Friday, March 28, 2014

நான் பரமாத்மா

Photo: ஐயா, ஒரு சந்தேகம். ஜீவன் முக்தி அடைவதாகவும், பரமாத்மாவோடு கலந்து விடுவதாகவும் சொல்கிறீர்கள். பரமாத்மாதான் சகல உயிரினங்களாகவும், ஜடப் பொருள்களாகவும் தோன்றிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்கிறீர்கள். அப்படி என்றால் முக்தி அடைந்து பரமாத்மாவில் கலந்த ஜீவன் மீண்டும் பிறப்பெடுக்க வாய்ப்பிருக்கிறதல்லவா ? இதைப் பற்றிய விளக்கம் என்ன ?

வடிவேலு சொல்வதைப் போல ''ரூம் போட்டு யோசிப்பாங்க போலிருக்கு.'' எப்படி மாட்டிகிட்டிருக்கேன் பாருங்க ? 

ஆனால், இது ஒன்றும் கடினமான கேள்வி அல்ல. புரிந்து கொள்ளாததினால் ஏற்படும் குழப்பம். அவ்வளவுதான். அதாவது ராம் மனோகராகிய நான் முக்தி அடைந்து விட்டேன் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு முன்னால் கணக்கில்லாத பிறவிகளை எடுத்து பல கோடிக்கணக்கான வினைகளைச் சுமந்து கொண்டு பல ரூபங்களில் பல பெயர்களில் உழன்று கொண்டே இருந்தேன். என் வினைகளைக் களையும் வரைதான் நான் அந்தக் குறிப்பிட்ட ஜீவாத்மா. அது வரைதான் பிறவிகள் வினை வழியே  ஏற்பட்டது. இன்று முக்தி அடைந்து விட்ட போது என் வினைகள் கரைந்து போய் விட்ட நிலையில் நான் பரமாத்மாவாகி விடுகிறேன். அதற்குப் பிறகு அந்த குறிப்பிட்ட வினைகளைக் கொண்ட ஜீவாத்மா கிடையாது. நான் பரமாத்மா. இனி நான் பிறந்தாலும், அது நானல்ல. வினைகள் இருந்த வரைதான் நான். அதற்குப் பிறகு நான் நானல்ல. அது வேறு. இதை வேறு விதமாகவும் விளக்கலாம். அதாவது, 

கடலில் மேற்பரப்பு , அடிப்பரப்பு என்று இரண்டு பாகங்கள் உண்டு. மேல் பகுதி ஓயாமல் அலையடித்துக் கொண்டே இருக்கிறது. அடிப் பகுதியோ அசைவற்று இருக்கிறது. இதோ போல பரம் பொருள் தனது சிறு பகுதியால் ஜகத்தாகவும், ஜீவர்களாகவும் தோன்றிக் கொண்டிருக்கிறார். இது தோற்றத்துக்கு வந்தது.  தோற்றத்துக்கு வராததை அகண்டாகாரம் என்பார்கள். தோற்றத்துக்கு வந்ததையே நம்மால் முழுமையாக அறிந்து கொள்ள முடிவதில்லை. ஜீவாத்மாவாகிய நாம் வினைப் பயன்கள் உள்ள வரை தோற்றத்துக்கு வந்துள்ள பர சொரூபத்தில் அடங்கி மீண்டும் மீண்டும் பிறந்து வருகிறோம். இதில் முக்தி என்பது என்ன வென்றால், வினைப் பயன்களற்ற அகண்டாகாரத்தில் அடங்குவதே. அங்கு அடங்கி விட்டால் மீண்டும் பிறவிகள் என்பது கிடையாது. முக்தி என்பதை பல பெரியவர்கள் பல விதமாக வர்ணித்திருக்கிறார்கள். அதைப் பற்றி விளக்க தனி புத்தகம் போட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், ஜீவன் தன் வினைகளை ஒழித்து விட்டால் பிறகு பிறப்பதில்லை. அகண்டாகாரத்தில் ஒடுங்கி விடுகிறான். 

மேலும், அலை தன் வடிவத்தை இழந்து விட்டால் கடலாகி விடுகிறது. பிறகு வந்த புதிய அலைகள் பழைய அலைகளில் இருந்து வந்தவை அல்ல. கடலில் இருந்தே வருகின்றன. ஜீவன் முக்தி அடைகிற போது தன் வியக்தியை இழந்து விடுகிறான். அவனிடம் ஜீவத் தோற்றம் இருந்த போதும் பரம் பொருள் இருக்கிறது. அவன் தன் ஜீவத் தோற்றத்தை அழித்து விடுகிற போதும் பரம் பொருள் இருக்கிறது. ஆக பரம்பொருளுக்கு போக்குமில்லை, வரவுமில்லை. வடிவத்தை எடுத்த ஜீவனுக்கு துவக்க்கம் உண்டு, முடிவும் உண்டு. வடிவமானது முடிவடைவதே முக்தி. வடிவத்தை கொண்டிருந்த போது தன்னுடைய அறியாமையினால் தான் துக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக ஜீவன் கற்பித்துக் கொள்கிறான். எனவே வடிவமும், துக்கமும் வெறும் தோற்றம் மட்டுமே. முக்தி என்கிற போது தோற்றம் அழிந்து யதார்த்த நிலை பழுதுபடாமல் உள்ளது உள்ளபடி இருக்கிறது. பரமாத்மா யதார்த்த நிலை. 

வடிவமும், வினைகளும், கற்பித்துக் கொள்கிற துக்கங்களும் நிலையற்றவை. நிலையற்றவைகளை நிலையற்றவைகளாகத் தள்ளி விடுவதே முக்தி. அப்படி முக்தி அடைந்த ஜீவன் பழைய வியக்தியாக மீண்டும் பிறப்பதே இல்லை. இப்படி கணக்கற்ற ஜீவன்களாகத் தன்னைக் காட்டிக் கொண்டு பரமாத்மா ஆடும் அணுக்கூத்தே திருக்கூத்து.
ஐயா, ஒரு சந்தேகம். ஜீவன் முக்தி அடைவதாகவும், பரமாத்மாவோடு கலந்து விடுவதாகவும் சொல்கிறீர்கள். பரமாத்மாதான் சகல உயிரினங்களாகவும், ஜடப் பொருள்களாகவும் தோன்றிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்கிறீர்கள். அப்படி என்றால் முக்தி அடைந்து பரமாத்மாவில் கலந்த ஜீவன் மீண்டும் பிறப்பெடுக்க வாய்ப்பிருக்கிறதல்லவா ? இதைப் பற்றிய விளக்கம் என்ன ?

வடிவேலு சொல்வதைப் போல ''ரூம் போட்டு யோசிப்பாங்க போலிருக்கு.'' எப்படி மாட்டிகிட்டிருக்கேன் பாருங்க ?

ஆனால், இது ஒன்றும் கடினமான கேள்வி அல்ல. புரிந்து கொள்ளாததினால் ஏற்படும் குழப்பம். அவ்வளவுதான். அதாவது ராம் மனோகராகிய நான் முக்தி அடைந்து விட்டேன் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு முன்னால் கணக்கில்லாத பிறவிகளை எடுத்து பல கோடிக்கணக்கான வினைகளைச் சுமந்து கொண்டு பல ரூபங்களில் பல பெயர்களில் உழன்று கொண்டே இருந்தேன். என் வினைகளைக் களையும் வரைதான் நான் அந்தக் குறிப்பிட்ட ஜீவாத்மா. அது வரைதான் பிறவிகள் வினை வழியே ஏற்பட்டது. இன்று முக்தி அடைந்து விட்ட போது என் வினைகள் கரைந்து போய் விட்ட நிலையில் நான் பரமாத்மாவாகி விடுகிறேன். அதற்குப் பிறகு அந்த குறிப்பிட்ட வினைகளைக் கொண்ட ஜீவாத்மா கிடையாது. நான் பரமாத்மா. இனி நான் பிறந்தாலும், அது நானல்ல. வினைகள் இருந்த வரைதான் நான். அதற்குப் பிறகு நான் நானல்ல. அது வேறு. இதை வேறு விதமாகவும் விளக்கலாம். அதாவது,

கடலில் மேற்பரப்பு , அடிப்பரப்பு என்று இரண்டு பாகங்கள் உண்டு. மேல் பகுதி ஓயாமல் அலையடித்துக் கொண்டே இருக்கிறது. அடிப் பகுதியோ அசைவற்று இருக்கிறது. இதோ போல பரம் பொருள் தனது சிறு பகுதியால் ஜகத்தாகவும், ஜீவர்களாகவும் தோன்றிக் கொண்டிருக்கிறார். இது தோற்றத்துக்கு வந்தது. தோற்றத்துக்கு வராததை அகண்டாகாரம் என்பார்கள். தோற்றத்துக்கு வந்ததையே நம்மால் முழுமையாக அறிந்து கொள்ள முடிவதில்லை. ஜீவாத்மாவாகிய நாம் வினைப் பயன்கள் உள்ள வரை தோற்றத்துக்கு வந்துள்ள பர சொரூபத்தில் அடங்கி மீண்டும் மீண்டும் பிறந்து வருகிறோம். இதில் முக்தி என்பது என்ன வென்றால், வினைப் பயன்களற்ற அகண்டாகாரத்தில் அடங்குவதே. அங்கு அடங்கி விட்டால் மீண்டும் பிறவிகள் என்பது கிடையாது. முக்தி என்பதை பல பெரியவர்கள் பல விதமாக வர்ணித்திருக்கிறார்கள். அதைப் பற்றி விளக்க தனி புத்தகம் போட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், ஜீவன் தன் வினைகளை ஒழித்து விட்டால் பிறகு பிறப்பதில்லை. அகண்டாகாரத்தில் ஒடுங்கி விடுகிறான்.

மேலும், அலை தன் வடிவத்தை இழந்து விட்டால் கடலாகி விடுகிறது. பிறகு வந்த புதிய அலைகள் பழைய அலைகளில் இருந்து வந்தவை அல்ல. கடலில் இருந்தே வருகின்றன. ஜீவன் முக்தி அடைகிற போது தன் வியக்தியை இழந்து விடுகிறான். அவனிடம் ஜீவத் தோற்றம் இருந்த போதும் பரம் பொருள் இருக்கிறது. அவன் தன் ஜீவத் தோற்றத்தை அழித்து விடுகிற போதும் பரம் பொருள் இருக்கிறது. ஆக பரம்பொருளுக்கு போக்குமில்லை, வரவுமில்லை. வடிவத்தை எடுத்த ஜீவனுக்கு துவக்க்கம் உண்டு, முடிவும் உண்டு. வடிவமானது முடிவடைவதே முக்தி. வடிவத்தை கொண்டிருந்த போது தன்னுடைய அறியாமையினால் தான் துக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக ஜீவன் கற்பித்துக் கொள்கிறான். எனவே வடிவமும், துக்கமும் வெறும் தோற்றம் மட்டுமே. முக்தி என்கிற போது தோற்றம் அழிந்து யதார்த்த நிலை பழுதுபடாமல் உள்ளது உள்ளபடி இருக்கிறது. பரமாத்மா யதார்த்த நிலை.

வடிவமும், வினைகளும், கற்பித்துக் கொள்கிற துக்கங்களும் நிலையற்றவை. நிலையற்றவைகளை நிலையற்றவைகளாகத் தள்ளி விடுவதே முக்தி. அப்படி முக்தி அடைந்த ஜீவன் பழைய வியக்தியாக மீண்டும் பிறப்பதே இல்லை. இப்படி கணக்கற்ற ஜீவன்களாகத் தன்னைக் காட்டிக் கொண்டு பரமாத்மா ஆடும் அணுக்கூத்தே திருக்கூத்து.

No comments:

Post a Comment