Friday, March 28, 2014

யோசித்துப் பார்க்கிறேன், எதற்காக இந்த ஓட்டம்?

Photo: மார்கழி மாதம் அதிகாலையே பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. பஜனைகள் ஒலி, ஒலி பெருக்கிகளின் சப்தம் வழியாக ஆண்டாள் நம் மனக் கண்ணில் வருகிறாள். ஓசோன் காற்று வாங்கலாம் என்று மொட்டைமாடிக்குப் போனால் அது இன்று ஒரே ஓசைக் காற்றாகத் தோன்றியாது. நான் இருப்பது யாதவர்கள் தெரு என்பதால் மாடு கன்றுகளின் சப்தம் வேறு. தண்ணீர் தெளிக்கும் சப்தமும், வாசலை சுத்தம் செய்யும் சப்தமும் ஒரு சேர ஒலிக்கிறது. இப்படித்தான் கோகுலம் அந்தக் காலத்தில் இருந்திருக்குமா ? எட்டி தெருவைப் பார்த்தால் ஆணும் பெண்ணுமாக பரபரவென்று பெருமாள் கோவிலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த வேகம் ? கோவிலில் கூட்டமாக இருக்கும், வந்து வீட்டு வேலைகளைக் கவனிக்க வேண்டுமல்லவா, அதனால்தான் இந்தப் பரபரப்பு. 

யோசித்துப் பார்க்கிறேன், எதற்காக இந்த ஓட்டம். எதை அடைய, எதை நோக்கி ஆணும், பெண்ணும், பெரியவர்களும், சிறியவர்களும் எல்லோரும் கூட்டம் கூட்டமாக போய்க் கொண்டே இருக்கிறார்கள் ? பரபரவென்று ஏதோ ஒரு மையப் புள்ளியை நோக்கி எல்லோரும் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மையப் புள்ளி என்னவாக இருக்கும் என்று பார்த்தால், அங்கே தெரிவது இன்பம். அந்த இன்ப அனுபவத்தை, ஆனந்தத்தை அடையவே உயிர்கள் அனைத்தும் ஓடிக் கொண்டே இருக்கின்றன. அவரவர் திசையில் அவரவர் ஓடினாலும் அவர்கள் அடையப் போகும் ஆனந்தமாகிய மையப் புள்ளி என்னவோ ஒன்று தான். இந்த ஆனந்தத்தை அடைய வேண்டும் என்பதே உயிர்களின் இயல்பாக இருக்கிறது. அப்படியானால் எல்லோரும் அடைந்து விடுகிறார்களா என்று கேட்டால், இல்லை. இன்பத்தை விட துன்பத்தையே அதிகமாக அனுபவிப்பதாகச் சொல்லிக் கோள்கிறார்கள். என்ன காரணம் ? இந்தப் பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு இயக்கத்தின் விளைவும் இரண்டாகவே இருக்கும். பள்ளம் தோண்டினால் பக்கத்தில் மேடு வரும். இரவு போனால் பகல் வரும், அது போலவே உயிர்கள் அனுபவிக்கிற இன்பத்தின் அளவுக்கு துன்பத்தையும் அனுபவித்தே தீர வேண்டும். ஆனால், துன்பத்தை மனம் விரும்புவதில்லை என்பதால் அது மிக அதிகமாக அனுபவிப்பதைப் போன்ற ஒரு மாயை மனதில் தோன்றுகிறது. 

இந்த இன்பத்தை அனுபவிக்கிற ஆசையால் உயிர்கள் வாழ்வின் மீது பற்று வைத்திருக்கின்றன. கடலிலோ, வெள்ளத்திலோ தத்தளிப்பவன் எதையாவது பற்றிக் கொள்வதைப் போல, ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொள்ளாமல் மனதால் இருக்க முடியாது. அந்தப் பற்று எதன் வழியாக நடைபெறுகிறது ? ஏதாவது ஒரு புலன் வழியாகவே நடைபெறுகிறது. இந்த புலன் வழியாகப் பெறும் இன்பத்திற்கு ஒரு அளவு உண்டு. அதற்கு ஒரு எல்லை, வரை முறை உண்டு. போக்கு வரவு உண்டு. ஆனால், எல்லையற்ற பேரின்பம் ஒன்று இருக்கிறது. அதுவே உலகத்தி இன்பத்தை எல்லாம் ஒரு சேர வைத்திருக்கின்ற இருப்பாகும். அதையே கடவுள் என்கிறோம். நம்மை அறியாமலேயே நம் ஜீவன் அதையே நாடுகிறது. ஆனால், புலன்கள் எனும் மாயக் கூட்டுக்குள் மயங்கி நிலையற்ற இன்பங்களை பெரிதென்று எண்ணி விளக்கைத் தேடும் ஈசல் பூச்சியைப் போல வினைகளில் மாய்ந்து போகிறோம். எல்லையற்ற, தடைகளற்ற பேரின்பத்தை அடைவதே நம் உயிரின் ஆத்மாவின் நோக்கமாகும். அதற்கு புலன்களையும், பற்றுகளையும் கடந்து மனதை புற உலகில் நின்று அக உலகை நோக்கித் திருப்ப வேண்டும். இங்கே காணும் இன்பம், துன்பம் என்ற பேதம் அங்கே கிடையாது. அங்கே இன்பம் மட்டுமே. அங்கே ஒன்று தான் மற்றொன்று இல்லை. அடியுமில்லை, முடியுமில்லை எனவே எல்லையுமில்லை, மறுபக்கமுமில்லை. இன்பம், இன்பம் பேரின்பம் மட்டுமே. முடிவில்லை ஆரம்பமில்லை, இரவில்லை பகலில்லை அது பூரணமான பேரின்பமாகும்.
மார்கழி மாதம் அதிகாலையே பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. பஜனைகள் ஒலி, ஒலி பெருக்கிகளின் சப்தம் வழியாக ஆண்டாள் நம் மனக் கண்ணில் வருகிறாள். ஓசோன் காற்று வாங்கலாம் என்று மொட்டைமாடிக்குப் போனால் அது இன்று ஒரே ஓசைக் காற்றாகத் தோன்றியாது. நான் இருப்பது யாதவர்கள் தெரு என்பதால் மாடு கன்றுகளின் சப்தம் வேறு. தண்ணீர் தெளிக்கும் சப்தமும், வாசலை சுத்தம் செய்யும் சப்தமும் ஒரு சேர ஒலிக்கிறது. இப்படித்தான் கோகுலம் அந்தக் காலத்தில் இருந்திருக்குமா ? எட்டி தெருவைப் பார்த்தால் ஆணும் பெண்ணுமாக பரபரவென்று பெருமாள் கோவிலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த வேகம் ? கோவிலில் கூட்டமாக இருக்கும், வந்து வீட்டு வேலைகளைக் கவனிக்க வேண்டுமல்லவா, அதனால்தான் இந்தப் பரபரப்பு.

யோசித்துப் பார்க்கிறேன், எதற்காக இந்த ஓட்டம். எதை அடைய, எதை நோக்கி ஆணும், பெண்ணும், பெரியவர்களும், சிறியவர்களும் எல்லோரும் கூட்டம் கூட்டமாக போய்க் கொண்டே இருக்கிறார்கள் ? பரபரவென்று ஏதோ ஒரு மையப் புள்ளியை நோக்கி எல்லோரும் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மையப் புள்ளி என்னவாக இருக்கும் என்று பார்த்தால், அங்கே தெரிவது இன்பம். அந்த இன்ப அனுபவத்தை, ஆனந்தத்தை அடையவே உயிர்கள் அனைத்தும் ஓடிக் கொண்டே இருக்கின்றன. அவரவர் திசையில் அவரவர் ஓடினாலும் அவர்கள் அடையப் போகும் ஆனந்தமாகிய மையப் புள்ளி என்னவோ ஒன்று தான். இந்த ஆனந்தத்தை அடைய வேண்டும் என்பதே உயிர்களின் இயல்பாக இருக்கிறது. அப்படியானால் எல்லோரும் அடைந்து விடுகிறார்களா என்று கேட்டால், இல்லை. இன்பத்தை விட துன்பத்தையே அதிகமாக அனுபவிப்பதாகச் சொல்லிக் கோள்கிறார்கள். என்ன காரணம் ? இந்தப் பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு இயக்கத்தின் விளைவும் இரண்டாகவே இருக்கும். பள்ளம் தோண்டினால் பக்கத்தில் மேடு வரும். இரவு போனால் பகல் வரும், அது போலவே உயிர்கள் அனுபவிக்கிற இன்பத்தின் அளவுக்கு துன்பத்தையும் அனுபவித்தே தீர வேண்டும். ஆனால், துன்பத்தை மனம் விரும்புவதில்லை என்பதால் அது மிக அதிகமாக அனுபவிப்பதைப் போன்ற ஒரு மாயை மனதில் தோன்றுகிறது.

இந்த இன்பத்தை அனுபவிக்கிற ஆசையால் உயிர்கள் வாழ்வின் மீது பற்று வைத்திருக்கின்றன. கடலிலோ, வெள்ளத்திலோ தத்தளிப்பவன் எதையாவது பற்றிக் கொள்வதைப் போல, ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொள்ளாமல் மனதால் இருக்க முடியாது. அந்தப் பற்று எதன் வழியாக நடைபெறுகிறது ? ஏதாவது ஒரு புலன் வழியாகவே நடைபெறுகிறது. இந்த புலன் வழியாகப் பெறும் இன்பத்திற்கு ஒரு அளவு உண்டு. அதற்கு ஒரு எல்லை, வரை முறை உண்டு. போக்கு வரவு உண்டு. ஆனால், எல்லையற்ற பேரின்பம் ஒன்று இருக்கிறது. அதுவே உலகத்தி இன்பத்தை எல்லாம் ஒரு சேர வைத்திருக்கின்ற இருப்பாகும். அதையே கடவுள் என்கிறோம். நம்மை அறியாமலேயே நம் ஜீவன் அதையே நாடுகிறது. ஆனால், புலன்கள் எனும் மாயக் கூட்டுக்குள் மயங்கி நிலையற்ற இன்பங்களை பெரிதென்று எண்ணி விளக்கைத் தேடும் ஈசல் பூச்சியைப் போல வினைகளில் மாய்ந்து போகிறோம். எல்லையற்ற, தடைகளற்ற பேரின்பத்தை அடைவதே நம் உயிரின் ஆத்மாவின் நோக்கமாகும். அதற்கு புலன்களையும், பற்றுகளையும் கடந்து மனதை புற உலகில் நின்று அக உலகை நோக்கித் திருப்ப வேண்டும். இங்கே காணும் இன்பம், துன்பம் என்ற பேதம் அங்கே கிடையாது. அங்கே இன்பம் மட்டுமே. அங்கே ஒன்று தான் மற்றொன்று இல்லை. அடியுமில்லை, முடியுமில்லை எனவே எல்லையுமில்லை, மறுபக்கமுமில்லை. இன்பம், இன்பம் பேரின்பம் மட்டுமே. முடிவில்லை ஆரம்பமில்லை, இரவில்லை பகலில்லை அது பூரணமான பேரின்பமாகும்.

No comments:

Post a Comment