சூரியனின்
சஞ்சாரத்தை வைத்து நம் முன்னோர்கள் உயிரின் இயக்கத்தைப் பற்றி ஆராய்ந்து
தெளிந்தார்கள். சந்திரனின் இயக்கம் உடலையும், மனதையும் கட்டுப்படுத்துவது.
சூரியன்தான் ஆன்மாகாரகன். சூரியன் இல்லை என்றால் சந்திரன் இல்லை.
ஆன்மாவாகிய உயிர் இல்லை என்றால் உடலும்,
மனமுமில்லை. பிரபஞ்ச சக்திகளை நம் பூமிக்கு தன் கதிர்களின் மூலம் கொண்டு
வருவது சூரியனே. சூரியன் இல்லை என்றால் எந்த உயிரினங்களோ, தாவரங்களோ
பூமியில் இருக்காது. சூரியன் கொண்டு வரும் பல்வேறு பிரபஞ்ச சக்திகளை
பூமியில் உள்ள அனைத்தும் தேவைக்கேற்பக் கிரகித்துக் கொண்டு இயங்குகின்றன.
எனவேதான் சூரியனையே கடவுளாக ஆதி தமிழர்கள் வணங்கியிருக்கிறார்கள். சூரிய
கலை, சந்திர கலை என்று மூச்சு மாறி ஓடும் போது நம் உடலின் இயக்கங்கள்
எப்படி மாறியமைகின்றதோ, அது போல சூரியன் உதித்து தோற்றத்தில் இருக்கும்
பொழுது ஒரு விதமாகவும், மறைந்து விடும் பொழுது வேறு விதமாகவும்
பஞ்சபூதங்களின் சூக்கும இயக்கங்கள் மாறி அமைகின்றன. இந்த அடிப்படையிலேதான்
சிருஷ்டியின் இயக்கம் பூமியில் நடை பெறுகிறது. நம் உடலில் பகல் முழுவதும்
உழைப்பு, உணவு போன்ற இயக்கங்கள் நடக்கின்றன. இரவு ஓய்வு மற்றும் சீரமைப்பு
பணிகள், கழிவுகளை பிரித்தெடுத்தல் போன்ற பணிகள் நடப்பது போல, பூமியிலும்
சூரியனை மையமாகக் கொண்டு இத்தகைய பணிகள் சூக்குமமாக நடந்து
கொண்டிருக்கின்றன. இத்தகைய இயக்கங்களுக்குத் தேவையான அடிப்படை ஆதார
சக்தியான பிரபஞ்ச சக்தியை பூமிக்குக் கொண்டு வருவது சூரியனே. அது மறையும்
பொழுது சந்திரன் ஓரளவு சூரியன் இல்லாத குறையை நிவர்த்தி செய்கிறது.
பகல் முழுவதும் சூரியனின் சஞ்சாரத்தால் பூமி வெப்பமடைகிறது. அந்த வெப்பம் சூரியன் மறைந்த பிறகு அதிகாலை நாலு மணி அளவில்தான் குறைந்து பூமி குளிரும். வெப்பம் அதிகமாக இருக்கும்போது பூமியின் காற்று மண்டலத்தில் உள்ள பிராண சக்தி (Oxygen) விட குளிரும் பொழுது அதன் மூலக் கூறமைப்பு அதிகமாகி ஓசோனாக இருக்கும். நம் பிராண சக்தியானது சாதாரண நிலையில் இருப்பதை விட ஓசோனாக இருக்கும்போதுதான் மிகவும் சக்தியளிப்பதாக இருக்கும். எனவே, அதிகாலைப் பொழுதில் குளிர்ச்சியான தன்மையால் நம் பூமியின் நிலப்பரப்பில் அதிக அளாவில் ஓசோன் பிராண வாய்வு இருக்கும். இது சூரியன் எழும்பியதும் இந்நிலை மாறிவிடும். அதிகாலை 4.30 மணிக்கு நம் பெருங்குடலும், நுரையீரலும் புத்துணர்வு பெற்று செயல்படத் துவங்கும் காலமாக விஞ்ஞானம் சொல்கிறது. அந்த நேரத்தில் நம் பூமிப் பரப்பில் அதிக ஓசோன் வாய்வு கூடியிருக்கும் பொழுது நாம் விழித்து, காலைக் கடன் முடித்து நாம் யோகப் பயிற்சிகள் செய்யும் பொழுது நமக்கு நாள் முழுவற்கும் தேவையான புத்துணர்வு கிடைத்து விடுகிறது என்று சொல்லப்படுகிறது. இதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து சொல்வதில் எந்த ஆச்சரியமுமில்லை. ஆனால், நம் முன்னோர்கள் இந்த நுட்பத்தை எப்படி உணர்ந்து, அதிகாலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று சொன்னார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால், அவர்கள் அறிவின் திறம் விளங்கும். மனிதன் இரவு முழுவதும் தூங்கி விட்டு, அதிகாலையில் எழும்போது அவன் புத்துணர்வு பெற வேண்டும் என்று இயற்கையானது தயாராக காத்திருக்கிறது. ஆனால், மனிதன் இதைப் புரிந்து கொள்ளாமல் தாமதமாக எழுந்து புத்துணர்வை இழந்து சிரமப்படுகிறான்,
நாள் ஒன்றுக்கு நாம் சுவாசிக்கும் 21600 சுவாசங்களும் ஒரு குறிப்பட்ட கால அளவு நமது ஒவ்வொரு ஆதரங்களிலும் நடைபெற்று, சஞ்சரித்து நம் உடல் மற்றும், மன இயக்கங்களை நிரவகித்து நம் வாழ்நாளை தீர்மானிக்கின்றன. காலை 6 மணியில் இருந்து 6.40 வரை மூலாதாரத்தில் 600 சுவாசம் ஓடுகிறது. காலை 6.40 லிருந்து மதியம் 1.20 வரை சுவாதிஷ்டானத்தில் 6000 சுவாசங்கள் ஓடுகின்றன. மதியம் 1.20 லிருந்து இரவு 8.00 மணி வரை மணிபூரகத்தில் 6000 சுவாசங்கள் ஓடுகின்றன. இரவு 8.00 மணி முதல் அதிகாலை 2.40 வரை அநாகதத்தில் 6000 சுவாசங்கள் ஓடுகின்றன. அதிகாலை 2.40 முதல் 3.40 வரை விசுத்தியில் 1000 சுவாசங்கள் நடை பெறுகின்றது. அதிகாலை 3.40 லிருந்து 4.53 வரை ஆகஞாவில் 1000 சுவாசங்கள் ஓடுகின்றன. அதன் பிறகு காலை 6 மணி வரை சகஸ்ராரத்தில் 1000 சுவாசங்கள் நடை பெறுகின்றன. இதில் ஆக்கினையிலும், சகஸ்ராரத்திலும் சுவாசம் நடைபெறும் பொழுது யோகப் பயிற்சிகள், பிராணாயாமம், ஆசனப் பயிற்சிகள் செய்வதால் பலன் இரட்டிப்பாகும் என்று சொல்லப்படுகிறது. மற்ற எல்லாச் சக்கரங்களையும், நாடிகளையும் கட்டுப்படுத்தும் சுரப்பிகள் இந்த இரண்டு ஆதரங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் நாள் முழுவதும் அவற்றின் இயக்கங்கள் சீராக இருக்கும் என்பது நம் முன்னோர்களின் அறிவுரையாகும். மிர்தம் என்றால் அழிவு. அமிர்தம் என்றால் அழிவற்றது என்பது பொருள். பிரதோச வேளையில் பிரபஞ்ச சக்தி குறைவாகிப் போகிறது. எனவே அந்த வேளையில் பிரபஞ்ச சக்தியை கிரகித்து வழங்கும் கோவில்களுக்குள் இருப்பது நல்லது என்பது கோட்பாடு.
அது போல அதிகாலையில் பிராணவாயுவில் ஆக்சிஜன் மூலக்கூறு அதிகமுடைய ஓசோன் இருப்பதால் இந்த வேளைகளில் சாதனங்களைக் கடைபிடிக்கச் சொல்கிறார்கள். இதையே அமிர்தக் காற்று என்றும், ப்ரம்மக் காற்று என்றும் சொல்வார்கள். பர்ம்ம சக்தி அதிகமுடைய வேளையையே ப்ரம்ம முகூர்த்தம் என்று சொல்லும் வழக்கம் வந்தது. இதில் ப்ராணாயாமம் மற்றும் யோகம் செய்பவர்களுக்கு அமிர்தம் உண்டால் ஏற்படும் பலன்கள் கிட்டும் என்பது சூட்சுமம். சாதாரண வாயுவில் இரண்டு ஆக்சிஜன் மூலக் கூறுகளே இருக்கும். அதிகாலை ஓசோன் கலந்த வாயுவில் 5 ஆக்சிஜன் மூலக் கூறுகள் இருக்கும். இதில் பஞ்சபூதங்களின் சூக்கும சக்திகளான தன்மாத்திரைகள் கலந்திருக்கும். எனவே அவற்றால் உருவான நம் உடலும், உடல் தத்துவங்களும் இத்த வேளைகளில் பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் சிறப்பாகச் செயல்படும். அதாவது இரண்டு ஆக்சிஜன் மூலக்கூறு கொண்ட வாயுவில் ப்ருதிவி, அப்பு என்ற இரண்டு பஞ்சபூதத் தன்மாத்திரைகளே கலந்திருக்கும். அதோடு மூன்று ஆக்சிஜன் மூலக்கூறு கொண்ட தேயு, வாயு, ஆகாயம் என்ற மூன்று பஞ்சபூதத் தன்மாத்திரைகள் கலந்த ஓசோன் என்கிற அமிர்தப் ப்ரம்ம வாயு கலந்திடும் போது ஐந்து மூலக் கூறுகள் கொண்ட அதிர்தக் காற்றாக மாறி அதில் ஆகாயம், ப்ருதிவி, அப்பு, தேயு, வாயு ஆகிய ஐந்து பஞ்சபூதத் தன்மாத்திலைகளும் கலந்திருக்கும். இந்த அமிர்தக் காற்றை முறைப்படுத்தி ஏற்றுக் கொள்பவன் தேவர்களுக்கும் மேலானவன் என்பது சித்தர்கள் வாக்கு.
விடியலைக் காணாதவன் வாழ்வில் விடிவு காலமே ஏற்படாது என்பதே உண்மை

No comments:
Post a Comment