பஞ்சபூதங்கள்
மற்றும் பஞ்ச இந்திரியங்களின் இயக்கத்தால் கிடைக்கும் உடல் சுகத்தை நாம்
இன்பம் என்று கொள்கிறோம். கொள்வதோடு அல்லாமல் அதிலேயே மயங்கிக்
கிடக்கிறோம். உண்மையில் அவை இன்பங்களல்ல. இன்பங்களை உணர்த்தும்
குறிகாட்டிகள். இவை அனைத்தையும் ஒன்று
சேர்த்தால் எவ்வளவு இன்பம் உண்டாகுமோ, அப்படிப்பட்ட ஒரு இன்பம் இருக்கிறது.
இந்தப் பிறவி என்னும் மாயச் சுழலில் அகப்பட்ட நமக்கு அது மறந்துவிட்டது
என்பதை உணர்த்தவே இந்த இன்பங்கள் தோன்றியுள்ளன. இவை பேரின்பத்தின் சிறு
சிறு பிரிவுகளாதலால் இவற்றை சிற்றின்பம் என்பார்கள்.
உதாரணமாக நாம் சுவையான தின்பண்டங்களை உண்ணும் போது அவற்றின் சுவை நமக்கு இன்பத்தைத் தருகிறது. ஆனால் அந்தப் பண்டங்கள் நாவை விட்டு தொண்டைக்கு போனவுடன் அந்த இன்பம் மறைந்துவிடுகிறது. நமக்கு ஆதரவான, அன்பான, இனிமையான வார்த்தைகளைக் கேட்கும் போது காதுக்கும், மனதுக்கும் இன்பமாக இருக்கிறது. கேட்ட சில நிமிடங்களில் அந்த இன்பம் மறைந்து போகிறது. அது நிலைத்திருப்பதில்லை.
அழகானக் காட்சிகளைக் காணும் போது கண்களுக்கும், மனதுக்கும் இன்பமாக இருக்கிறது. காட்சிகள் மாறும் போது, இன்பமும் மாறிவிடுகிறது. சில நேரங்களில் துன்பத்தைக்கூட அது தந்து விடுகிறது. வாசனையான பொருள்களைப் பூசிக் கொள்வதாலோ, நுகரும் போதோ மூக்கிற்கும், மனதிற்கும் இன்பமாக இருக்கிறது. வாசனை காற்றில் கரைந்து போன போது அந்த இன்பம் மறைந்து விடுகிறது. மனைவியோடு கூடி மகிழும் போது மொத்த உடலுக்கும், மனதுக்கும் இன்பமாக இருக்கிறது. ஆனால் அந்த இன்பம் கூட அதிக நேரம் நிலைப்பதில்லை. ஆக இவையெல்லாம் நமக்கு பேரின்பத்தை உணர்த்தவே உருவானவை. இந்த உலகில் காணப்படும் ஒவ்வொரு உயிர்களும் பொருள்களும் மனிதனுக்கு ஏதோ ஒரு செய்தியைத் தருவதற்காகவே இயற்கை என்னும் பேராற்றலால் படைக்கப் பட்டுள்ளது.
இதில் இன்னும் ஒரு சிக்கல் என்னவென்றால் இவற்றில் எதையாவது இன்ப வேட்கையால் நாம் அதிகம் அடைய முயன்றால் பேரிடர் விளைகிறது. சரி அப்படி என்றால் இவையெல்லாம் சுட்டிக் காட்டும் பேரின்பம் எது ? அதை எப்படி அனுபவிப்பது ? நம் நாவில் இனிப்புப் பண்டத்தை சுவைக்கும் போது அனுபவிக்கும் உணர்ச்சியை, அந்த பண்டத்தை சுவைக்காமலேயே நம் உடலில் உள்ள நாடி நரம்புகளெல்லாம் அல்லும் பகலும் அனுபவிக்கும் ஒரு நிலையே பேரின்பம். இல்லற உறவில் கணவனும் மனைவியும் அடையும் இன்பத்தை ஒருவரை ஒருவர் தொடாமலேயே ஒவ்வொரு நொடியும் அனுபவிப்பதே பேரின்பம். இப்படிப் பல. இந்தப் பேரின்பத்தைப் பெறுவதே பிறப்பின் குறிக்கோள். நம் உடல் இயக்கங்களுக்கு பலவிதமான நரம்புகள் இயங்குவது போல, இடைவிடாது நம்மை பேரின்பமடையச் செய்யும் நரம்புகளும் இருக்கின்றன. அவைதான் நம் தலையில் மூளைக்கு மேலே உள்ள சகஸ்ராரச் சக்கரத்தின் நரம்புகள். பேராற்றல் களமாகிய பரமாதாமாவிடமிருந்து வருகிற உயிர் சக்தியாகிய மின்காந்த அலைகளை இந்த சகஸ்ராரச் சக்கரத்தின் நரம்புகளே ஈர்த்து, அதை சேமித்து வைத்துக் கொண்டு, தேவைக்கு ஏற்ப நம் எழுபத்தி இரண்டாயிரம் நரம்புகளுக்கும் பாய்ச்சி இந்த பேரின்பத்தை நிலை பெறச் செய்யும்.
நாம் எவ்வளவுக்கெவ்வளவு பேராற்றல் களமாகிய இறைசக்தியோடு மனதை இனைத்து, நிலைத்திருக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு உயிர் சக்தியை அதிகமாக ஈர்த்து நம்மை பேரின்பத்தில் திளைத்திடச் செய்யும். இந்த சகஸ்ராரச் சக்கரத்தில் இருந்து உயிராற்றலாகிய பேரின்பத்தை உடல் பூராவும் செலுத்தும் முக்கியமான இணைப்பு வழி நம் நெற்றியில் புருவங்களுக்கு மத்தியில் இருக்கிறது.. இதில் உள்ள வர்ம்ப் புள்ளிகளைத் தூண்டி அது நன்கு செயல்படச் செய்யவே அந்த இடத்தில் குங்குமம் வைக்கப்படுகிறது.
இந்த இணைப்பு வழி மூடி இருக்கும். இதைத் திறக்க எடுக்கும் முயற்சிகளே அஷ்டாங்க யோகப் பயிற்சிகள். ஆண், பெண் இருபாலினருக்கும் உருவாகும் விந்துவாகிய உயிர் அணுக்களே இவற்றைத் திறக்கும் வல்லமை பெற்றவை. எனவேதான் உயிர் அணுக்களை அதிகம் செலவழிக்காமல் , சேமித்து வைத்துக் கொண்டு புருவ மத்தியில் உள்ள இணைப்பைத் திறக்க வேண்டும். அப்படித் திறந்தால், ஏராளமான உயிர் சக்தி உடல் முழுவதும் பாய்ந்து பேரின்ப நிலை ஏற்படும். பேராற்றலோடு கலக்கும் பேரின்பம் விளையும். இதற்காகவே நாம் பிறந்திருக்கிறோம். வேறு எதற்காகவும் அல்ல. எத்தனை வழிகளில் தேடினாலும் முடிவான வழி இதுவே.

No comments:
Post a Comment