Friday, March 28, 2014

அதுவே ஆனந்தம்.. பரமானந்தம்... பேரானந்தம்.

Photo: முக்குணங்களுக்கு அப்பால் இருப்பது துரியம் எனப்படுகிறது. மனிதனின் மூன்று அவஸ்தைகள் அல்லது உபாதிகளுக்கு(நனவு, கனவு, கனவற்ற உறக்கம்) சாட்சியாக இருப்பது துரியம்.
தாமஸ, ராக்ஷஸ, சத்துவ குணங்களைக்கடந்து சுத்த சத்துவ குணத்தில் ஒளிரும் ஆத்மாவின் பிரகாசமே துரியம்.
அந்த சுத்த சத்துவ குணத்தையும் கடந்த நிலையில் இருக்கும் பர சைதன்யமே துரியாதீதம் எனப்படுகிறது. உண்மையில் துரியமும், துரியாதீதமும் ஒன்றே என்றும் சொல்லப்படுவதுண்டு.
அந்த பர சைதனயத்தில் வீற்றிருக்கும் இறைவனே மனாதீதன். அதாவது மனதிற்கு அப்பாற்பட்டவன். மனதுக்கு வசப்பட்ட மனிதனுக்கே நலமும், கேடும் உண்டாகின்றன. மனதிற்கு அப்பாற்பட்ட பொருளில் நலங்கள் அனைத்துமே உண்டு. கேடு என்பது சிறிதும் கிடையாது.
இந்த முக்குணங்களையும், புலன்களையும், உபாதிகளையும் கடந்தவனே பர சைதன்யத்தை அடைய முடியும். பரஞானத்தைப் பெறும் தகுதி ஜீவனுக்கு அப்போதுதான் ஏற்படுகிறது. அந்த நிலையில் மனமானது ஒடுங்கி, சம்ஸ்காரங்கள் அழிந்துபட்டுப் போய்விடுகின்றன.

உபாதிகளைப் பொறுத்தவரை நனவு நிலையில் காணும் பொருள்கள் நனவு நிலையில் உண்மையானது. விழித்திருக்கும் மனிதனுக்கு பொட்டு வைத்தால் அதை அவன் உணர்வான். ஸ்பரிச உணர்ச்சி அவனுக்கு உண்டு. அதே தூங்குபவனுக்கு வைத்தால் அவன் அதை உணர்வதில்லை. இந்த நிலையில் ஸ்பரிச உணர்ச்சி அவனுக்கு பொய்யாகி விடுகிறது. அதே மனிதன் கனவில் பல பொருள்களை ஸ்பரிசிக்கிறான். கனவு நிலையில் கனவை அவன் மனம் நனவாக எண்ணுகிறது. எனவே அந்த நிலையில் கனவுப் பொருள்களை எல்லாம் அவன் உண்மை என்று கொள்கிறான். கனவு நனவைப் பொய்யாக்குகிறது. நனவு கனவைப் பொய்யாக்குகிறது. இப்படி நாள்தோறும் ஒன்றையொன்று பொய்யாக்கும் அனுபவத்தை ஜீவர்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால் ஞானிக்கோ கனவும், நனவும் ஒன்றே. இரண்டுமே மனதின் விகாரங்கள்தான். சம்ஸ்காரங்கள் அழிந்து போன நிலையில் மனம் தூய்மையடைந்து அமைதியாகி விட்ட போது கனவுமில்லை, நனவுமில்லை, ஸ்பரிச உணர்வுமில்லை. ஆத்ம உணர்வு மட்டுமே எஞ்சி நிற்கும். நமக்கோ இந்த உணர்வு சுஷுப்தியில் ஒடுங்கி நிற்கும். நிறை ஞானிக்கோ எந்த நிலையிலும் அது ஒடுங்குவதில்லை. அது தன்மயமாய் சதா தன்னையே உணர்ந்தபடி இருக்கும். இதையே தெளிவு என்பார்கள். ஆக இந்த கனவு, நனவு, கனவற்ற உறக்கம் என்ற மூன்று உபாதிகளையும் கடந்தவரே ஞானி. அவரே மெய்ப் பொருளை உணரத் தகுதியடைந்தவராவார். மற்றவர்கள் இந்த மூன்று உபாதிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக பெற்று அதிலேயே உழன்று, தான் அனுபவிப்பதே மெய்யான நிலை என்ற மயக்கத்தில் இருந்து வருவார்கள். இந்த மயக்கத்துக்கு அப்பால் செல்ல வேண்டும் என்பதே நம் குறிக்கோள். அதுவே பரம்பதம்.
அதுவே ஆனந்தம்.. பரமானந்தம்... பேரானந்தம்.
முக்குணங்களுக்கு அப்பால் இருப்பது துரியம் எனப்படுகிறது. மனிதனின் மூன்று அவஸ்தைகள் அல்லது உபாதிகளுக்கு(நனவு, கனவு, கனவற்ற உறக்கம்) சாட்சியாக இருப்பது துரியம்.

No comments:

Post a Comment