Friday, March 28, 2014

தீக்கை என்றால் என்ன?

Photo: தீட்சை எனப்படும் தீக்ஷா அல்லது தீக்கை என்றால் என்ன? தீ என்றால் கொடுத்தல், க்ஷா என்றால் கெடுத்தல். அதாவது உயிர்களுக்கு பாசத்தைக் கெடுத்து, மெய்யுணர்வை ஏற்றுக்கொள்ளச் செய்யும் இறைவனது சத்தியின் தொழிற்பாடு தீட்சை எனப்படும். இறைவன் செய்யும் ஐந்தொழில்களுள் இது அருளள் எனப்படும். பசு ஆன்மா, பதி பேரான்மா, பாசம் என்றால் பற்று ஆகும். இந்த பாசத்தை கெடுத்தல் என்றால் பற்றுகளை அற்றுப் போகும்படிக்குச் செய்தல் என்பதாம்.அவ்வாறு பாசம்(பற்று) நீங்கிய பசுவானது(ஆன்மா) பதியிடம(பேரான்மா) போய்ச் சேரும் என்பது கோட்பாடு.

இந்த தீட்சையை சைவ நெறியில் இரண்டு பிரிவாகச் சொல்வார்கள். 1. நிராதாரம், 2. சாதாரம் ஆகும். மூவகைப்படும் உயிர்களில் மூலமலமான ஆணவமலத்தை மட்டுமே உடையவர்களான விஞ்ஞானகலருக்கு இறைவனே உயிருக்குயிராய் நின்று மலசக்தியை கெடுத்து தன்னை உணரும் மெய்யுணர்வை தோற்றுவிப்பான். மலம், கன்மம் என்னும் இரண்டு மலங்களை உடைய பிரளயாகலருக்கு தனது நாற்றோளும், சடைமுடியும் ஆகிய திருவடையாளம் உள்ள தனது அருள்திருமேனியேக் காட்டி திருநோக்கு, ஸ்பரிசம், உரை என்ற மூன்றாலும் மலங்களை நீக்கி மெய்யுணர்வை உண்டாக்குவான். இப்படி தன்மையிலும் முன்னிலையிலும் நின்று இறைவனே தானே செய்யும் அருட்செயல் நிராதார தீக்கை எனப்படும். 

ஆணவம், கன்மம், மாயை என்கிற மூன்று மலங்களையுமுடைய சகலருக்கு ஞான ஆச்சாரியார்கள் மூலம் தரப்படும் தீட்சையே சாதார தீக்கை எனப்படும். இந்த சாதார தீக்கை எழுவகைப்பட்டும். அவைகளைப் பற்றி.....

1. திருநோக்கு - மீன் தனது முட்டையை நோக்கி பார்வையாலேயே அடைகாத்து குஞ்சினை வெளிவரச் செய்வது போல ஆசிரியன் தன் அருள் நோக்கத்தால் மாணவனுடைய பாசபந்தத்தை நீக்குதல்.

2. ஸ்பரிசம் - கோழியை தன் சிறகால் அடைகாப்பது போல ஆசிரியர் தமது திருக்கையை மாணவனின் முடியில் வைத்து அவனை பாச பந்தங்களில் இருந்து விடுவித்தல்.

3. உரை - மந்திரங்களைப் பொருளுடன் உபதேசிப்பது, மற்ற புராணக் கதைகள் சொல்வது போன்ற செயல்களால் மாணவனுடைய மலங்களைக் கடிதல் உரை அல்லது வாசக தீக்கை எனப்படும்.

4. பாவனை - ஆமை தன் முட்டையை மனதால் நினைத்து எண்ணத்தால் அடைகாப்பது போல ஆசிரியன் மாணவனை தன் எண்ணங்களால் மேன்மையுறச் செய்தல். பாவனை - நினைவு.

5. சாத்திர தீக்கை - சித்தாந்த சாத்திரங்கள் மூலம் முப்பொருள் இயல்பை மாணவனுக்கு உணர்த்தி மனத்துள் காணும் இருளை அகற்றி அருள் ஒளி துலங்கச் செய்தல்.

6. யோகம் - மாணவனது ஆனாமாவை யோக நுட்பங்களால் தன் உயிர்ப்போடு சேர்த்து கொண்டு போய் தன் மீதானத்தில் விளங்கும் பரஞ்ஜோதியுடன் ஒன்றுவித்து, தூய்மைப்படுத்தி மீண்டும் மாணாக்கனின் இதயத்தில் கொண்டுபோய் நிறுவுதல்.

7. இவை ஆறும் மாணாக்கனுடைய பக்குவங்களுக்குத் தக்கவாறு செய்யப்படும் போது சுதந்திரம் எனப்படும். இனி இந்த ஏழாவது தீட்சையான ஔத்திரி தீட்சையில் இவை ஒன்றோ, பலவோ தேவைக்கேற்ப செய்யப்படும். குண்டமண்டலங்களோடு கூடிய ஓமத்தோடு செய்யப்படும் தீக்கையே ஔத்திரி தீக்கை. ஹூதம் - ஓமம். ஹூதத்தோடு கூடியது ஹௌத்திரி அல்லது ஔத்திரி. இந்த ஔத்திரி மூன்று வகைகளில் செய்யப்படும். அவை சமயம், விசேடம், நிருவாணம் என்பவைகளாம். 

இதில் சமய தீக்கை எனப்படுவது வேள்விச்சாலைகள் அமைத்து தீயுருவாய் விளங்கும் இறைவனை ஓமத்தால் வழிபடச் செய்து, அவன் நாமங்களை உச்சரிக்கச் செய்து மனதை தூய்மைப்படுத்துவது. எனவே இந்த தீக்கையை மந்திராதிகாரை என்பார்கள்.

அடுத்து சமய தீக்கை பெற்ற மாணவனை விசேட தீக்கை கொடுத்து சிவபுத்திரனாக்குவது. இது யோகநிலை. அருள் நூல்களை ஓதுதல், அவற்றின் நுட்பங்களைச் சிந்தித்தல் மூலம் இடையறாது இறைவனை மனதில் நிறுத்தி  மனதை ஒருமுகப் படுத்துதல். இது அர்ச்சனாதிகாரை, யோகாதிகாரை எனப்படும் விசேட தீக்கையாகும்.

நிருவாண தீக்கை என்றால் சரியை, கிரியை, யோகங்களில் கடை பிடித்த மாணவனுக்கு அவன்றன் கன்மங்களையும், மூல மலத்தையும் நீக்கி முப்பொருள் பற்றிய மெய்யுணர்வைப் பெற்று விளங்கச்ச் செய்வது. இது ஞான நெறியாகும். 

இந்த ஔத்திரியின் பிரிவான சமயம், விசேடம், நிருவாணம் முதலிய மூன்று தீக்கைகளும் தனித்தனியே  நிர்பீசம், சபீசம் என இரு வகைப்படும். அதாவது உபதேசிக்கும் மந்திரங்களை பீச அக்ஷ்ரங்கள் இன்றி உணர்த்துவது நிர்பீசம். பீசங்களோடு உணர்த்துவது சபீசம்.

சமய தீக்கை நித்தியம், நைமித்திகம், காமியம் என்று மூன்று வகைப்படும். அன்றாடம் செய்துவரும் அநுட்டானம், பூசை முதலியவை நித்தியம். இதில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு விசேச காலங்களில் சிறப்பாகச் செய்யப்படுவது நைமித்திகம். சிலபல பயன்களை மனதில் கொண்டு நூல்களின் விதிப்படி செய்யப்படுவது காமியம். இதில் நிர்பீச தீட்சை உடையவர் நித்தியம் ஒன்றுக்கே உரியவர். சபீச தீக்கை உடையவரே நித்தியம், நைமித்திகம், காமியம் என்ற மூன்றுக்கும் உரியவர்..
தீட்சை எனப்படும் தீக்ஷா அல்லது தீக்கை என்றால் என்ன? தீ என்றால் கொடுத்தல், க்ஷா என்றால் கெடுத்தல். அதாவது உயிர்களுக்கு பாசத்தைக் கெடுத்து, மெய்யுணர்வை ஏற்றுக்கொள்ளச் செய்யும் இறைவனது சத்தியின் தொழிற்பாடு தீட்சை எனப்படும். இறைவன் செய்யும் ஐந்தொழில்களுள் இது அருளள் எனப்படும். பசு ஆன்மா, பதி பேரான்மா, பாசம் என்றால் பற்று ஆகும். இந்த பாசத்தை கெடுத்தல் என்றால் பற்றுகளை அற்றுப் போகும்படிக்குச் செய்தல் என்பதாம்.அவ்வாறு பாசம்(பற்று) நீங்கிய பசுவானது(ஆன்மா) பதியிடம(பேரான்மா) போய்ச் சேரும் என்பது கோட்பாடு.

இந்த தீட்சையை சைவ நெறியில் இரண்டு பிரிவாகச் சொல்வார்கள். 1. நிராதாரம், 2. சாதாரம் ஆகும். மூவகைப்படும் உயிர்களில் மூலமலமான ஆணவமலத்தை மட்டுமே உடையவர்களான விஞ்ஞானகலருக்கு இறைவனே உயிருக்குயிராய் நின்று மலசக்தியை கெடுத்து தன்னை உணரும் மெய்யுணர்வை தோற்றுவிப்பான். மலம், கன்மம் என்னும் இரண்டு மலங்களை உடைய பிரளயாகலருக்கு தனது நாற்றோளும், சடைமுடியும் ஆகிய திருவடையாளம் உள்ள தனது அருள்திருமேனியேக் காட்டி திருநோக்கு, ஸ்பரிசம், உரை என்ற மூன்றாலும் மலங்களை நீக்கி மெய்யுணர்வை உண்டாக்குவான். இப்படி தன்மையிலும் முன்னிலையிலும் நின்று இறைவனே தானே செய்யும் அருட்செயல் நிராதார தீக்கை எனப்படும்.

ஆணவம், கன்மம், மாயை என்கிற மூன்று மலங்களையுமுடைய சகலருக்கு ஞான ஆச்சாரியார்கள் மூலம் தரப்படும் தீட்சையே சாதார தீக்கை எனப்படும். இந்த சாதார தீக்கை எழுவகைப்பட்டும். அவைகளைப் பற்றி.....

1. திருநோக்கு - மீன் தனது முட்டையை நோக்கி பார்வையாலேயே அடைகாத்து குஞ்சினை வெளிவரச் செய்வது போல ஆசிரியன் தன் அருள் நோக்கத்தால் மாணவனுடைய பாசபந்தத்தை நீக்குதல்.

2. ஸ்பரிசம் - கோழியை தன் சிறகால் அடைகாப்பது போல ஆசிரியர் தமது திருக்கையை மாணவனின் முடியில் வைத்து அவனை பாச பந்தங்களில் இருந்து விடுவித்தல்.

3. உரை - மந்திரங்களைப் பொருளுடன் உபதேசிப்பது, மற்ற புராணக் கதைகள் சொல்வது போன்ற செயல்களால் மாணவனுடைய மலங்களைக் கடிதல் உரை அல்லது வாசக தீக்கை எனப்படும்.

4. பாவனை - ஆமை தன் முட்டையை மனதால் நினைத்து எண்ணத்தால் அடைகாப்பது போல ஆசிரியன் மாணவனை தன் எண்ணங்களால் மேன்மையுறச் செய்தல். பாவனை - நினைவு.

5. சாத்திர தீக்கை - சித்தாந்த சாத்திரங்கள் மூலம் முப்பொருள் இயல்பை மாணவனுக்கு உணர்த்தி மனத்துள் காணும் இருளை அகற்றி அருள் ஒளி துலங்கச் செய்தல்.

6. யோகம் - மாணவனது ஆனாமாவை யோக நுட்பங்களால் தன் உயிர்ப்போடு சேர்த்து கொண்டு போய் தன் மீதானத்தில் விளங்கும் பரஞ்ஜோதியுடன் ஒன்றுவித்து, தூய்மைப்படுத்தி மீண்டும் மாணாக்கனின் இதயத்தில் கொண்டுபோய் நிறுவுதல்.

7. இவை ஆறும் மாணாக்கனுடைய பக்குவங்களுக்குத் தக்கவாறு செய்யப்படும் போது சுதந்திரம் எனப்படும். இனி இந்த ஏழாவது தீட்சையான ஔத்திரி தீட்சையில் இவை ஒன்றோ, பலவோ தேவைக்கேற்ப செய்யப்படும். குண்டமண்டலங்களோடு கூடிய ஓமத்தோடு செய்யப்படும் தீக்கையே ஔத்திரி தீக்கை. ஹூதம் - ஓமம். ஹூதத்தோடு கூடியது ஹௌத்திரி அல்லது ஔத்திரி. இந்த ஔத்திரி மூன்று வகைகளில் செய்யப்படும். அவை சமயம், விசேடம், நிருவாணம் என்பவைகளாம்.

இதில் சமய தீக்கை எனப்படுவது வேள்விச்சாலைகள் அமைத்து தீயுருவாய் விளங்கும் இறைவனை ஓமத்தால் வழிபடச் செய்து, அவன் நாமங்களை உச்சரிக்கச் செய்து மனதை தூய்மைப்படுத்துவது. எனவே இந்த தீக்கையை மந்திராதிகாரை என்பார்கள்.

அடுத்து சமய தீக்கை பெற்ற மாணவனை விசேட தீக்கை கொடுத்து சிவபுத்திரனாக்குவது. இது யோகநிலை. அருள் நூல்களை ஓதுதல், அவற்றின் நுட்பங்களைச் சிந்தித்தல் மூலம் இடையறாது இறைவனை மனதில் நிறுத்தி மனதை ஒருமுகப் படுத்துதல். இது அர்ச்சனாதிகாரை, யோகாதிகாரை எனப்படும் விசேட தீக்கையாகும்.

நிருவாண தீக்கை என்றால் சரியை, கிரியை, யோகங்களில் கடை பிடித்த மாணவனுக்கு அவன்றன் கன்மங்களையும், மூல மலத்தையும் நீக்கி முப்பொருள் பற்றிய மெய்யுணர்வைப் பெற்று விளங்கச்ச் செய்வது. இது ஞான நெறியாகும்.

இந்த ஔத்திரியின் பிரிவான சமயம், விசேடம், நிருவாணம் முதலிய மூன்று தீக்கைகளும் தனித்தனியே நிர்பீசம், சபீசம் என இரு வகைப்படும். அதாவது உபதேசிக்கும் மந்திரங்களை பீச அக்ஷ்ரங்கள் இன்றி உணர்த்துவது நிர்பீசம். பீசங்களோடு உணர்த்துவது சபீசம்.

சமய தீக்கை நித்தியம், நைமித்திகம், காமியம் என்று மூன்று வகைப்படும். அன்றாடம் செய்துவரும் அநுட்டானம், பூசை முதலியவை நித்தியம். இதில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு விசேச காலங்களில் சிறப்பாகச் செய்யப்படுவது நைமித்திகம். சிலபல பயன்களை மனதில் கொண்டு நூல்களின் விதிப்படி செய்யப்படுவது காமியம். இதில் நிர்பீச தீட்சை உடையவர் நித்தியம் ஒன்றுக்கே உரியவர். சபீச தீக்கை உடையவரே நித்தியம், நைமித்திகம், காமியம் என்ற மூன்றுக்கும் உரியவர்..

No comments:

Post a Comment