Saturday, March 29, 2014

எதிர்பார்ப்புகள் எழுகிறது. அது நிகழாத போது ஏமாற்றமே மிஞ்சுகிறது

Photo: நம் வாழ்வின் பெரும்பாலான நேரத்தை மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், மற்றவர்களை திருப்திப் படுத்துவதற்காகவுமே செலவிடுகிறோம். அதனால் என்ன மற்றவர்களைத் திருப்திப்படுத்துவது கூட ஒரு தொண்டுதானே என்று கேட்கக் கூடும். மற்றவர்களுக்கு நன்மை செய்வது என்பது வேறு, அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செயல்படுவது வேறு. மற்றவர்களுக்கு நன்மை செய்யும் பொழுது உங்கள் மனம் நிறைவடைகிறது. இந்த மனநிறைவு மேலும் உங்கள் ஆற்றலைப் பெருகச் செய்கிறது. ஆனால் மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, மற்றவர்கள் முன் தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்வதற்காக, மற்றவர்களிடம் நல்லவன் என்று பெயரெடுக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் செயல்படும் பொழுது அவர்களுக்கு திருப்பதி ஏற்படுகிறதோ இல்லையோ, உங்களுடைய ஆற்றல் அதிகமாகச் செலவாகிறது. தனக்குள் இயங்க வேண்டிய உணர்வு மையம் மற்றவர்களைச் சார்ந்து நமக்கு வெளியே இயங்க ஆரம்பிக்கிறது. தன்னுணர்வைத் தனக்குள் குவித்து நிலைக்கும் பொழுது சக்தி பெருகும். அது வெளியே புறப் பொருளோடோ, மனிதர்களோடு சார்ந்து இயங்கும் பொழுது சக்தி விரையம் மட்டுமே நிகழும். இதனால்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் மனதளவில் பலவீனமாக உணர்கிறார்கள். 

மேலும் மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக, மற்றவர்களுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமக்கு அவர்கள் மீது எதிர்பார்ப்புகள் எழுகிறது. அது நிகழாத போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. இது மனதளவில் மிகப் பெரிய சக்தி இழப்பாக மாறிவிடுகிறது. நம் உணர்வு மையம் நமக்குள் இயங்கினால் மட்டுமே தன்னிறைவு என்பது ஏற்படும். நம் செயலை பிறர் பாராட்டும் பொழுது அது மேலும் வினை புரியத் தூண்டி விடுகிறது. பிறர் குறை கூறும் பொழுதோ அது நம் மனதை வெகுவாக பாதித்து செயலற்றவனாக ஆக்கி விடுகிறது. உடனே கேட்பீர்கள், செயலற்று இருப்பது நல்லதுதானே ? வினையற்று இருக்க வேண்டும் என்றுதானே சொல்கிறீர்கள் ? என்று. செயலற்று இருப்பது என்பது நடைபிணத்திற்கு ஒப்பானதாகும். வினையற்று இருப்பது என்பது வினை உடலளவில் நடைபெற்ற்றாலும் மனதை பற்றாமல் இருப்பது. வினை மனதைப் பற்றாமல் இருக்கின்ற ஒருவருக்கு மற்றவர்கள் பாராட்டினாலும், குறை கூறினாலும் எல்லாமே ஒன்றுதான். எனவே யாருடைய கவனமும் நம் மீது விழ வேண்டும் என்று ஏங்கவும் வேண்டாம். நம் கவனத்தை யார் மீதும் ஆழமாகச் செலுத்தவும் வேண்டாம். 

நமது திருப்திக்காக நாம் வாழ வேண்டும். நமக்கு மனநிறைவு என்பது நாமே உருவாக்கிக் கொள்வதாகும். பிறரிடமிருந்து எதிர்பார்த்தால் நிறைவே ஏற்படாது. எனவே நம் செயல்களிலும், அதன் விளைவுகளிலும், அனுபவங்களிலும் நாம் தன்னிறைவு காணும் விதமாகச் செயல்பட வேண்டும். அதுவே நிறைவான வாழ்வாகும். மற்றவர்கள் நம்மை நேசிக்க வேண்டும் என்று ஏங்குவதை விடுத்து, அனைவரையும் நேசித்து அன்பு செலுத்தும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் நம்மை நாமே நேசித்துக் கொள்வதற்கான சுலபமான வழியாகும். நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்து விட்டால், அதற்குப் பிறகு நம் மனம் காரணத்தைத் தேடுவதுமில்லை, மற்றவர்களுடைய அபிப்பிராயத்தைப் பற்றிக் கவலைப்படப் போவதுமில்லை.
நம் வாழ்வின் பெரும்பாலான நேரத்தை மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், மற்றவர்களை திருப்திப் படுத்துவதற்காகவுமே செலவிடுகிறோம். அதனால் என்ன மற்றவர்களைத் திருப்திப்படுத்துவது கூட ஒரு தொண்டுதானே என்று கேட்கக் கூடும். மற்றவர்களுக்கு நன்மை செய்வது என்பது வேறு, அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செயல்படுவது வேறு. மற்றவர்களுக்கு நன்மை செய்யும் பொழுது உங்கள் மனம் நிறைவடைகிறது. இந்த மனநிறைவு மேலும் உங்கள் ஆற்றலைப் பெருகச் செய்கிறது. ஆனால் மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, மற்றவர்கள் முன் தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்வதற்காக, மற்றவர்களிடம் நல்லவன் என்று பெயரெடுக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் செயல்படும் பொழுது அவர்களுக்கு திருப்பதி ஏற்படுகிறதோ இல்லையோ, உங்களுடைய ஆற்றல் அதிகமாகச் செலவாகிறது. தனக்குள் இயங்க வேண்டிய உணர்வு மையம் மற்றவர்களைச் சார்ந்து நமக்கு வெளியே இயங்க ஆரம்பிக்கிறது. தன்னுணர்வைத் தனக்குள் குவித்து நிலைக்கும் பொழுது சக்தி பெருகும். அது வெளியே புறப் பொருளோடோ, மனிதர்களோடு சார்ந்து இயங்கும் பொழுது சக்தி விரையம் மட்டுமே நிகழும். இதனால்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் மனதளவில் பலவீனமாக உணர்கிறார்கள்.

மேலும் மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக, மற்றவர்களுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமக்கு அவர்கள் மீது எதிர்பார்ப்புகள் எழுகிறது. அது நிகழாத போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. இது மனதளவில் மிகப் பெரிய சக்தி இழப்பாக மாறிவிடுகிறது. நம் உணர்வு மையம் நமக்குள் இயங்கினால் மட்டுமே தன்னிறைவு என்பது ஏற்படும். நம் செயலை பிறர் பாராட்டும் பொழுது அது மேலும் வினை புரியத் தூண்டி விடுகிறது. பிறர் குறை கூறும் பொழுதோ அது நம் மனதை வெகுவாக பாதித்து செயலற்றவனாக ஆக்கி விடுகிறது. உடனே கேட்பீர்கள், செயலற்று இருப்பது நல்லதுதானே ? வினையற்று இருக்க வேண்டும் என்றுதானே சொல்கிறீர்கள் ? என்று. செயலற்று இருப்பது என்பது நடைபிணத்திற்கு ஒப்பானதாகும். வினையற்று இருப்பது என்பது வினை உடலளவில் நடைபெற்ற்றாலும் மனதை பற்றாமல் இருப்பது. வினை மனதைப் பற்றாமல் இருக்கின்ற ஒருவருக்கு மற்றவர்கள் பாராட்டினாலும், குறை கூறினாலும் எல்லாமே ஒன்றுதான். எனவே யாருடைய கவனமும் நம் மீது விழ வேண்டும் என்று ஏங்கவும் வேண்டாம். நம் கவனத்தை யார் மீதும் ஆழமாகச் செலுத்தவும் வேண்டாம்.

நமது திருப்திக்காக நாம் வாழ வேண்டும். நமக்கு மனநிறைவு என்பது நாமே உருவாக்கிக் கொள்வதாகும். பிறரிடமிருந்து எதிர்பார்த்தால் நிறைவே ஏற்படாது. எனவே நம் செயல்களிலும், அதன் விளைவுகளிலும், அனுபவங்களிலும் நாம் தன்னிறைவு காணும் விதமாகச் செயல்பட வேண்டும். அதுவே நிறைவான வாழ்வாகும். மற்றவர்கள் நம்மை நேசிக்க வேண்டும் என்று ஏங்குவதை விடுத்து, அனைவரையும் நேசித்து அன்பு செலுத்தும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் நம்மை நாமே நேசித்துக் கொள்வதற்கான சுலபமான வழியாகும். நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்து விட்டால், அதற்குப் பிறகு நம் மனம் காரணத்தைத் தேடுவதுமில்லை, மற்றவர்களுடைய அபிப்பிராயத்தைப் பற்றிக் கவலைப்படப் போவதுமில்லை.

No comments:

Post a Comment