Friday, March 28, 2014

மெய்ப்பொருள் தேடலில் தோல்வி அடைவதை விட செத்து மடிவதே மேல்!

Photo: ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படும் ஓட்டைகளை அடைப்பது போன்றது இந்த உலக வாழ்க்கை. ஒன்றைஅடைத்து விட்டு நிமிர்வதற்குள் அடுத்த ஓட்டை விழுந்து விடுகிறது. திரும்பும் திசையெல்லாம் பொய்யும், பித்தலாட்டமும் நிறைந்து காணப்படுகிறது. இவ்வாறான உலக வாழ்க்கையில் அலுத்துப் போய் யாருக்கு விரக்தியும், வெறுப்பும் ஏற்படுகிறதோ, அவர்களே ஞான வாழ்க்கைக்குத் தகுதி உடையவர்களாக ஆகின்றார்கள். புத்தர் பெருமானுக்கும் இத்தகைய விரக்தி ஏற்பட்டது. நிறைய ஞானிகள் இந்த விரக்தியின் நிமித்தமே ஏகாந்த்தத்தை தேடி எங்கோ வனங்களுக்கும், மலைகளுக்கும் போய் தஞ்சமடைகிறார்கள். அங்கு மட்டும் தொல்லைகள் இல்லாமலா இருக்கின்றன ? என்று கேட்கக் கூடும். பறவைகளின் கூச்சல், மிருகங்களின் தொந்தரவு, விஷ ஜந்துக்களால் ஆபத்து என்று பல தொல்லைகள் இருக்கவே செய்கின்றன. என்றாலும், இவை அனைத்தையும் தாண்டிய ஒரு சாதகமான சூழல் ஒன்று உள்ளது. அது இயற்கையோடு இசைந்து வாழும் ஒரு தெய்வீகமான வாழ்வாகும். அது மற்ற எல்லா விதமான தடைகளையும், தொல்லைகளையும் முறியடிக்கும் சக்தியையும், யுக்தியையும் தந்து விடுகின்றது.

ஆனால் எல்லா ஞானிகளும் அவ்வாறு வனங்களுக்கு போகவில்லை. மக்களோடு மக்களாக வாழ்ந்து மேன்மையடைந்தவர்களும் நிறையவே உண்டு. புத்த பிரான் அவ்வாறு ஒரு அரசமரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்து தவம் செய்து கொண்டிருந்த போது, அவர் உள்ளத்தில் ஒரு ஆசை எழுந்தது. கிட்டாத ஞானத்திற்காக நாம் ஏன் இப்படிக் கிடந்து துன்பப்படுகிறோம் ? உடனே நம் அரண்மனைக்குப் போய் உலக இன்பங்களை அனுபவித்து மகிழ்ச்சியாக இருக்கலாமே என்பதே அந்த ஆசை. அந்த ஆசை அவரை படாதபாடு படுத்தியது. அவருக்கு அப்போது எழுந்தததுதான் ஆசையின் மீதான வெறுப்பு. முதன் முதலில் அவருக்கு ஏற்பட்ட தெளிவு என்னவென்றால், ஆசைகளே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்பதே. அப்போது அவர் ஒரு முடிவுக்கு வந்தார். எனக்கோ, பிறர்க்கோ இனி நான் இந்தப் பொய்யைச் சொல்ல மாட்டேன். அதாவது துன்பம் நிறைந்த இந்த உலக வாழ்வை இன்பம் நிறைந்தது என்று இனி எப்போதும் நான் சொல்ல மாட்டேன் என்பது தான் அந்த முடிவு.

மெய்ப்பொருள் தேடலில் தோல்வி அடைவதை விட செத்து மடிவதே மேல். போர்க்களத்தில் தோற்ற பின் உயிர் வாழ்வதை விட போரிட்டு வீர மரணம் அடைவதே மேல் அல்லவா ? அதுதானே வீரம் ? இத்தகைய உறுதியான மனநிலை யாருக்கு வாய்க்கிறதோ, அவன் ஞான வாழ்க்கை வாழ்வதற்கு தகுதியடைந்து விட்டான் என்று பொருள். இந்த உறுதியே அவனை மேலும் மேலும் சாதனையில் வெற்றியடையச் செய்கிறது. ஆத்ம சாதகனுக்கு இவ்வுலக வாழ்வின் மேல் எள்ளளவும் மோஹம் அதாவது ஆசை இருக்கக் கூடாது. இங்கு காணப்படும் யாவும் விரைவாக அழியக் கூடியவை. இன்றைக்கு மலரும் புஷ்பம் நாளை சருகாகப் போய் விடுகிறது. அது போலவே இவ்வுலக செல்வங்களும், இன்பங்களும் விரைவாக மறையக் கூடிய நிலையற்ற தன்மை உடையவைகளாக இருக்கின்றன. ஆனால், ஆன்மீக வாழ்வு என்பது வேறு விதமாக இருக்கிறது. பிரபஞ்ச வாழ்விலுள்ள கேடுகளையெல்லாம் அது நீக்கித் தருகிறது. பிறப்பு, இறப்பு என்ற துன்பங்களைக் கடக்கச் செய்வது இன்னும் அதை விட சிறப்பாகும். மாயப் பிரபஞ்சம் என்ற இந்த ஜகத்தையே வென்று கடந்து செல்வது இன்னும் அதை விடச் சிறப்பாகும். எனவேதான் இத்தகைய பெரு நெறியை பின்பற்றுபவர்களை மேன்மக்கள் என்று அழைக்கிறார்கள். துணிந்து நின்று எல்லா பற்றுகளையும், ஆசைகளையும், துறந்து ஆன்மிக வாழ்வு வாழ்பவரே வெற்றி வீரர். போரில் எத்தனை வலிமை பெற்ற எதிரிகளையும் வென்று விடலாம். ஆனால், நம் மனதை நாம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல. எனவேதான் தன்னைத் தானே வெல்பவன் எவனோ அவனே வீரன் என்று சொல்கிறார்கள்.
ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படும் ஓட்டைகளை அடைப்பது போன்றது இந்த உலக வாழ்க்கை. ஒன்றைஅடைத்து விட்டு நிமிர்வதற்குள் அடுத்த ஓட்டை விழுந்து விடுகிறது. திரும்பும் திசையெல்லாம் பொய்யும், பித்தலாட்டமும் நிறைந்து காணப்படுகிறது. இவ்வாறான உலக வாழ்க்கையில் அலுத்துப் போய் யாருக்கு விரக்தியும், வெறுப்பும் ஏற்படுகிறதோ, அவர்களே ஞான வாழ்க்கைக்குத் தகுதி உடையவர்களாக ஆகின்றார்கள். புத்தர் பெருமானுக்கும் இத்தகைய விரக்தி ஏற்பட்டது. நிறைய ஞானிகள் இந்த விரக்தியின் நிமித்தமே ஏகாந்த்தத்தை தேடி எங்கோ வனங்களுக்கும், மலைகளுக்கும் போய் தஞ்சமடைகிறார்கள். அங்கு மட்டும் தொல்லைகள் இல்லாமலா இருக்கின்றன ? என்று கேட்கக் கூடும். பறவைகளின் கூச்சல், மிருகங்களின் தொந்தரவு, விஷ ஜந்துக்களால் ஆபத்து என்று பல தொல்லைகள் இருக்கவே செய்கின்றன. என்றாலும், இவை அனைத்தையும் தாண்டிய ஒரு சாதகமான சூழல் ஒன்று உள்ளது. அது இயற்கையோடு இசைந்து வாழும் ஒரு தெய்வீகமான வாழ்வாகும். அது மற்ற எல்லா விதமான தடைகளையும், தொல்லைகளையும் முறியடிக்கும் சக்தியையும், யுக்தியையும் தந்து விடுகின்றது.

ஆனால் எல்லா ஞானிகளும் அவ்வாறு வனங்களுக்கு போகவில்லை. மக்களோடு மக்களாக வாழ்ந்து மேன்மையடைந்தவர்களும் நிறையவே உண்டு. புத்த பிரான் அவ்வாறு ஒரு அரசமரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்து தவம் செய்து கொண்டிருந்த போது, அவர் உள்ளத்தில் ஒரு ஆசை எழுந்தது. கிட்டாத ஞானத்திற்காக நாம் ஏன் இப்படிக் கிடந்து துன்பப்படுகிறோம் ? உடனே நம் அரண்மனைக்குப் போய் உலக இன்பங்களை அனுபவித்து மகிழ்ச்சியாக இருக்கலாமே என்பதே அந்த ஆசை. அந்த ஆசை அவரை படாதபாடு படுத்தியது. அவருக்கு அப்போது எழுந்தததுதான் ஆசையின் மீதான வெறுப்பு. முதன் முதலில் அவருக்கு ஏற்பட்ட தெளிவு என்னவென்றால், ஆசைகளே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்பதே. அப்போது அவர் ஒரு முடிவுக்கு வந்தார். எனக்கோ, பிறர்க்கோ இனி நான் இந்தப் பொய்யைச் சொல்ல மாட்டேன். அதாவது துன்பம் நிறைந்த இந்த உலக வாழ்வை இன்பம் நிறைந்தது என்று இனி எப்போதும் நான் சொல்ல மாட்டேன் என்பது தான் அந்த முடிவு.

மெய்ப்பொருள் தேடலில் தோல்வி அடைவதை விட செத்து மடிவதே மேல். போர்க்களத்தில் தோற்ற பின் உயிர் வாழ்வதை விட போரிட்டு வீர மரணம் அடைவதே மேல் அல்லவா ? அதுதானே வீரம் ? இத்தகைய உறுதியான மனநிலை யாருக்கு வாய்க்கிறதோ, அவன் ஞான வாழ்க்கை வாழ்வதற்கு தகுதியடைந்து விட்டான் என்று பொருள். இந்த உறுதியே அவனை மேலும் மேலும் சாதனையில் வெற்றியடையச் செய்கிறது. ஆத்ம சாதகனுக்கு இவ்வுலக வாழ்வின் மேல் எள்ளளவும் மோஹம் அதாவது ஆசை இருக்கக் கூடாது. இங்கு காணப்படும் யாவும் விரைவாக அழியக் கூடியவை. இன்றைக்கு மலரும் புஷ்பம் நாளை சருகாகப் போய் விடுகிறது. அது போலவே இவ்வுலக செல்வங்களும், இன்பங்களும் விரைவாக மறையக் கூடிய நிலையற்ற தன்மை உடையவைகளாக இருக்கின்றன. ஆனால், ஆன்மீக வாழ்வு என்பது வேறு விதமாக இருக்கிறது. பிரபஞ்ச வாழ்விலுள்ள கேடுகளையெல்லாம் அது நீக்கித் தருகிறது. பிறப்பு, இறப்பு என்ற துன்பங்களைக் கடக்கச் செய்வது இன்னும் அதை விட சிறப்பாகும். மாயப் பிரபஞ்சம் என்ற இந்த ஜகத்தையே வென்று கடந்து செல்வது இன்னும் அதை விடச் சிறப்பாகும். எனவேதான் இத்தகைய பெரு நெறியை பின்பற்றுபவர்களை மேன்மக்கள் என்று அழைக்கிறார்கள். துணிந்து நின்று எல்லா பற்றுகளையும், ஆசைகளையும், துறந்து ஆன்மிக வாழ்வு வாழ்பவரே வெற்றி வீரர். போரில் எத்தனை வலிமை பெற்ற எதிரிகளையும் வென்று விடலாம். ஆனால், நம் மனதை நாம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல. எனவேதான் தன்னைத் தானே வெல்பவன் எவனோ அவனே வீரன் என்று சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment