Friday, March 28, 2014

வாழும்போது நமக்கு காலத்தின் அருமை தெரிவதில்லை

Photo: ''மரணம்''
மரணம் பயம் இல்லாத மனிதர்கள் ஒரு சிலரே. வாழ்வதை விட சாவதே மேல் என்கிற நிலையில் அந்த பயம் அற்றுப் போகிறது. ஆனால் ஒரு சராசரி மனிதனுக்கு அந்த பயம் இருக்கும்.அதுவும் திரைப்படங்களிலும், ஏன் இலக்கியங்களில் கூட மரணத்தை படு பயங்கரமாகவே சித்தரிக்கிறார்கள். 
அந்த பயத்திற்கு காரணமென்ன வென்று பார்த்தால் பல விஷயங்களைச் சொல்லிவிடுவோம், பாசம், பற்று, மற்றும் கழிவிரகம் என்று சில குறிப்பிட்ட விஷயங்களைச் சொல்லலாம். உண்மையில் வாழும்போது நமக்கு காலத்தின் அருமை தெரிவதில்லை. கடைசி கட்டத்தில் இன்னும் கொஞ்சம் நாள் இருக்கமாட்டோமா ?என்கிற ஆசை வந்து விடுகிறது. நாம் எவ்வளவு காலத்தை வீண் விரையமாக்கி விட்டோம். வீணாக பொழுதை போக்கிவிட்டோமே ?எவ்வளவு நல்ல காரியங்கள் செய்திருக்கலாம் என்கிற கவலை அப்பொழுதுதான் வருகிறது. கடைசி நிமிட ஞானம் நமக்கு கண்ணீரை வரவழைத்து விடுகிறது. ம்.. என்ன செய்ய ?

உடல் கூட்டிலிருந்து உயிர் பிரிவது என்பது சட்டையை கழற்றுவது போன்ற ஒரு நிலையாகும். அந்த நொடிகளை மாய நொடிகள் என்பார்கள். இந்த மாய நொடிகள் படிப்படியாக ஆனால் குறைந்த நேரத்தில் நடந்துவிடும். இயற்கை மரணத்தில். அது கொடுமையானதல்ல, சுகமான அனுபவம் என்று மீடியத்தின் மூலமாக வரவழைக்கப்பட்டுள்ள ஆவி சொன்னதாக படித்தேன். அதன்விளைவே இந்தப் பதிவு.
இந்த உடலானது ஐம்பூதப் பிரிவுகளாலும், தசவாயுக்களாலுமானது. இந்த இரண்டும் தன் நிலை மாறும் போது மரணம் சம்பவிக்கிறது. மரணம் நெருங்கும் போது பிருதிவியான மண்ணின் கூறுகள் தளர்ந்து நீர்மயமாகும். நீரில் மண் கரைந்தால் எற்படும் நிலைபோல உடலில் சமன்பாடு நீங்கி எங்கோ சரிந்துவிடுதல் போன்ற உணர்வு ஏற்படும். இது முதல் நிலை. இரண்டாம் நிலையில் நீரின் தன்மை தீயின் தன்மையோடு ஒன்றும். அதாவது பழுக்க காய்ச்சிய இரும்பை நீரில் முக்கியது போன்ற ஒரு நிலை. இதனால் உடலில் நீர்சத்து முற்றிலும் வரண்டுவிடும். தாகம் மேலோங்கும். உடலில் ஒரு எரிச்சல் தோன்றும். மூனுறாவது நிலை உடலின் தீயானது காற்றில் கலக்கும். உடலின் வெப்பம் குறைந்து உடல்சக்தி முழுவதும் அடங்கிவிடும். வெப்ப நிலை குறைந்ததால் இரத்த ஓட்டம் குறையும். இதயத் துடிப்பும் படிப்படியாக குறையும். நான்காம் நிலை, உடலின் காற்றுத்தன்மை ஆகாயவெளியில் கலக்கத் தயாராகிவிடும். இந்நிலையில் உயிரானது பிரிய ஆரம்பிக்கும். 

இதுவரை கீழே செயல்பட்டுக் கொண்டிருந்த அபானன் வாயு மெல்ல மேலேறி ஏனைய வாயுக்களையும் அழைத்துக் கொண்டு வெளியே பயணிக்க ஆரம்பிக்கும். அபானன் உதானனை சந்திக்கும் போது குமட்டல்,கிரிதரனை சந்திக்கும் போது சோம்பல், வியானன் வாயுவை சந்திக்கும் போது உடல் இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கும். நாகனை சந்திக்கும் போது இமைகள் செயலிழக்கும். கூர்மனை சந்திக்கும் போது கொட்டாவி வரும். சாமனை சந்திக்கும் போது உடல் சூடு குறையும். இறுதியில் பிராணனோடு கலந்து மூச்சுத்திணழலை ஏற்படுத்தும். தனஞ்செயனைத் தவிர்த்து நவ வாயுக்களும் வெளியேறிவிடும். இவ்வாறே மரணம் சம்பவிக்கிறது.இது குருதி மரணம் எனப்படும்.

இந்த குருதி மரணத்திற்கு பிறகும் மனித மூளையானது சிந்தனை உணர்வுகளோடு இயங்கிக் கொண்டிருக்கும். அதன்பிறகு தனஞ்செயன் வாயுவானது மேல் நோக்கி பயணித்து உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அது மூளையை அடையும் போது உடல் கெட்டு அழுகத் தொடங்கும். இது சிந்தனா மரணம் எனப்படும். இந்த குருதி மரணத்திற்கும் , சிந்தனாமரணத்திற்கும் இடைப்பட்ட நேரம் இரண்டு முகூர்த்த காலம், அதாவது மூன்று மணிநேரம். அந்த மாய நொடிகளில் தான் புருவ மத்தியில் பூட்டு திறக்கிறது. இறந்த உடலின் நெற்றிப் பகுதியில் தனஞ்செயன் பயணிக்கிற போது அதுவரை துண்டு துண்டாக செயலற்று இருந்த சித்திரை, வஜ்ரணி, தந்திரிணி, அபூர்விணி ஆகிய நான்கு நாடிகளும் ஒன்றாக இணைந்து செயல்படத் தொடங்கும். அதற்கு பிறகு மண்டை ஒட்டை உடைத்துக்கொண்டு தனஞ்செயனின் பயணம் நமக்கு நிரந்தர மரணம்.
''மரணம்''

No comments:

Post a Comment