Friday, March 28, 2014

காமம்

Photo: பொதுவாக சத்தியம் என்றால் வாய்மை அதாவது பொய் பேசாமல் இருப்பது என்று சொல்வோம். அஹிம்சை என்றால் கொல்லாமை என்று சொல்வோம். பிற உயிர்களை இம்சை செய்யாமல் இருப்பதுவும் அஹிம்சைதான். அது போல ப்ரம்மச்சரியம் என்றால் ஆண் பெண் சேராமல் இருப்பதுதான் என்று சொல்வது வழக்கில் உள்ளது. உண்மையில் ப்ரம்மச்சரியம் என்றால் அது மட்டுமல்ல. ப்ரம்மத்தின் வழி நடத்தல் என்பதே சரியான பொருள். அதாவது மனதையும், புலன்களையும் ப்ரம்மத்தை நோக்கி செலுத்துதல். அல்லாது வீரியத்தையும், காமத்தையும் வெற்றி கொள்வது மட்டுமல்ல.எல்லா புலன்களையும் அடக்குதல் என்பதே சரியான கருத்தாகும். பிறகு ஏன் அவ்வாறு சொல்கிறார்கள் ? 

மற்ற புலன்களின் உதவி வாழ்க்கையை இன்பமாக வாழ்வதற்கு ஓரளவு மனிதனுக்குத் தேவையாக இருக்கிறது. காம உணர்வு என்பது அப்படி அல்ல. இளமையிலிருந்தே ஆண் பெண் சேராமல் வாழ முடியும். அதனால் வாழ்க்கைக்கு எந்த வித குந்தகமும் ஏற்பட்டு விடாது. எனவேதான் பொதுவாக ப்ரம்மச்சரியம் என்றால் ஆண் பெண் உறவைத் தவிர்த்தல் என்று பொதுவாகச் சொல்லி விடுகிறார்கள். உண்மையில் மனிதனுக்கு காம இச்சையை அடக்குவது பிற புலன்களை அடக்குவதை விட கடினமாக இருக்கிறது. அது ஏன் அவ்வாறு ?
 
உணவு என்று எடுத்துக் கொண்டால் மற்ற எல்லா உயிர்களையும் விட மனிதனுக்கு அதிகச் சுதந்திரம் இருக்கிறது. அதனாலேதான் அவன் எல்லா இந்திரிய நுகர்ச்சியிலும் அதிகமாக ஈடுபடுகிறான். இதன் விளைவே அளவாக எழ வேண்டிய காம வேட்கை அதிகமாகப் போய் விடுகிறது. ஆண்டில் குறிப்பிட்ட சில தினங்கள் மட்டுமே எழ வேண்டிய வேட்கையானது எல்லா நாட்களிலும் எழுந்து கொண்டே இருக்கிறது. அதனால் இன்பத்திற்கு பதிலாக துன்பத்தை அடைகிறான். இதிலிருந்து தெரிந்து கொள்ளும் உண்மை என்ன வென்றால், மற்ற இந்திரியங்களை அடக்கினால் மட்டுமே காம வேட்க்கையையும் அடக்க முடியும் என்பதே. அதனால்தான் பதஞ்சலி மகரிஷி  யோக சூத்திரத்தில் புலன்களை அடக்க பத்து மஹா விரதங்களை முன் வைக்கிறார். அவர் இந்த பத்து மஹா விரதங்களையும் இரு பகுதிகளாக்கி ஒன்றை இயமமென்றும், மற்றொன்றை நியமமென்றும் வகுத்தார். அதிலே நியமத்தில் உள்ள விரதங்களில் ஒன்றாகவே ப்ரம்மச்சரியம் உள்ளது. 

ஆணுக்கானாலும், பெண்ணுக்கானாலும் 12 வயதிற்கு மேல்தான் இந்த காம வேட்கைக்கு அடித்தளமாக உள்ள இனப் பெருக்க சுரப்பிகள் வேலை செய்ய அதாவது அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கின்றன. அதுவும் 13ல் இருந்து 19 வரை அதன் தாக்கம் உணர்வுகளில் அதிகமிருக்கும். இதையே ஆங்கிலத்தில் டீன் ஏஜ் என்கிறார்கள். அந்த எண்களின் பெயர்கள் கூட டீன் என்று முடியும். உடம்பிலுள்ள சில நாளமில்லா சுரப்பிகளுக்கும் காம வேட்க்கைக்கும் தொடர்பிருக்கிறது என்று விஞ்ஞானிகள் இப்போது கண்டு பிடித்திருக்கிறார்கள். அதிலே மிக முக்கியமான சுரப்பியாக விளங்குவது மூளையின் அடித்தளத்திலே அமைந்துள்ள பிட்யூட்ரி சுரப்பியாகும். இந்த சுரப்பியில் சுரக்கும் இரண்டு விதமான சுரப்பு நீர்களில் ஒன்று உடம்பின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும், மற்றொன்று இனப்பெருக்கச் சுரப்பிகளின் செயலைத் துரிதப்படுத்துவதாகவும் உள்ளது. அந்தோ பரிதாபம் இனப்பெருக்கச் சுரப்பிகள் தங்கள் செயலில் துரித கதியடைந்த பின்பு பிட்யூட்டரி சுரப்பியின் மீதே தங்கள் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்து விடுகின்றன. இதனால் என்னவாகுமென்றால் உடல் வளர்ச்சிக்கான சுரப்பு நீர் கொஞ்சம் சொஞ்சமாகக் குறைந்து கடைசியில் முற்றிலுமாக முடங்கி விடுகின்றது. 

மனிதனின் நடத்தைக்கு காரணமாக அமையும் உணர்வுகளில் பாலுந்தல் என்கிற உணர்வே முதலிடம் வகிக்கிறது. இது பிறந்ததிலிருந்து இறக்கும் வரை எழுகின்ற உணர்வாக உள்ளது. எனினும் இளமையில்தான் இந்த உணர்வு அதிகமாக எழுகின்றது. எனவேதான் இன்றைய உளவியல் நிபுணர்கள் இளம் பிராயத்தினருக்கு விஞ்ஞான ரீதியில் இது பற்றி விளக்க வேண்டும் என்கிறார்கள். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பாலுந்தலை விரைவில் தூண்டக் கூடிய விஷயங்கள் பல உள்ளன. இதுவே பல விரும்பத்தகாத நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது. இயற்கையாகவே இரு பாலினரின் உடலும், செயல்களும் ஒருவரை ஒருவர் கவரும் படியாகவே  அமைந்துள்ளது. இத்தகைய கவர்ச்சியில் தூய்மையும், தியாக உணர்வும் மேலோங்கி இருந்தால் அது காதல் என்றும், அத்தகைய உணர்வு குறைந்து போய்விட்டால் அதுவே காமம் என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்து. 

காமம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்பத்தையே விளைவிக்கிறது. காமம் பிட்யூட்ரி சுரரப்பியின் செயல்களை முடக்குகிறது. காதல் அதன் சுரப்பு நீர்களின் உற்பத்தியை துரிதப்படுத்துகிறது. காதல் வளரும் போது காதலன் தன் காதலியிடமிருந்து அமைதியையும், பொறுமையையும் கற்றுக் கொள்கிறான். காதலி தன் காதலனிடமிருந்து ஆற்றலைக் கற்றுக் கொள்கிறாள். இவ்வாறு காதலர்கள் இருவர் கூடி வாழ்ந்து பண்படுவதே தனிக் கல்வியாகும். உணர்வும் அறிவும் பண்பட்டு ஒத்த வளர்ச்சி பெற்று, அளவோடு இன்பம் துய்த்து நல்வாழ்வு வாழக் கூடிய வகையில் காதல் அவர்களுக்கு பயிற்சி நல்குகிறது. இப்பயிற்சினால் இல்வாழ்வு அன்பும், அறனும் உடையதாகின்றது. 

இதனால் தெரிவிக்கும் கருத்து என்னவென்றால் ப்ரம்மச்சரியம் என்பது பெண்மையை வாழ்விலிருந்து புறந் தள்ளுவதல்ல. பெண்மையும் ஆண்மையும் சேர்வதில்தான் பூரணத்துவம் மலரும். அளவோடு இன்பம் துய்த்து உயிர் பொருளின் விரையத்தைக் கட்டுப்படுத்துவதே ப்ரம்மச்சரியம். வயலில் விளையும் நெல்லில் குறைந்த பகுதியையே விதைக்குப் பயன்படுத்துகிறோம். பெரும் பகுதியை உணவிற்காகவே பயன்படுத்துகிறோம். அது போல உயிர்ப் பொருளின் மிகக் குறைந்த பகுதியை இடமறிந்து, காலமறிந்து, தேவையறிந்து இனப் பெருக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும். எஞ்சியுள்ள பெரும் பகுதியை உள் ஒளிப் பெருக்கிற்குப் பயன்படுத்த வேண்டும். உயிர் பொருளை வீணே விரையம் செய்தால் உடல் பொலிவிழக்கும், புத்தி மந்தமாகும், நரம்புகள் தளரும், எல்லா நோய்களும் உண்டாகும். நடைபிணமாக வாழ நேரிடும். 

வாழ்க இல்லறத்தாரின் ப்ரம்மச்சரியம்.பொதுவாக சத்தியம் என்றால் வாய்மை அதாவது பொய் பேசாமல் இருப்பது என்று சொல்வோம். அஹிம்சை என்றால் கொல்லாமை என்று சொல்வோம். பிற உயிர்களை இம்சை செய்யாமல் இருப்பதுவும் அஹிம்சைதான். அது போல ப்ரம்மச்சரியம் என்றால் ஆண் பெண் சேராமல் இருப்பதுதான் என்று சொல்வது வழக்கில் உள்ளது. உண்மையில் ப்ரம்மச்சரியம் என்றால் அது மட்டுமல்ல. ப்ரம்மத்தின் வழி நடத்தல் என்பதே சரியான பொருள். அதாவது மனதையும், புலன்களையும் ப்ரம்மத்தை நோக்கி செலுத்துதல். அல்லாது வீரியத்தையும், காமத்தையும் வெற்றி கொள்வது மட்டுமல்ல.எல்லா புலன்களையும் அடக்குதல் என்பதே சரியான கருத்தாகும். பிறகு ஏன் அவ்வாறு சொல்கிறார்கள் ?

மற்ற புலன்களின் உதவி வாழ்க்கையை இன்பமாக வாழ்வதற்கு ஓரளவு மனிதனுக்குத் தேவையாக இருக்கிறது. காம உணர்வு என்பது அப்படி அல்ல. இளமையிலிருந்தே ஆண் பெண் சேராமல் வாழ முடியும். அதனால் வாழ்க்கைக்கு எந்த வித குந்தகமும் ஏற்பட்டு விடாது. எனவேதான் பொதுவாக ப்ரம்மச்சரியம் என்றால் ஆண் பெண் உறவைத் தவிர்த்தல் என்று பொதுவாகச் சொல்லி விடுகிறார்கள். உண்மையில் மனிதனுக்கு காம இச்சையை அடக்குவது பிற புலன்களை அடக்குவதை விட கடினமாக இருக்கிறது. அது ஏன் அவ்வாறு ?

உணவு என்று எடுத்துக் கொண்டால் மற்ற எல்லா உயிர்களையும் விட மனிதனுக்கு அதிகச் சுதந்திரம் இருக்கிறது. அதனாலேதான் அவன் எல்லா இந்திரிய நுகர்ச்சியிலும் அதிகமாக ஈடுபடுகிறான். இதன் விளைவே அளவாக எழ வேண்டிய காம வேட்கை அதிகமாகப் போய் விடுகிறது. ஆண்டில் குறிப்பிட்ட சில தினங்கள் மட்டுமே எழ வேண்டிய வேட்கையானது எல்லா நாட்களிலும் எழுந்து கொண்டே இருக்கிறது. அதனால் இன்பத்திற்கு பதிலாக துன்பத்தை அடைகிறான். இதிலிருந்து தெரிந்து கொள்ளும் உண்மை என்ன வென்றால், மற்ற இந்திரியங்களை அடக்கினால் மட்டுமே காம வேட்க்கையையும் அடக்க முடியும் என்பதே. அதனால்தான் பதஞ்சலி மகரிஷி யோக சூத்திரத்தில் புலன்களை அடக்க பத்து மஹா விரதங்களை முன் வைக்கிறார். அவர் இந்த பத்து மஹா விரதங்களையும் இரு பகுதிகளாக்கி ஒன்றை இயமமென்றும், மற்றொன்றை நியமமென்றும் வகுத்தார். அதிலே நியமத்தில் உள்ள விரதங்களில் ஒன்றாகவே ப்ரம்மச்சரியம் உள்ளது.

ஆணுக்கானாலும், பெண்ணுக்கானாலும் 12 வயதிற்கு மேல்தான் இந்த காம வேட்கைக்கு அடித்தளமாக உள்ள இனப் பெருக்க சுரப்பிகள் வேலை செய்ய அதாவது அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கின்றன. அதுவும் 13ல் இருந்து 19 வரை அதன் தாக்கம் உணர்வுகளில் அதிகமிருக்கும். இதையே ஆங்கிலத்தில் டீன் ஏஜ் என்கிறார்கள். அந்த எண்களின் பெயர்கள் கூட டீன் என்று முடியும். உடம்பிலுள்ள சில நாளமில்லா சுரப்பிகளுக்கும் காம வேட்க்கைக்கும் தொடர்பிருக்கிறது என்று விஞ்ஞானிகள் இப்போது கண்டு பிடித்திருக்கிறார்கள். அதிலே மிக முக்கியமான சுரப்பியாக விளங்குவது மூளையின் அடித்தளத்திலே அமைந்துள்ள பிட்யூட்ரி சுரப்பியாகும். இந்த சுரப்பியில் சுரக்கும் இரண்டு விதமான சுரப்பு நீர்களில் ஒன்று உடம்பின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும், மற்றொன்று இனப்பெருக்கச் சுரப்பிகளின் செயலைத் துரிதப்படுத்துவதாகவும் உள்ளது. அந்தோ பரிதாபம் இனப்பெருக்கச் சுரப்பிகள் தங்கள் செயலில் துரித கதியடைந்த பின்பு பிட்யூட்டரி சுரப்பியின் மீதே தங்கள் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்து விடுகின்றன. இதனால் என்னவாகுமென்றால் உடல் வளர்ச்சிக்கான சுரப்பு நீர் கொஞ்சம் சொஞ்சமாகக் குறைந்து கடைசியில் முற்றிலுமாக முடங்கி விடுகின்றது.

மனிதனின் நடத்தைக்கு காரணமாக அமையும் உணர்வுகளில் பாலுந்தல் என்கிற உணர்வே முதலிடம் வகிக்கிறது. இது பிறந்ததிலிருந்து இறக்கும் வரை எழுகின்ற உணர்வாக உள்ளது. எனினும் இளமையில்தான் இந்த உணர்வு அதிகமாக எழுகின்றது. எனவேதான் இன்றைய உளவியல் நிபுணர்கள் இளம் பிராயத்தினருக்கு விஞ்ஞான ரீதியில் இது பற்றி விளக்க வேண்டும் என்கிறார்கள். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பாலுந்தலை விரைவில் தூண்டக் கூடிய விஷயங்கள் பல உள்ளன. இதுவே பல விரும்பத்தகாத நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது. இயற்கையாகவே இரு பாலினரின் உடலும், செயல்களும் ஒருவரை ஒருவர் கவரும் படியாகவே அமைந்துள்ளது. இத்தகைய கவர்ச்சியில் தூய்மையும், தியாக உணர்வும் மேலோங்கி இருந்தால் அது காதல் என்றும், அத்தகைய உணர்வு குறைந்து போய்விட்டால் அதுவே காமம் என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்து.

காமம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்பத்தையே விளைவிக்கிறது. காமம் பிட்யூட்ரி சுரரப்பியின் செயல்களை முடக்குகிறது. காதல் அதன் சுரப்பு நீர்களின் உற்பத்தியை துரிதப்படுத்துகிறது. காதல் வளரும் போது காதலன் தன் காதலியிடமிருந்து அமைதியையும், பொறுமையையும் கற்றுக் கொள்கிறான். காதலி தன் காதலனிடமிருந்து ஆற்றலைக் கற்றுக் கொள்கிறாள். இவ்வாறு காதலர்கள் இருவர் கூடி வாழ்ந்து பண்படுவதே தனிக் கல்வியாகும். உணர்வும் அறிவும் பண்பட்டு ஒத்த வளர்ச்சி பெற்று, அளவோடு இன்பம் துய்த்து நல்வாழ்வு வாழக் கூடிய வகையில் காதல் அவர்களுக்கு பயிற்சி நல்குகிறது. இப்பயிற்சினால் இல்வாழ்வு அன்பும், அறனும் உடையதாகின்றது.

இதனால் தெரிவிக்கும் கருத்து என்னவென்றால் ப்ரம்மச்சரியம் என்பது பெண்மையை வாழ்விலிருந்து புறந் தள்ளுவதல்ல. பெண்மையும் ஆண்மையும் சேர்வதில்தான் பூரணத்துவம் மலரும். அளவோடு இன்பம் துய்த்து உயிர் பொருளின் விரையத்தைக் கட்டுப்படுத்துவதே ப்ரம்மச்சரியம். வயலில் விளையும் நெல்லில் குறைந்த பகுதியையே விதைக்குப் பயன்படுத்துகிறோம். பெரும் பகுதியை உணவிற்காகவே பயன்படுத்துகிறோம். அது போல உயிர்ப் பொருளின் மிகக் குறைந்த பகுதியை இடமறிந்து, காலமறிந்து, தேவையறிந்து இனப் பெருக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும். எஞ்சியுள்ள பெரும் பகுதியை உள் ஒளிப் பெருக்கிற்குப் பயன்படுத்த வேண்டும். உயிர் பொருளை வீணே விரையம் செய்தால் உடல் பொலிவிழக்கும், புத்தி மந்தமாகும், நரம்புகள் தளரும், எல்லா நோய்களும் உண்டாகும். நடைபிணமாக வாழ நேரிடும்.

வாழ்க இல்லறத்தாரின் ப்ரம்மச்சரியம்.

No comments:

Post a Comment