Friday, March 28, 2014

தாமரை மலருக்குத் தனி சிறப்புககள் பல

Photo: ஈரேழு பதினாழு லோகம் என்கிறார்களே, அவற்றில் எதற்கும் இல்லாத சிறப்பு நம் பூமிக்கு உண்டு. அது என்னவென்றால், இங்கு மட்டும் தான் பூக்கள் உண்டு. வேறு எங்கும் கிடையாஈது. பூக்களை மகிமைப்படுத்தி பேசுவதற்காக அந்த லோகத்தில் இருந்து வந்தது, இந்த லோகத்தில் இருந்து வந்தது என்றெல்லாம் கதை சொல்வார்கள். ஆனால் உண்மையில் நம் பூமியில் மட்டும் தான் பூக்கள் உண்டு. எனவே தான் இதற்கு பூலோகம் என்று பெயர். இந்த பூக்களின் அழகில் மயங்கி வானவர்கள், கந்தவர்கள், சப்த கன்னிகள் எல்லாம் பூமிக்கு வந்ததாகவும் கதையெல்லாம் உண்டு. நாம் செய்த புண்ணியத்தின் பலனாகவே நாம் பூலோகத்திலேயே பிறந்து, பூலோகத்திலேயே வாழ்ந்து, பூலோகத்திலேயே முக்தி அடைகிறோம். இறைவனுடைய திருவடிகளைத் தாமரை மலர் என்று சொல்வார்கள். தாமரை மலருக்கு தனிச்சிறப்பு பல உண்டு. மனிதனுக்கு பிரபஞ்சத்தோடு தொடர்பு ஏற்படுத்தும் ஆதாரங்களை தாமரை மலராகச் சொல்வார்கள். விழிகளை கண் மலர் என்பார்கள்.

பிராண நீர் நிரம்பியுள்ள கண்ணே தடாகமாகும். இரவையும் பகலையும்(சந்திரன், சூரியன்) காட்டும் அல்லியும், தாமரையும் தடாகத்தில் மலர்வதும், கூம்புவதும் போல நேத்திரமாகிய தடாகத்தில் கண்மூடல் இரவையும், கண் விழித்தல் பகலையும் காட்டுகின்றன. சித்தர்களோ இதை இராப் பகல் அற்ற இடம் என்பார்கள். இதையே இராம தேவர்... 
''காறான ராவதுதான் கண் மூடலப்பா
கருவான பகலதுதான் பார்வை மைந்தா '' என்கிறார்.
அருணகிரிநாதர் இறைவனை வேண்டும் போது, 
''கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய் ?'' என்று கேட்கிறார். இருதாள் என்பது இறைவனது இரண்டு திருவடிகளைக் குறிக்கும். வனசம் என்பது நீரில் தோன்றும் தாமரையைக் குறிக்கும். அதாவது பிராண நீரில் தோன்றிய இதயத் தாமரையில் இணைந்த உன் திருவடித் தாமரைகளை என் சென்னியின் மீது வைத்து அருள எப்பொழுது திருவுளங் கொள்வாய் ? கருதுவதும் மறப்பதும் என்பது முறையே நினைவும், மறப்பும் என்று கூறப்படும். இதையே ஜாக்கிரதை, சுழுத்தி என்பார்கள். இந்த இரண்டு நிலையையும் கடந்த துரியம் என்ற நிலையில் உன் ஜோதி தரிசனத்தை அனுபவிக்கும் பேரின்பத்தை எனக்கு அருள உன் திருவடித் தாமரையை என் சென்னி மீது வைத்து அருள மாட்டாயா ? அல்லது எப்போது அருள்வாய் என்று கேட்கிறார் . அதாவது திருவடி தீட்சை வேண்டுகிறார்.
இதையே வள்ளலார் '' துரிய நடுவே இருந்த சுயம் ஜோதி மணியே'' என்பார்.

எந்த மலரும் இந்தத் தாமரை மலரைப் போல சீரும் சிறப்பும் பெற்று தெய்வீக மலராகப் பரணமித்ததாகக் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை. மலர்கள் என்றாலே தனி அழகுதான். எனினும் இந்தத் தாமரை மலருக்குத் தனி சிறப்புககள் பல. கல்விக்கு அதிபதியாம் கலைமகள் வெண்தாமரையிலும், செல்வத்திற்கு அதிபதியான திருமகள் செந்தாமரையிலும் இடம் பெற்றிருப்பதாகச் சொல்வார்கள். கல்வி அறிவு பெறுவதற்கு தூய்மையான உள் ஒளி வேண்டும் என்பதையும், செல்வத்தில் எல்லாம் உயர்ந்த செல்வமான ஞான செல்வத்திற்கு செம்மையான செஞ்சுடரொளி வேண்டும் என்பதையும் குறிப்பதே அதன் தாத்பரியம். பிண்டமாகிய உடம்பிற்கு சிரசே பிரதானம். சிரசில் உள்ள பிராண நீரில் நெருப்பாகப் பூத்திருப்பது இச்செஞ்சுடர்ப்பூ. சூரிய கலையில் நின்று தியானித்தால் இச்செஞ்சுடர்ப்பூ மலரும். 

புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே. என்று ஆதங்கப்படுவார் திருமூலர். மேலோட்டமாகப் படித்து விட்டு அன்பான மனதோடு தண்ணீரையும் பூவையும் வைத்து வழிபட்டாலே ஈசன் அருள் புரிவார், அது தெரியாமல் அன்பு இல்லாமல் இருக்கின்றார்களே பாவிகள் என்று பொருள் கூறிவிடுவார்கள். ஆனால் உண்மை கருத்து அதுவல்ல. சிரசில் பிராண நீர் இருக்கிறது. அதன் மேல் செஞ்சுடர் பூவும் இருக்கிறது. அதை மலரச் செய்யும் புண்ணியமான கர்மங்களைச் செய்பவர்களுக்கு இறைவனான சிவபெருமான் அருள் செய்வார். கணக்கற்ற பாவிகள் சிவ பெருமானை அடைவதற்கான வழியை அறியாமல் விலகிப் போய் விடுகிறார்களே என்கிறார். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பார்கள். அது என்னவென்றால், ஐம்புலன்களின் வழியே செல்லும் மனமாகிய வாழை நாரை இறைவனின் திருவடித் தாமரை மலரோடு இணைத்து தியானித்தால் மனம் அமைதியடைந்து ஞானமென்னும் மண் வீசும் என்பதாகும். 

இவ்வாறு நம் வாழ்வில் பிறப்பில் இருந்து இறப்பு வரை எல்லா காலகட்டங்களிலும் பூவானது இணைந்தே வருவதன் தாத்பரியமே ஞானப் பூவை விரியச் செய்ய வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டத்தான். ஆனால் அந்தோ பரிதாபம் ஞானப் பூவை விரியச் செய்யாமல் இந்த உடலை நீங்கிப் போகிறானே என்பதை சுட்டிக் காட்டுகின்றனவோ இறுதி ஊர்வலத்தில் உதிரிப் பூக்கள்.      
இனியும் பூ மலரும்.....
ஈரேழு பதினாழு லோகம் என்கிறார்களே, அவற்றில் எதற்கும் இல்லாத சிறப்பு நம் பூமிக்கு உண்டு. அது என்னவென்றால், இங்கு மட்டும் தான் பூக்கள் உண்டு. வேறு எங்கும் கிடையாஈது. பூக்களை மகிமைப்படுத்தி பேசுவதற்காக அந்த லோகத்தில் இருந்து வந்தது, இந்த லோகத்தில் இருந்து வந்தது என்றெல்லாம் கதை சொல்வார்கள். ஆனால் உண்மையில் நம் பூமியில் மட்டும் தான் பூக்கள் உண்டு. எனவே தான் இதற்கு பூலோகம் என்று பெயர். இந்த பூக்களின் அழகில் மயங்கி வானவர்கள், கந்தவர்கள், சப்த கன்னிகள் எல்லாம் பூமிக்கு வந்ததாகவும் கதையெல்லாம் உண்டு. நாம் செய்த புண்ணியத்தின் பலனாகவே நாம் பூலோகத்திலேயே பிறந்து, பூலோகத்திலேயே வாழ்ந்து, பூலோகத்திலேயே முக்தி அடைகிறோம். இறைவனுடைய திருவடிகளைத் தாமரை மலர் என்று சொல்வார்கள். தாமரை மலருக்கு தனிச்சிறப்பு பல உண்டு. மனிதனுக்கு பிரபஞ்சத்தோடு தொடர்பு ஏற்படுத்தும் ஆதாரங்களை தாமரை மலராகச் சொல்வார்கள். விழிகளை கண் மலர் என்பார்கள்.

பிராண நீர் நிரம்பியுள்ள கண்ணே தடாகமாகும். இரவையும் பகலையும்(சந்திரன், சூரியன்) காட்டும் அல்லியும், தாமரையும் தடாகத்தில் மலர்வதும், கூம்புவதும் போல நேத்திரமாகிய தடாகத்தில் கண்மூடல் இரவையும், கண் விழித்தல் பகலையும் காட்டுகின்றன. சித்தர்களோ இதை இராப் பகல் அற்ற இடம் என்பார்கள். இதையே இராம தேவர்...
''காறான ராவதுதான் கண் மூடலப்பா
கருவான பகலதுதான் பார்வை மைந்தா '' என்கிறார்.
அருணகிரிநாதர் இறைவனை வேண்டும் போது,
''கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய் ?'' என்று கேட்கிறார். இருதாள் என்பது இறைவனது இரண்டு திருவடிகளைக் குறிக்கும். வனசம் என்பது நீரில் தோன்றும் தாமரையைக் குறிக்கும். அதாவது பிராண நீரில் தோன்றிய இதயத் தாமரையில் இணைந்த உன் திருவடித் தாமரைகளை என் சென்னியின் மீது வைத்து அருள எப்பொழுது திருவுளங் கொள்வாய் ? கருதுவதும் மறப்பதும் என்பது முறையே நினைவும், மறப்பும் என்று கூறப்படும். இதையே ஜாக்கிரதை, சுழுத்தி என்பார்கள். இந்த இரண்டு நிலையையும் கடந்த துரியம் என்ற நிலையில் உன் ஜோதி தரிசனத்தை அனுபவிக்கும் பேரின்பத்தை எனக்கு அருள உன் திருவடித் தாமரையை என் சென்னி மீது வைத்து அருள மாட்டாயா ? அல்லது எப்போது அருள்வாய் என்று கேட்கிறார் . அதாவது திருவடி தீட்சை வேண்டுகிறார்.
இதையே வள்ளலார் '' துரிய நடுவே இருந்த சுயம் ஜோதி மணியே'' என்பார்.

எந்த மலரும் இந்தத் தாமரை மலரைப் போல சீரும் சிறப்பும் பெற்று தெய்வீக மலராகப் பரணமித்ததாகக் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை. மலர்கள் என்றாலே தனி அழகுதான். எனினும் இந்தத் தாமரை மலருக்குத் தனி சிறப்புககள் பல. கல்விக்கு அதிபதியாம் கலைமகள் வெண்தாமரையிலும், செல்வத்திற்கு அதிபதியான திருமகள் செந்தாமரையிலும் இடம் பெற்றிருப்பதாகச் சொல்வார்கள். கல்வி அறிவு பெறுவதற்கு தூய்மையான உள் ஒளி வேண்டும் என்பதையும், செல்வத்தில் எல்லாம் உயர்ந்த செல்வமான ஞான செல்வத்திற்கு செம்மையான செஞ்சுடரொளி வேண்டும் என்பதையும் குறிப்பதே அதன் தாத்பரியம். பிண்டமாகிய உடம்பிற்கு சிரசே பிரதானம். சிரசில் உள்ள பிராண நீரில் நெருப்பாகப் பூத்திருப்பது இச்செஞ்சுடர்ப்பூ. சூரிய கலையில் நின்று தியானித்தால் இச்செஞ்சுடர்ப்பூ மலரும்.

புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே. என்று ஆதங்கப்படுவார் திருமூலர். மேலோட்டமாகப் படித்து விட்டு அன்பான மனதோடு தண்ணீரையும் பூவையும் வைத்து வழிபட்டாலே ஈசன் அருள் புரிவார், அது தெரியாமல் அன்பு இல்லாமல் இருக்கின்றார்களே பாவிகள் என்று பொருள் கூறிவிடுவார்கள். ஆனால் உண்மை கருத்து அதுவல்ல. சிரசில் பிராண நீர் இருக்கிறது. அதன் மேல் செஞ்சுடர் பூவும் இருக்கிறது. அதை மலரச் செய்யும் புண்ணியமான கர்மங்களைச் செய்பவர்களுக்கு இறைவனான சிவபெருமான் அருள் செய்வார். கணக்கற்ற பாவிகள் சிவ பெருமானை அடைவதற்கான வழியை அறியாமல் விலகிப் போய் விடுகிறார்களே என்கிறார். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பார்கள். அது என்னவென்றால், ஐம்புலன்களின் வழியே செல்லும் மனமாகிய வாழை நாரை இறைவனின் திருவடித் தாமரை மலரோடு இணைத்து தியானித்தால் மனம் அமைதியடைந்து ஞானமென்னும் மண் வீசும் என்பதாகும்.

இவ்வாறு நம் வாழ்வில் பிறப்பில் இருந்து இறப்பு வரை எல்லா காலகட்டங்களிலும் பூவானது இணைந்தே வருவதன் தாத்பரியமே ஞானப் பூவை விரியச் செய்ய வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டத்தான். ஆனால் அந்தோ பரிதாபம் ஞானப் பூவை விரியச் செய்யாமல் இந்த உடலை நீங்கிப் போகிறானே என்பதை சுட்டிக் காட்டுகின்றனவோ இறுதி ஊர்வலத்தில் உதிரிப் பூக்கள்.
இனியும் பூ மலரும்.....

No comments:

Post a Comment