ஒரு மனிதன் எவ்வளவு துன்பநிலையில் இருந்தாலும், கவலை நெருப்பாய்
அவனுக்குள் தகித்துக் கொண்டு இருந்தாலும் இரண்டு விஷயங்களைக் கண்டால் அவன்
எல்லா துயரங்களையும் மறந்துவிடுவான். ஒன்று குழந்தை. இன்னொன்று மலர்கள்.
கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுதான். குழந்தையின்
கண்களாகட்டும், கன்னங்களாகட்டும், பொக்கை வாய் சிரிப்பாகட்டும், அதன்
ஸ்பரிஷமாகட்டும் எல்லாம் பூவைப் போலவே இருக்கும். கடவுள் மலர்களைப்
படைத்ததே மனிதனின் உள்ளத்தைப் புனிதப்படுத்தத்தான். எழுச்சி, களிப்பு,
பொலிவு, நிறைதல், விரிதல், விருத்தி ஆகிய குண நலன்களை விளக்குபவை மலர்கள்.
நமது ஆதாரச் சக்கரங்களை தாமரை மலரோடு ஒப்பிட்டு முன்னோர்
சொல்லியிருக்கிறார்கள். சிவவாக்கியர் ''அரும்பில்லாத பூ'' என்பார்.
குமரகுருதாச சுவாமிகள் தண்ணீரோடும் தரையோடும் தொடர்பில்லாத தாமரைகள்
என்பார். திருமூலரோ பாரில்லை நீரில்லைப் பங்கயம் ஒன்று உண்டு என்பார்.
மலர்களுக்கும் ஆன்மீகத்துக்கும் அதிக தொடர்பு உண்டு. அதிலும் தாமரை
முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. முன்பொல்லாம் ஒவ்வொரு தெருவிலும்
ஒரு குளம் அல்லது தடாகம் காணப்படும். அவற்றில் அல்லி, தாமரை போன்ற மலர்கள்
மிதந்து கொண்டுப்பதைப் பார்க்கையில் மனம் கொள்ளை போகும்.
இப்போது அந்த குளங்களையெல்லாம் பிளாட்
போட்டு விற்றுவிட்டார்கள் புண்ணியவான்கள். அதனாலேயே நிலத்தடி நீரே இல்லாமல் போய் விட்டது. கேட்டால் கொசு உற்பத்தியைக் குறைக்கவே குளங்கள் மூடப்பட்டன என்று சப்பைக் கட்டுவார்கள். ஆனால் இப்போதுதான் கொசு அதிகமாக உற்பத்தி அதிகமாகி பலவிதமான புதுப்புது வியாதிகள் வரு கின்றன. காரணம் அப்போது கொசுக்களெல்லாம் குளங்களில் வாழ்ந்தன. குளங்கள் இல்லாததால் அவையெல்லாம் இப்போது நம்மோடு வீட்டில் வாழப் பழகிக் கொண்டன. ஆக வியாதியை வீட்டிலேயே வைத்துக் கொண்டு, அதை விரட்ட ரசாயனப் புகையை உண்டாக்கி அதை சுவாசித்து மேலும் பல வியாதிகளை உண்டாக்கிக் கொள்கிறோம். தொலையோக்குப் பார்வை இல்லாத அரசியல் தலைவர்களே நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. சரி விஷயத்துக்கு வருவோம். தாமரை மலரானது ஆன்மீகச் சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல, மருத்துவ குணங்களும் கொண்டது. அது வெண்தாமரை, செந்தாமரை, கல்தாமரை, ஆகாசத் தாமரை என்று நான்கு வகைப்படும். இந்த கல் தாமரை கற்பாறைகளின் வெடிப்புகளில் ஒரு ரூபாய் அளவில் வட்டவட்டமாகக் காணப்படும். பூமியில் வேர்விடாமல் நீரில் வேரோடி கொத்துகொத்தாய் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் ஆகாசத் தாமரை. மற்ற இரு தாமரைகளும் குளங்களில் காணப்படும்.
கல்தாமரையில் தாமிரச் சத்து அதிகம்.கல்தாமரை இலையில் ஊசியை சொருகி லேசாக தண்ணீர் தெளித்து வைத்துவிட்டு மறுநாள் பார்த்தால் இரும்பு ஊசியில் செம்பு வாடை படிந்திருக்கக் காணலாம். இலையை உலர்த்தி சாம்பலாக்கி நீரில் கரைத்து காய்ச்சி செம்பு எடுக்கலாம். அது சுத்தமானது. மருந்து தயாரிக்க சித்தர்கள் அந்த செம்பை பயன் படுத்தி இருக்கிறார்கள். கல்தாமரையில் 50% தாமிரச் சத்தும் 5% வங்கச் சத்தும் இருக்கிறது. வெள்ளைத் தாமரையில் 20% ம், ஆகாயத் தாமரையில் 15% ம் தாமிரச் சத்து இருக்கிறது. கல் தாமரையில் புஷ்பம் என்பது கிடையாது. இலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலையை பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு காலை, மாலை நீருடன் பருக மூளையின் செயல்திறனும், ஆயுளும் அதிகரிக்கும். மேலும் கல் தாமரை இலைப் பொடி 5 பங்கு, சீந்தில் சர்க்கரை 1 பங்கு, மூங்கில் உப்பு 1 பங்கு, சீனா கற்கண்டு பொடி 10 பங்கும் சேர்த்து நன்றாகக் கலக்கி வைத்துக் கொண்டு, காலை, மாலை பசுநெய்யில் குழைத்து சாப்பிட்டு வர புத்தி மயக்கம், சித்த பிரமை, இரத்தக் கொதிப்பு முதலியவற்றை போக்கி நல்ல பலத்தைத் தரும். இந்தப் பொடியுடன் நல்முத்துப் பஸ்பம் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், இரத்த விருத்தி ஏற்படும். மேலும் க்ஷயரோகம், எலும்புருக்கி போன்ற நோய்கள் நீங்கும்.
வெள்ளைத் தாமரை இதயத்துக்கும், மூளைக்கும் நல்லது. செந்தாமரை மூல உஷ்ணத்தை சமன் படுத்தும். இதயத்திற்கும் இரத்தத்திற்கும் நல்லது. இதைக் குறிக்கவே இதயக் கமலத்தில் அதிதேவதை அமர்ந்திருப்பது போலக் காட்டப்பட்டது. மூளையைக் காக்கும் மருந்தாகவும் திகழ்வதால் தலையிலும் தாமரையைக் குறியாகக் காட்டினார்கள். மூளையைப் பலப் படுத்தினால் ஆயுளைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று வள்ளலார் பாடியிருக்கின்றார். அவற்றில் தாமரைப் புஷ்பத்தைக் கொண்டே சாகாமல் நீண்டநாள் இருக்கலாம் என்று பாடியதைக் கவனிக்கவும்.
ஆகாயத் தாமரை க்ஷயரோகத்தையும்,குஷ்டத்தையும் போக்கும் வல்லமை உடையது. சுவாசக்குழாயில் உள்ள புண்களை ஆற்றி, க்ஷயரோகக் கிருமிகளை வளரவிடாமல் அழிக்கும்.
ஒரு தாமரைப் பூவை காம்பு நீக்கி கால் லிட்டர் தண்ணீர் விட்டு அரைக்கால் லிட்டராகக் காய்ச்சி காலை, மாலை பருகி வர நரைதிரை மாறும். மூளை பலப்படும், தேகம் சிவந்து காணும். குழந்தைகளுக்கு அதிகக் காய்ச்சலினால் வலிப்பு ஏற்பட்டால் இந்தக் கசாயத்தைக் கொடுத்தால் வலிப்பு நீங்கி விடும். பெரியவர்களுக்கும் ஜுரத்தினால் வலிப்பு கண்டால் இந்தக் கசாயத்தைக் கொடுத்துப் பாருங்கள், உடனே பலன் தெரியும். தாமரைப் பூவை பசும்பாலில் காய்ச்சி ஆவிபிடிக்க கண்சிகப்பு, கண்ணோல் நீர் வடிதல் போன்ற நோய்கள் நீங்கும். ஓரிதல் தாமரை என்று ஒன்று உண்டு அதுவும் சிறுநீர் பிரச்சனைகள், வெட்டைச்சூடு, மேக வெட்டை, வெள்ளை விழுதல் போன்ன நோய்களைக் குணப்படுத்துவதோடு தாம்பத்ய உறவில் பலம் தரும். ஓரிதல் தாமரை பூ, இலை, துளிர் எல்லாவற்றையும் எடுத்து நீரில் அலசி, வாயில் போட்டு மென்று சுவைத்து சாப்பிட்டு பசும்பால் பருக வேண்டும். ஓரிதல் தாமரை குறித்து அகத்தியர் பாடல்
''தாதுவை உண்டாக்கும்
தனி மேகம் தொலைக்கும்
ஆதரவாம் மேனிக்கு
அழகு தரும் - சீதம் போம்
சீர் இதழ்த் தாமரை வாழ்
செய்ய மடவன்னமே
ஓர் இதழ்த் தாமரை உண்.''
தாமரைப்பூ உலர்ந்தது 30 கிராம், காசினி விரை 30 கிராம், விரை திராட்சை 30 கிராம், சீந்தில் கொடி 30 கிராம், சுக்கு 15 கிராம், திப்பிலி 10 கிராம், நெல்லி வித்து 30 கிராம் இவற்றை ஒரு லிட்டர் பசும் பாலில் வேக வைத்து, 400கிராம் சர்க்கரை, 250 கிராம் நெய், 75 கிராம் தேன் சேர்த்து லேகிய பதமாகக் கிளறி வைத்துக் கொண்டு, காலை, மாலை கழற்சிக்காய் அளவு சாப்பிட்டு வர இதய நோய்கள் யாவும் நீங்கும், மூளை பலம் பெறும்.
இராமலிங்க சுவாமிகளின் பாடல்
'' பொற்பங் கயத்தின் புகநறவுஞ்
சுத்த சலமும் புகழ்கின்ற
வெற்பந்தாமாமதி மிகவும் விளங்கும்
பசுவின் தீம்பாலும்
நற்பஞ்சகய மொன்றாகக் கலந்து
மரண ரவைதீர்க்குங்
கற்பங் கொடுத்தாய் நின்றனுக்குக்
கைம்மாறேது கொடுப்பேனே.''
பித்தகாசம் கண்பார்வையைக் குறைத்துவிடும். இதற்கு தாமரையின் இலை,பூ,கிழங்கு இவற்றின் சாறெடுத்து நல்லெண்ணையுடன் சேர்த்து காய்ச்சி குளித்துவர மங்கின பார்வை பிரகாசிக்கும்.
''கண்ணுக் கொளி கொடுக்கும்
காச பித்தம் போக்கும்
எண்ணுங் குளிர்ச்சி தரும்
ஏந்திழையே - புண்களில்
தாமரைப் பண்ணும் போக்குந்
தொந்திக் கடுப்பகற்றும்
தாமரை கந்தமது தானே.'' -தேரையர்

No comments:
Post a Comment