Friday, March 28, 2014

மனிதனின் ஆயுள்

Photo: அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்று சொல்லும் போது வேதாந்தம் அண்டத்திலும், பிண்டத்திலும் உள்ள அனைத்திற்கும் மூலப் பொருள் ஒன்றே, எனவே எல்லாம் ஒன்றே என்கிற கோட்பாடை முன் வைக்கிறது. சித்தர்கள் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டாலும், தங்களின் அறிவின் திறத்தால் சிந்தனையை வேறுவிதமாகச் செலுத்தி ஒரு பேருண்மையைக் கண்டறிந்தார்கள். அதாவது அண்டத்தில் உள்ள எந்த சக்தியாக இருந்தாலும் அவை அனைத்தும் ஏதோ ஒரு நிலையில் மனித உடலில் செயல்படுகிறது என்ற உண்மையே அது. சக்தியின் அளவும், செயல் திறனும் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறதே அன்றி நம் உடலோடு தொடர்பில்லாத சக்திகள் என்பது இல்லவே இல்லை. எனவே நம் உடலையும் அதன் இயக்கங்களையும் ஆராய்ந்து பார்த்த சித்தர்கள் 96 தத்துவங்களாக அது இயங்குவதையும் கண்டறிந்தார்கள். எனவே அந்த 96 தத்துவங்களையும் சீராகச் செயல்பட வைப்பது எவ்வாறு என்பதைக் குறிந்து ஆராய்ந்து, இயற்கை சக்தியை கால நேர மற்றும் தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு மாற்றி நம் உடலில் செயல்படச் செய்து 96 தத்துவங்களையும் சீராக இயங்க வைத்து தங்கள் தேகத்தை அழியா தேகமாக மாற்றி நீண்ட காலம் வாழ்ந்தார்கள். 

இயற்கை சக்திகளின் இயக்கம் மாறிக் கொண்டே இருக்கிறது. நம்மையும் அதற்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொண்டு இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழும் போது உடலில் இயற்கையாக நடைபெற வேண்டிய செயல்கள் தங்குதடையின்றி நடைபெறுவதுடன் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ முடியும். இயற்கையோடு நம் உடலின் உள்ளுறுப்புகள் இயைந்து இயங்கும் போது நம் எண்ணங்களும், மனோபாவங்களும் தூய்மையடைவதோடு, வலிமை பெறுகின்றன. இதனால் இயல்பாகவே மன அமைதியும், மனத்தெளிவும் ஏற்பட்டுவிடுவதால், தேவையற்ற எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் மனதில் தோன்றுவதில்லை. மாறாக ஏதாவது ஒரு இயற்கை சக்தியோ, கனிம சக்தியோ நம் உடலில் அதிக்கப்படும் போதோ அல்லது குறைவுபடும் போதோதான் நம் மனதில் தேவையற்ற எண்ணங்களும், ஆசைகளும் தோன்றி நம்மை தவறான செயல்களில் ஈடுபடுத்தி துன்பத்திற்கு ஆளாக்கி விடுகின்றன. அல்லது நமக்கு அமையும் நல்ல சூழ்நிலைகளை வலிமையிழந்த மனோபாவத்தால் நிராகரித்து துன்பத்திற்கு ஆளாகி விடுகிறோம். 

மன வலிமையே நமக்கு எழும் உணர்வுகளுக்கு அடிப்படையாக அமைகிறது என்பதைக் கண்டோம். அந்த மன வலிமைக்கு ஆதாரமாக விளங்கும் பிரபஞ்ச சக்திகளை நாம் பல வழிகளில் பெற்றுக் கொள்கிறோம். ஆதாரச் சக்கரங்கள் மூலமாக, சக்திமையங்கள் வாயிலாக, உணவின் மூலமாக, மூச்சின் மூலமாக, நீர் அருந்துவதின் மூலமாக போன்ற வழிகளில் பெற்றுக் கொள்கிறோம். இவற்றில் நீர் அருந்துவதின் மூலம் குறைவான சக்தியே கிடைக்கிறது. உணவு முறையில் சரியான பழக்க வழக்கம் இல்லாத காரணத்தால் உடலில் தேவையற்ற கழிவுப் பொருள்கள் தேங்கி நோய் நொடிகளை ஏற்படுத்தி உடலை பலவீனப்படுத்தி விடுகிறது. உடல் பலவீன மான நிலையில் இருப்பதாலும், நாடி, நரம்புகளில் தேவையற்ற கழிவுகளின் அடைப்புகள் ஏற்பட்டு விடுவதாலும் சக்கரங்களும், சக்தி மையங்களும் சரிவர இயங்கி தேவையான சக்திகளை பிரபஞ்சத்தில் இருந்து கிரகிக்க முடியாமல் போய்விடுகிறது. இப்படி எல்லா வகையிலும் சக்திகளின் பேரிழப்பு ஏற்பட்டு விடுவதால் மனிதனின் ஆயுள் குறைந்து போய் விடுகிறது.

எந்தவித ஆரோக்யக் குறைவும் இல்லாத ஒருவருக்கு பசி உணர்வு தோன்ற வில்லை என்றால் அந்த ஒரு வேளை உணவை அவர் தவிர்த்து விடுவதே நல்லது. ஏனென்றால் அவர் உடலுக்குத் தேவையான சக்தி அவர் சக்தி நரம்புகளிலும், தசை நார்களிலும் இருப்பதே காரணமாகும். கடின உழைப்போ, வேலைப் பளுவோ இல்லாதவர்கள் ஒரு வேளை உணவைத் தவிர்த்து விடுதல் நல்லது. இதனால் நம் சிந்தனை கட்டுக்குள் வரும். அவ்வாறில்லையெனில் ஒரு வேளை கால் வயிறும், அடுத்த வேளை திருப்திகரமான உணவும், மூன்றாவது வேளை அரைவயிறு உணவோ அல்லது திரவ உணவோ எடுத்துக் கொள்ளும் போது உடலின்கண் அதிக சக்திகள் சேராத வண்ணம் காக்கப்படும். இவ்வாறு தேவைக்கு அதிகமாக சக்திகள் உடலில் கூடும் போது பல விதமான உணர்வுகளைத் தூண்டி விடுவதால் உடலுக்குள் ஒரு உணர்வுப் போராட்டமே நடைபெற்று மன அமைதியைக் குலைத்து விடும்.

பசிக்காக உண்ணாமல் மூன்று வேளை உணவு அவசியம் என்று எண்ணி உண்ணும் போது உணவு அதிகப்படியாகி விடுகிறது.  இதனால் உடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கத் தொடங்கி மந்த நிலையை உருவாக்கி நோய்களுக்கு காரணமாகி விடுகின்றது. மனம் வலிமையிழந்து மன உளைச்சல் ஏற்படுகிறது. உணவின் மூலம் அதிக சக்தியை உடலுக்குக் கொடுக்கும் போது நாடி நரம்புகள் முறுக்கேறி ஆணவம், அஹங்காரம், எல்லாவற்றையும் தன் வயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம், செறுக்கு போன்ற முரண்பட்ட உணர்வுகளைத் தோற்றுவித்து நமக்கும் பிறர்க்கும் உள்ள இணக்கத்தை சீர்குலைத்து விடுகிறது. இதை இப்போதே நீங்கள் உங்கள் நிலையை ஆராய்ந்து உணரலாம். மேலும் அதிக போக உணர்வைத் தூண்டி விடுவதன் மூலம் அதை நிறைவேற்றிக் கொள்ள முடியாத போது மிருக உணர்ச்சிகளைத் தூண்டி விடுகிறது. எனவே இதையெல்லாம் உணர்ந்து சரியான விகித உணவு, அதன் மூலம் நோயற்ற வாழ்வு, அதன் மூலம் சீரான உடல் இயக்கம், அதன் மூலம் சக்கரங்கள் மற்றும் சக்தி மையங்கள் மூலமாக தேவையான பிரபஞ்ச சக்திகளைக் குறைவில்லாமல் பெற்றுக் கொள்ளுதல் அதன் மூலம் மன அமைதி மற்றும் மன வலிமையை அடைந்து தவ வாழ்வை மேற்கொள்ளும் போது எளிதில் மன ஒருமைப்பாடு அமைந்து தியானத்தில் வெற்றி சித்திக்கிறது. இவ்வாறு அதிகப்படியாக உள்ள சக்திகளை சமன்படுத்தவே நம் முன்னோர்கள் விரத தினங்களை நடை முறைப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்று சொல்லும் போது வேதாந்தம் அண்டத்திலும், பிண்டத்திலும் உள்ள அனைத்திற்கும் மூலப் பொருள் ஒன்றே, எனவே எல்லாம் ஒன்றே என்கிற கோட்பாடை முன் வைக்கிறது. சித்தர்கள் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டாலும், தங்களின் அறிவின் திறத்தால் சிந்தனையை வேறுவிதமாகச் செலுத்தி ஒரு பேருண்மையைக் கண்டறிந்தார்கள். அதாவது அண்டத்தில் உள்ள எந்த சக்தியாக இருந்தாலும் அவை அனைத்தும் ஏதோ ஒரு நிலையில் மனித உடலில் செயல்படுகிறது என்ற உண்மையே அது. சக்தியின் அளவும், செயல் திறனும் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறதே அன்றி நம் உடலோடு தொடர்பில்லாத சக்திகள் என்பது இல்லவே இல்லை. எனவே நம் உடலையும் அதன் இயக்கங்களையும் ஆராய்ந்து பார்த்த சித்தர்கள் 96 தத்துவங்களாக அது இயங்குவதையும் கண்டறிந்தார்கள். எனவே அந்த 96 தத்துவங்களையும் சீராகச் செயல்பட வைப்பது எவ்வாறு என்பதைக் குறிந்து ஆராய்ந்து, இயற்கை சக்தியை கால நேர மற்றும் தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு மாற்றி நம் உடலில் செயல்படச் செய்து 96 தத்துவங்களையும் சீராக இயங்க வைத்து தங்கள் தேகத்தை அழியா தேகமாக மாற்றி நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.

இயற்கை சக்திகளின் இயக்கம் மாறிக் கொண்டே இருக்கிறது. நம்மையும் அதற்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொண்டு இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழும் போது உடலில் இயற்கையாக நடைபெற வேண்டிய செயல்கள் தங்குதடையின்றி நடைபெறுவதுடன் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ முடியும். இயற்கையோடு நம் உடலின் உள்ளுறுப்புகள் இயைந்து இயங்கும் போது நம் எண்ணங்களும், மனோபாவங்களும் தூய்மையடைவதோடு, வலிமை பெறுகின்றன. இதனால் இயல்பாகவே மன அமைதியும், மனத்தெளிவும் ஏற்பட்டுவிடுவதால், தேவையற்ற எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் மனதில் தோன்றுவதில்லை. மாறாக ஏதாவது ஒரு இயற்கை சக்தியோ, கனிம சக்தியோ நம் உடலில் அதிக்கப்படும் போதோ அல்லது குறைவுபடும் போதோதான் நம் மனதில் தேவையற்ற எண்ணங்களும், ஆசைகளும் தோன்றி நம்மை தவறான செயல்களில் ஈடுபடுத்தி துன்பத்திற்கு ஆளாக்கி விடுகின்றன. அல்லது நமக்கு அமையும் நல்ல சூழ்நிலைகளை வலிமையிழந்த மனோபாவத்தால் நிராகரித்து துன்பத்திற்கு ஆளாகி விடுகிறோம்.

மன வலிமையே நமக்கு எழும் உணர்வுகளுக்கு அடிப்படையாக அமைகிறது என்பதைக் கண்டோம். அந்த மன வலிமைக்கு ஆதாரமாக விளங்கும் பிரபஞ்ச சக்திகளை நாம் பல வழிகளில் பெற்றுக் கொள்கிறோம். ஆதாரச் சக்கரங்கள் மூலமாக, சக்திமையங்கள் வாயிலாக, உணவின் மூலமாக, மூச்சின் மூலமாக, நீர் அருந்துவதின் மூலமாக போன்ற வழிகளில் பெற்றுக் கொள்கிறோம். இவற்றில் நீர் அருந்துவதின் மூலம் குறைவான சக்தியே கிடைக்கிறது. உணவு முறையில் சரியான பழக்க வழக்கம் இல்லாத காரணத்தால் உடலில் தேவையற்ற கழிவுப் பொருள்கள் தேங்கி நோய் நொடிகளை ஏற்படுத்தி உடலை பலவீனப்படுத்தி விடுகிறது. உடல் பலவீன மான நிலையில் இருப்பதாலும், நாடி, நரம்புகளில் தேவையற்ற கழிவுகளின் அடைப்புகள் ஏற்பட்டு விடுவதாலும் சக்கரங்களும், சக்தி மையங்களும் சரிவர இயங்கி தேவையான சக்திகளை பிரபஞ்சத்தில் இருந்து கிரகிக்க முடியாமல் போய்விடுகிறது. இப்படி எல்லா வகையிலும் சக்திகளின் பேரிழப்பு ஏற்பட்டு விடுவதால் மனிதனின் ஆயுள் குறைந்து போய் விடுகிறது.

எந்தவித ஆரோக்யக் குறைவும் இல்லாத ஒருவருக்கு பசி உணர்வு தோன்ற வில்லை என்றால் அந்த ஒரு வேளை உணவை அவர் தவிர்த்து விடுவதே நல்லது. ஏனென்றால் அவர் உடலுக்குத் தேவையான சக்தி அவர் சக்தி நரம்புகளிலும், தசை நார்களிலும் இருப்பதே காரணமாகும். கடின உழைப்போ, வேலைப் பளுவோ இல்லாதவர்கள் ஒரு வேளை உணவைத் தவிர்த்து விடுதல் நல்லது. இதனால் நம் சிந்தனை கட்டுக்குள் வரும். அவ்வாறில்லையெனில் ஒரு வேளை கால் வயிறும், அடுத்த வேளை திருப்திகரமான உணவும், மூன்றாவது வேளை அரைவயிறு உணவோ அல்லது திரவ உணவோ எடுத்துக் கொள்ளும் போது உடலின்கண் அதிக சக்திகள் சேராத வண்ணம் காக்கப்படும். இவ்வாறு தேவைக்கு அதிகமாக சக்திகள் உடலில் கூடும் போது பல விதமான உணர்வுகளைத் தூண்டி விடுவதால் உடலுக்குள் ஒரு உணர்வுப் போராட்டமே நடைபெற்று மன அமைதியைக் குலைத்து விடும்.

பசிக்காக உண்ணாமல் மூன்று வேளை உணவு அவசியம் என்று எண்ணி உண்ணும் போது உணவு அதிகப்படியாகி விடுகிறது. இதனால் உடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கத் தொடங்கி மந்த நிலையை உருவாக்கி நோய்களுக்கு காரணமாகி விடுகின்றது. மனம் வலிமையிழந்து மன உளைச்சல் ஏற்படுகிறது. உணவின் மூலம் அதிக சக்தியை உடலுக்குக் கொடுக்கும் போது நாடி நரம்புகள் முறுக்கேறி ஆணவம், அஹங்காரம், எல்லாவற்றையும் தன் வயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம், செறுக்கு போன்ற முரண்பட்ட உணர்வுகளைத் தோற்றுவித்து நமக்கும் பிறர்க்கும் உள்ள இணக்கத்தை சீர்குலைத்து விடுகிறது. இதை இப்போதே நீங்கள் உங்கள் நிலையை ஆராய்ந்து உணரலாம். மேலும் அதிக போக உணர்வைத் தூண்டி விடுவதன் மூலம் அதை நிறைவேற்றிக் கொள்ள முடியாத போது மிருக உணர்ச்சிகளைத் தூண்டி விடுகிறது. எனவே இதையெல்லாம் உணர்ந்து சரியான விகித உணவு, அதன் மூலம் நோயற்ற வாழ்வு, அதன் மூலம் சீரான உடல் இயக்கம், அதன் மூலம் சக்கரங்கள் மற்றும் சக்தி மையங்கள் மூலமாக தேவையான பிரபஞ்ச சக்திகளைக் குறைவில்லாமல் பெற்றுக் கொள்ளுதல் அதன் மூலம் மன அமைதி மற்றும் மன வலிமையை அடைந்து தவ வாழ்வை மேற்கொள்ளும் போது எளிதில் மன ஒருமைப்பாடு அமைந்து தியானத்தில் வெற்றி சித்திக்கிறது. இவ்வாறு அதிகப்படியாக உள்ள சக்திகளை சமன்படுத்தவே நம் முன்னோர்கள் விரத தினங்களை நடை முறைப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment