Saturday, March 29, 2014

என்னை எதிர்த்து செயல்பட்டவருக்கு, கடவுள் ஆசி வழங்கவேண்டுவேன்.

* உடற்பயிற்சி செய்தால் உடல் முழுவதும் நல்ல மாற்றங்கள் உண்டாகின்றன. சுமார் 30 நிமிடங்களி ருந்து 60 நிமிடங்கள் வரை சுறுசுறுப்பாக நடந்தால் உடல் எண்டார்பின் என்ற ஹார்மோன் சுரந்து உடல் முழுவதையும் இயல்பான செயல் நிலைக்கு மாற்றுகிறது. மேலும் மனஅழுத்தத்தினால் அளவிற்கதிகமான சுரக்கின்ற அன்ரீனன், கார்டிசால் போன்ற ஹார்மோன் களின் விளைவுகள் உடன் சக்திகளாக மாற்றப் படுகின்றன.
* யோகப் பயிற்சிகள் : நமது உடல் இரண்டு வகையான நரம்புகள் உள்ளன. சிம்பதடிக் எனப்படுகிற நரம்புகள் கோபம், பயம், பதட்டம், ஆவேசம் போன்ற உணர்வுகளை அதிகரிக்கிறது. பாராசிம்பதடிக் நரம்புகள் அன்பு, அமைதி, பொறுமை, தெளிவு போன்றஉணர்வுகளை அதிகரிக்கிறது. யோகப் பயிற்சிகளின் மூலம் சிம்பதடிக் நரம்புகளின் செயல்பாடுகள் குறைக்கப் பட்டு, பாராசிம்பதடிக் நரம்புகள் அதிகமாகச் செயல்படுகின்றன. இதனால் மன அழுத்தம் தாமாகக் குறையும்.
* உணவு முறைகளில் சைவ உணவுகள், குறைந்த உப்பு மற்றும் கார உணவுகள் நல்லது. அசைவ உணவை சாப்பிடுவோர் வேகவைத்த மீன் மட்டும் சாப்பிடலாம்.
* காலை எழுந்ததும் இரவு படுக்கும்போதும் நல்ல புத்தகங்களை படிப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
* மெல்சைக்கு குறிப்பாக புல்லாங்குழல் இசைக்கு மன அமைதியைத் தருகிற பலன் உண்டு.
* தியானம் என்பது மனதை தளரச் செய்வது. சுமார் 15 நிமிடங்கள் கண்ணைமூடி எதையும் சிந்திக்காமல், அமைதியாக சாய்ந்து அமர்ந்து தியானம் செய்யலாம். இதனால் மூளைச் செல்களின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
* தனிமையைத் தவிர்த்து, நல்ல நண்பர் களுடன் (அ) உறவினர்களுடன் மனம் விட்டு பழகுதல் மன அழுத்தத்தை தவிர்க்கும்.
இன்னும் சில செயல்முறைகள்
(மன அமைதிக்கான உறுதி மொழி)
1.யாராவது என்னிடம் பொறுமையின்றி, ஆவேசமாக செயல்பட்டால், அதனால் புண் படாமல் செயல்படுவேன்.
2. என்னை எதிர்த்து செயல்பட்டவருக்கு, கடவுள் ஆசி வழங்கவேண்டுவேன்.
3. ஐந்து நிமிடங்களுக்க அமைதியாக கடவுளிடம் வேண்டுதல் செய்வேன்.
4. நான் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து, வீண்பேச்சுகளை தவிர்த்து, நல்லவற்றையே பேசுவேன்.
5. அளவான சரியான உணவை மட்டும் உண்பேன். என்னை நலமாக வைத்த கடவுளுக்கு நன்றி சொல்வேன்.
6. யாராவது ஒருவருடைய கஷ்டங்களை பகிர்ந்து கெள்வேன்.
7. மனமுடைந்து வாழ்க்கையில் வெறுப்படைந்த ஒருவருக்கு நல்ல வார்த்தைகளால் அல்லது செயல்களால் உற்சாகப்படுத்துவேன்.
8. எனக்கு கெடுதல் செய்பவரை மன்னிப்பேன்.
9. மற்றவர்கள் எப்படி நடக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேனோ, அதையே நான் மற்றவர்களிடம் செய்வேன்.
10. பிரதிபலன் எதிர்பாராமல் என்னால் முடிந்த உதவியை முன்பின் தெரியாத மனிதருக்குச் செய்வேன்.

No comments:

Post a Comment