Friday, March 28, 2014

படிப்பின் சாரம் பயிற்சிக்கு உதவவில்லை என்றால் படிப்பு பயனற்றதே

Photo: இந்த உலகம் ஒரு காக்கை கூட்டம். ஒரு பக்கம் புகழும் கூட்டம் மற்றொரு புறமோ இகழும் கூட்டம். நாம் இதன்பாற் பட்டால் பின் தங்கி விடுவோம். புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அப்பாற்பட்டவனாக இருந்து பழகிக் கொள்ள வேண்டும். இறைவனையே கூட இகழ்வாரும், தூற்றுவாரும் இருக்கையில் நாமெல்லாம் எம்மாத்திரம். ஒருவன் உமிழ்ந்து விட்டுப் போன எச்சிலை விட்டு எப்படி விலகிப் போகிறோமோ, அது போலவே புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் அதை விட்டு விலகிப் போய் நின்று கொள்ள வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் தான், தனது, எனது என்ற நிலைதான். இது புலன் இன்ப ஆசைகளில் மட்டுமல்ல கடவுள் சம்மந்தப்பட்ட விஷயங்களிலும் இருக்கிறது. கறுப்பருக்கும், வெள்ளையருக்கும் வெறுப்பு, சைவருக்கும் வைணவருக்கும் வெறுப்பு இவன் அவனைத் தூற்ற புராணங்களை உண்டாக்கி கதை திரிக்கிறான், அவனும் இதையே செய்கிறான். இதனால் உண்மைப் பொருளை விளக்கும் புராணங்களும் இழிவு படுத்தப்படுகின்றன. என் சமயம், என் மதம், என் வழிபாடு, என்சடங்கு என்று எல்லாவற்றிலும் தான், தனது, எனது என்று அறியாமைப் போக்கு நிலவுவதோடு, பிறர் கடைபிடிக்கும் முறைகளை இகழ்ந்து தன்னுடையதே சிறந்தது என்று காட்டிக் கொள்ளத் துடிக்கிறது. உண்மைப் பொருளை விட்டு விட்டு உவமைப் பொருளை பற்றிக் கொள்கிறார்கள். 

இது போன்ற மனோபாவங்களுக்குக் காரணம் நம் வாசனைகளே. நம் பழைய அசுத்த வாசனைகளே இப்படிப்பட்ட கீழ்த்தரமான எண்ணங்கள், சொற்கள், செயல்களுக்குக் காரணமாக இருக்கின்றன. தன் மனோ சக்தியை ஒன்று திரட்டி முதலில் தன் அசுத்த வாசனைகளை அகற்றாத வரை ஒருவனுக்கு துன்பமும், மனவேதனையும் தொடர் கதைதான். இது போன்ற பல கீழ்த்தரமான விஷயங்களில் இன்பம் கிடைப்பதாக கற்பனை செய்து அவற்றை விடாமல் இறுகப் பற்றிக் கொள்கிறான். இவற்றிலிருந்து விடுபட வேண்டுமென்றால் எண்ணம், சொல், செயல் எல்லாவற்றிலும் நன்மையை கடைபிடிக்க வேண்டும். சத்துவ குணத்தை வெளிப்படுத்தும் மேன்மையான செயல்களைச் செய்தல், சான்றோர் இணக்கம் இவையெல்லாம் தீய பழக்கங்களில் இருந்து நம்மை மீட்டெடுக்கும். மனதில் படிந்துள்ள மாசுக்களை களைய சிறந்த ஆன்மீக நூல்களைப் படிக்க வேண்டும். இதனால் நம் அறிவில் தெளிவு ஏற்படும். ஆனால், இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் இது போன்ற சாஸ்திரங்கள் மற்றும் ஆன்மிக நூல்களைப் படிப்பதற்கு நம் ஆயுள் போதாது. மேலும் அவற்றைப் புரிந்து கொள்வதில் பல கஷ்டங்கள் உண்டு. எனவே ஓரளவு படித்துத் தெளிவடைவதோடு, சாதனங்களிலும் ஒருவன் ஈடுபட வேண்டும். அது அவனுக்கு மேலும் தெளிவை ஏற்படுத்தும். இதற்கு புராணத்தில் ஒரு உதாரணம் சொல்லப்பட்டிருக்கிறது. பரத்வாஜ மகரிஷி மூன்று பிறவிகள் எடுத்து வேதத்தைப் படித்துக் கொண்டே இருந்தாராம். அதன்பிறகு நான்காவது பிறவியிலும் அதையே செய்து கொண்டிருந்த போது இந்திரன் மூலமாக பிரம்ம வித்தையைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாம். அதற்குப் பிறகே அவர் வேதம் படிப்பதை நிறுத்தி விட்டு தவத்தில் ஈடுபட்டு ஞானமடைந்தாராம். கல்வியின் அல்லது படிப்பின் சாரம் பயிற்சிக்கு உதவவில்லை என்றால் படிப்பு பயனற்றதே. 

அதிகக் கல்வி கர்வத்தை ஏற்படுத்தி விடவும் வாய்ப்பு உண்டு. துர்வாச மகரிஷியிடம் கணக்கற்ற நூல்கள் இருந்தனவாம். இதைக் கண்ட நாரதர் அவரை பொதி சுமக்கும் கழுதையோடு ஒப்பிட்டுப் பேசினாராம். எல்லாவற்றையும் படித்து விட நினைத்தால் எதையும் கிரகிக்க முடியாது, குழப்பமே மிஞ்சும். தேவையான வற்றை கற்று மனத் தெளிவு அடைந்து சாதனங்களில் ஈடுபடுவதே சிறப்பு என்று அறிவுரை சொன்னவுடன் மனந்தெளிந்த துர்வாசர், எல்லா புத்தகங்களையும் தூக்கி கடலில் எறிந்து விட்டு தவவாழ்வில் ஈடுபட்டு மேன்மையடைந்தாராம். எனவே எதைக் கற்றால் மற்ற எல்லாவற்றையும் கற்றதற்கான பலன் கிடைக்குமோ, அதைக் கற்று, அதன் படி நடந்து ஞானமடைவதே சிறப்பு. மேலும் தன் மனதின் பழக்க வழக்கங்கள், சுபாவங்கள், இவற்றையெல்லாம் ஒருவன் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அதை வசப்படுத்தி நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நல்வழிப்படுத்த முடியும். மனதோடு ஆதிக்கம் செலுத்த முடியும். மனதோடு ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றால் மனத் தூண்டுதல்களையும், ஆசைகளையும் அடக்க வேண்டும். அப்போதுதான் புலன்கள் கட்டுப்படும். புலன் வழி போகும் மனமும் கட்டுப்படும்.

அர்ஜுனன் கேட்கிறான், கிருஷ்ணா ! மனம் சஞ்சலமுடையது, ஒரு இடத்தில் நில்லாதது, கலகத்தைச் செய்யக் கூடியது, மிக வலிமையிடையதாகவும் இருக்கிறது. காற்றைக் கூட என் வில்லால் கட்டி விடுவேன் ஆனால், மனதைக் கட்டுவது கஷ்டமாக இருக்கிறதே என்கிறான். 
அதற்கு கண்ணன், உண்மைதான், இருந்தாலும் இடைவிடாத கவனத்தாலும், பழக்கத்தாலும், வைராக்யத்தாலும் அதை அடக்க முடியும். எனவே முதலில் தியானத்தைக் கடை பிடி என்கிறார். அதாவது சரியை, கிரியை, யோகத்தை கடைபிடி ஞானம் வாய்க்கும் என்கிறார்.
இந்த உலகம் ஒரு காக்கை கூட்டம். ஒரு பக்கம் புகழும் கூட்டம் மற்றொரு புறமோ இகழும் கூட்டம். நாம் இதன்பாற் பட்டால் பின் தங்கி விடுவோம். புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அப்பாற்பட்டவனாக இருந்து பழகிக் கொள்ள வேண்டும். இறைவனையே கூட இகழ்வாரும், தூற்றுவாரும் இருக்கையில் நாமெல்லாம் எம்மாத்திரம். ஒருவன் உமிழ்ந்து விட்டுப் போன எச்சிலை விட்டு எப்படி விலகிப் போகிறோமோ, அது போலவே புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் அதை விட்டு விலகிப் போய் நின்று கொள்ள வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் தான், தனது, எனது என்ற நிலைதான். இது புலன் இன்ப ஆசைகளில் மட்டுமல்ல கடவுள் சம்மந்தப்பட்ட விஷயங்களிலும் இருக்கிறது. கறுப்பருக்கும், வெள்ளையருக்கும் வெறுப்பு, சைவருக்கும் வைணவருக்கும் வெறுப்பு இவன் அவனைத் தூற்ற புராணங்களை உண்டாக்கி கதை திரிக்கிறான், அவனும் இதையே செய்கிறான். இதனால் உண்மைப் பொருளை விளக்கும் புராணங்களும் இழிவு படுத்தப்படுகின்றன. என் சமயம், என் மதம், என் வழிபாடு, என்சடங்கு என்று எல்லாவற்றிலும் தான், தனது, எனது என்று அறியாமைப் போக்கு நிலவுவதோடு, பிறர் கடைபிடிக்கும் முறைகளை இகழ்ந்து தன்னுடையதே சிறந்தது என்று காட்டிக் கொள்ளத் துடிக்கிறது. உண்மைப் பொருளை விட்டு விட்டு உவமைப் பொருளை பற்றிக் கொள்கிறார்கள்.

இது போன்ற மனோபாவங்களுக்குக் காரணம் நம் வாசனைகளே. நம் பழைய அசுத்த வாசனைகளே இப்படிப்பட்ட கீழ்த்தரமான எண்ணங்கள், சொற்கள், செயல்களுக்குக் காரணமாக இருக்கின்றன. தன் மனோ சக்தியை ஒன்று திரட்டி முதலில் தன் அசுத்த வாசனைகளை அகற்றாத வரை ஒருவனுக்கு துன்பமும், மனவேதனையும் தொடர் கதைதான். இது போன்ற பல கீழ்த்தரமான விஷயங்களில் இன்பம் கிடைப்பதாக கற்பனை செய்து அவற்றை விடாமல் இறுகப் பற்றிக் கொள்கிறான். இவற்றிலிருந்து விடுபட வேண்டுமென்றால் எண்ணம், சொல், செயல் எல்லாவற்றிலும் நன்மையை கடைபிடிக்க வேண்டும். சத்துவ குணத்தை வெளிப்படுத்தும் மேன்மையான செயல்களைச் செய்தல், சான்றோர் இணக்கம் இவையெல்லாம் தீய பழக்கங்களில் இருந்து நம்மை மீட்டெடுக்கும். மனதில் படிந்துள்ள மாசுக்களை களைய சிறந்த ஆன்மீக நூல்களைப் படிக்க வேண்டும். இதனால் நம் அறிவில் தெளிவு ஏற்படும். ஆனால், இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் இது போன்ற சாஸ்திரங்கள் மற்றும் ஆன்மிக நூல்களைப் படிப்பதற்கு நம் ஆயுள் போதாது. மேலும் அவற்றைப் புரிந்து கொள்வதில் பல கஷ்டங்கள் உண்டு. எனவே ஓரளவு படித்துத் தெளிவடைவதோடு, சாதனங்களிலும் ஒருவன் ஈடுபட வேண்டும். அது அவனுக்கு மேலும் தெளிவை ஏற்படுத்தும். இதற்கு புராணத்தில் ஒரு உதாரணம் சொல்லப்பட்டிருக்கிறது. பரத்வாஜ மகரிஷி மூன்று பிறவிகள் எடுத்து வேதத்தைப் படித்துக் கொண்டே இருந்தாராம். அதன்பிறகு நான்காவது பிறவியிலும் அதையே செய்து கொண்டிருந்த போது இந்திரன் மூலமாக பிரம்ம வித்தையைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாம். அதற்குப் பிறகே அவர் வேதம் படிப்பதை நிறுத்தி விட்டு தவத்தில் ஈடுபட்டு ஞானமடைந்தாராம். கல்வியின் அல்லது படிப்பின் சாரம் பயிற்சிக்கு உதவவில்லை என்றால் படிப்பு பயனற்றதே.

அதிகக் கல்வி கர்வத்தை ஏற்படுத்தி விடவும் வாய்ப்பு உண்டு. துர்வாச மகரிஷியிடம் கணக்கற்ற நூல்கள் இருந்தனவாம். இதைக் கண்ட நாரதர் அவரை பொதி சுமக்கும் கழுதையோடு ஒப்பிட்டுப் பேசினாராம். எல்லாவற்றையும் படித்து விட நினைத்தால் எதையும் கிரகிக்க முடியாது, குழப்பமே மிஞ்சும். தேவையான வற்றை கற்று மனத் தெளிவு அடைந்து சாதனங்களில் ஈடுபடுவதே சிறப்பு என்று அறிவுரை சொன்னவுடன் மனந்தெளிந்த துர்வாசர், எல்லா புத்தகங்களையும் தூக்கி கடலில் எறிந்து விட்டு தவவாழ்வில் ஈடுபட்டு மேன்மையடைந்தாராம். எனவே எதைக் கற்றால் மற்ற எல்லாவற்றையும் கற்றதற்கான பலன் கிடைக்குமோ, அதைக் கற்று, அதன் படி நடந்து ஞானமடைவதே சிறப்பு. மேலும் தன் மனதின் பழக்க வழக்கங்கள், சுபாவங்கள், இவற்றையெல்லாம் ஒருவன் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அதை வசப்படுத்தி நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நல்வழிப்படுத்த முடியும். மனதோடு ஆதிக்கம் செலுத்த முடியும். மனதோடு ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றால் மனத் தூண்டுதல்களையும், ஆசைகளையும் அடக்க வேண்டும். அப்போதுதான் புலன்கள் கட்டுப்படும். புலன் வழி போகும் மனமும் கட்டுப்படும்.

அர்ஜுனன் கேட்கிறான், கிருஷ்ணா ! மனம் சஞ்சலமுடையது, ஒரு இடத்தில் நில்லாதது, கலகத்தைச் செய்யக் கூடியது, மிக வலிமையிடையதாகவும் இருக்கிறது. காற்றைக் கூட என் வில்லால் கட்டி விடுவேன் ஆனால், மனதைக் கட்டுவது கஷ்டமாக இருக்கிறதே என்கிறான்.
அதற்கு கண்ணன், உண்மைதான், இருந்தாலும் இடைவிடாத கவனத்தாலும், பழக்கத்தாலும், வைராக்யத்தாலும் அதை அடக்க முடியும். எனவே முதலில் தியானத்தைக் கடை பிடி என்கிறார். அதாவது சரியை, கிரியை, யோகத்தை கடைபிடி ஞானம் வாய்க்கும் என்கிறார்.

No comments:

Post a Comment