Friday, March 28, 2014

ஞான வெட்டியான் கூறும் நாதவிந்துத் தத்துவம்

Photo: ஞானவெட்டியான்
வன்னியும் வாயுவுங்கூடி - உயர்கின்ற
மண்டபமார்க்கத்தின் வீதிதனிலே
உன்னதமாய்நா தவிந்து - உறவாடியே
ஒருவழி யாகவந் துதித்ததுகாண்
முன்னிலையாய்ச்சுடரதனில் - மூலவன்னி
முப்பொருளுஞ்சேர்ந்து வொரு வுற்பனமதாய்ச்
சென்னி தனில்வளரியல்பாம் - நாதமெனுஞ்
சித்திரப்பூஞ்சாவடியில் மத்திபத்திலே - 64

வருகின்ற வழியதனில் - நவரத்ன
மண்டபத்துக்குள் ளேவச்சிரப் பையதனில்
பெருகிய நாதமது - சதாசிவத்தின்
பிரணவ மூலப்பிரகாசப் பேரொளியினில்
உருவிய மலர்க்கமலம் - போற்றியருள்
உற்பன மருள் தருங் கற்பகத்தில்வாழ்
அருள் வந்தெய்திடினுந் - திருவடியதின்
அனுதினம் பூசித்துமிகவாடி பணிந்தேன் - 65

66, 67, 68, 69 .............
கொண்டபதி மண்டபம்விட்டுக் - கருவிகளின்
கூடிய திருமுகப்பூஞ் சோலையிலே
அண்டர்களருள் போற்றுங் - கணபதியின்
அடியினருள் துதித்து அடியில் வந்தேன்
குண்டலி கமலமலர் - மேன்மேலவர்தன்
கோபுரச் சித்திரமதிலின் வாசல்விட்டு
மண்டலஞ் சூழுங்கதிர் - வலமிடையின்
மலரடியைத் தொழுதுயான் வணங்கிவந்தேன். - 70

வந்து திருமூலத்திலும் - பானுவிருக்கும்
வச்சிரவளர் சதுஷ்கோண வாசலிலுஞ்
சுந்தர விந்ததிலிலும் வந்து - சினேகமது
சோதித்துக் கலந்துற வாடிக்கொண்டே
இந்திர பதவிகளெனவே - என்னாண்டையேகேள்
இங்கித நாதசங்கீத மங்களமதாய்ச்
சந்திரபுட்கரணிவரும் - நந்திப்பிரகாசந்
தரையதுவே முழங்குஞ் சாரையைக்கண்டேன். 71

தூண்டியநாதபரி - பூரணத்தின்
சுகந்தமலர்க்கமலந் துதித்துக்கொண்டேன்
பூண்டுபொற்பதம் பணிந்தேன் - என்னாண்டையேகேள்
பூரகத்தினிலும் வந்து போற்றிசெய்தேன்
வேண்டியமதிமலர் கொண் - டாராதனைகள்
மிகுத்தம் பிகாயோகம் விதரணையாய்க்
காண்டிபமொன்றாலறிய - வாசியைக்கொண்டு
கருத்தினிலிருத்திக்கண்ட தாரையூதினேன் -72

வந்த தசநாதவிந்து - சுழுமுனையின்
வாசலின் கருக்குழிதன் வீட்டுக்குள்ளே
தந்திர மதாகவேதான் - கருவதனில்
சங்கற்ப மில்லாமல் கலந்துறைந்ததுகாண்
விந்தை யெனுநாதவிந்து - சையோகந்தனில்
விற்பனம்போலவுமெய்து முற்பனமதாய்ச்
சுந்தர சுக்கிலசுரோணித - மிரண்டுங்கூடிச்
சொப்பனம் போலுமுதித்த சூக்ஷமமிதுகாண் - 73

தேயுபூதமும் வாயுபூதமும் ஒன்றாகச் சேர்ந்து கிளம்புகின்ற மண்டபத்தின் வழியில் உள்ள பாதையாகிய அக்கினி மண்டபத்தில் மகா விசித்திரமாக நாதமும் விந்துவும் கலந்தது. அக்கினியை முதல் காரணமாய்க் கொண்டு மற்ற பிருதிவி, வாயு, ஆகாயங்களைச் சேர்த்து வெகு விநோதமாக, சிரசின் கண் சுபாவமாய் விருத்தியாகிக் கொண்டே இருக்கின்ற நாத தத்துவம் என்று சொல்லப்படுகின்ற பூவாய் செய்யப்பட்டுள்ள சத்திரத்தின் மத்தியப் பாதை வழியே விடுகின்ற போது நவரத்தின கசிதமான மண்டபம் உள்ளது. அதன் உள்ளே இருக்கின்ற வச்சிரத்தினால் செய்யப்பட்டதான பையதனில் ஒழுகிய நாதமானது சதாசிவம் எழுந்தருளி இருக்கின்ற பிரணவாகாரமான மூலாதார தேஜசில் கலந்து உந்திக் கமலத்தை அடைந்து, வணங்கி, அம்மண்டபத்தை விட்டு பருவூர் என்னும் கர்பத்தின் கண் இருக்கும் முன் சாவடியின் சிகரத்தையும் விட்டு, கருவிகளிடம் திரும்பி, குண்டலினியின் திருவடிதனில் வணங்கி, இடகலை, பிங்கலைகளைத் தொழுது, நாத தத்துவம் என்னும் புஷ்பத்தை வணங்கி, பூரக மார்க்கஞ் சென்று துதித்து, அறிவு என்னும் புஷ்பங்கொண்டு அர்ச்சித்து, சத்தி சம்பந்தமான யோகத்தைத் தொடங்கி, வாசிக் குதிரையைக் கொண்டு கண்ட ஸ்தானத்தில் ஊதி பின் சுழுமினையினைத் தன் கடைவாயிலாக வைத்திருக்கும் கர்ப்ப வீட்டுக்குள், இந்த நாதமும் விந்துவும் கலந்து திரண்டு, சுக்கில சுரோணிதங்கள் இரண்டும் கூடி கனவில் காணும் காண் பொருள் போல வந்தது இந்தச் சரீரம்.
திருவள்ளுவரின் ஞான வெட்டியான் கூறும் நாதவிந்துத் தத்துவம் இதுவாகும். பிபஞ்சத்தின் தோற்றமே நாதவிந்துத் தத்துவமே என்றும், அது நம் உடலின் கண் எவ்விதம் கூடிப் பயணித்து, பல ஆதாரங்களைக் கடந்து உடலாகி, யோகம் செய்து வளர்ந்து குழந்தையாகப் பிறக்கிறது என்பதை மிக அற்புதமாகக் கூறி, இதுவே லிங்கத் தத்துவம் என்றும், இதுவே ஆத்ம லிங்கத் தத்துவமென்றும் இதையறியாமல் புறத்தே தேடுவதென்ன என்றும் கேட்கிறார். நாதமும், விந்துவும் உருவாகி பல இடங்களில் உடலுக்குள் பயணித்து, கூடி, கருவாகி, உருவாகி நடைபெறுகின்ற நிகழ்வுகளை அவர் பாடியிருக்கும் பாங்கு அற்புதமானது படிக்கும் நமக்கு கருவாகி, உருவாகி தாயின் உடலுக்குள் இருந்து பிறந்து வந்தது போல் இருக்கும்.

தந்தையுடனே யெனது - தாயுமிருவர்
சரச வுல்லாசலீலை - யாடையிலே
மந்திரமதா கவிந்து - நாதமுங்கூடி
வருகிற வழிசொல்வே னாண்டேயிதுகாண்
இந்திரிய சாதிலிங்க முலகுக்கெல்லா
மேகபர நாதவிந்து யாகமதாகி
வந்தவிதங்கோசபீசம் - பிரபஞ்சமதாய்
வாய்த்த விதமுலகில் வகுத்தனர்காண் - 62

ஆவிடையார் கோவிலிலே - யமைந்தகுறி
ஆதரவாக வேசேர்ந்து மாதர்களினால்
மேவியதோர் நாதவிந்து - வெகுவிசித
விற்பனையறியவொரு கற்பனை சொல்வேன்
பாவிகளிதைமேயறியார் - கல்லுகள்தனில்
பாவனை யொப்பாகவு தாவிதஞ்செய்தார்
ஆவியென்று மறியாமல் - செலவழிய
ஆத்துமலிங்கமதனைப் பார்த்துணராமல் - 63.
ஞானவெட்டியான்

No comments:

Post a Comment