Friday, March 28, 2014

என்ன சம்மந்தம் ? சம்மந்தம் இருக்கிறது.

Photo: நாம் உணபதும், அது செரிமானம் ஆவதும் எதற்காக ? என்று கேட்டால், ஹார்மோன்களைத் தூண்டி விடுவதற்காகத்தான். சிறிய மூலக்கூறுகளான உணவின் சக்தி அணுக்கள் பெரிய சக்தியான ஹார்மோன்களைப் பெற நாளமில்லாசுரப்பிகளைத்  தூண்டிவிடுகின்றன. பிறகு இரு சக்திகளும் கலந்து உடலுக்கு அதிக சக்திகளைத் தருகின்றன. அதாவது தனிமங்கள், வைட்டமின், கார்போஹைட்ரேட் அனைத்தின் நோக்கமும் ஹார்மோன்களைத் தூண்டி சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதுதான். நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஆறும், நமது மூளையும், தண்டுவடமும், அதிலிருந்து வெளிவரும் நரம்புகளும் சேர்ந்த மத்திய நரம்பு மண்டலத்தோடு, அதிலுள்ள நரம்புக் குவியல்களோடு இணைக்கப்பட்டுள்ளன. இதைத் தானியங்கி நரம்பு மண்டலம் என்று குறிப்பிடுவார்கள். நம் உள் உறுப்புகளின் இயக்கங்களைச் சக்கரங்கள் இந்த நரம்புக் குவியலில் உள்ள நரம்புகள் மூலம் கட்டுப்படுத்துகின்றன. ஏழாவது சக்கரமான சகஸ்ராரம் மட்டும் நரம்புக் குவியலோடு இணைக்கப்படாமல், நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் என்றழைக்கப்படும் பிட்யூட்டரி சுரப்பியுடனும், பினியல் சுரப்பியுடனும் இணைக்கப் பட்டுள்ளது. உடலில் உள்ள அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளையும் இந்த இரண்டு சுரப்பிகளும் இயக்கவும்
கட்டுப்படுத்தவும் செய்கின்றன. முக்கியமான நாளமில்லா சுரப்பிகள் ஐந்து. 1.பிட்யூட்டரி, 2. தைராய்டு, 3. கணையம், 4. அட்ரினல், 5. இன்பெருக்கச் சுரப்பி ஆகும். இவை என்னென்ன வேலைகளைச் செய்கின்றன ? என்று பார்ப்போம். பிட்யூட்டரி சுரப்பியானது நமது மூளையில் அமைந்துள்ளது. இது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், செயல் பாட்டையும் கட்டுப்படுத்துகிறது, இயக்குகிறது.
தைராய்டு சுரப்பியானது தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது. இது உணவில் இருந்து பெறப்பட்ட சக்திகளின் தூண்டுதலால் தைராக்ஸின் என்ற ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது. இந்த ஹார்மோனில் 65% அயோடின் அடங்கியுள்ளது. இந்த ஹார்மோன் உடலின் எலும்பு வளர்ச்சி, பற்களின் வளர்ச்சி போன்றவற்றை இயக்கிக் கட்டுப்படுத்துகிறது. உயரமானவர், குள்ளமானவர் என்பதெல்லாம் இந்த சுரப்பியின் கட்டுப்பாட்டிலுள்ள விஷயம். அயோடின் அதாவது தைராக்ஸின் குறைவாக சுரப்பவர்கள் குள்ளமாக இருப்பார்கள். இது அயோடின் குறைபாடு. எனவே ஜப்பானியர்கள் அயோடினை அதிகமாகப் பயன்படுத்தி உயரமாக வளர்ந்து கொண்டு வருகிறார்கள். 
இனி கணையச் சுரப்பி, இந்த சுரப்பியானது செரிக்கும் நொதிகளை உற்பத்தி செய்யும் கணையப் பகுதியில் காணப்படுகிறது. இது உணவு செரிமானம் அடையத் தேவையான ஹார்மோன்களைச் சுரக்கிறது. இதில் இன்சுலினும், குளுக்கைனும் சுரக்கிறது. அடுத்து அட்ரினல் சுரப்பி, இது நிறுநீரகங்களின் உச்சியில் இரண்டு அட்ரினல் சுரப்பிகளாக அமைந்து உள்ளது. இதில் அட்ரினலின் மற்றும் நார் அட்ரினலின் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் உணவில் இருந்து சக்தியைப் பிரித்து எடுத்து இரத்தமாகவும், நிறுநீராகவும் மாற்றுகிறது. இனி வரும் இனப்பெருக்கச் சுரப்பி பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். இரத்தத்தில் இருந்து சக்தியானது திரண்டு ஆண்களுக்கு விந்தாகவும், பெண்களுக்கு கருமுட்டைகளாகவும் உருவாகிறது. இந்த விந்தையும், கருமுட்டையையும் வெளியே அனுப்பும் ஹார்மோன்களை இது சுரக்கிறது. ஆண்களுக்கு ஆன்ட்ரோஜன்கள்(ஆதாம்) என்ற ஹார்மோன்கள் சுரக்கிறது. பெண்களுக்கு ஈஸட்ரோஜன்(ஈவால்) என்ற ஹார்மோன்களும் சுரக்கிறது. இந்தச் சுரப்பிகள் இனப்பெருக்க வேலையை மட்டுமல்ல கழிவுப் பொருள்களை வெளியே அனுப்புகிற வேலையையும் செய்கிறது. இப்படி ஒவ்வொரு சுரப்பிகளும் ஒவ்வொரு விதமான ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் குறைவில்லாமல் சுரப்பதற்காகவே நாம் நல்ல சத்துள்ள ஆகாரங்களைச் சாப்பிடுகிறோம். அதிலுள்ள சக்தி அணுக்கள் சுரப்பிகளைத் தூண்டி நன்றாகச் சுரக்கச் செய்கின்றன. இவற்றிற்கும் தனிமங்களுக்கும், அவற்றைச் சித்தர்கள் பயன்படுத்தியதற்கும் என்ன சம்மந்தம் ?  சம்மந்தம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள நாம் நம் உடலைப் பற்றித் தெரிந்து, புரிந்திருப்பது அவசியம்.
அடுத்து நமக்குள்ள ஐந்து உடல்களைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.
நாம் உணபதும், அது செரிமானம் ஆவதும் எதற்காக ? என்று கேட்டால், ஹார்மோன்களைத் தூண்டி விடுவதற்காகத்தான். சிறிய மூலக்கூறுகளான உணவின் சக்தி அணுக்கள் பெரிய சக்தியான ஹார்மோன்களைப் பெற நாளமில்லாசுரப்பிகளைத் தூண்டிவிடுகின்றன. பிறகு இரு சக்திகளும் கலந்து உடலுக்கு அதிக சக்திகளைத் தருகின்றன. அதாவது தனிமங்கள், வைட்டமின், கார்போஹைட்ரேட் அனைத்தின் நோக்கமும் ஹார்மோன்களைத் தூண்டி சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதுதான். நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஆறும், நமது மூளையும், தண்டுவடமும், அதிலிருந்து வெளிவரும் நரம்புகளும் சேர்ந்த மத்திய நரம்பு மண்டலத்தோடு, அதிலுள்ள நரம்புக் குவியல்களோடு இணைக்கப்பட்டுள்ளன. இதைத் தானியங்கி நரம்பு மண்டலம் என்று குறிப்பிடுவார்கள். நம் உள் உறுப்புகளின் இயக்கங்களைச் சக்கரங்கள் இந்த நரம்புக் குவியலில் உள்ள நரம்புகள் மூலம் கட்டுப்படுத்துகின்றன. ஏழாவது சக்கரமான சகஸ்ராரம் மட்டும் நரம்புக் குவியலோடு இணைக்கப்படாமல், நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் என்றழைக்கப்படும் பிட்யூட்டரி சுரப்பியுடனும், பினியல் சுரப்பியுடனும் இணைக்கப் பட்டுள்ளது. உடலில் உள்ள அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளையும் இந்த இரண்டு சுரப்பிகளும் இயக்கவும்
கட்டுப்படுத்தவும் செய்கின்றன. முக்கியமான நாளமில்லா சுரப்பிகள் ஐந்து. 1.பிட்யூட்டரி, 2. தைராய்டு, 3. கணையம், 4. அட்ரினல், 5. இன்பெருக்கச் சுரப்பி ஆகும். இவை என்னென்ன வேலைகளைச் செய்கின்றன ? என்று பார்ப்போம். பிட்யூட்டரி சுரப்பியானது நமது மூளையில் அமைந்துள்ளது. இது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், செயல் பாட்டையும் கட்டுப்படுத்துகிறது, இயக்குகிறது.
தைராய்டு சுரப்பியானது தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது. இது உணவில் இருந்து பெறப்பட்ட சக்திகளின் தூண்டுதலால் தைராக்ஸின் என்ற ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது. இந்த ஹார்மோனில் 65% அயோடின் அடங்கியுள்ளது. இந்த ஹார்மோன் உடலின் எலும்பு வளர்ச்சி, பற்களின் வளர்ச்சி போன்றவற்றை இயக்கிக் கட்டுப்படுத்துகிறது. உயரமானவர், குள்ளமானவர் என்பதெல்லாம் இந்த சுரப்பியின் கட்டுப்பாட்டிலுள்ள விஷயம். அயோடின் அதாவது தைராக்ஸின் குறைவாக சுரப்பவர்கள் குள்ளமாக இருப்பார்கள். இது அயோடின் குறைபாடு. எனவே ஜப்பானியர்கள் அயோடினை அதிகமாகப் பயன்படுத்தி உயரமாக வளர்ந்து கொண்டு வருகிறார்கள்.
இனி கணையச் சுரப்பி, இந்த சுரப்பியானது செரிக்கும் நொதிகளை உற்பத்தி செய்யும் கணையப் பகுதியில் காணப்படுகிறது. இது உணவு செரிமானம் அடையத் தேவையான ஹார்மோன்களைச் சுரக்கிறது. இதில் இன்சுலினும், குளுக்கைனும் சுரக்கிறது. அடுத்து அட்ரினல் சுரப்பி, இது நிறுநீரகங்களின் உச்சியில் இரண்டு அட்ரினல் சுரப்பிகளாக அமைந்து உள்ளது. இதில் அட்ரினலின் மற்றும் நார் அட்ரினலின் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் உணவில் இருந்து சக்தியைப் பிரித்து எடுத்து இரத்தமாகவும், நிறுநீராகவும் மாற்றுகிறது. இனி வரும் இனப்பெருக்கச் சுரப்பி பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். இரத்தத்தில் இருந்து சக்தியானது திரண்டு ஆண்களுக்கு விந்தாகவும், பெண்களுக்கு கருமுட்டைகளாகவும் உருவாகிறது. இந்த விந்தையும், கருமுட்டையையும் வெளியே அனுப்பும் ஹார்மோன்களை இது சுரக்கிறது. ஆண்களுக்கு ஆன்ட்ரோஜன்கள்(ஆதாம்) என்ற ஹார்மோன்கள் சுரக்கிறது. பெண்களுக்கு ஈஸட்ரோஜன்(ஈவால்) என்ற ஹார்மோன்களும் சுரக்கிறது. இந்தச் சுரப்பிகள் இனப்பெருக்க வேலையை மட்டுமல்ல கழிவுப் பொருள்களை வெளியே அனுப்புகிற வேலையையும் செய்கிறது. இப்படி ஒவ்வொரு சுரப்பிகளும் ஒவ்வொரு விதமான ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் குறைவில்லாமல் சுரப்பதற்காகவே நாம் நல்ல சத்துள்ள ஆகாரங்களைச் சாப்பிடுகிறோம். அதிலுள்ள சக்தி அணுக்கள் சுரப்பிகளைத் தூண்டி நன்றாகச் சுரக்கச் செய்கின்றன. இவற்றிற்கும் தனிமங்களுக்கும், அவற்றைச் சித்தர்கள் பயன்படுத்தியதற்கும் என்ன சம்மந்தம் ? சம்மந்தம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள நாம் நம் உடலைப் பற்றித் தெரிந்து, புரிந்திருப்பது அவசியம்.
அடுத்து நமக்குள்ள ஐந்து உடல்களைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.

No comments:

Post a Comment