Tuesday, August 27, 2013


ஏழைக்கு இரங்குகிறவன்
கடவுளுக்கு கடன் கொடுக்கிறான்.

அதை கடவுள் அவனுக்கு திரும்ப
கொடுப்பார். [பைபிள் ]

Monday, August 26, 2013

பிரணாயாமம்


பிரணாயாமம்முதலில் சுவாசத்தை உள்ளே இழுப்பது. இதற்கு பூரகம் என்று பெயர்.இழுத்த சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைப்பது. இதை கும்பகம் என்று கூறுவர்.இவ்வாறு உள்ளே நிறுத்திய சுவாசத்தை வெளிவிடுதலை ரேசகம் என்பர்.வெளியே சுவாசத்தை விட்டபிறகு அப்படியே வெளியே சுவாசத்தை நிறுத்துதல். இதற்கு பகிரங்க கும்பகம் அல்லது கேவல கும்பகம் என்று கூறுவர்.குறிப்பு

: பகிரங்க கும்பகம் - 60-லிருந்து 120 வினாடிகள். 6 மாத, ஒரு வருட பழக்கத்தில் தான் பூரணமாய் செய்ய வேண்டும்.
: இதில் 4 நிலைகள் இருக்கிறது. முதலில் சுவாசத்தை உள்ளே இழுப்பது. இதற்கு பூரகம் என்று பெயர்.இழுத்த சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைப்பது. இதை கும்பகம் என்று கூறுவர்.இவ்வாறு உள்ளே நிறுத்திய சுவாசத்தை வெளிவிடுதலை ரேசகம் என்பர்.வெளியே சுவாசத்தை விட்டபிறகு அப்படியே வெளியே சுவாசத்தை நிறுத்துதல். இதற்கு பகிரங்க கும்பகம் அல்லது கேவல கும்பகம் என்று கூறுவர்.குறிப்பு: பகிரங்க கும்பகம் - 60-லிருந்து 120 வினாடிகள். 6 மாத, ஒரு வருட பழக்கத்தில் தான் பூரணமாய் செய்ய வேண்டும்.சூட்சும சரீரத்தை செயல்படுத்துதல்
பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் உட்கார்ந்து உங்கள் சரீரத்தை மனக்கண்ணால் உணர்ந்து சுவாசம் விடுபடுவதை உணரவும். இப்போது உஜ்ஜயி பிராணாயாம சுவாசமும் கேசரி முத்திரையில் செய்யவும். இவ்விதமாக சுவாசத்தை உணர்ந்து வரவும். இப்போது உள்ளே சுவாசத்தை பூரிக்கும்போது சரீரம் விரிவடைவதாக உணரவும். அதுபோல சுவாசத்தை ரேசகம் செய்யும் போது உடல் சுருங்குவதாக உணரவேண்டும்.உண்மையிலே ஸ்தூல சரீரம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் சூட்சும சரீரம்தான் விரிந்தும் சுருங்கியும் செயல்படுகிறது. இந்த பயிற்சி முறைகளை விடாமல் செய்துவர சூட்சும சரீரம் மிக பெரியதாக ஆகியும், மிக சிறியதாக சுருங்கி வருவதையும் உணரலாம். இப்போது ஸ்தூல தேக உணர்வை விட்டு சூட்சும சரீரத்திலேயே நாட்டத்தை வைத்து அது விரிவடைவதையும் சுருங்குவதையும் உணரவும். மனக்கண்ணால் காணவும். இப்படியே பயிற்சி முறைகளை செய்து வரும் போது சுசூட்சும சரீரம் சுருங்கி ஒரு சிறு ஒளியுள்ள புள்ளியாகத் தெரியும். அப்போது பயிற்சி செய்வதை நிறுத்தி விடவும்.சூட்சும உள்ளம் தரிசனம்
இந்த உள் மனதரிசனத்துக்கு மேலே சொல்லிய பயிற்சி முறைகளின் முடிவில் நீங்கள் ஓர் ஒளிவடிவமான பிந்து அல்லது புள்ளியை கண்டோம். இப்போது அந்த சிறு ஒளிவட்டத்தையே உணர்வுடன் புருவமத்தியில் கவனிக்க வேண்டும். இப்போது அந்த ஒளியானது தங்கமயமான வண்ணத்தில் கொஞ்சம் கொஞ்சமாகபெரியதாகி கொண்டே வரும். ஆனால் அதில் இருந்து ஒளிக் கற்றைகள் வீசாது. இந்த தங்கமயமான ஒளியானது கடைசியில் விரிவடைந்து உங்கள் ஸ்தூல சூக்கும உடல் வடிவம் அடைந்துவிடும்.இதுதான் உங்களது ஆத்ம ஜோதி. இந்த ஜோதி தரிசனத்தை காணும் போது மிக ஆனந்தமாக இருக்கும். இந்த பயிற்சியை அடிக்கடி செய்து உங்கள் ஆத்ம ஜோதி தரிசனத்தை பார்த்து வர வேண்டும். இந்த நிலையை அடைந்தபின் வேண்டியது எல்லாம் கிடைக்கும்.சிதாகாச தரிசனம்
இதை சிதாகாய தாரணை எனவும் கூறலாம். இது தன்னைத்தானே உள்ளே பார்க்கும் [அந்தர்முக] தியானமாகும். உள்ளே உள்ள இடைவெளிகளை பார்ப்பது ஆகும். ஆனால் இது உடலில் தலையில், வயிற்றில் உள்ள வெற்றுவெளி அல்ல. இந்த சிதாகாசம் என்பது உணர்வுகள் இருக்கும் உற்பத்தி ஆகும் சூன்ய பிரதேசம். இது ஆக்ஞா சக்கரத்தின் மூலமாக காணக்கூடிய இருண்ட வெளியாகும். இதுதான் மனத்தின் தொடர்பை ஏற்படுத்தகூடியது. இந்த தொடர்பினால் மனிதன் தன் மனதை அடையவும் உள்மனதை அடையவும் அதையும் மீறி அதற்கப்பால் உள்ள மிக நுண்ணிய உணர்வுள்ள மகா உள்மனதையும் தொடர்புகொள்ள முடியும். இந்த நிலையை சிதாகாச தாரணை மூலம் எட்டலாம். உங்களது உள் உணர்வுகளின் ரகசியங்களையும் மனதின் நிலைகளையும் உள்ளத்தின் நிலைகளையும் தெரிந்துகொள்ள ஓர் அற்புதமான ரகசியத்தை வெளிக்கொணர அமைந்த திறவுகோலாகும். இந்த சிதாகாச தரிசன சூட்சுமம். இந்த சாதனையை முடிப்பவர்கள் அரும்பெரும் காட்சிகளை காணக் கூடிய சித்தர்களாக ஆகி விடுவார்கள்.

Friday, June 14, 2013

லைப் ஆப் பை புத்தகம் தமிழில்
http://www.ebay.in/itm/Thannambikkai-Store-Tamil-books-/181155938432?pt=IN_Books_Magazines&hash=item2a2dbc4080