Friday, March 28, 2014

''நான் யார் ?''

Photo: ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே. 2192.

திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே. 2214.

இந்தத் திருமந்திரப் பாடல்களில் மட்டுமல்ல 2122வது பாடலில் இருந்தே மலங்கள், அவத்தைகள், மாயை, தத்துவங்கள் பற்றி மிகத் தெளிவாக விளக்குகிறார் திருமூல நாயனார். ஆணவம் உமியையும், மாயை தவிட்டையும், கன்மம் முளையையும், உயிர் அரிசியையும் ஒக்கும். உயிரானது பரத்தை அடைய விடாமல் இந்தத் தளைகள் தடுப்பதால், உயிர் சிவனை ஒவ்வாது. ஆதலால், பாசங்கள் விட்டு நீங்கி இறைவன் திருவடியினைப் பேணல் வேண்டும் என்கிறார். 
நமது எண்ணத்தினுள்ளே காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று சிங்கங்களும், நெஞ்சினுள்ளே அந்தக்கரணங்களாகிய நான்கு நரிக்குட்டிகளும், மெய் வாய் முதலான ஐந்து ஆனைகளும் உள்ளன. மேலும் இந்த நெஞ்சினுக்கு பிரவிருத்தி(ஓடுதல்), நிவிருத்தி (ஒடுங்குதல்) என்னும் இரண்டு தொழில்களும் உள்ளன என்கிறார். பொதுவாக தியான நூல்கள், யோக நூல்களில் தத்துவங்களின் எண்ணிக்கையைக் கூறி பெயர்களை தருகிறார்களே அன்றி, விளக்கங்கள் தரப்படுவதில்லை. ஏனென்றால் அது அண்டத்தின் அளவு விரிந்து கொண்டே போகும். அண்டத்தில் உள்ளது தானே பிண்டத்தில் தத்துவங்களாக இயங்குகிறது. எனவே இது குறித்து சுருக்கமாகச் சில கருத்துக்களைத் தர முயலுகிறேன். 

எல்லா உயிரினங்களிலும் மனிதப் பிறவியே சிறந்தது, அரிதானது. ஏனென்றால் ஆதிமூலத்தை அறிந்து, அடையும் தகுதியும், திறமையும் மனிதப்பிறவிக்கு மட்டுமே உண்டு. இப்பிறவியே வீடுபேறு எய்துவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. 

உயிர்களை பற்றி நிற்கும் தளைகளை ஆணவம், கன்மம், மாயை என்று சொல்கிறோம். இது அடிப்படை உண்மையாகும். ஆனால், இந்தத் தளைகளை வைத்தே மனித உயிர் வர்க்கத்தை மூன்று பிரிவாகச் சொல்வார்கள். அது எவ்வாறெனில், ஆணவத்தால் மட்டும் கட்டுற்றுப் பிறவற்றால் தாக்கப்படாதவர்கள் ஒரு மலத்தார். இவர்களை விஞ்ஞானகலர் என்பர். ஆணவம், கன்மம் இரண்டின் வசப்பட்டு, மாயையைக் கடந்தவர்களை இருமலத்தார் என்பார்கள். இவர்களே பிரளயாகலர். மும்மலங்களாலும் கட்டுற்றுப் மயங்கித் தவிக்கும் அனைவரையும் சகலர் என்பார்கள். இந்த மூன்றாவது உயிர் வர்க்கத்தினரே உலகில் 99% இருக்கிறார்கள் என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்கு விளங்கும். பொதுவாக இந்த மும்மலங்களையும் உயிர்களின் தூய்மையைக் கெடுத்து துன்பத்தில் தள்ளும் மாசு என்றும், அறிவுச் செயல்களைத் தடை செய்யும் தளை என்றும் கூறுவது வழக்கம். இந்த மூன்றோடு மாயயேயம், திரோதாயி என்ற இரண்டு தளைகளையும் சேர்த்து ஐந்தாகச் சொல்வதுண்டு. இவற்றின் இயல்புகளை இரண்டு விதமாகக் கொள்ளலாம். அதாவது மாசு, மலம், அழுக்கு ஒன்று, பாசம், பந்தம், தளை மற்றொன்று. 

ஆணவம்.
உயிர்களின் அறிவாற்றலை இல்லை என்று சொல்கிற அளவு மறைத்து நிற்பது. நெல்லிலே உமி போலவும், செம்பிலே களிம்பு போலவும் இயற்கையாகவே ஆணவமானது உயிர்களோடு அநாதியே உடன் கலந்தது. உயிரின் வியாபகத்தை விளங்கவொட்டாது தடுத்து அணுத்தன்மை எய்துவிப்பது. எனவேதான் இந்த ஆணவ மலத்தை, மூலமலம், சகஜமலம் என்றும் கூறுவார்கள். சகஜம் என்றால் இயற்கை, உடன் உள்ளது. மூலமலம் ஒன்றாகிய போதும் அது உயிர்கள் தோறும் வேறு வேறாக நின்று அவற்றின் அறிவுச் செயலாற்றலைத் தடுத்து நிற்கும் எண்ணிறைந்த சக்திகளை உடையது. இந்த சக்திகளின் செயலைத் தடுக்கவே இறைவன் இயற்கையிலேயே ஆணவ மலமுள்ள உயிர்களுக்கு மாயையின் சம்பந்தத்தை உண்டு பண்ணுகிறான். ஆணவத்தால் முழுவதும் அறிவழிந்து நிற்கும் உயிர்களுக்குச் சிற்றறிவும், சிறுசெயலும் விளங்குவதற்காக இறைவன் மாயையின் தொடர்பை உண்டு பண்ணுவதைத்தான் 
''உலக சிருஷ்டி'' என்கிறோம். பேரொளியின் முன் நின்றாலும் படலம் படர்ந்த கண்களுக்கு ஒளி தெரியாது. இருளாகவே இருக்கும். அது போல உயிர் எப்போதும் இறைவனின் அருளொளியில் மூழ்கி அதில் அடங்கி நின்றாலும், ஆணவத்தின் காரணமாக அருளொளியைப் பற்றாமல், அறியாமையாகிய இருளைப் பற்றி இருளாகவே நிற்கும். இப்படி உயிர்களை இருளுக்குள் வீழும்படிச் செய்வதால் ஆணவ மலத்தை இருள், அறியாமை, அவித்தை, இருள்மலம் என்றெல்லாம் கூறுவார்கள். 

ஆணவத்தின் இருப்பை உணர்வது எப்படி? புற இருளானது எல்லாப் பொருள்களையும் மறைத்தாலும் தன்னை மறைத்துக் கொள்வதில்லை. ஆகையினால் அந்த இருளை நீக்க மக்கள் வழி தேடுகிறார்கள். அகவிருளாகிய ஆணவமோ பிற பொருள்களை மறைப்பதோடு தன்னையும் காட்டுவதில்லை. எனவேதான் மக்கள் அதை நீக்க கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது. கனவு நிலையில் புறக் கருவிகள் தொழிற்படுவதில்லை. மனம் தொழிற்படுகிறது. கனவற்ற உறக்கத்தில் மனமும் தொழிற்படுவதில்லை. நனவு நிலையில் எல்லாக் கருவிகளும் தொழிற்படுவதால் நம் உணர்வு நன்றாக விளங்குகிறது.ஆகையினால் எல்லாப் பொருள்களையும் இது இன்னது என்று அறிந்து செயல்படுகின்றோம். என்றாலும் கூட ''நான் யார் ?'' என்று தன்னை நோக்கி கேட்கும் அளவுக்கு நம் அறிவு ஒருமைப்படுவதில்லை. இந்த விஷயத்தில் கணவு, உறக்க நிலைகளில் நம் அறிவாற்றலை மறைப்பதும், நனவு நிலையில் தன்னை நோக்காது புறப் பொருள்களை நோக்கி ஓடும்படிக்கு நம் அறிவைத் திருப்பிவிடுவதும் மூலமலமாகிய ஆணவத்தின் செயலேயாகும். நம் அறிவை மறைக்கும் ஆணவத்தின் சக்தியை ஆவாரக சக்தி என்பர். ஆவாரகம் என்றால் மறைப்பது. நனவு நிலையில் தன்னை உணராமல் புறப் பொருள்களில் போய் விழும்படி செய்யும் ஆணவத்தின் சக்தியை அதோநியாமிகா சக்தி என்பர். அதோநியாமிகா  என்றால் கீழே வீழ்த்தும் என்று பொருள். திருவள்ளுவர் ஆணவத்தைப் பற்றி சொல்லும் போது ஆவாரக சகதியை இருள் என்பார். அதோநியாமிகாவை மருள் என்பார். இரண்டையும் சேர்த்து குறிப்பிடும் நிலையில் செருக்கு என்பார். 
கன்மம் குறித்து அடுத்த பதிவில் அறிந்து கொள்வோம்.
ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்

No comments:

Post a Comment