Friday, March 28, 2014

இவைகளை மனதிலிருந்து நீக்கி விடும் போது மனம் நிர்மலமாகி விடுகிறது

Photo: ஒரு முறை ஒரு சகோதரி என்னிடம் ஒரு சந்தேகத்தை எழுப்பினார். ஒருவர் துறவி ஆகி விட்டால் அவருக்கு முந்தைய ஏழு தலைமுறைகளையும், பிந்தைய ஏழு தலைமுறைகளையும் புனிதப்படுத்துகிறான் என்று சித்தாந்தத்தில் சொல்கிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து என்ன ? என்று கேட்டார். எதில் படித்தாரோ தெரியவில்லை. ஆனால், கேள்வி என்னை யோசிக்க வைத்தது. ஒரு சாரார் மறுபிறவியே இல்லை என்கிறார்கள். ஒரு சாரார் மறுபிறவி இருக்கிறது என்கிறார்கள். ஒரு சாரார் அவரவர் செய்கிற பாவ புண்ணியங்களை அவரவரே பிறவி எடுத்து அனுபவிக்க வேண்டும் என்கிறார்கள், ஒரு சாரார் முன்னோர்கள் செய்த பாவத்தில் வம்சா வழிகளுக்கும் பங்கு உண்டு என்கிறார்கள். இது பற்றிய முரண்பாடான கருத்துகளுக்குப் பஞ்சமே இல்லை.

என்குருநாதர் வேதாத்ரி மகரிஷி அவர்கள் இது குறித்து சொல்லும் போது மறுபிறவி என்பது கிடையாது. மனிதன் இறந்து விட்டால் அவன் உயிர் வெட்டவெளியோடு ஐக்கியமாகி விடும். ஆனால், மரணுக்கள் மூலமாக வினைப் பதிவுகள் கடத்தப்படுகின்றன என்றும், அவை ஏழு தலைமுறைகளுக்கு தொடரும் என்றும் சொல்கிறார். மேலும் நம் எண்ணங்கள் எதுவும் காற்றில் கரைந்து போய்விடுவதில்லை என்றும் அவை சூக்கும வடிவம் கொண்டு காற்றில் மிதந்து கொண்டிருக்கும் என்றும்,அவை அவரவர் உறவினர் அல்லது குழந்தைகள் உடலில் புகுந்து கொண்டு சம்ஸ்காரங்களாகி செயல்படும் என்றும், ஒத்த எண்ண அலைகளைக் கொண்டவர்களோடு கலந்து விடவும் வாய்ப்பு உண்டு என்றும், பலவீனமானவர்கள், பயந்த நிலையில் உள்ளவர்கள் உடலிலும் புகுந்து கொள்ளவும் கூடும் என்றும், குழந்தைகள் இறந்து விட்டால் அவர்களது வினைப்பதிவுகள் பெற்றோரது உடலில் புகுந்து கொள்ளும் என்றும் சொல்கிறார். இன்றைய விஞ்ஞானமும் மரபு அணுக்கள் வழியாக தலைமுறையின் பண்புகள் மற்றும் செயல்பாடுகள் கடத்தப்படுவதை ஒத்துக் கொள்கிறது.

நம் முன்னோர்கள் நமது எண்ணங்கள், மற்றும் செயல்கள் சம்ஸ்காரங்களாக நம் உயிரில் கலந்து பிறவிகள் நீளும் வரை தொடரும் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் இந்த சம்ஸ்காரங்கள் 140 வருடங்கள் வரை வலிமையாக இருக்கும் என்றும், பிறகு வலிமை இழந்து கரைந்து போகும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இந்த சம்ஸ்காரங்களே நம் பிறவிக்குக் காரணம் என்று சொல்கிறார்கள். எனினும் இரு பிரிவினர்களுமே தவம் செய்வதால் வினைகள் நீங்கும் என்பதில் ஒத்த கருத்துக்களை உடையவர்களாகவே இருக்கிறார்கள். இப்போது துறவைப் பற்றி யோசிக்கும் போது, துறவு என்றால் பொதுவாக எல்லோரும் இல்வாழ்க்கையை மற்றும் உறவுகளைத் துறப்பது என்று எண்ணுகிறோம். ஆனால், அப்படி அல்ல.துறப்பது என்பது மனத்தகத்துள்ள மாசுகளை அகற்றுவதேயாகும். அதாவது மனத்தகத்து மாசுக்களை உருவாக்கும் பிரபஞ்ச ஆசைகளைத் துறப்பது. நமது அனைத்து மலக்குற்றங்களுக்கும் மாசுகளுக்கும் காரணமாக இருப்பது அகங்காரமும், மமகாரமுமேயாகும். இவற்றில் இருந்தே அனைத்து கேடுகளும் உருவாகின்றன. மனிதனைக் கீழ் நிலையில் அழுத்தி வைத்திருப்பதும் இவைகளே.

இவைகளை மனதிலிருந்து நீக்கி விடும் போது மனம் நிர்மலமாகி விடுகிறது. இரும்பை உருக்கி மாசுகளை நீக்கி விட்டால் அது வெள்ளிபோல ப்ரகாசிப்பது போல நம் யதார்த்த குணம் ப்ரகாசிக்கிறது. எனவே கீழ்மை நிலை மாறி மேன்மை நிலை வாய்க்கிறது. எனவே துறவறத்தின் மூலம் மனிதன் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்கிறான். உடல் அழுக்குகளை தினமும் நீக்கி சுத்தப்படுத்துவது போல மனதை சுத்தப்படுத்துவது துறவறம். இப்படி ஒருவர் துறவறம் பூணுவதால் முந்தைய பிந்தைய தலைமுறைகளில் உள்ளவர்கள் எப்படி புனிதமடைவார்கள் ? பிந்தைய ஏழு தலைமுறையினர்களும் பிறந்தே இருக்க மாட்டார்கள். முந்தை இறந்து போனவர்கள் புனிதமடைவதை யார் கண்டது ? இது மறு பிறவி நம்பிக்கை இருப்பவர்கள் சொல்லி வைத்தது. எனவே அவர்கள் சம்பிரதாயப் படி ஒருவர் துறவறம் மேற்கொள்ளும் போது தன் முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்து விட்டே மேற்கொள்ள வேண்டும். துறவியான பிறகு அவர் அதை செய்யக் கூடாது. அப்படி அவர் துறவியான பிறகு சிரார்த்தம் செய்தால் பந்தபாசங்களுக்கு உட்பட்டவர் என்ற நிலை வந்து விடுமல்லவா ? எனவே அவர் ஆழ்ந்த நம்பிக்கையோடு சிரார்த்தம் செய்து விடுவதால் முன்னோர்கள் பிறப்பெடுத்திருந்தாலும், எடுக்காமலிருந்தாலும் புனிதமடைகிறார்கள் என்பது கோட்பாடு.

இனி வரும் ஏழு தலைமுறையினர் புனிதமடைவது எப்படி ? இடிக்கிறதே. மனிதனாகப் பிறப்பெடுக்கும் ஒருவருக்கு அவருக்கு முன்னால் உள்ள ஏழு தலைமுறையைச் சேர்ந்தவர்களுடைய வினைகள் மரபு வழியாக தொடரும் என்பது கோட்பாடு. எனவே சந்ததி உள்ள அனைவருக்கும் அவர்களது வினைகள் பின் வரும் ஏழு தலைமுறைகளைத் தொடரவே செய்யும். இவர் துறவு மேற்கொண்டு தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் போது அவருக்குப் பின்னால் வரும் ஏழு தலை முறை சந்ததியினருக்கு இவரது சம்ஸ்காரங்கள் வராத வண்ணம் மரபு அணுக்கள் தூய்மையடைந்து விடுகின்றன. அதாவது ஒரு தலைமுறையின் கோடிக்கணக்கான சம்ஸ்காரங்கள் நீங்கி விடுவதால் அவர்கள் ஓரளவு தெளிவு பெற்றவர்களாக , நல்லெண்ணம் உடையவர்களாக மாறி விடுவார்கள். அது அவர்களை மேலும் நல்லவர்களாக்கி புனிதப்படுத்தும்.

ஒருவர் துறவு மேற்கொள்ளும் போது 60 வயது என்று வைத்துக் கொண்டால், அதற்கு முன்னால் பிறந்த சந்ததியினர்கள்(மகன், மகள், பேரன், பேத்தி) ஏற்கனவே வினைகளை ஏற்றுக் கொண்டிருப்பார்களே ? பிறகு இப்போது எப்படி புனிதமாகும். அவர்கள்தான் அவர் துறவு ஏற்கும் முன்னரே பிறந்து விட்டார்களே ? இதற்கு முகநூலில் இருந்தே ஒரு உதாரணத்தைச் சொல்லலாம். எனது முகநூல் பக்கத்திலிருந்து ஏழு பேர் ஒரு தகவலை தங்களது பக்கத்திற்கு பகிர்ந்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது நான் எனது பக்கத்திலிருந்து அந்தத் தகவலை அழித்து விட்டேன் என்றால், யாரெல்லாம் பகிர்ந்து கொண்டார்களோ அவர்களுக்கும் அது அழிந்து போகும். ஒரு லிங்க்கை ஒருவர் குளோஸ் செய்தால், அந்த லிங்கை தொடர்பு கொண்டவர்களிடமிருந்து அது நீங்கி விடுவது போலத்தான் இதுவும். மூலத்தை (ஆணிவேரை) அழித்து விடும் போது அதன் கிளைகளும் அழிந்துபட்டுப் போகும். அதுபோல, இவரது வினைகள் நீங்கும் போது, இதிலிருந்து பரவிய ஏழு தலைமுறையினருடைய இவரது வினைகளும் நீங்கிப் போகும். ஏனென்றால் மரபு அணுக்களிலும், எல்லா ஆணுக்களிலும் இயக்க சக்தியாக மனமாக இருக்கக் கூடிய வஸ்து ஒன்றாக இருப்பதால் , இது நடக்கிறது. முற்பிறவி நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இது பொருந்தும். அவர்கள் கேட்கலாம் முந்தைய ஏழு எப்படி என்று அதாவது மரபு அணுக்கள் வழியாக இவர்கள் பெற்றுக் கொண்டு வந்த முந்தைய ஏழு தலைமுறையின் வினைகள் அழிந்து போகும். அப்படி இவரோடு யாரெல்லாம் அதைப் பெற்றுக் கொண்டார்களோ அவர்களும் புனிதப்படுவார்கள்.
ஒரு முறை ஒரு சகோதரி என்னிடம் ஒரு சந்தேகத்தை எழுப்பினார். ஒருவர் துறவி ஆகி விட்டால் அவருக்கு முந்தைய ஏழு தலைமுறைகளையும், பிந்தைய ஏழு தலைமுறைகளையும் புனிதப்படுத்துகிறான் என்று சித்தாந்தத்தில் சொல்கிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து என்ன ? என்று கேட்டார். எதில் படித்தாரோ தெரியவில்லை. ஆனால், கேள்வி என்னை யோசிக்க வைத்தது. ஒரு சாரார் மறுபிறவியே இல்லை என்கிறார்கள். ஒரு சாரார் மறுபிறவி இருக்கிறது என்கிறார்கள். ஒரு சாரார் அவரவர் செய்கிற பாவ புண்ணியங்களை அவரவரே பிறவி எடுத்து அனுபவிக்க வேண்டும் என்கிறார்கள், ஒரு சாரார் முன்னோர்கள் செய்த பாவத்தில் வம்சா வழிகளுக்கும் பங்கு உண்டு என்கிறார்கள். இது பற்றிய முரண்பாடான கருத்துகளுக்குப் பஞ்சமே இல்லை.

என்குருநாதர் வேதாத்ரி மகரிஷி அவர்கள் இது குறித்து சொல்லும் போது மறுபிறவி என்பது கிடையாது. மனிதன் இறந்து விட்டால் அவன் உயிர் வெட்டவெளியோடு ஐக்கியமாகி விடும். ஆனால், மரணுக்கள் மூலமாக வினைப் பதிவுகள் கடத்தப்படுகின்றன என்றும், அவை ஏழு தலைமுறைகளுக்கு தொடரும் என்றும் சொல்கிறார். மேலும் நம் எண்ணங்கள் எதுவும் காற்றில் கரைந்து போய்விடுவதில்லை என்றும் அவை சூக்கும வடிவம் கொண்டு காற்றில் மிதந்து கொண்டிருக்கும் என்றும்,அவை அவரவர் உறவினர் அல்லது குழந்தைகள் உடலில் புகுந்து கொண்டு சம்ஸ்காரங்களாகி செயல்படும் என்றும், ஒத்த எண்ண அலைகளைக் கொண்டவர்களோடு கலந்து விடவும் வாய்ப்பு உண்டு என்றும், பலவீனமானவர்கள், பயந்த நிலையில் உள்ளவர்கள் உடலிலும் புகுந்து கொள்ளவும் கூடும் என்றும், குழந்தைகள் இறந்து விட்டால் அவர்களது வினைப்பதிவுகள் பெற்றோரது உடலில் புகுந்து கொள்ளும் என்றும் சொல்கிறார். இன்றைய விஞ்ஞானமும் மரபு அணுக்கள் வழியாக தலைமுறையின் பண்புகள் மற்றும் செயல்பாடுகள் கடத்தப்படுவதை ஒத்துக் கொள்கிறது.

நம் முன்னோர்கள் நமது எண்ணங்கள், மற்றும் செயல்கள் சம்ஸ்காரங்களாக நம் உயிரில் கலந்து பிறவிகள் நீளும் வரை தொடரும் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் இந்த சம்ஸ்காரங்கள் 140 வருடங்கள் வரை வலிமையாக இருக்கும் என்றும், பிறகு வலிமை இழந்து கரைந்து போகும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இந்த சம்ஸ்காரங்களே நம் பிறவிக்குக் காரணம் என்று சொல்கிறார்கள். எனினும் இரு பிரிவினர்களுமே தவம் செய்வதால் வினைகள் நீங்கும் என்பதில் ஒத்த கருத்துக்களை உடையவர்களாகவே இருக்கிறார்கள். இப்போது துறவைப் பற்றி யோசிக்கும் போது, துறவு என்றால் பொதுவாக எல்லோரும் இல்வாழ்க்கையை மற்றும் உறவுகளைத் துறப்பது என்று எண்ணுகிறோம். ஆனால், அப்படி அல்ல.துறப்பது என்பது மனத்தகத்துள்ள மாசுகளை அகற்றுவதேயாகும். அதாவது மனத்தகத்து மாசுக்களை உருவாக்கும் பிரபஞ்ச ஆசைகளைத் துறப்பது. நமது அனைத்து மலக்குற்றங்களுக்கும் மாசுகளுக்கும் காரணமாக இருப்பது அகங்காரமும், மமகாரமுமேயாகும். இவற்றில் இருந்தே அனைத்து கேடுகளும் உருவாகின்றன. மனிதனைக் கீழ் நிலையில் அழுத்தி வைத்திருப்பதும் இவைகளே.

இவைகளை மனதிலிருந்து நீக்கி விடும் போது மனம் நிர்மலமாகி விடுகிறது. இரும்பை உருக்கி மாசுகளை நீக்கி விட்டால் அது வெள்ளிபோல ப்ரகாசிப்பது போல நம் யதார்த்த குணம் ப்ரகாசிக்கிறது. எனவே கீழ்மை நிலை மாறி மேன்மை நிலை வாய்க்கிறது. எனவே துறவறத்தின் மூலம் மனிதன் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்கிறான். உடல் அழுக்குகளை தினமும் நீக்கி சுத்தப்படுத்துவது போல மனதை சுத்தப்படுத்துவது துறவறம். இப்படி ஒருவர் துறவறம் பூணுவதால் முந்தைய பிந்தைய தலைமுறைகளில் உள்ளவர்கள் எப்படி புனிதமடைவார்கள் ? பிந்தைய ஏழு தலைமுறையினர்களும் பிறந்தே இருக்க மாட்டார்கள். முந்தை இறந்து போனவர்கள் புனிதமடைவதை யார் கண்டது ? இது மறு பிறவி நம்பிக்கை இருப்பவர்கள் சொல்லி வைத்தது. எனவே அவர்கள் சம்பிரதாயப் படி ஒருவர் துறவறம் மேற்கொள்ளும் போது தன் முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்து விட்டே மேற்கொள்ள வேண்டும். துறவியான பிறகு அவர் அதை செய்யக் கூடாது. அப்படி அவர் துறவியான பிறகு சிரார்த்தம் செய்தால் பந்தபாசங்களுக்கு உட்பட்டவர் என்ற நிலை வந்து விடுமல்லவா ? எனவே அவர் ஆழ்ந்த நம்பிக்கையோடு சிரார்த்தம் செய்து விடுவதால் முன்னோர்கள் பிறப்பெடுத்திருந்தாலும், எடுக்காமலிருந்தாலும் புனிதமடைகிறார்கள் என்பது கோட்பாடு.

இனி வரும் ஏழு தலைமுறையினர் புனிதமடைவது எப்படி ? இடிக்கிறதே. மனிதனாகப் பிறப்பெடுக்கும் ஒருவருக்கு அவருக்கு முன்னால் உள்ள ஏழு தலைமுறையைச் சேர்ந்தவர்களுடைய வினைகள் மரபு வழியாக தொடரும் என்பது கோட்பாடு. எனவே சந்ததி உள்ள அனைவருக்கும் அவர்களது வினைகள் பின் வரும் ஏழு தலைமுறைகளைத் தொடரவே செய்யும். இவர் துறவு மேற்கொண்டு தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் போது அவருக்குப் பின்னால் வரும் ஏழு தலை முறை சந்ததியினருக்கு இவரது சம்ஸ்காரங்கள் வராத வண்ணம் மரபு அணுக்கள் தூய்மையடைந்து விடுகின்றன. அதாவது ஒரு தலைமுறையின் கோடிக்கணக்கான சம்ஸ்காரங்கள் நீங்கி விடுவதால் அவர்கள் ஓரளவு தெளிவு பெற்றவர்களாக , நல்லெண்ணம் உடையவர்களாக மாறி விடுவார்கள். அது அவர்களை மேலும் நல்லவர்களாக்கி புனிதப்படுத்தும்.

ஒருவர் துறவு மேற்கொள்ளும் போது 60 வயது என்று வைத்துக் கொண்டால், அதற்கு முன்னால் பிறந்த சந்ததியினர்கள்(மகன், மகள், பேரன், பேத்தி) ஏற்கனவே வினைகளை ஏற்றுக் கொண்டிருப்பார்களே ? பிறகு இப்போது எப்படி புனிதமாகும். அவர்கள்தான் அவர் துறவு ஏற்கும் முன்னரே பிறந்து விட்டார்களே ? இதற்கு முகநூலில் இருந்தே ஒரு உதாரணத்தைச் சொல்லலாம். எனது முகநூல் பக்கத்திலிருந்து ஏழு பேர் ஒரு தகவலை தங்களது பக்கத்திற்கு பகிர்ந்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது நான் எனது பக்கத்திலிருந்து அந்தத் தகவலை அழித்து விட்டேன் என்றால், யாரெல்லாம் பகிர்ந்து கொண்டார்களோ அவர்களுக்கும் அது அழிந்து போகும். ஒரு லிங்க்கை ஒருவர் குளோஸ் செய்தால், அந்த லிங்கை தொடர்பு கொண்டவர்களிடமிருந்து அது நீங்கி விடுவது போலத்தான் இதுவும். மூலத்தை (ஆணிவேரை) அழித்து விடும் போது அதன் கிளைகளும் அழிந்துபட்டுப் போகும். அதுபோல, இவரது வினைகள் நீங்கும் போது, இதிலிருந்து பரவிய ஏழு தலைமுறையினருடைய இவரது வினைகளும் நீங்கிப் போகும். ஏனென்றால் மரபு அணுக்களிலும், எல்லா ஆணுக்களிலும் இயக்க சக்தியாக மனமாக இருக்கக் கூடிய வஸ்து ஒன்றாக இருப்பதால் , இது நடக்கிறது. முற்பிறவி நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இது பொருந்தும். அவர்கள் கேட்கலாம் முந்தைய ஏழு எப்படி என்று அதாவது மரபு அணுக்கள் வழியாக இவர்கள் பெற்றுக் கொண்டு வந்த முந்தைய ஏழு தலைமுறையின் வினைகள் அழிந்து போகும். அப்படி இவரோடு யாரெல்லாம் அதைப் பெற்றுக் கொண்டார்களோ அவர்களும் புனிதப்படுவார்கள்.

No comments:

Post a Comment