெங்கும் இன்று செய்யப்படும் ஹோமத்தால் நல்ல அதிர்வுகள் உண்டாகி நல்ல மழை பொழிந்து, பயிர்கள் செழித்து வளர்வதோடு மக்கள் வளமும், நலமும் பெற்று வாழ்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாழ்க வளமுடன்.

இந்தப் பகிர்வானது உண்மையைச் சொல்லி உணர்த்தி, நன்மையைச் செய்யும் நோக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதே அல்லாமல், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடோ, குறைவாக மதிப்பிட்டோ போடப்பட்டதல்ல. நன்றி.

No comments:

Post a Comment