Friday, March 28, 2014

சித்தர்

Photo: தமிழில் சித்தர்களுக்கு பிடிக்காத வார்த்தை, ''முடியாது'' என்பதுதான். அவர்களால் முடியாதது என்பதே இல்லை எனலாம். காரணம் தேடலும், முயற்சியும், உழைப்பும், ஒழுக்கமும்தான். அதனால்தான் எல்லா துறைகளிலும் அவர்களின் பங்களிப்பு நிலைத்திருக்கிறது. அவர்கள் காலத்திலும், அதற்குப் பிறகும் அவர்களை விமர்சனம் செய்தவர்கள், காட்டுவாசி என்றும் கஞ்சா குடியன் என்று ஏளனம் செய்தவர்கள், அவர்களுடைய அருமையான ஓலைச்சுவடிகளை தீயிட்டுக் கொளுத்திய சமயவாதிகளின் வம்சத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் சித்தர்களை ஏற்றுக் கொண்டு மலைகளிலும், குகைகளிலும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கேட்டால், ஜாதி, மதங்கள் எல்லாம் கடந்து பெரும்பாலான மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். 
மூலிகை வளமே இல்லாத இடத்தில் வாழ்பவர்களுக்கு அந்த மூலிகையிலுள்ள தனிமங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார்கள். அதை அவர்கள் அந்த மூலிகையின் உப்பை எடுப்பது என்கிறார்கள். முதலில் அந்த மூலிகையை காப்பு கட்டி, பூஜை செய்து தேவைப்படும் அளவு பறித்து எடுத்து நிழலில் நன்கு காயவைக்க வேண்டும். பிறகு அதை தீ வைத்து எரித்துச் சாம்பலாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அந்தச் சாம்பல் எடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, சாம்பல் ஒரு பங்கு என்றால் நாலு பங்கு சுத்தமான தண்ணீரை அதில் ஊற்றி நன்கு பிசைந்து கலக்க வேண்டும். பிறகு அந்த தண்ணீரை ஒரு இடத்தில் அசையாமல் வைத்து விட வேண்டும். தூசி விழாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குறைந்தது ஆறு மணி நேரத்துக்குப் பிறகு அந்தத் தண்ணீர் தெளிந்தவுடன், அதைக் கலங்காமல் வேறொரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இதைப் போல மூன்று முறைச் செய்து அந்த தெளிந்த  தண்ணீரை மட்டும் சேகரித்து அதை ஒரு சில்வர் பாத்திரத்தில் ஊற்றி வெயிலில் வைத்து விட வேண்டும். பத்து, பதினைந்து நாட்கள் கழித்துப் பார்த்தீர்களானால், அந்தத் தண்ணீர் முழுவதும் வற்றி அந்தப் பாத்திரத்தின் அடியில் உப்பு படிந்திருக்கும். இதுவே அந்த மூலிகையில் உள்ளத் தனிமமாகும். இந்த உப்பை நோயின் வீரியத்துக்குத் தகுந்தபடி இரண்டு அல்லது நான்கு மிளகு அளவு  கொடுத்து வர நோய் குணமாகும். இதையே வெயிலில் வைக்காமல் அடுப்பில் காய்ச்சியும் உடனடியாக உப்பு எடுக்கலாம். ஆனால் உப்பின் வீரியம் குறைவாக இருக்கும். இதற்கு சாதரண தண்ணீரைவிட பனித்துளிகளை சேகரித்து அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தினால், உப்பு அதிக வீரியமுள்ளதாக இருக்கும். அதிகாலையில் புல்தரையின் மேல் சுத்தமான பருத்தித் துணிகளை விரித்து வைத்து பனிநீரைச் சேகரிக்கலாம். 
மனித குலத்துக்கு மகத்தான நன்மைகளைச் செய்து நம் தேசத்துக்கு ''புண்ணிய பூமி'' என்கிற பெருமையைச் சேர்த்த சித்தர்களை வணங்கி உய்வோமாக.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.தமிழில் சித்தர்களுக்கு பிடிக்காத வார்த்தை, ''முடியாது'' என்பதுதான். அவர்களால் முடியாதது என்பதே இல்லை எனலாம். காரணம் தேடலும், முயற்சியும், உழைப்பும், ஒழுக்கமும்தான். அதனால்தான் எல்லா துறைகளிலும் அவர்களின் பங்களிப்பு நிலைத்திருக்கிறது. அவர்கள் காலத்திலும், அதற்குப் பிறகும் அவர்களை விமர்சனம் செய்தவர்கள், காட்டுவாசி என்றும் கஞ்சா குடியன் என்று ஏளனம் செய்தவர்கள், அவர்களுடைய அருமையான ஓலைச்சுவடிகளை தீயிட்டுக் கொளுத்திய சமயவாதிகளின் வம்சத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் சித்தர்களை ஏற்றுக் கொண்டு மலைகளிலும், குகைகளிலும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கேட்டால், ஜாதி, மதங்கள் எல்லாம் கடந்து பெரும்பாலான மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
மூலிகை வளமே இல்லாத இடத்தில் வாழ்பவர்களுக்கு அந்த மூலிகையிலுள்ள தனிமங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார்கள். அதை அவர்கள் அந்த மூலிகையின் உப்பை எடுப்பது என்கிறார்கள். முதலில் அந்த மூலிகையை காப்பு கட்டி, பூஜை செய்து தேவைப்படும் அளவு பறித்து எடுத்து நிழலில் நன்கு காயவைக்க வேண்டும். பிறகு அதை தீ வைத்து எரித்துச் சாம்பலாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அந்தச் சாம்பல் எடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, சாம்பல் ஒரு பங்கு என்றால் நாலு பங்கு சுத்தமான தண்ணீரை அதில் ஊற்றி நன்கு பிசைந்து கலக்க வேண்டும். பிறகு அந்த தண்ணீரை ஒரு இடத்தில் அசையாமல் வைத்து விட வேண்டும். தூசி விழாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குறைந்தது ஆறு மணி நேரத்துக்குப் பிறகு அந்தத் தண்ணீர் தெளிந்தவுடன், அதைக் கலங்காமல் வேறொரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இதைப் போல மூன்று முறைச் செய்து அந்த தெளிந்த தண்ணீரை மட்டும் சேகரித்து அதை ஒரு சில்வர் பாத்திரத்தில் ஊற்றி வெயிலில் வைத்து விட வேண்டும். பத்து, பதினைந்து நாட்கள் கழித்துப் பார்த்தீர்களானால், அந்தத் தண்ணீர் முழுவதும் வற்றி அந்தப் பாத்திரத்தின் அடியில் உப்பு படிந்திருக்கும். இதுவே அந்த மூலிகையில் உள்ளத் தனிமமாகும். இந்த உப்பை நோயின் வீரியத்துக்குத் தகுந்தபடி இரண்டு அல்லது நான்கு மிளகு அளவு கொடுத்து வர நோய் குணமாகும். இதையே வெயிலில் வைக்காமல் அடுப்பில் காய்ச்சியும் உடனடியாக உப்பு எடுக்கலாம். ஆனால் உப்பின் வீரியம் குறைவாக இருக்கும். இதற்கு சாதரண தண்ணீரைவிட பனித்துளிகளை சேகரித்து அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தினால், உப்பு அதிக வீரியமுள்ளதாக இருக்கும். அதிகாலையில் புல்தரையின் மேல் சுத்தமான பருத்தித் துணிகளை விரித்து வைத்து பனிநீரைச் சேகரிக்கலாம்.
மனித குலத்துக்கு மகத்தான நன்மைகளைச் செய்து நம் தேசத்துக்கு ''புண்ணிய பூமி'' என்கிற பெருமையைச் சேர்த்த சித்தர்களை வணங்கி உய்வோமாக.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment