Saturday, March 29, 2014

இதை நான் சொல்லவில்லை, கீதை சொல்கிறது.

Photo: புணர்வும், போக்கும், வரவும் உள்ளவற்றை நிறை பொருள் என்று சொல்வதற்கில்லை. தன்மயமாய் நிறைவாகப் பூரணமாகி நிற்கின்ற வஸ்துவையே பூரணன் என்றழைக்கிறோம். நமக்கு வாழ்வில் திருப்பியே ஏற்படாமல் போவதற்கான காரணம் என்னவென்றால், பிரபஞ்ச வாழ்வென்பது குறைவு உடையதாகும். பிறப்பிலிருந்து இறப்புவரை குறைவை நிறைவு செய்வதே இடைவிடாத பணியாக இருக்கிறது. இந்நிலையையே வாழ்க்கை என்று சொல்கிறோம். நம் உண்மையான இயல்பு பூரணமே என்பதால் இந்தக் குறைவுபட்ட பிரபஞ்ச வாழ்வில் நமக்கு திருப்பதி ஏற்படுவதே இல்லை. இடைவிடாமல் செய்யப்படும் நம் வினைகள் யாவும் பூரணத்தை அதாவது நிறைவை அடைவதாற்காகத்தான். ஆனால், ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற வேண்டும் என்கிற பொழுது குறை என்பது நிரந்தரமாகி விடுகிறது. இதையே போக்கும், வரவும் என்று சொல்கிறார்கள். எனவே பிரபஞ்ச வாழ்வைப் பொருத்த வரை வினை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகி விடுகிறது. வினைகளாலேதான் நாம் நிறைவடைய முடியாமல் போகிறது. அது எப்படி என்றால்...  

கடலில் பயணம் செய்கின்ற பாய்மரக் கப்பலின் பாயை அந்த பாயைக் கட்டுவதற்குப் பயன்படும் மூங்கில் கம்புகளே கிழித்து விடுவது போல நம் வினைகளே நம்மை நிறைவடைய விடாமல், கரை சேர விடாமல் செய்கின்றன. குறைவுள்ள மனதினால் புத்தி தெளிவின்மை ஏற்பட்டு விடுகிறது. இந்த புத்தித் தெளிவின்மையால் அஞ்ஞானமாகிய அறியாமை என்கிற குணம் ஏற்பட்டு பிறவியைக் கடைத்தேற்ற முடியாமல் போய் விடுகிறது. இதனால் தான் வினைகளில் உழன்று கொண்டேயிருக்கும் மனிதனை கர்ம சொரூபி என்றும். ஜீவாத்மாவை கர்மசொரூபம் என்றும் மொழிகிறார்கள். கர்மம் என்கிற பதத்தில் உள்ள ''ர்'' என்கிற எழுத்தில் உள்ள புள்ளியை எடுத்து விட்டால் காமம் என்று மாறிவிடுகிறது. அதாவது காமம் என்றால் இச்சை என்பதே உண்மையான பொருள். குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு மனதில் தோன்றும் இச்சையே காமம். அந்தக் காமத்தின்  நிமித்தமே கர்மம் நிகழ்கிறது. அதுவே பரம் பொருளின் மீது இச்சை அல்லது காமம் கொள்ளும் பொழுதோ கர்மம் அழிகிறது. கடலில் கலக்கும் நதி தன் வியக்தியை இழந்து விடுவது போல பரம்பொருளில் சேரச் சேர மனம் தன் கர்ம சொரூபத்தை இழந்து கொண்டே வருகிறது. 

பிரபஞ்ச இச்சை அல்லது ஜீவபோதம் இருக்கும் வரை மனிதன் கர்ம சொரூபியாகவே இருக்கிறான். தன் செயல்களுக்குக் கர்த்தா தானே அதாவது நான் என்று எண்ணி வினைகளையும், விளைவுகளையும் வளர்த்துக் கொண்டே செல்கிறான். நிறைய மனிதர்களை, அறிவில் சிறந்தவர்களைக் கூடப் பார்க்கிறோம், பரம்பொருள் மீது நாட்டம் இருந்தாலும் கூட நான் என்ற எண்ணம் அவர்களை விட்டு விலகாமல் இருக்கிறது. ஆற்றைக் கடக்க படகில் ஏறியும் கூட அவர்கள் தங்கள் தலைச் சுமைகளை இறக்கி வைக்காமல் தலையில் சுமந்து கொண்டே இருக்கிறார்கள். பரம் பொருளின் நிலையை, ஆற்றலை உண்மையில் உணர்ந்து கொள்வார்களேயானால் அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். பரம்பொருளின் ஆற்றலாலேயே எல்லாம் நிகழ்கிறது என்று உணர்ந்து தங்கள் செயல்களையெல்லாம் இறைவன் செயல் என்று எண்ணி சுமைகளை இறைவன் கையில் ஒப்படுத்து விட்டு நிம்மதியாக இருப்பார்கள். மனம்தான் எல்லாச் சுமைகளையும் ஏற்றுக் கொண்டு சுமந்து திரிகிறது. இறைவன் திருவடியின் கீழ் சுமைகளை இறக்கி வைத்து விட்டால் மனதிற்கு விடுதலை கிடைத்து விடுகிறது. மனம் நிர்மலமாக ஆகி விடுகிறது. பரம்பொருளோடு கொள்கிற இத்தகைய இணக்கம் வினைத் தூய்மையையும், மனத் தூய்மையையும் அருளுகிறது. களங்கமில்லாதத் தூய மனம் உடையவர்கள் உண்மையை உணர்வதற்கு என்ன தடைதான் இருக்க முடியும் ? இதை நான் சொல்லவில்லை, கீதை சொல்கிறது.
புணர்வும், போக்கும், வரவும் உள்ளவற்றை நிறை பொருள் என்று சொல்வதற்கில்லை. தன்மயமாய் நிறைவாகப் பூரணமாகி நிற்கின்ற வஸ்துவையே பூரணன் என்றழைக்கிறோம். நமக்கு வாழ்வில் திருப்பியே ஏற்படாமல் போவதற்கான காரணம் என்னவென்றால், பிரபஞ்ச வாழ்வென்பது குறைவு உடையதாகும். பிறப்பிலிருந்து இறப்புவரை குறைவை நிறைவு செய்வதே இடைவிடாத பணியாக இருக்கிறது. இந்நிலையையே வாழ்க்கை என்று சொல்கிறோம். நம் உண்மையான இயல்பு பூரணமே என்பதால் இந்தக் குறைவுபட்ட பிரபஞ்ச வாழ்வில் நமக்கு திருப்பதி ஏற்படுவதே இல்லை. இடைவிடாமல் செய்யப்படும் நம் வினைகள் யாவும் பூரணத்தை அதாவது நிறைவை அடைவதாற்காகத்தான். ஆனால், ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற வேண்டும் என்கிற பொழுது குறை என்பது நிரந்தரமாகி விடுகிறது. இதையே போக்கும், வரவும் என்று சொல்கிறார்கள். எனவே பிரபஞ்ச வாழ்வைப் பொருத்த வரை வினை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகி விடுகிறது. வினைகளாலேதான் நாம் நிறைவடைய முடியாமல் போகிறது. அது எப்படி என்றால்...

கடலில் பயணம் செய்கின்ற பாய்மரக் கப்பலின் பாயை அந்த பாயைக் கட்டுவதற்குப் பயன்படும் மூங்கில் கம்புகளே கிழித்து விடுவது போல நம் வினைகளே நம்மை நிறைவடைய விடாமல், கரை சேர விடாமல் செய்கின்றன. குறைவுள்ள மனதினால் புத்தி தெளிவின்மை ஏற்பட்டு விடுகிறது. இந்த புத்தித் தெளிவின்மையால் அஞ்ஞானமாகிய அறியாமை என்கிற குணம் ஏற்பட்டு பிறவியைக் கடைத்தேற்ற முடியாமல் போய் விடுகிறது. இதனால் தான் வினைகளில் உழன்று கொண்டேயிருக்கும் மனிதனை கர்ம சொரூபி என்றும். ஜீவாத்மாவை கர்மசொரூபம் என்றும் மொழிகிறார்கள். கர்மம் என்கிற பதத்தில் உள்ள ''ர்'' என்கிற எழுத்தில் உள்ள புள்ளியை எடுத்து விட்டால் காமம் என்று மாறிவிடுகிறது. அதாவது காமம் என்றால் இச்சை என்பதே உண்மையான பொருள். குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு மனதில் தோன்றும் இச்சையே காமம். அந்தக் காமத்தின் நிமித்தமே கர்மம் நிகழ்கிறது. அதுவே பரம் பொருளின் மீது இச்சை அல்லது காமம் கொள்ளும் பொழுதோ கர்மம் அழிகிறது. கடலில் கலக்கும் நதி தன் வியக்தியை இழந்து விடுவது போல பரம்பொருளில் சேரச் சேர மனம் தன் கர்ம சொரூபத்தை இழந்து கொண்டே வருகிறது.

பிரபஞ்ச இச்சை அல்லது ஜீவபோதம் இருக்கும் வரை மனிதன் கர்ம சொரூபியாகவே இருக்கிறான். தன் செயல்களுக்குக் கர்த்தா தானே அதாவது நான் என்று எண்ணி வினைகளையும், விளைவுகளையும் வளர்த்துக் கொண்டே செல்கிறான். நிறைய மனிதர்களை, அறிவில் சிறந்தவர்களைக் கூடப் பார்க்கிறோம், பரம்பொருள் மீது நாட்டம் இருந்தாலும் கூட நான் என்ற எண்ணம் அவர்களை விட்டு விலகாமல் இருக்கிறது. ஆற்றைக் கடக்க படகில் ஏறியும் கூட அவர்கள் தங்கள் தலைச் சுமைகளை இறக்கி வைக்காமல் தலையில் சுமந்து கொண்டே இருக்கிறார்கள். பரம் பொருளின் நிலையை, ஆற்றலை உண்மையில் உணர்ந்து கொள்வார்களேயானால் அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். பரம்பொருளின் ஆற்றலாலேயே எல்லாம் நிகழ்கிறது என்று உணர்ந்து தங்கள் செயல்களையெல்லாம் இறைவன் செயல் என்று எண்ணி சுமைகளை இறைவன் கையில் ஒப்படுத்து விட்டு நிம்மதியாக இருப்பார்கள். மனம்தான் எல்லாச் சுமைகளையும் ஏற்றுக் கொண்டு சுமந்து திரிகிறது. இறைவன் திருவடியின் கீழ் சுமைகளை இறக்கி வைத்து விட்டால் மனதிற்கு விடுதலை கிடைத்து விடுகிறது. மனம் நிர்மலமாக ஆகி விடுகிறது. பரம்பொருளோடு கொள்கிற இத்தகைய இணக்கம் வினைத் தூய்மையையும், மனத் தூய்மையையும் அருளுகிறது. களங்கமில்லாதத் தூய மனம் உடையவர்கள் உண்மையை உணர்வதற்கு என்ன தடைதான் இருக்க முடியும் ? இதை நான் சொல்லவில்லை, கீதை சொல்கிறது.

No comments:

Post a Comment